- அனுபவம் ஆனந்தமானால் சிறியது பெரியதாகும். III 718
- சிறியதன் அம்சங்கள் ஐந்து. III-736
- தர்க்கம் யதார்த்தத்தில் கரையும். III-738
தர்க்கம், தர்க்கத்திற்கு உண்டு, யதார்த்தத்திற்கு குதர்க்கமாகும்.
- முக்கியத்துவம் சிறியதற்கு மட்டும் உண்டு III 767
- தன்னை மட்டும் உணருவது சிறியது. III 829
- சிறியது பரிணாமத்தால் பெரியதாகிறது, திருவுருமாற்றத்தால் பிரம்மமாகிறது. III 832
சிங்கம் விலங்குகட்கு ராஜா. அதுபோல் பெரியது, சிறியது எங்கும் உண்டு. இது வாழ்வு நிலை. வாழ்வைக் கடந்தது அனந்தம். அங்குச் சிறியது, பெரியது, முக்கியம் என்பதில்லை. நட்சத்திர மண்டலத்தில் முக்கியம் மறந்து போகும். முக்கியம் மனிதனுக்கு மட்டும் உண்டு. உலகம் பெரியது. நம்மைத் தவிர ஆயிரம் பேருண்டு. அனைத்தையும் மனம் ஏற்றால் விசாலமடையும். தன்னை மட்டும் மனம் ஏற்றால் சுருங்கும். நாம் எதை ஏற்கிறோமோ, அதனால் நிர்ணயிக்கப்படுகிறது. பரிணாமம் சிருஷ்டியை ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு உயர்த்துவதால் சிறியது, பெரியதாகிறது. திருவுருமாற்றம் சிறியதை நேரடியாக பிரம்மமாக்குகிறது.
- சிறியதனுள் பிரம்மம் உண்டு. III 841
சிறியது பரிணாமத்தால் பெரியதாகிறது, திருவுருமாற்றத்தால் பிரம்மமாகிறது. எனவே விதையினுள் மரம் உண்டு. காலத்தால் மரம் வெளிப்படுகிறது. காலம் தொடர்ந்தால் மரம் மீண்டும் விதையை உற்பத்தி செய்யும். விதை மரமாகி, மரம் பிரம்மமாகும். எப்பொருளும் பெரியதாகி பிரம்மமாகும். அதனால் புதைந்துள்ள சக்தி, வாய்ப்புக்கு அளவில்லை.
- கிராமம் கிராமமாகவேயிருக்கிறது, பரிணாமத்தால் நகரமாகும், திருவுருமாற்றத்தால் பூலோகச் சுவர்க்கமாகும்.
- மனித வாழ்வு பரிணாமத்தால் தெய்வீக வாழ்வாகும், திருவுருமாற்றத்தால் முழுப் பிரம்மமும் வெளிப்பட்டு பூலோகத்தைச் சுவர்க்கமாக்கும். நம்முள் மண்டிக் கிடக்கும் வாய்ப்புக்கு அளவில்லை, அளவேயில்லை.
- பகவானுடைய முறைகள் காலத்தைக் கடந்தவை. III 848
சரணாகதி, தியானம், பரிணாமம் போன்ற பல முறைகளை பகவான் பயன்படுத்துகிறார், தோற்றத்திற்கு நாமறிந்ததைக் காண்பிக்கிறார். அதன் அடிப்படையை மாற்றி தெரியாததை எட்டும் வகை செய்கிறார். எந்த முறையும் சிறியதன்று, கடந்ததைப் போற்றுவதில்லை. வியாதியைப் போக்க நம்மை மருந்து சாப்பிட அனுமதிக்கிறார். மருந்தின் அடிப்படை வியாதிக்கு எதிரானது வியாதியைக் குணப்படுத்தும் என்பது. பகவான் இந்த அடிப்படையை ஏற்பதில்லை. நம்பிக்கை செயல்பட மருந்தைக் கருவியாக்கியிருக்கிறார். மருந்து வியாதியைக் குணப்படுத்துவதற்குப் பதிலாக நம்பிக்கையை வளர்க்கிறது. வளரும் நம்பிக்கை வியாதியைக் குணப்படுத்துகிறது.
- கடந்தவை எதையும் முடிவாக பகவான் ஏற்றதில்லை.
- பெரியதன் பாதையும் பெரியது. III 878
பெரியது சிறியதன் பாதையில் போக முடியாது. அதன் பாதையும் பெரியதாக இருக்கும். அப்பாதை மாறுவதும் அளவு கடந்திருக்கும்.
- பரப்பிரம்மம் பிரம்மமாகிறது. III 883
- ‘மனம் போல மாங்கல்யம்‘ எனும் பிரம்மம். III 910
சச்சிதானந்தம் பரப்பிரம்மம் எனப்படும். அதன் சத் புருஷன் மூன்றாகப் பிரிந்து முதல் நிலையில் Self ஆக மாறுவதை பிரம்மம் என்கிறோம். இப்பிரம்மம் க்ஷர, அக்ஷரப் பிரம்மங்களாகின்றன. பரப்பிரம்மம் (Self) பிரம்மத்திற்கு உயர்ந்தது. Absolute பிரம்மம் என்பது ஆதி. அதுவே சிருஷ்டியில் சச்சிதானந்தம் எனும் பரம்பிரம்மமாகிறது. பரப்பிரம்மத்தின் கீழ் Self பிரம்மமும், மேலே Absolute பிரம்மமும் உள்ளன.
Infinite பெரியது என்பது சிறியதற்கு finite எதிரான பெரியது. Infinite என்பது finite, Infiniteஐ தன்னுட்கொண்டது. இரண்டையும் கடந்தது. Self பிரம்மம் என்பது Infinite, finite ஆன உலகத்திற்கெதிரானது. Absolute பிரம்மம் என்பது Infinite. இது எந்த finiteக்கும் எதிரானதல்ல. Self existing Infinite.
Absolute பிரம்மம்
↓
பரப்பிரம்மம் (சச்சிதானந்தம்)
↓
Self பிரம்மம்
பரப்பிரம்மம் Self பிரம்மத்தைக் கடந்தது. Absolute பிரம்மம் பரப்பிரம்மத்தைக் கடந்தது.
- Self பிரம்மம் நம் பார்வைக்கேற்ற தோற்றத்தைப் பெறும் தன்மையுடையது. சிறிய மனிதனுடைய பார்வைக்குச் சிறியதாகவும், பெரிய மனமுடையவருடைய பார்வைக்குப் பெரியதாகவும், தோன்றி ‘மனம் போல மாங்கல்யம்‘ என்று கூறும்.
- அவள் தாளினை கைக் கொண்டு மகிழ்ந்திருப்பான். III 147
பெட்டை, பெண், மனைவி, கற்புக்கரசி, லோகமாதா ஆகியவை பெண்மையின் பல்வேறு நிலைகள். முந்தியவை சிறியன. பிந்தியது பெரியது. இன வேறுபாட்டால் பெட்டையாகப் பிறந்தது. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு பெற்று பெண்ணாகிறாள். குடும்பப் பொறுப்பை ஏற்று நிறைவேற்றுபவள் மனைக்குரியவள், மனைவி. மனத்தால் மணாளனுக்குரிய கற்புக்கரசி. தெய்வநிலைக்குயரும்பொழுது அவள் ஈஸ்வரனுக்குரிய சக்தியாகிறாள். இதுவரை மரபுக்குரியவை. .ஸ்ரீ அரவிந்தம் தனக்கேயுரிய சரணாகதி தத்துவத்திற்கு ஈஸ்வரனையும் உட்படுத்துகிறது.
- ஈஸ்வரன் சக்திக்குத் தன் சரணாகதியைப் பூரணமாக்கிய பின் பூரணம் பெறுகிறான் என்பது ஸ்ரீ அரவிந்தம். இக்கருத்து மரபில் இல்லாதது. ஸ்ரீ அரவிந்தரின் இக்கருத்து யோக சித்தியைக் குறிப்பது.
- பாரதி இதை ‘அவள் தாளினை கைக்கொண்டு மகிழ்ந்திருப்பான்‘ என்கிறார்.
- யோகி சரணாகதியால் யோகத்தைப் பூர்த்தி செய்கிறான்.
- ஈஸ்வரன் சரணாகதியால் சக்தியை லோக மாதாவாக்குகிறான்.
சரணாகதி சிறியதைப் பெரியதாக்கும் தத்துவம். தெய்வத்தின் ஆண்மை பெண்மையைச் சரணடைவதால் ஸ்ரீ அரவிந்தம் பூரணம் பெறுகிறது என்பது ஸ்ரீ அரவிந்தம்.
- அனந்தமின்றி பிரம்மமில்லை.
- அக்ஷயப் பாத்திரம் ஜடத்தில் அனந்தம்.
ஆன்மாவுக்கு 12 முக்கிய அம்சங்களுண்டு எனினும் அனந்தம், காலம் கடந்த நிலை, மௌனம், சாந்தி ஆகிய நான்கும் அடிப்படையானவை. இவற்றுள் எதுவும் ஆன்மாவை புருஷனை பிரம்மத்திற்கு அழைத்துச் செல்லவல்லது.
- ஸ்ரீ அரவிந்தம் பிரம்மத்தை ஜடத்தில் கண்டு, அனுபவித்து வாழ்வது.
- பிரம்மத்தைக் காணுமுன் ஜடத்தில் அனந்தத்தைக் காண்பது அவசியம்.
- ஜடத்தில் அனந்தம் என்பது அபரிமிதமான வளம் அன்னை அதிர்ஷ்டம்.
- Practical concept of infinity அபரிமிதத்தை அறியாதவர் ஸ்ரீ அரவிந்தத்தை அறியாதவர்.
- மௌனத்தை அறியாத முனிவரில்லை. மௌனம் இல்லாவிட்டால், முனிவர் நிலை இல்லை.
- வறுமையான செல்வரோ, மடமையான அறிஞரோ இல்லை என்பதுபோல் ஜட வாழ்வில் அபரிமிதம், அதிர்ஷ்டம், வளம் காணாதவர் ஸ்ரீ அரவிந்தத்தை அறியார்.
மனிதன் முடிவானதைத் தேடினான். பிரம்மத்தை முடிவானது எனக் கண்டான். அதுவே முடிவு என்றாகாது. ஏனெனில் முடிவு, முடிவற்றதாகும்.
- மனிதன் கண்டதே முடிவன்று.
- எது முடிவு என்று நிர்ணயிப்பவன் மனிதன். III 227
முடிவு என்று ஓரிடமோ, ஒன்றோயில்லை. நாம் முடிக்குமிடமே முடிவு. பண்டை நாளில் க்ஷர பிரம்மம் முடிவாயிருந்தது. தவம் வளர்ந்தபொழுது அக்ஷரப் பிரம்மமே, பிரம்மம் என உபநிஷதம் கூறியது. கீதை எழுதும் வரை அந்த நிலை. கீதை எழுந்தபின் புருஷோத்தமன் முடிவு என்றனர். ஸ்ரீ அரவிந்தம் ஈஸ்வரனை யோகத்திற்கு முடிவாகக் கூறினாலும், பிரம்மமே முடிவு என அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.
எது பிரம்மம் என்பது மாறிக் கொண்டே வருகிறது.
அனந்தமான பிரம்மத்திற்கு அந்தமில்லாததற்கு முடிவைத் தேடுவது சரியன்று.
- முடிவில்லாத ஆர்வம் முடிவில்லாத பலனைக் காண்பது, முடிவில்லாதவனைக் காண்பதாகும். III 563
ஆண்டவன், சொர்க்கம், வையகம், கோலோகம், சிவபதம், வைகுந்தம் ஆகியவை மேல் உலகுக்குரியவை. மோட்சம் பெற்றவர்கள் கண்ட ஆன்மீகச் சுகங்கள் இவை. இங்கு அவர்கள் இறைவனை முடிவில்லாதவனாகக் கண்டார்கள். ஸ்ரீ அரவிந்தம் முடிவில்லாத ஆண்டவனை இங்குப் பூவுலகில் காணலாம் என்று கூறுகிறது. அதையே தெய்வீக வாழ்வு எனவும் கூறுகிறது. அதை அறிய நிபந்தனைகள் உண்டா?
- பூவுலக மையம் வாழ்வு. வாழ்வின் மையம் செயல்.
- செயல் முடிவது பலனில். நமக்குப் பலன் முடிவுள்ளது.
- பலன் முடிவற்றது என்று காண்பது முடிவற்றவனை இங்கு காண்பதற்கு முதற்படி.
- அதையே காண முடியாதவன் ஸ்ரீ அரவிந்தத்தை அறிய முடியாது.
- அதற்குரிய தகுதி முடிவில்லாத ஆர்வமாகும்.
- அறியாமையை விட்டு நகர்ந்தால், அற்புதம் தெரியும். III 647
- அனந்தனை நாடுகிறது. பரிணாமம் அனந்தனாக்குகிறது.III 814
- தன் ஆதியை பிரம்மமாக உணரும் சிறியது பெரியதாகும். III 830
- பிரம்மம் நம்மைச் சிருஷ்டியின் சூழலுக்குள் கொண்டு வருகிறது. III 877
- ஆன்ம விழிப்பு என்பது சிருஷ்டியாகும். III 876
- பெரியதன் பாதையும் பெரியது. III 878
அறிவு தன்னைத் தன்னுள் மறைத்து அறியாமையாக்கி உலகம் உற்பத்தியாகியுள்ளது. அறியாமையை விட்டு நகர்ந்தால், உலகம் அறிவு மயமாகும். அறிவுமயமான உலகம் அற்புதக் காட்சியாகும்.
அனந்தன் என்பது பரமாத்மா, ஜீவாத்மா விடுதலை பெற்று, பரமாத்மாவை அடைவது மோட்சம். பரிணாமம் ஜீவாத்மாவை, பரமாத்மாவாக்குகிறது.
சிறியது கல்லானால் தன் ஆதியை பூமி என அறியும். சிறியது சொல்லானால் தன் ஆதியை மொழி எனக் கூறும். கல்லும், சொல்லும் பூமியிலும், மொழியிலும் முடிவனவல்ல. முடிவு பிரம்மம். அதை உணரும் நேரம் சிறியது பிரம்மமாக மாறும். அதன் முன் பெரியதாக மாறும்.
பிரம்மம் தன் இச்சைப்படி சிருஷ்டித்தது என்பது தத்துவம். நாம் இருளில் உள்ளவரை விலங்கு போலிருக்கிறோம். ஆன்ம விழிப்புப் பெற்றால் நம் செயலெல்லாம் பிரம்மத்தின் செயல்போல தன்னிச்சையான செயல்களாக இருக்கும். நாமும் பிரம்மம்போல் செயல்படுவோம். நம் செயலும் சிருஷ்டி போலிருக்கும். அதாவது நம் செயல் குறையோ, தவறோ வாரா.
பிரம்மத்தின் பாதை நிலையாக நிர்ணயிக்கப்பட்ட பாதையில்லை. அளவு கடந்து மாறக் கூடியது. எந்த நேரமும் மாறும் தன்மையுடையது என்பதால் அது பெரிய பாதையாகும்.
பிரம்மத்தை உணர்ந்தால் பெரிய சக்தி எழும். III 559
நமக்கு முடிவானது பிரம்மத்திற்குச் சுதந்திரமானது என்பது பிரம்ம ஞானம். ஞானம் மனதிலிருந்து உணர்வுக்குப் போனால், உணர்வு இந்த ஞானத்தை ஏற்றால் எழும் சக்தி பெரியது. பிரம்மத்தைப்போல் பெரியது. அதே ஞானம் உடலைத் தொட்டால், அந்த சக்திக்கு சாதிக்கும் திறன் எழும்.
- அனைத்தும் அனந்தம் III 565.
நம் பொருள்கள், செயல்கள், எண்ணங்கள் அனைத்தும் சிறியவை. சிறியது எதுவானாலும் அதனுள் உள்ள ஜீவியம், சத்தியம், பிரம்மம் வெளிப்பட்டால் சிறிய பொருள்கள், செயல்கள், எண்ணங்கள் பெரிய பொருள்கள், பெரிய செயல்கள், பெரிய எண்ணங்களாகின்றன.
- தன்னையே பிரம்மமாக உணரும் சிறியதும் பெரியதாகும். III 831
- பரிணாமம் ஜீவியத்தில் முடியும். அனந்தனிலும் முடியும். III 881
- சிறியது மனிதன், பெரியது தெய்வம். அன்னையை ஏற்றபின் மனிதன் தெய்வமாகும் வாய்ப்பு முழுவதும் உண்டு. அது பொய்யொழிந்த மனிதனுக்குண்டு.