சாவித்திரியின் பயணம் சத்தியவானின் மரணத்தில் ஆரம்பிக்கிறது. காவியம் அஸ்வபதியின் யோகத்தில் ஆரம்பித்து, சாவித்திரியின் பிறப்பு, வளர்ப்பு, திருமணம் என்று தொடர்ந்து சத்தியவானின் மரணத்திற்கு வரும். Epic poetry பெருங்காப்பியம் நடுவில் ஆரம்பிப்பது என்பது மரபு, மரபை ஒட்டி ஸ்ரீ அரவிந்தர் காவியத்தை இங்கு ஆரம்பிக்கிறார். முதலில் ஸ்ரீ அரவிந்தர் சாவித்திரி எழுத ஆரம்பித்தது 1920க்கு முன். அதை 14 வரியுள்ள sonnet ஆக எழுதினார். சாவித்திரி மட்டுமே பகவான் இறுதிவரை 1950 எழுதிய நூல். காவியம் 12 புத்தகம் என்பது மரபு. அவர் திட்டம் அதுவன்று. ஆனால் 12 புத்தகமாகவே சாவித்திரி முடிந்தது. முதலில் தாமே எழுதினார். கையால் எழுதுவதும் உண்டு. டைப் அடிப்பதும் உண்டு. பார்வை மங்கியபின் பகவான் சொல்ல நிரோத்பரன் எழுதினார். 1950 ஜுன்மாதம் பகவான் நிரோத்பரனிடம் சாவித்திரியைச் சீக்கிரம் முடிக்க வேண்டும்‘ என்றார். அதுபோல் முடித்தார். 1950 டிசம்பரில்
பகவான் சமாதியான பின்னரே அவர் கூறியதன் அர்த்தம் விளங்கியது.
- அமரத்துவத்தின் ஆனந்தம் புவியின் பரிசு.
- காலத்தின் கடுமையைக் கருதும் மனநிலை.
- ராஜ்யத்தின் உரிமை தணியாத ஆசை.
- தீர்க்கமான அலட்சியத்தின் தூரத்துப்பார்வை.
- வலியின் சிலையான சலனமற்ற தெய்வம்.
- தணியாத பாதகத்தின் தர்மகர்த்தா.
- வேதனையான விவாதத்தின் சுணக்கமான மையம்.
- இருளினின்று பிறக்கும் தெய்வங்கள்.
- சுவர்க்கத்தின் வேதனையும் போராட்டமும்.
- சலனமற்ற சக்தியாக அவள் எழுந்தாள்.
- காலத்தையும் விதியையும் காணும் ஆன்மா.
- ஜீவராசிகளின் அஞ்ஞானக் குரல்.
- காலத்தின் கதியை விழித்துணர்ந்தாள்.
- அமரனின் அரவணைப்பில் மீண்டும் துவக்கினாள்.
- வேதனையும் ஆசையும் செய்யும் தியாகம்.
- சிந்தாத கண்ணீரின் நித்திய சடங்கு.
- தெய்வத்தின் கடுமையால் பீடிக்கப்பட்டாள்.
- காலம் கடந்த கவலையின் ஆழம் வாழ்வின் லட்சியமன்று.
- புவியின் வேதனைக்கு வாரிசு.
- தழலான இதயத்தின் நிழல்.
****
P.11 An Absolute supernatural darkness falls on Man sometimes when he draws near to God. இறைவனை நெருங்கும்பொழுது பூரண இருள் சூழ்வதுண்டு
ஒளியின் அடியில் இருள் என்பதும், விடியலுக்கு முன் இருள் அடர்ந்திருக்கும் என்பதும் வழக்கு. இதற்குரிய தத்துவம் என்ன? ஒளி இருளாக மாறுகிறது என்றால் ஒளி சுருங்கி, இருள் அதிகமாகிறது எனப் பொருள். இரண்டு முக்கியமான கருத்துண்டு.
- அதிக இருள் என்பது அதிக ஒளி என்று பொருள்
- மாற்றம் க்ஷணத்தில் எழுவது
ஆன்மீக ஒளியின் முன் நடுப்பகல் நள்ளிரவு போன்றது என்கிறார் அன்னை. அத்துடன் ஆன்மீக இருளின் மீது நள்ளிருள் பிரகாசமாக இருக்கும் என்கிறார். சூரியன் தரும் ஒளி ஜடத்தின் ஒளி, அது ஒளியன்று எனவும் ஒளி என்பது ஜீவியத்தின் பிரகாசம், அது ஜடத்தில்பட்டு பிரதிபலிப்பதால் ஏற்படும் ஒளியை நாம் சூரிய ஒc என்று காண்கிறோம் என்றும் பகவான் கூறும் தத்துவங்கள் நம் அறிவுக்கு எட்டாது. அவற்றை நாம் ஏற்க வேண்டுமானால் சில உதாரணங்கள் மூலமாக நாம் புரிந்துகொள்ள முயலலாம், நேரடியாகப் புரியாது.
- வெண்மை என்பது 7 நிறங்கள் கலந்தது. கருப்பு என்பது எல்லா நிறங்களையும் தன்னுட்கொண்டது.
- பணம் என்பது செக் அல்லது, நோட் அல்லது, வெள்ளி ரூபாயன்று, மனித உழைப்பு. மனித உழைப்பே பணம் எனப்படும். படிப்பு என்பது பட்டமன்று, மனத்தின் அறியும் திறனே படிப்பு எனப்படும்.
- விஞ்ஞானிக்கும், ஆதிமனிதனுக்கும் அறிவு ஒன்றே – ஸ்ரீ அரவிந்தர்.
மேற்சொன்ன கருத்துகளில் பொதிந்துள்ள உண்மையை நாம் ஏற்பதுபோல் சாவித்ரியின் வரியில் மறைந்துள்ள கருத்தை நாம் அறிய முயலலாம். இந்தப் பக்கத்திலுள்ள மற்ற கருத்துகளின் பகுதிகள்,
- எண்ணத்தின் இரகஸ்யத்தினுள் மறைந்தாள்
- பல உருவகங்களில் மனம் திளைத்தது
- உயிர் பெற்றெழுந்த பின், முடிவைக் கண்டது
- நீர்க்குமிழி போன்றது, ஊனக் கண்ணிலிருந்து விலகியது
- ஆன்மாவின் ஜீவனற்ற நிழல் கண்ணுக்குப் புலப்படாது
- எதிர்காலத்தைத் தாங்கி வரும் பேய் போன்ற இதயம்
- விரைந்து மறையும் நிகழ்ச்சியின் சுவடு
- காலத்தின் ஓடை வேகமிழந்தது
- புரியாத புலனின் கரைகள்
- மறைந்துபோன மனித உருவங்கள்
- அழிந்தவற்றின் சூட்சும உருவங்கள்
- காலத்தைக் கணக்கிடும் சாட்சி
- கண்ட கனவும், நினைத்த நினைவும்
- நினைவெனும் வானில் பறந்தவை
- பல வண்ண உள்ளுறை உதயம்
- வாழ்வின் இராஜ பாதைகளும், அவற்றின் இனிய கிளை வழிகளும்
****
P 13. The world unknowing for the world she stood தன்னையறியாத உலகத்தின் சார்பாக அவள் வாழ்ந்தாள்
இப்பக்கத்திலுள்ள சில கருத்துகள்:
- கடந்தவற்றை அறிதல் அவசியம்.
- பழைய பாக்கி தீருதல் தேவை.
- ஆன்மாவின் கடனைக் காலத்தில் செலுத்த வேண்டும்.
- ஆன்மபலம் தவிர மற்றதை அறியாதவள்.
- தனிமையில் ஆன்மா தவம் செய்கிறது.
பிரம்மாண்டமான வெற்றிகள் தங்கள் வருகையைப் பறை அறைவிப்பதில்லை என அன்னை கூறியுள்ளார். தியாகம் உண்மையும், பெருமையும் உடையதானால் உலகம் ஏற்றுப் போற்றும். அந்நிலையையும் தியாகம் கடக்குமானால், மனிதன் உயர்ந்து தெய்வமாகிறான். தெய்வ நிலையில் தியாகம் எவர் கண்ணிலும் படாது. படக்கூடாது.
- ரோடு போட்டால் அதை உலகம் அறியும். ரோட்டைத் தாங்கும் பூமியை நாமறிவதில்லை.
- தலைவனை உலகம் ஏற்கும். போற்றும், மகுடம் வைக்கும். அவனைப் பெற்றெடுத்த தாயை அறிய முயலாது. அவன் உலகுக்குச் சேவை செய்ய தங்களைத் தியாகம் செய்த குடும்பத்தை அறியாது.
- பேர் உத்சவங்களில் உலகமே கலந்துகொள்ளும். அவற்றை நடத்திய ஆயிரம் சிப்பந்திகள் இருப்பதையே எவருமறியார். ஆன்மா அதன் கடமையைத் தனித்தே ஆற்ற வேண்டும்.
- புத்தகம் பிரபலமானால் ஆசிரியர் விருது பெறுகிறார். புத்தகத்தை அச்சிட்டு வழங்கியவரும், உலகெங்கும் எடுத்துச் சென்று விற்பவருமான வியாபாரியையும் நாமறிவதில்லை.
எண் சாண் உடம்பிற்குச் சிரசே பிரதானம். நாம் காண்பது அவர் முகம். முகமே மனிதன் எனக்கொள்கிறோம். ஆயிரம் உறுப்புகள் அரை வினாடி தவறாமல் செயல்பட்டு மனிதனாக இயங்கவைப்பதை அறியவோ, நினைக்கவோ, நம்மால் முடிவதில்லை.
ஆற்றில் 10 அடி தண்ணீர் ஓட பூமிக்கடியில் 100 அடி நீர் ஊற வேண்டும். கரையின் இருபுறமுள்ள ஆயிரம் ஏரி, குளம், கிணறுகள் நிரம்ப வேண்டும். ஒரு துளி வெள்ளம் பெருக ஓராயிரம் துளிகள் தங்களை மறைத்துச் சேவை செய்ய வேண்டும். இன்று மனிதன் ஒரு நாள் தன் கடமையைச் செய்ய, கடந்த அவன் வாழ்வு அடிப்படையாக அமைகிறது. எதிர்கால வாழ்வுக்கு அடிப்படையை இன்று அமைக்கிறது. சூழலில் நடப்பவை அனைத்தும் உறுதுணையாக நிற்கின்றன. ஒருவன் வாய்திறந்து பேச ஓராயிரம் ஆத்மாக்கள் மௌனமான இசைவு தரவேண்டும். பழைய பாக்கி தீர வேண்டும். காலம் தன் கடமையைச் செய்ய மனிதனை மௌனமாக வற்புறுத்தும். காலத்தைக் கடக்க மனிதனால் நினைக்க முடியாது.
பெற்றோர் பையனைப் பள்ளியில் சேர்க்கலாம். ஆசிரியர் பாடம் சொல்லித் தரலாம். அச்சகம் புத்தகத்தை அச்சிட்டுத் தரலாம். ஆனால் பரீட்சையில் பையன் தானே எழுத வேண்டும் என்பதுபோல உடலோடு உடலாக ஊர் வாழும், உணர்வோடு உணர்வாக உற்றார் உறையலாம். அறிவை அநேகம் பேர் ஏற்கலாம், ஆதரிக்கலாம். ஆனால், உலகத்திற்காகப் பிறந்த சாவித்திரியை உலகம் அறியவில்லை. உலகத்திற்காக வாழ்ந்தபொழுதும் உலகம் அறியவில்லை. உலக இருளை அழித்து ஒளியாக்கியபொழுதும் உலகம் சாவித்திரியை அறியவில்லை. இது அன்னையின் பூவுலக வாழ்வு.
அன்னை நம்மிடம் வாழ்ந்தார். உலகப் போர்களை வென்றார். அடுத்துவரும் உலகப் போரைத் தடுத்தார். மனிதனின் சிறுமையை ஏற்றுப் பெருமையாக மாற்றினார் என உலகம் அறியவில்லை. இனியும் அறியுமா எனத் தெரியவில்லை.
****
P. 14. Love came to her hiding the shadow, Death அன்பின் நிழல் அணைந்து வரும் மரணம்
முரண்பாடான உலகை மனிதன் ஏற்று வாழ வேண்டியது அவசியம். அந்த அவசியம் தவத்திற்கும், யோகத்திற்குமில்லை என்று ஆயிரமாயிரம் துறவிகளை இந்தியா உற்பத்தி செய்தது. விவேகானந்தர் அதனின்றும் சற்றுப் பிறழ்ந்து ‘தரித்திர நாராயணனை‘ நமக்கு இலட்சியமாக அளித்தார். முரண்பாடு என்பது உண்மை. தவிர்க்க முடியாதது. தவிர்க்கப்பட வேண்டியதில்லை. ஏற்கப்பட வேண்டும். உடன்பாடாக முரண்பாட்டை ஏற்பது யோகம் என்பது ஸ்ரீ அரவிந்தம்.
முரண்பாட்டின் பின்னால் உயர்ந்த உடன்பாடுண்டு,
என்பது ஸ்ரீ அரவிந்தம் என்றும் கூறுவது. அக்கருத்தைப் பிரதிபலிக்கும் சாவித்திரியின் வரி மேலே கூறப்பட்டது. மரணம் வாழ்வுக்கு நித்தியத்துவம் அளிக்கிறது என்பது ஸ்ரீ அரவிந்தர் தத்துவங்களில் ஒன்று. சத் ஜடமாக மாறியது என்பது அடிப்படை. அதையொட்டி வாழ்வு life மரணமாயிற்று என்பது வாதம், விளக்கம். சிருஷ்டியை விளக்கும் பகவான் ஸ்ரீ அரவிந்தர்,
- இறைவன் தன்னுள்ளே தன்னை மறைத்துக் கொண்டு,
- சத் என்பதை ஜடமாகவும்,
- சித் என்பதை வாழ்வாகவும்,
- ஆனந்தத்தை ஆன்மாவாகவும்,
- சத்திய ஜீவியத்தை மனமாகவும் மாற்றினான் என்கிறார்.
இதன் விளைவாக,
- சத்தியம், பொய்யாகவும்
- நல்லது, கெட்டதாகவும்
- ஞானம், அஞ்ஞானமாகவும்
- சக்தி, திறனற்றதாகவும்
- அழகு, விகாரமாகவும்
- அன்பு கொடுமையாகவும்
- சந்தோஷம் வலியாகவும்
- அனந்தம், கண்டமாகவும்
- ஒளி இருளாகவும்
- தூய்மை, அசுத்தமாகவும் மாறின.
இந்தப் பக்கத்திலுள்ள இதர கருத்துகள்:
- தூய்மையின் சத்தியத்தை நித்தியமாகக் காட்டினர்.
- தனிமையை இனிமையாக்கும் மனித உணர்வுகள்.
- விலங்கின் விவரமில்லாத சிறு தேவை.
- பூமாதேவியின் பயங்கர ஆவேசம்.
- ஆயிரம் கோடி மரங்களின் அடர்ந்த பொறுமை.
- வானமெனும் இரத்தினக் கம்பளத்தின் சிறப்பான சிந்தனை.
- ஊர்ந்து செல்லும் காலத்தின் உள்ளுறையும் பாரம்.
- சிந்தனைக்கு இடமளித்து சிவனை இருத்திய மனம்.
- அனந்தனின் சுவடுகளைத் தாங்கும் உலகம்.
- மலையின் எழுச்சியை இதயத்தின் எழுச்சியாகக் காணும் நோக்கம்.
****
P. 15. Even his godlike strength to rise must fall தெய்வ வலிமையும் பாய்வதற்கு பதுங்க வேண்டும்
இயற்கையின் முரண்பாடு, இறைவனுக்கு உடன்பாடு. இதயத்தின் பிணக்கு சிந்தனைக்கு அழைப்பு என்ற கருத்துகள் Life Divine முதல் அத்தியாயத்திற்குரியவை. ஸ்ரீ அரவிந்தத்தைச் சுருக்கமாகச் சொல்ல முடியும். நாம் வாழும் உலகம் சிருஷ்டி எனப்படும். இது காலத்தில் செயல்படுவது Becoming என்பது. மேல் உலகம் காலத்தைக் கடந்தது. சிருஷ்டியில் வாழ்பவன் மனிதன். சிருஷ்டியைக் கடந்த நிலை காலத்தைக் கடந்த நிலை. அங்கு உறைவது புருஷன், Being. இதுவரை யோகம் என்பது உலகத்தைவிட்டு மோட்சத்திற்குப் போவது. From Becoming to Being. ஸ்ரீ அரவிந்தம் சிருஷ்டியைப் பகுதியாகவும், புருஷனைப் பகுதியாகவும் காண்கிறது. சிருஷ்டியும், புருஷனும் சேர்ந்தது முழுமை. அந்த முழுமையின் மையம் சிருஷ்டியில் உள்ள புருஷனில் (Being of the Becoming) உள்ளது. அதுவே சைத்தியப் புருஷன். மேற்சொன்ன வரி தெய்வமும் பகுதி, பாய்வதற்குப் பதுங்கவேண்டும் என்கிறது. முழுமைக்கு அது தேவையில்லை. பிரம்மமில்லாமல் எதுவுமில்லை, சர்வம் பிரம்மம்.
சிருஷ்டிக்கும் வித்து பிரம்மம். அப்பிரம்மம் முழுமையானது. மனிதன் புருஷனைத் சுவர்க்கம் தேடுவதற்குப் பதிலாக, சிருஷ்டியிலுள்ள புருஷனை சைத்தியப் புருஷனைத் தேடினால் வாழ்வு தெய்வீக வாழ்வாகும். யோக வாழ்வில் ஆரம்பித்துத் தெய்வீக வாழ்வில் பூரணயோகம் முடிகிறது. நம் வாழ்வும், தெய்வத்தின் வாழ்வும் பகுதி என்பதே ஸ்ரீ அரவிந்தம்.
இந்தப் பக்கத்திலுள்ள இதர கருத்துகள்:
- ஆன்மா அதன் ஆதியை தனியே சென்றடையும்.
- பிரம்மாண்டமான சக்தி பின்னே போய் நின்றது.
- அணுவில் உறையும் அனந்தனின் தழல்.
- எல்லாம்வல்ல சூட்சுமக் குரு.
- இரண்டு இரட்டைகள் உருண்டு தேறிய ஒருமை.
- உருண்டு வந்த உச்சியைத் தாண்டும் குதிப்பு.
- உயர்ந்த நிலைக்குரிய உன்னத நிதானம்.
- புவியும் சுவர்க்கமும் ஆடும் ஊசல்.
- வளர்பிறைபோல் வளரும் ஆன்ம வளம்.
- பின்னத்தின் முழுமை பின்னணியில் தெரியும் ஆத்மா.
- பிரம்மத்தையும் பிண்டத்தையும் இணைக்கும் சந்திப்பு.
- அனைவர் முகத்திலும் பொயும் அவனுருவம்.
- காலத்தினுள் காலத்தைக் கடந்த கல்பம்.
- ஊனக் கண்ணுக்கு உயிரும் உயர்வும் தரும் உன்னதம்.
- கர்மத்தின் வலிமையும் அருளின் சக்தியும் இணையும் இடம்.
****
P 16. In her he met his own eternity அவளுள் அவன் தன் பிரம்மத்தைக் கண்டான்
அன்றிலிருந்து இன்றுவரை மனிதன் இறைவனைத் தேடுகிறான். இறைவனைக் கடவுள் எனவும், சுதந்திரம் எனவும், சாகாவரமாகவும், ஜோதியாகவும் மனிதன் கருதுவதுபோல், காலத்தைக் கடந்த (eternity) நிலையாகவும் கருதுகிறான். பிரம்மம் காலத்தைக் கடந்ததால், அதையே பிரம்மமாகவும் மனிதன் நினைக்கிறான்.
- எந்த வேலை செய்தாலும், எதைத் தேடினாலும் மனிதன் இறைவனையே நாடுகிறான்.
- தனக்குத் தேவையானவற்றிலும், தன்னைக் கவர்வதிலும் இறைவனைக் காண்பது மனிதனுக்கு முக்கியம்.
- மனிதன் தான் விரும்பும் பெண்ணை தெய்வமாக மனதில் வரிக்கிறான்.
- பிரம்மத்தைத் தேடும் மனிதன் பெண்ணில் பிரம்மத்தைக் காண்கிறான்.
- ஆரம்ப நிலையில் பெண்ணைத் தேடும் ஆண் தான் பெறும் பிள்ளைகளால் தன் உடலை நித்தியமாக்குகிறான்.
- முடிவான கட்டத்தில் மனிதன் ஈஸ்வரனாகி, சக்தியைத் தேடி பூரணம் பெறும் பொழுது ஆன்மா நித்தியம் பெறுகிறது.
- மரபு பெண்ணை விலக்கி தவத்தை நாடியது.
- பூரண யோகம் பெண்ணை ஏற்று விலங்குணர்வை விலக்கி அவனுள் ஆன்மீகப் பூரணம் பெறுகிறது.
இந்தப் பக்கத்திலுள்ள இதர கருத்துகள்.
- எதையும் தெய்வீகமாக்கும் ஆன்மீகம்.
- இடையில் வெளியாக எழுந்தாலும் ஒளியின் இரகஸ்யம் ஒளிந்துள்ள இடங்களாகும்.
- சொல்லை அமைதியாகத் தொகுத்தவள் அவள்.
- அமைதியின் ஊற்றென அமைந்த பெருவெளிக் கண்டம்.
- ஆதியின் அக்னி அமைதியாகப் பரவிய சமுத்திரம்.
- தெய்வத்தின் வலிமையையும், மோனத்தின் பொறுமையையும் உடையவள்.
- உள்ளத்து வெளி அவளுள் பரந்து நின்று தன்னைப் பிரதிபலிக்கிறது.
- சூட்சும வெளியின் இதமான அரவணைப்பு உயர்ந்து திரண்டது.
- அவளே அவனுடைய சொந்த இல்லமென உலவும் வகை.
- அவளது இளமை அரியாசனத்தில் ஆனந்த கொலுவிருந்தது.
- சுவர்க்கத்தின் அமைதியான கவசம் தெய்வீகக் குழந்தையைப் பாதுகாத்தது.
- புவியின் கடும் சுவாசம் அப்பளிங்குக் கண்ணாடியைக் கரைப்படுத்தவில்லை.
- மனித வாழ்வின் பாரத்தைச் சுமக்க அவள் முடிவு செய்தாள்.
****
P 17. Or hew the ways of Immortality அமரத்துவமான சுவர்க்கத்திற்குப் பாதை அமைப்போம்
காய கல்பம், சாகா வரம், மரணமிலாப் பெருவாழ்வு, அமரவாழ்வு என்பவற்றை மனிதன் சாகாமல் என்றும் உடல் உயிரோடிருப்பான் எனக்கொண்டு இந்தியத் தவசிகளும், ரிஷிகளும் காயகல்பம் தேடினர். வேதம் அமரத்துவம் என்பதைத் தெவாகக் கூறுகிறது.