- அமரத்துவம் ஆத்மாவுக்கு, உடலுக்கோ, உயிருக்கோ (ஆவி) இல்லை.
- அமரத்துவத்தின் இரு அம்சங்கள் Infinity அனந்தம், Universality பிரபஞ்ச முழுவதும் பரவுதல்.
- அனந்தம் எல்லா நிலைகட்கும் உண்டு. ஜடம், வாழ்வு முதல் சத்வரை அனந்தம் உண்டு. ஆனால் அமரத்துவம் Supreme Infinityக்கே உரியது. Supreme என்பதைப் ‘பர‘ என்று குறிப்பதுண்டு.
- Universality பிரபஞ்சம் முழுவதும் பரவுதலும் எல்லா நிலைகட்கும் உண்டு. அமரத்துவம் Divine Universality க்கேயுண்டு.
- ஆன்மா இவையிரண்டையும் – (Supreme infinity,divine universality ) உச்சகட்ட அனந்தமும், இறைவனுக்குரிய பிரபஞ்ச ரூபமும் – பெற்றால் அமரத்துவம் பெறுகிறது என்பது வேதம்.
சாவித்திரி கூறும் அமரத்துவம் உடல் வாழும் மனிதனுக்குரியது. உலகுக்குப் புதிய கருத்து. சாவித்திரி எமனை வென்று, அழித்து, மரணத்தை அழித்து உலகுக்கு அமரத்துவம் வழங்க வந்தவள். அதைச் சாதித்தாள். இப்பக்கத்திலுள்ள மற்ற கருத்துக்கள்:
- எமனெனும் கருமேகத்துடன் போரிட வந்தவள் சாவித்திரி.
- மரணம், வீழ்ச்சி, சோகம் ஆன்மாவை நோக்கி உந்தும்.
- ஆயுதம் தாங்கிய அமரத்துவம் காலத்தின் கிடுக்கிப் பிடியைச் சமாளித்தது.
- ஜடத்தின் இருளில் வாழ்வின் சிறு போராட்டம்.
- தம் வலுவே எதிர்ப்புக்கு அளவுகோல்.
- தெய்வீக அம்சங்களை தாக்கினான்.
- ஆர்வம் நிறைந்த மனித இதயத்திற்கு அவனிதயம் துணை நின்றது.
- விதியின் திரையில் விளையாடும் உருவம்.
- தெய்வீக விளையாட்டின் வெற்றியும், தோல்வியும்.
****
P .18 Of limiting nature with a limitless soul சுருங்கும் பிரகிருதியும் விரியும் ஆன்மாவும்
ஆன்மா அனந்தமானது. காலத்தைக் கடந்தது. இடத்தால் கட்டுப்படாதது. புருஷன் எனப்படும் பிரகிருதி என்பது இயற்கை. புருஷப்–பிரகிருதி எனவும், பிரம்மம்–மாயை எனவும், ஈஸ்வர – சக்தி எனவும் இரண்டிரண்டாக உலகைப் பிரித்து ஞானிகள் கூறுகின்றனர். அதனால் வாழ்வு இயற்கையைச் சேர்ந்தது. துறவி வாழ்வை விலக்கி புருஷனை நாடுகிறார். வாழ்வு சுருக்கம் தருவது என்பதால் துறவறத்திற்குத் துணை செய்யாது. ஆனால் ஸ்ரீ அரவிந்தம் அடுத்த கட்டம் போய் அந்த வாழ்வும் பிரம்மமாயிற்றே, சர்வம் பிரம்மம் என்பதால், வாழ்வு பிரம்மமில்லாமல் இருக்கமுடியாதே என்கிறது. பிரகிருதியைவிட்டு விலகும், புருஷன் பிரகிருதியுள்ளும் இருக்கின்றானே என்று ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார்.
விரியும் ஆன்மா சுருங்கும் வாழ்வுக்கு வித்தாயிருப்பதால், வாழ்வு மையத்தை அதனுள் உள்ள ஆன்மாவுக்கு மாற்றினால் மனிதவாழ்வு, தெய்வீக வாழ்வாகும் என்பது ஸ்ரீ அரவிந்தம். ஸ்ரீ அரவிந்தரின் தத்துவம் அடுத்த கட்டங்கட்கும் போகும். இங்கு நாம் அதைக் கருதத் தேவையில்லை.
இப்பக்கத்திலுள்ள இதர கருத்துகள்,
- காலத்தின் தலைவனுக்குரிய விளையாட்டுக் கருவி.
- சதுரங்கத்தின் காய், விதியின் விளையாட்டை நடத்தும்.
- அளவில்லாத அரங்கத்தின் ஊர்ந்துவரும் அசைவு.
- புவியின் சொக்கட்டான் விதியுடன் விளையாடும்.
- காலத்தில் வரைந்த மனித உருவம்.
- கடுமையான மன்றத்தில் கட்டுப்பட்ட வாழ்வு.
- ஆனந்தத்தை வெறுக்கும் காரிருள் சக்திகள்.
- ஜடத்தின் பொக்கிஷம் சிம்மாசனம் பெறுகிறது.
- வாழ்வு எனும் யாத்திரையில் தடை செய்யும் மரணம்.
- வெடித்து விரியும் இதயத்தில் வைத்தெடுத்த முத்திரை.
- சீறி எழும் மனதை மீறிவரும் கட்டு.
- வலியை எழுப்பும் சாட்டை, லஞ்சம் தரும் மகிழ்வு.
- அறியாமையின் அர்த்தமற்ற நீதிமன்றம்.
- பரமனின் பாரம் தாங்காமல் அமிழும் பூமி.
****
P. 19. At the unseen’s knock upon her hidden gates மறைபொருளான கதவில் கண்ணுக்குத் தெரியாமல் தட்டுவது
உலகில் ஒரு சிறு வேதனையுமில்லை. ஒரு க்ஷணம் கூட மனிதன் துன்பம் அனுபவிக்கத் தேவையில்லை என்ற ஸ்ரீ அரவிந்தம், அத்துன்பங்கள் உற்பத்தியான வகையை விளக்கி, அதிலிருந்து சாவித்ரி உலகைக் காப்பாற்றும் முறையை மனிதனுக்குரிய சொல், தெய்வத்திற்குரிய மந்திரம், யோகிக்குரிய தந்திரம், கவிக்குரிய உருவகம், திருஷ்டியுள்ளவர் காணும் அற்புதம், எதுவும் அறியாதவர்க்குரிய குருட்டுப் பார்வை ஆகிய பல வழிகளில் செய்யுளாக வகுத்தது சாவித்ரி. அவற்றுள் உள்ள சில சொற்றொடர்களைக் கீழேயும், முதன்மையானதைத் தலைப்பாகவும் இங்குக் காண்கிறோம்.
வலியிருந்து விடுபட மனிதனுக்குக் கதவுண்டு.
கதவைத் தட்டி எழுப்பும் அருள் உண்டு.
கதவு மறைந்துள்ளது.
தட்டும் குரல் காதுக்கோ, கண்ணுக்கோப் புலப்படாது.
புலனுக்குப் புலப்படாதது, தேடும் மனிதனுக்குத் தென்படும் என்ற சட்டம் வாழ்வுக்கும், யோகத்திற்கும் உண்டு என்று தெரிவிக்கும் வரி முதல் கூறியது.
- இறவாத இலட்சியங்களை மரணத்தில் தேடுபவள்.
- உலகத்தை வாழ்வில் நிர்ணயிப்பவள்.
- அவள் பேச வேண்டிய சொல், செய்ய வேண்டிய செயலுண்டு.
- வலி போக வேண்டும் எனும் வலிமையற்ற மனித இதயமன்று.
- இறைவனின் ஊற்றுகளை இதமாக இதயத்தில் கண்டவள்.
- ஜோதிமயமான புத்தகத்தை மூட சம்மதிக்காதவள்.
- பிரபஞ்ச சாம்ராஜ்யத்தை எதிர்த்து நின்ற தனி மனுஷி.
- மின்னல் தாக்கினால் மிளிர்ந்த வலிமை.
- இருளின் தேவதைகளை மறுப்பின்றி ஏற்பவர்.
- கடந்த காலச் சட்டத்தைப் பணிந்து ஏற்கும் பாங்கு.
- மனம் மகிழ்ந்து பணிகிறது.
- விதியின் வேதனைக்கு திறந்து காட்டிய நெஞ்சம்.
- காலத்தின் கதிக்கும் வணங்காத முடி.
****
P 19. A colonist from Immortality. சொர்க்கத்திலிருந்து இங்குக் குடியேறியவர்
அவதார புருஷர்களை, அற்புதமான மனிதர்களை நாம் தெய்வப்பிறவி என்கிறோம். வானுலகில் பிறந்து மண்ணுலகில் வாழ்பவர்கள் என்ற விளக்கம் நெடுநாளாகப் பயன்படுவது. ஸ்ரீ அரவிந்தர் அந்த உபமானத்தை சாவித்திரியில் பயன்படுத்துகிறார். வேறோரிடத்தில் சாவித்திரியில் கூறுகிறார். தெய்வலோகத்தில் ஏராளமான ஜீவன்கள் புவியில் பிறக்க விழைகிறார்கள். அதற்குரிய கருவைத் தாய் வயிற்றில் கண்டால் கரு மூன்று மாதமான பின் அதனுள் இத்தெய்வப்பிறவிகள் நுழைய விரும்புகிறார்கள். கருவடைந்த பெண்கள் மனம் தெய்வ சிந்தனையால் நிரம்பி, இனித்து பக்குவப்படுவதை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
தெய்வலோகத்திலுள்ளவர்கள் அங்கேயே இருக்கலாம். இறைவனை அவர்களால் அடைய முடியாது. இறைவனையடைய அவர்கள் விரும்பினால் அவர்கள் புவியில் மனிதர்களாகப் பிறக்க வேண்டும்.
உலகை உய்விக்க தெய்வம் புவிக்கு வருகிறது என்பது நாமறிந்தது.
இறைவனை அடைய தெய்வம் பூமியில் மனிதனாய்ப் பிறக்கிறது என்பது ஸ்ரீ அரவிந்தம்.
இப்பக்கத்திலுள்ள இதர கருத்துகளில் சில.
- உலகத்தின் ஆசையால் உந்தப்பட்டு அவள் பிறந்தாள்.
- நினைவுக்கெட்டாத நாளிலிருந்து தேடுவதில் முன்னணியில் உள்ளவள்.
- புரியாத புதிரான நாடகத்தின் முதன்மையான பாத்திரம்.
- உருவமற்றவன் உருவத்தால் தன்னையே தேடுகிறான்.
- குருட்டு சூன்யம் வாழ முயன்று, கண் திறந்து பார்க்க முயல்கிறது.
- இலட்சிய வெளியின் சிந்தனையாளரின் உழைப்பு.
- பூமியின் ஊமைக் கனவிற்கு ஜோதிமயமான ஆற்றல் வருகிறது.
- பெருவெளியினின்று இறங்கி வந்த பெரிய ஆத்மா.
- க்ஷணத்தில் மறையும் சாம்ராஜ்யம்.
- பூமாதேவியின் புலப்படாத பாதைகளில் சுடர்விளக்கான ஒளி.
- அவனுடைய பிறப்பு ஆண்டவனின் சகுனம்.
- மனித உடல் ஒளி ஊடுருவும் ஆடையலங்காரம்.
- குருட்டு உலகை நடத்தும் பரமனை மூடி மறைப்பது.
- பிரபஞ்சத்தின் காலமும், இடமும் அணைத்து ஆதரிப்பன.
- இறைவன் பட்ட கடனை மனிதனுக்கும் பூமாதேவிக்கும் தீர்ப்பவன்.
- தெய்வீக உரிமையான பெரிய பிதிரார்ஜிதம்.
****
P 21. And burst the bounds of consciousness and Time
ஜீவியத்தின் எல்லையை உடைத்தெறிந்தது;
காலத்தைக் கடந்தது
மரணம் வாழ்வின் உரிமை. மரணத்தால் வாழும் வாழ்வை சுற்றியுள்ள கதவுகளை ஆட்சி செய்வது விதி. அக்கதவைத் திறக்கும் உரிமையை இழந்தவன் மனிதன். அதை ஒருவன் செய்ய வேண்டுமெனில் அவன் வீரன். அவன் காலத்திற்குட்பட்டவனாக இருந்தால் அவன் வீரம் பலன் தாராது.
வீரம் உயர்ந்து காலத்தைக் கடந்த சிகரத்தினின்று எழும்பும் வீரன் அக்கதவை எட்டலாம், தட்டலாம், திறக்கலாம், உடைக்கலாம். வீரம் காலத்தைத் தடுத்து நிறுத்தும். சிருஷ்டியே அறியா வண்ணம் காலச் சக்கரத்தைப் பின்னோக்கிச் சுழலச் செய்யும். ஜீவன் நடந்து வந்தால், சந்தர்ப்பம் என்ற உலகில் தன்னைக் காண்கிறது. அவனுள் உள்ள லோகமாதா – சாவித்ரி – எழுவதால்காலமும், மரணமும் அவனுக்குக் கட்டுப்படுகின்றன. காலத்தைக் கடந்து மட்டுமன்று, காலத்தை உற்பத்தி செய்த ஜீவியத்தையும் கடக்கின்றது.
- மரணத்திற்கு மரண அடி.
- மூடிய கதவைத் திறக்கும் உரிமை.
- காலத்தைக் கடந்த சிகரத்தின் கனவெனும் வீரன்.
- விதியின் கதியைக் கூவி நிறுத்தியது.
- காலச் சக்கரம் கருத்தின்றி சுழல்வதைத் தடுத்து நிறுத்திப் பின்நோக்கச் செய்தது.
- ஜீவனின் சுவடு சந்தர்ப்பத்தைச் சந்தித்தது.
- விதியின் இரும்புப் பிடியிலிருந்து ஜீவன் எழுந்து தன்னை அறிவித்தது.
- லோகமாதா அவனுள்ளிருந்து எழுந்தாள்.
- தெய்வத்தின் திருமுகம் மறைவினின்று வெளிவந்தது.
- இறைவன் மனிதனில் மேலும் ஓர் வெற்றியைப் பெற்றான்.
- சத்தியம் வீறுகொண்டு தழலென எழுந்தது.
- மிருகமான யந்திரத்தின் பின் உள்ள பிரம்மமான இறைவன்.
*****
P 23. On sustenance from occult spiritual founts சூட்சும ஆன்மீக ஊற்றின் ஆதரவு
நாம் சாப்பிடுகிறோம், தெம்பாக வேலை செய்கிறோம். தெம்பு சாப்பாட்டிலிருந்து வருவதாக நினைக்கிறோம். சாப்பாடு உடலுறுப்புகளைச் சுறுசுறுப்பாக்குகின்றது. சுறுசுறுப்பான உடல் உறுப்புகள் பிரபஞ்ச சக்தியுடன் தொடர்பு கொண்டு பிரபஞ்ச சக்தியை உள்ளே கொண்டு வருகின்றன. உடலை நடத்துவது சூட்சுமம் நிறைந்த பிரபஞ்ச சக்தி. இது நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. காரை ஸ்டார்ட் செய்ய பாட்டரியைப் பயன்படுத்துகிறோம். ஸ்டார்ட் ஆனபின் பெட்ரோலால் ஓடுகிறது. பாட்டரிக்கு ஸ்டார்ட் செய்வது மட்டுமே கடமை. சாப்பாட்டிற்கு உடலைச் சுறுசுறுப்பு ஆக்குவது மட்டுமே கடமை.
நாம் காண்பது சாப்பாடு, பாட்டரி. நம் கண்ணில் படாதது பிரபஞ்ச சக்தி, பெட்ரோல்.
உலகில் இயங்குவனவெல்லாம் ஆன்மாவால். ஆன்மா என்ற ஊற்று கண்ணுக்குத் தெரியாமல் சூட்சுமமாகச் செயல்படுகிறது. நாம் பள்ளியில் படிக்கிறோம். புத்தகம் செலவு செய்து வாங்குகிறோம். பிள்ளைகள் படிக்க ஏராளமான செலவாகிறது என்கிறோம். சர்க்கார் ஆசிரியருக்குச் சம்பளம் கொடுக்கிறது. கட்டடம் கட்டுகிறது. நிர்வாகம் செய்கிறது. நம் செலவு சிறியது. அதுவே கண்ணுக்குத் தெரிகிறது.
குடும்பம் நடத்தப் பாடுபடுகிறோம். இடையறாது உழைக்கிறோம். ஏராளமான செலவு செய்கிறோம். சந்தோஷமாக வாழ்கிறோம். இந்த சந்தோஷ வாழ்வைப் பெற நாம் எடுத்த முயற்சி பெரியது. அது மட்டுமே நாம் அறிவது.
- அதன்பின் சர்க்கார் செய்யும் ஆயிரம் செலவுகளை நாம் அறியோம்.
- அதைவிடப் பெரிய ஆதரவைச் சமூகம் தருகிறது என்றால் நமக்குப் புரியாது. ஆனால் அது பெரியது.
- வாழ்வு சமூகத்தைவிடப் பெரியது. க்ஷணம் தவறாமல் வாழ்வு நம்மை வாழ வைக்கிறது.
- வாழ்வுக்குப் பின்னால் ஆன்மா உண்டு.
- ஆன்மாவின் சக்தி ஊற்றாக எழும்.
- அது நம் கண்ணுக்குத் தெரிவதில்லை.
- ஆன்மா சூட்சுமமாகச் செயல்படுவதால் தெரிவதில்லை.
- ஆன்மா சூட்சுமம் நிறைந்தது, சக்தி நிரம்பியது, நாம் அறிவது கைம்மண் அளவு.
****
P 24. His thoughts stretch into infinitude எண்ணங்கள் அனந்தமாக நீண்டன
எண்ணம் மனதில் உதிப்பதாக நாம் நினைக்கின்றோம். அவை உடலில் உற்பத்தியாகின்றன என்று பகவான் கூறுகிறார். மனத்தில் எண்ணங்களைக் கவனித்தால் அவை ஓடியபடியிருக்கும். அவை அர்த்தமற்றவை. அவற்றை ஒதுக்கிப் பார்த்தால் நம் அபிப்பிராயங்களைக் காணலாம். அவற்றிற்கு ஒரு structure கட்டுக் கோப்பு உண்டு. நம் அனுபவம் ஒரு அபிப்பிராயமாகியிருக்கும். ஆராய்ச்சியால் அக்கட்டுக்கோப்பைக் கரைக்கலாம், உடைக்கலாம். அப்படி உடைந்தால் மௌனம் குடி கொள்ளும். அதன்பின் சிந்திக்கும் திறன் உண்டு. இது வலுவானது. இதைச் சுலபத்தில் கரைக்க முடியாது. முடிந்தால் மௌனம் வலுப் பெறும். இதன் பின்னணியில் மனம் உண்டு. சிந்திக்கும் திறன் மனத்தின் பல திறமைகளில் ஒன்று. நினைவு, சிந்தனை, பாகுபாடு, முடிவு, உஷார், தீர்ப்பு, நியாயம் என்ற திறன்களில் சிந்திக்கும் திறன் ஒன்று. சிந்திக்கும் திறனை கரைக்கலாம், உடைக்கலாம், முடிந்தால் சரண் செய்யலாம். அதேபோல் மனத்தையே கரைக்க முடியும். இது பெரிய யோக சித்தி. ராஜயோக சித்தி, அது நடந்தால்,
நாம் அகண்ட மௌனம் பூணுவோம்.
மனத்தின் அடியில் உணர்வும், உணர்வின் அடிப்படையாகச் செயலும், செயலுக்கு உறைவிடமாக உடலும் உள்ளன. இத்தொடர் நீண்டது. அனந்தமானது, முடிவற்றது. எண்ணத்திற்குரிய அஸ்திவாரம் இவை. மேலுலகில் ஜோதியுண்டு. சப்தம் பிறந்த இடம் அது. சப்தம் பிறப்பதற்கு முன் அது ஜோதியாக இருந்தது. சப்தத்தின் பிறப்பிடம் ஓம். சப்தம் என்பதைச் சப்த பிரம்மம் எனவும், சப்தத்திலிருந்தே சிருஷ்டி எழுந்தது எனவும் தத்துவம் கூறும். கீழிருந்து வரும் எண்ணங்கள் நினைவு, உணர்வு, செயலைக் குறிப்பன. மேலிருந்து வரும் ஜோதி சிருஷ்டியின் அற்புதங்களைக் குறிக்கும்.
இடையில் மனம் உள்ளது. ஞானத்தால் மனம் உயரவல்லது. உணர்வால் மனம் சிந்திக்க வல்லது. ஓம் பிறந்ததிலிருந்து உடல்வரை எண்ணமும், சொல்லும் பரவும் எனில்
எண்ணங்கள் முடிவற்றவை
என அறிகிறோம். பகவான் ஸ்ரீ அரவிந்தர் Thought seeks the Absolute எண்ணம் பிரம்மத்தை நாடுகிறது என்கிறார். நாம் பெற்ற அறிவை intellect என்கிறோம். அது ஜடமான மனம், அஞ்ஞானத்திற்குரியது. அறியாமை மனம். Intellect seeks oneness எனவும் கூறுகிறார். மனிதனுடைய அறிவு ஒருமைப்பாட்டை நாடுகிறது. ஆனால் அவன் சிந்தனை, எண்ணம் பிரம்மத்தை நாடுகிறது என்பது ஸ்ரீ அரவிந்தம். சிந்தனை என்ற சொல் சித் என்பதிலிருந்து வந்தது. அதுவே அதன் பிறப்பிடம்.
- வெண் கதிர்மேல் பரவி மறைந்த சூரியனைக் காணப் போனான்.
- பிரம்மத்தின் பிரதிநிதியாக வாழும் ஆன்மா
- வையகத்தைத் தாக்கும் எரிமலையான மனம்
- ஒளியின் பாதையில் வேட்டையாடும் மனஉறுதி
- சமுத்திரமே எழுந்து விடும் மூச்சு
- தெய்வத்தின் சுவடான செயல்கள்
- மரணப்பிடியிலுள்ள சிறு வாழ்வின் நாடகம்
- சச்சிதானந்தத்தின் விளையாட்டு அரங்கம்
- மாறுவேடம் புனைந்த மனிதன், மாயையான ரூபம்
- அழியாத அநித்தியத்தின் புரியாத புனைவேடம்
- காலத்தின் கதிக்குரிய யாத்திரீகன்
- கூடுவிட்டுக் கூடு பாயும் பிரயாணி
- புரியாத புதிர்களைத் தானே புனையும் தன்மை
- ஊமை விதையில் ஊன்றிய பிரபஞ்சம்
- நெளியும் புழுவில் மலரும் தெய்வம்
- ஆத்மா கட்டவிழ்ந்து பரமாத்மாவை நாடும்
- லோகமாதாவின் மார்பில் வளர்ந்தவன்
- உழைப்பு, நம்பிக்கை, போர், அமைதி என்ற வட்டம்
- மறைந்த சத்தியம், நழுவும் நித்தியம்
- என்றும் காணாத இலட்சியத்தின் அச்சு
- இறைவனின் பெருவெளியில் முரசுகொட்டி நுழைவோம்
- நீண்ட மங்கலான புனித யாத்திரை
- எழுவதும் வீழ்வதுமான எண்ணற்றச் சுழல்கள்
- சக்தியின் அசையாத ஒருமை
- நிலையற்ற உலகில் நிலையான நித்தியம்
- அவன் கண்ணால் பார்க்கும் அவள் கண்கள்
- அவன் முகத்தில் மலரும் அவள் முகம்
- உடலும், ஆன்மாவும் தம் முத்திரை பெற்றன
- பாதம்படாத மலை உச்சியை எட்டுவோம்
- எவரும் காணாத ஏதோ ஒன்றைத் தேடுதல்
****
P 26 Deceived no more by form, he saw the soul. ரூபத்தைக் கடந்து ஆத்மாவைக் கண்டான்.
சிருஷ்டி என்பதை நாம் அறிவோம். ஸ்ரீ அரவிந்தர் சிருஷ்டியில் முதல் பகுதியைச் சிருஷ்டி எனவும், இரண்டாம் பகுதியைப் பரிணாமம் எனவும் கூறுகிறார். சிருஷ்டியின் சாரமாக அவர் கூறுவது,
- பிரம்மம் சத் எனும் புருஷனாயிற்று. புருஷன் ஜீவன்.
- ஜீவனுக்கு ஜீவியம் உண்டு.
- சக்தி ஜீவியத்திலிருந்து வெளிப்படுகிறது.
- சக்தி ரூபம், குணம் பெறுகின்றது.
- ரூபமும், குணமும் தோற்றம்.
- அதைக் கடந்த நிலையில் ஜீவியமும், அது வெளிப்படுத்திய சக்தியும் உண்டு.
- ஜீவியத்தைக் கடந்த ஜீவன் ஆத்மா.
பொருள்களின் ரூபத்தைக் காணும் நாம் ரூபமே பொருளெனக் கொள்கிறோம். ஆத்மாவே அடிப்படை. ரூபத்தினடியில் மறைந்துள்ள ஆத்மாவைக் காண திருஷ்டி வேண்டும்.
இப்பக்கத்திலுள்ள இதர கருத்துகள் :
- விவேகம் அவனை உயர்த்தி ஆத்மாவின் சிற்பியாக்கியது.
- வையகத்தின் இரகஸ்ய அரண்மனையைக் கட்டியவன்.
- காலத்தைக் கடக்க விழையும் காலத்தின் துளி.
- சுதந்திரமும், சாம்ராஜ்யமும் மேலிருந்து அழைக்கின்றன.
- ஆத்மாவின் விடியல் நிலத்தில் தெளிகின்றது.
- ஜீவன் வளரும்பொழுது மனிதகுலத்தின் கட்டவிழ்கிறது.
- பெரிய ஆத்மா பெரிய லோகத்தைக் காண்கிறது.
- அறிவு வகுத்த அரண்களை ஞானம் அழிக்கிறது.
- மனம் உயர்ந்து ஆத்மா பிரம்மத்துள் புதைகிறது.
- முதல் அடி பூமியைக் கடந்து பரவெளியாக்குகிறது.
- மூடிய இரகஸ்யக்குகையை அடைந்து நின்றான்.
- எளிய செயலை அற்புதச் செயலாக்கினான்.
- தெய்வீகக் காரியத்தைச் சாதாரணச் செயலாக்கினான்.
- இயற்கைக்கு எட்டாத இலட்சியங்கள்.
- ஜீவனுள் பொதிந்த இரகஸ்யம் தெரிந்தது.
- மனத்தின் எண்ணத்தையும், இதயத்தின் உணர்ச்சியையும் பெற்றது.
****
Calling the adventure of Consciousness & Joy துணிச்சலான ஜீவியத்தின் சந்தோஷத்தை அழைப்பது
சத்பிரேம் என்ற பிரெஞ்சுச் சாதகர் அன்னையை நெருங்கி வந்த பொழுது அவரை அன்னை பூரணயோகத்தைப்பற்றி ஒரு புத்தகம் எழுதச் சொன்னார். அவர் எழுதினார். அந்நூல் உலகில் பிரபலமாயிற்று. அந்நூல் வெளியான பின் ஆசிரமம் வந்த மேல் நாட்டார் எவரையும் “எப்படி அன்னையைத் தெரிந்து கொண்டீர்கள்?” எனக் கேட்டாலும் இப்புத்தகத்தின் மூலம் அறிந்தேன் எனப் பதில் வரும். அவர் எழுதிய புத்தகத்தின் பெயர்,
Adventure of Consciousness or Sri Aurobindo
Adventure என்பதற்கு நேரடியான தமிழ்ச்சொல் தெரியவில்லை. இருப்பது அத்தனையையும் விட்டு இல்லாததை தேடுவது என்பது ஒரு பொருள். வீரச் செயல் என்பது மற்றொன்று. முழு risk எடுத்துக்கொள்வது அடுத்த அம்சம், இத்தனையும் சேர்ந்தது adventure என்பதாகும்.
மலை ஏறுபவன், உலகம் சுற்றப் புறப்படுபவன், எதிரிகளை அவர்களிடத்தில் போய்ச் சந்திக்க முன் வருபவன், கரணம் தப்பினால் மரணம் என நிலையை விரும்பி நாடுபவனை adventurer என்கிறோம். இவர்களில் நூற்றில் ஒருவர் தப்பிப் பிழைப்பார். ஆயிரத்திலொருவர் வெற்றியடைவார். வாழ்க்கையில் பெரிய adventure எது என ராஜாஜி விவரிக்கும் பொழுது, “சிறுவயதில் திருமணமாகி மாமியார் வீட்டிற்குப் போகும் பெண் சந்திப்பது பெரிய adventure” என்றார்.
ஐயங்காரான ராஜாஜி செட்டியார் காந்திஜி மகனுக்கு அந்த நாளில் பெண் கொடுத்தது ஒரு adventure ஆகும். 1919இல் பிரிட்டிஷ் சர்க்கார் இந்தியப் பத்திரிகைகள்மீது கைக்கூலிகளை ஏவியபொழுது இந்துப் பத்திரிகை, “நாங்கள் தேசபக்தியினின்றும், பத்திரிகை தர்மத் தினின்றும் வழுவமாட்டோம்” என்று எழுதியது அதுபோன்ற செயல்.
ஹிட்லர் ஐரோப்பாவை முழுவதையும் வென்றபின் இங்கிலாந்து தனியாக நின்று எதிர்த்துப் போராடியதும் அதுபோன்ற செயலாகும். மதுரை மன்னனை நீதிகேட்டு கண்ணகி தன் நிலையை விளக்கியது, நவகாளிக்கு காந்திஜி போலீஸ் உதவியை மறுத்துப்போனது, ராஜஸ்தானில் வினோபாஜி கொள்ளைக் கூட்டத்தினரைச் சந்தித்து போலீஸுக்குச் சரணடையச் சொல்லியது, இந்து முஸ்லீம் கலவரத்தில் நேரு தைரியமாக நடந்தது, பெருந் தீவிபத்தில் தீயினுள் நுழைந்து உயிரைக் காப்பாற்ற முயல்வது, கோர்ட்டில் தனக்கெதிரான செய்தியைச் சொல்ல – உண்மை என்பதால் – முன்வருவது, கப்பல் மூழ்கும் பொழுது 400 பேர் விலகி குருடனுக்குத் தப்பிக்க வழிவிடுவது போன்ற செயல்கள் அப்படிப்பட்டவையாகும்.
யோகம் என்பது உடலை ஆராய்ச்சிக்கூடம் (laboratory) என மாற்றுவதாகும். விஞ்ஞானி பிராணிகள் மீது சோதனை செய்தால் யோகி அதுபோன்ற சோதனையைத் தன் உடல், மனத்தின் மீது செய்ய வேண்டும். சோதனை தவறினால் உடல் நோயுறும், மனம் ஸ்வாதீனத்தை இழக்கும் – பைத்தியம் பிடிக்கும். இங்கு தன் உயிரை யோகி risk செய்ய வேண்டியிருக்கிறது எனில் adventure of consciousness எனில் என்ன? மனத்திற்கு மேல் ஆன்மாவின் 4 பகுதிகளைக் கடந்து சத்திய ஜீவியம் வந்து ஜீவியத்தை (consciousness) அடையவேண்டும்.
அது தெய்வநிலையைக் கடந்தது. அங்கு கிடைக்கும் ஜீவியம் Mother’s consciousness, அன்னை ஜீவியம். அது கிடைத்தபின் அதை இழக்கும் வகையில் செயல்படுவது Adventure of Consciousnessஆகும்.கிடைத்தற்கரிய அன்னை ஜீவியம் கிடைத்தபின் அதைக் கடந்து செல்ல எடுக்கும் யோக முயற்சி adventure of consciousness ஆகும்.
மௌனமும், பிரம்மமும் மிகுந்தன
ஒரு பரந்த மைதானத்தில் நாம் அமைதியைக் காண்கிறோம். பெருங்கூட்டம் அமைதியாக இருப்பதுண்டு. தியானத்தில் அமைதியுண்டு. சோகத்திலும் அமைதியுண்டு. உலகில் வாழ்வுக்குரிய அம்சங்கள் கணக்கில்லை. எந்த அம்சத்திற்கும் அதற்குரிய அமைதி (silence) உண்டு.
சப்தமில்லாத அமைதியை நிசப்தம் என்போம். எண்ணமற்ற அமைதியை மௌனம் எனக் கூறுவர். சிந்தனையில் திறனை இழந்த மனத்தின் அமைதி பேரமைதி. பிரம்மம் குணங்களற்றதால் அமைதி என்ற குணத்தையும் பிரம்மத்திற்குக் கற்பிக்க முடியாது. முடிவான அமைதி பிரம்மத்திற்குரியது. அதை ஸ்ரீ அரவிந்தர்,
Silence behind Silence என்கிறார்.
மௌனத்தைக் கடந்த மௌனம்.
இதுபோன்ற சொற்றொடர்கள் The Life Divineஇல் ஏராளமாக வருகின்றன. அவை மந்திர சக்தி வாய்ந்தன. மந்திரமாகப் பயன்படக் கூடியது மேற்சொன்னது. ஆங்கிலத்தில் சொன்னாலும், தமிழில் சொன்னாலும் சக்தி குறையாது. பகவான் எழுதியது என்பதால் ஆங்கிலத்திற்கு சக்தியுண்டு. தாய்மொழி உணர்வைத் தொடும் என்பதால் தமிழுக்கு சக்தியுண்டு. மொழிபெயர்ப்பால் தன் சக்தியை அழியா இலக்கியம், அமர காவியம் இழக்காது. அது மட்டுமன்று. இதை நினைத்தாலே அதன் மந்திர சக்தி செயல்படும்.
- அவன் வாழ்வின் அஸ்திவாரம் காலத்தைக் கடந்தது.
- அசையாத அகண்டம் அசைவுடன் கலந்தது.
- ஊமை ரூபம் உலகத்தை அடக்கியது.
- அசைவற்ற அமைதியில் புதுமையாக மனம் பிறந்தது.
- திருஷ்டியின் எண்ணம்.
- கருத்து கனியும் குரல்.
- ஜடத்தின் ஈர்ப்பு, நம் உடலை இழுக்கிறது.
- ரூபமற்ற சக்தி, ஆதியின் ஜோதி.
- கடந்ததின் இனிமை, காலத்தின் கரு.
- ஒளிமிகுந்த படபடப்பு ஒடுங்கி வரும் நேரம்.
- பொன் போன்ற நாளின் மெதுவான தோல்வி.