உலகம் – மோட்சம் – அரவிந்தம் – 3

இந்நிலைகள்   மாற   உதவுவன   I) அறிவு   II) விவேகம்   III) நிஷ்டை IV) நிஷ்டை பலித்த தவம்     V) சமர்ப்பணம்    VI) சரணாகதி   VII) உடலுணர்வின் சமர்ப்பணம்   VIII) பூரணச் சரணாகதி.

நம் வாழ்வை விமர்சனம் செய்து இந்த எட்டு நிலைகட்குரிய நிகழ்ச்சிகளைக் காண்பது விவேகம், ஆன்மீகப் பொறுமை, நிதானம் தரும். ஒரே நிகழ்ச்சியில் இவ்வெட்டு நிலைகளைக் காணச் சமர்ப்பணம் உயர்ந்து சரணாகதியாகி பூரணம் பெற வேண்டும். அது யோக வாழ்வுக்குரிய ஞானம். இந்த எட்டு நிலைகட்கும் நமக்குத் தெரிந்த உதாரணங்களை ஓரளவு கூறலாம்

 முரண்பாடு, உடன்பாடு.கணவன் மனைவி பிணக்கு அன்பின் அடையாளம்.
 தோல்வி வெற்றிக்குரிய பாதை.லிங்கன், சாக்ரடீஸ் மனைவிகளின் அன்பு வெளிப்படுதல்.ஒருவர் துடைப்பத்தால் லிங்கனை  அடித்து விரட்டினார் அடுத்தவர் மலம் நிறைந்த பானையை தலையில் போட்டு உடைத்தார் . 
 நினைவும் செயலும் எதிரானவை.அகல்யா இந்திரனை அனுபவித்துக் கல்லானது.
 காலம் மாறி காலத்தைக் கடந்தது.நளாயினி சூரியனை நிறுத்தியது.
 பூவுலகம் பிரபசமாகிறது. காலம் மூன்றாம் நிலைக் காலமாகிறது.அனுசூயா திருமூர்த்திகளைக் குழந்தையாக மாற்றியது.
 வலி ஆனந்தமாகிறதுபீஷ்மர் அம்புப் படுக்கையில் உள்ளபொழுது கிருஷ்ணன் வலியை எடுத்தது.
 ஆனந்தம் பிரம்மானந்தமாகிறது.பிருந்தாவனத்தில் கிருஷ்ணலீலை.
 வேதனையான உலகம் அற்புதமாவது.கொல்ல வந்த புலி தன்னைத் தின்ன வேண்டும்என உடல் விழைந்தது.

நம் வாழ்வில் இந்த எட்டு நிகழ்ச்சிகளும் ஒரே செயலில் மனத்திற்கு விளக்குவது ஞானம். அதை ஏற்பது ஞான சித்தி. அதைச் செயல்படுத்துவது சத்தியஜீவிய சித்தி. மேற்சொன்ன 8 உதாரணங்கள் not precisely exact மிகவும் பொருத்தமானவை இல்லை. They indicate. அவை சுட்டிக்காட்ட உதவும். சொந்த அனுபவம் சொர்க்கம். சொந்த அனுபவம் சுட்டிக் காட்டுபவற்றை ஐயம் திரிபு அறத் தெளிவுபடுத்தும்.

இவற்றை ஒருவர் பின்பற்றிப் பலனடைய வேண்டுமானால்

I) பிணக்கு எழுந்தபொழுது அதை வளர்க்காமல், அதில் அன்பு வெளிப்பட வழியிருக்கிறதாஎன ஆராய்வது,

II) கடந்த காலத் தோல்விகள் பிறகு நமக்கு வெற்றிக்கு வழி செய்தவற்றை யோசனை செய்து அறிவது,

III) தவற்றை ரசித்து அனுபவித்த நிகழ்ச்சி பின்னால் வேதனை தந்ததையும், வேதனை முடிந்தபின் அதுவே பண்பானதையும் நம் வாழ்வில் இருந்ததை அல்லது பிறர் வாழ்வில் காண முயல்வது,

IV) நெறி பிறழாத நேரம் வாழ்வில் காலம் கட்டுப்படுவதை நம் வாழ்வில் சோதனையாகச் செய்து அறியலாம்,

V) எதிரி மட்டமாக நம்மை அவமானப்படுத்த முயலும் பொழுது பொறுமையும், அன்னை மீது நம்பிக்கையும் அவர்களே அவமானப்படுவதைக் காட்டும்,

VI) பொறுக்க முடியாத வேதனைக்குக் காரணம் புரிந்து விளங்கியவுடன் அகலும்,

VII) பக்தியும், நம்பிக்கையும் மனிதகட்டத்தைத் தாண்டும் பொழுது தவறான செய்கை ஆனந்தம் தருவதைக் காணலாம்,

VIII) கொல்ல வருபவனை – நம்மை அழிக்க வருபவனை – இறைவனாகக் கருதிய நேரம் வேதனை பூரிப்பான இன்பமாகும்..

PROCESS OF CREATION

சிருஷ்டியின் சூட்சுமம் இரகஸ்யமானது

– ஸ்ரீ அரவிந்தர் முழுப் பிரம்மத்தைக் கண்டார். அவரே முழுப் பிரம்மமானார்.

அது இறைவன் வரும் தருணம்.

நெடுநாள் பாடுபடும் பொழுது பலன் தெரியாது. பாடு தெரியும். பலன் தெரியும் பொழுது ஆயிரமாண்டில் நடப்பது அரை க்ஷணத்தில் நடக்கும்.

அந்த நேரம் வந்தபொழுது பகவான் உலகில் அவதரித்தார். (அதன்பின் 7ஆம் வயதில் டார்ஜிலிங் பள்ளியில் சேர்ந்த பொழுது காரிருள் அவருள் நுழைந்தது. அவர் பிறந்தவுடன் தாயார் சித்த ஸ்வாதீனமிழந்தார்.

7ஆம் ஆண்டு முதல் 21ஆம் ஆண்டுவரை பணமில்லாமல், சாப்பாடின்றி, குளிரில், கோட்டில்லாமல் சித்ரவதைப்பட்டார்.

உடன் பிறந்தவருடன் இந்தியா திரும்பும் பொழுது தவறான செய்தி தகப்பனார் உயிரை எடுத்தது. பகவான் புறப்பட்ட கப்பல் பெயரைத் தந்தி மூலம் தகப்பனார் அறிந்தார். பகவான் வேறொரு கப்பலுக்கு மாறியது தகப்பனாருக்கு அறிவிக்கப்படவில்லை. பேப்பரில் தகப்பனார் முதல் கப்பல் மூழ்கியதாகப் பார்த்து மாரடைத்து இறந்தார். 1910இல் பகவான் தம்பி பரீன் தூக்குத் தண்டனை பெற்றார். பிறகு அது ஆயுள் தண்டனையாக மாறி விடுதலை பெற்று 1959 வரை உயிரோடிருந்தார். இது அவர் வாழ்வு).

– முழுப் பிரம்மத்தில் அசைவற்ற அக்ஷரப் பிரம்மம் பகுதி. (ரிஷிகளும் கீதையும் அதுவரை சாதித்தனர்.) முழுபிரம்மம்

சத்தாகி – சச்சிதானந்தமாகி – சத்தியஜீவியமாகி, மனம், உயிர், உடலாகி சிருஷ்டி முடிந்து, பரிணாமம் ஆரம்பித்து ஜடம் வாழ்வாக மலர்ந்து மனமாகப் பூரித்து மனிதனாக நாமிருக்கிறோம். இத்தனை மாறுதல்களும் மேல் மனத்தில். உள்ளே முழுப் பிரம்மம், பிரம்மமாகவேயுள்ளது. அதில் எந்த மாற்றமுமில்லை. மாற்றம் தோற்றத்திலுள்ளது. அது நம் மேல் மனத்திற்குரியது.

– பூரணப் பிரம்மம் சிருஷ்டியின் முதற் கட்டமாக சத் ஆயிற்று. அதை நாம் சச்சிதானந்தம் என்கிறோம். பிரம்மம் (Self-conception) தன் இச்சையால் ஆனந்தத்தைத் தேடி சத் ஆனவுடன், பிரம்ம ஜீவியம் ( the consciousness of the Absolute) வெளிப்படுகிறது. அதை தெய்வீக மாயை என்கிறோம். அது சத்தை மூன்று பாகமாகப் பிரித்து – பிரிக்காமல் பிரித்து – சச்சிதானந்தமாக்கியது.

– சிருஷ்டியின் சூட்சும இரகஸ்யம் அகம் புறமாவது ( objectifying) என்கிறார் பகவான். அகமான பிரம்மம் இரண்டாகப் பிரிந்து புறமான சிருஷ்டியாகிறது. சச்சிதானந்தம் புறமானால் அது சத்தியஜீவியமாகும். (சத், அகம், புறம்எனப் பிரிந்தால் அகம் ஆத்மாவாகவும், புறம் சத்தியமாகவுமாகிறது. ஜீவியம் அகம், புறமாகப் பிரிவது அகத்தில் காலமாகவும், புறத்தில் இடமாகவுமாகிறது. சத்தியஜீவியம் அகமான இறைவனாகவும் புறமான பிரபஞ்சமாகவுமாயிற்று.)

– சத்தியஜீவியம் அகம் சிருஷ்டி புறம்எனப் பிரியும் பொழுது அகத்திற்கும், புறத்திற்குமிடையில் காலம் உற்பத்தியாகி மனமாக மாறுகிறது. மனம் கருவி காலம் அதன் செயல். அது தெய்வீக மனமாக ஆரம்பித்து மனித மனமாக மாறி, வாழ்வையும், ஜடத்தையும் சிருஷ்டிக்கிறது.

– மனம் இரு பகுதிகள் கொண்டது. ஒன்று ஞானம். அடுத்தது செயலாற்றும் மனோ உறுதி. இதைச் செயல் எனவோ, ஆற்றலெனவோ, உறுதியெனவோ கூறலாம். ஞானத்திற்குத் திறனில்லை. உறுதிக்கு ஞானமில்லை. ஞானம் உறுதியை

வழி நடத்தினால் (acts on will) சக்தி உற்பத்தியாகிறது. சக்திக்குச் சலனமுண்டு. அச்சலனம் வாழ்வெனப்படும். It is the plane of life. வாழ்வுக்கு ஞானமில்லை. ஆனால் ஓட்டம் உண்டு. உருவமில்லை. ஓட்டம் ஞானத்தைக் கிரகித்துக் கொள்ளும். ஞானம் உறுதிமேல் செயல்பட்டால் உறுதி சக்தி பெறும். ஞானம் சுருங்கும். சுருங்கும் ஞானம் ரூபம் பெறும். ஞானம் முழுவதும் உறுதியில் மறைந்து ரூபத்தில் அழிந்தால் ஜடம் ஏற்படும்.

பாதாளமும், பரமாத்மாவும்

சிருஷ்டியைச்  செய்வது மாயை.அதற்கு மூன்று  திறமைகளுண்டு Self-conception,Self-limitation,Self-absorption. தன்னிச்சையான சிந்தனை, தன்னை அளவுக்குட்படுத்துவது, தன்னையே தன்னுள் கிரகித்துக் கொள்வது.

– முதல் திறமை சச்சிதானந்தத்தை சிருஷ்டித்தது. அதை சத்என சிருஷ்டித்தது.

– இரண்டாம் திறனால் சத் என்பதை சத் எனவும், சித் எனவும், ஆனந்தமெனவும் வரையறுத்துக் கொண்டது.

– மூன்றாம் திறமையால் சித் தன்னைத் தன்னுள் கிரகித்துக் கொண்டதால் அது காரிருளாக மாறியது. அதற்கெதிரானது பரமாத்மா. (Consciousness by self-absorption has become Superconscient and Inconscient is its opposite). அவற்றைப் பரமாத்மா* எனவும், பாதாளம் எனவும் குறிப்பிடுகிறேன்.

– அது பரமாத்மாவாக இருந்தாலும், பாதாளமாக இருந்தாலும் அது பிரம்மமே.

_____________________________________________________________________________________ * இது பொருத்தமான சொல் அன்று. ஆனால் தவறாகாது.

-Superconscient பரமாத்மாஎனில் ஜீவியத்திற்கு எட்டாத உயரத்திலுள்ளது எனப் பொருள். இந்த இடைவெளியான உயரம் ஜீவியம் தன்னைக் கிரகித்துக் கொண்டதால் வந்தது. நாம் ஒரு வேலையில் நெடுநாள் ஈடுபட்டால் நாம் அந்த வேலையாகவே மாறி விடுகிறோம். நாம் ஏற்கனவே இருந்த நிலை நமக்குத் தற்சமயம் புரியாதது போலிருக்கிறது. பார்லிமெண்டில் மெம்பரானவர் அத்துடன் லயித்துவிட்டால், பழைய நிலைக்கும், புது நிலைக்கும் இடைவெளியேற்படும். புது நிலை புரியாத அளவுக்கு உயர்ந்துவிடும். Super-conscient என்பது ஜீவியம் உயர்ந்து மனித மனம் அறிய முடியாதபடி உயர்வது. இந்நிலையுள் ரிஷி, முனிவர், யோகி, தெய்வம், அக்ஷரப்பிரம்மம், புருஷோத்தமன் ஆகியவை பல கட்டங்களாக இருக்கின்றன.

– பாதாளம் என்பது இருள். இதற்கும் கீழே inconscience ஜட இருள் உண்டு. ஜட இருள் பரிணாம வளர்ச்சியால் பாதாளமாகிறது. பாதாளமும், பரமாத்மாவும் அடிமனத்தில் சந்திக்கின்றன. அல்லது அவையிரண்டும் சந்திக்குமிடத்தில் அடிமனம் உற்பத்தியாகிறது. இப்பாதாளத்துள் பரமாத்மா புதைந்துள்ளது. பரிணாமத்தால் அப்பரமாத்மா வெளிவரும். அப்படி வந்த நிலைகள் 1) ஜடம் 2) வாழ்வு 3) மனம் – மனிதன்.

பாதாளத்துள் பரமாத்மா புதைந்திருப்பதாலும், பரிணாமத்தால் பாதாளம் முடிவில் பரமாத்மாவாகும் என்பதாலும், பாதாளமும், பரமாத்மாவும் ஒன்று.

Yoga or Self- Protection

பூரணமான சிறப்பை, பிரம்மம் எய்தும் யோகம்

  • யோகம் என்பது இணைவது, மனிதனும் இறைவனும் இணைவது யோகம். அது சமாதி. சமாதி நிலையில் மேலே

புற்று எழும், உடலில் சூடு போட்டால் தெரியாது. இதை சமாதி எனவும், அதன் உச்சகட்டத்தை நிர்விகல்ப சமாதி என்றும் கூறுவர். இறைவனுக்கும் நமக்கும் இடையேயுள்ள விகல்பத்தை விலக்குவது நிர்விகல்ப சமாதி. இதன் நிலைகள் மூன்று. ஹடயோகம் உடலாலும், கர்மயோகம் பிராணனாலும், ஞானயோகம் எண்ணத்தாலும், ராஜயோகம் மனத்தாலும், தந்திரயோகம் அனைத்தாலும் மோட்சம் பெறுகின்றன.

ஜீவாத்மா என்பது நமது ஜீவன் முழுவதற்கும் உள்ள ஆத்மா. இதன் பகுதிகள் மனம், உயிர், உடலாகும். ஒவ்வொரு பகுதிக்கும், அப்பகுதிக்குள்ள ஆத்மாவுண்டு. உடல் என்பதை சமஸ்கிருதத்தில் அன்னம் என்பர். இதற்குரிய ஆத்மாவுக்கு அன்னமயப் புருஷன் எனப் பெயர். உயிருக்குப் பிராணன்எனப் பெயர். இதன் ஆத்மாவுக்குப் பிராணமயப்புருஷன் எனவும் மனத்தின் ஆத்மாவுக்கு மனோமயப்புருஷன் எனவும் பெயர். இவை ஜீவாத்மாவின் பகுதிகள். உடல், உயிர், மனத்திற்கு ஒவ்வொன்றிலும் மற்ற இரண்டும் உண்டு. உடலுக்கு உயிருண்டு. மனம் உண்டு. உயிருக்கு உடலும், மனமும் உண்டு. மனத்திற்கு உடலும், உயிரும் உண்டு. அனைத்திற்கும் ஆத்மாவுண்டு. உடல் உடலாகச் செயல்பட்டால் மனிதன் மண்ணாங்கட்டியாவான். உடலுக்குள் உயிரெழுந்தால் அவன் சுறுசுறுப்பாக இருப்பான். உடலுக்குரிய உயிரில் மனம் வெளிப்பட்டால் அவன் செய்யும் காரியங்களில் – உடலால் செய்யும் காரியங்களில் – அறிவு வெளிப்படும். அவனை crafts man என்கிறோம். தச்சன், கருமான், பத்தன் இதைச் சேர்ந்தவன். மனம் அறிவாக வெளிப்படுவதைப்போல் உடலில் ஆத்மா வெளிப்பட்டால், அது அன்னமயப் புருஷனாக இருக்காது. அது சைத்தியப் புருஷனாக இருக்கும். அது உடலுக்குரிய சைத்தியப்புருஷன் ( Physical Psychic being). அன்னமயப்புருஷன் மூலாதாரத்தில் உள்ளது. அது வளராத ஆத்மா. சைத்தியப்புருஷன் வளரும் ஆத்மா.

  • வளராத ஆத்மா மோட்சத்தை நாடும்.
  • வளரும் ஆத்மா திருவுருமாற்றத்தைத் தேடும்.

ஆத்மா வளரக் கூடியதுஎன்பது பகவான் ஸ்ரீ அரவிந்தர் முதலில் கூறியது. அதனால் பூரண யோகத்தை அவர் ஆன்மீகப்

பரிணாம யோகம் என்றார். மனம் வளராவிட்டால் உடலுக்கு ஆயுள் குறைவு. உயிர் வளராத காலத்தில் மனிதனுடைய சராசரி ஆயுள் 10 வருஷம் எனக் கணக்கிட்டிருக்கிறார்கள். மனம் வளராத காலத்தில் அது 30 ஆண்டாக இருந்தது. மனம் வளரும் இக்காலத்தில் அது 70 ஆண்டைத் தொடுகிறது. இது உடலின் மனம். மனத்தின் மனமில்லை. உடலின் ஆன்மா வளர ஆரம்பித்தால் உடலுக்கு மரணமில்லை. வளராத ஆத்மாவுக்கு மோட்சம் உடல் மூலம் அல்லது உயிர் மூலம் அல்லது மனம் மூலம் பெறலாம். உடல் மூலம் பெற ஹடயோகமும், உயிர் மூலம் பெற கர்மயோகமும், உணர்ச்சி மூலம் பெற பக்தியோகமும், மனம் மூலம் பெற ஞான யோகமும் உதவும். இவையனைத்தும் ஒரு கரணம் மூலம் செய்யும் யோகம். தந்திரயோகம் ஓரளவு அனைத்து யோகங்களையும் இணைத்தது. அது பூரணயோகச் சாயல் உடையது. பூரண யோகத்தை ஒரு கரணத்தால் செய்ய முடியாது. எல்லாக் கரணங்கள் மூலமும், அதாவது ஜீவன் மூலம் மட்டும், செய்ய முடியும். தந்திரயோகம் ஹடயோக ஆசனங்களையும், பிராணாயாமத்தையும் கூடப் பயன்படுத்துகிறது. பூரணயோகம் இது போன்ற முறைகளை அறவே விலக்குகிறது. ஹடயோகம் மனிதனை உடலில் உள்ள ஆத்மாவாகக் கருதுவதால் அதை உடலில் ஆரம்பிக்கிறது. ரயிலும், விமானமும் வந்தபின் காசியாத்திரையைக் கால்நடையாக மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை. பிரம்மத்தின் பகுதியைப் பிரம்மமாக அறிந்த மனமே முடிவான கருவியான காலத்திற்கு அது உரியது. முழுப் பிரம்மத்தைக் கண்டபின், மனத்தைக் கடந்த சத்தியஜீவியம் கருவியாகும். அதனால் யோகத்தை அடியிலிருந்து – உடலிலிருந்து – ஆரம்பிக்காமல், உச்சகட்டத்திலிருந்து ஆரம்பிக்கலாம். மனத்திலிருந்து, மனத்தின் ஆத்மாவிலிருந்து – வளரும் ஆத்மா – ஆரம்பிக்கலாம். அது மனோமயப்புருஷனில்லை. சைத்தியப்புருஷன். சைத்தியப்புருஷன் சத்தியஜீவியப் பிரதிநிதி என்பதால் அங்கு ஆரம்பிக்கலாம். இம்மாற்றம் 30,000 ஆண்டுகளை 30 ஆண்டாக மாற்றும். இதன் கருவி சரணாகதி.