சிருஷ்டி – தலைகீழ் மாற்றம்
பிரம்மம் ஒளிந்து வெளிவர முடிவு செய்ததால் ஏற்பட்டது இந்த சிருஷ்டி. ஒளிவது என்றால் தன் ஆரம்ப நிலைகளை மறப்பது. ஏழு வகை அஞ்ஞானம் அப்படி ஏற்பட்டது. இப்படி ஒளிவதைப் பல வகைகளாகக் கூறலாம்.
1) ஒளிந்து ஞானம் அஞ்ஞானமாயிற்று.
2) சச்சிதானந்தத்தின் எட்டு அம்சங்கள் அதற்கெதிரான எட்டு அம்சங்களாக மாறுவதும் ஒளிவதே. ஞானம் அஞ்ஞானமாவது அவற்றுள் ஒன்று.
3) சத்து, சித்து, ஆனந்தம், சத்தியஜீவியம் மேலேயுள்ளது. ஜடம், சைத்தியப்புருஷன், வாழ்வு, மனம் கீழேயுள்ளது. இந்த மாற்றம் ஒளிவதாகும். இதில்,
சத்து ஜடமாகிறது. சித்து வாழ்வாகிறது. ஆனந்தம் சைத்தியப்புருஷனாகிறது. சத்தியஜீவியம் மனமாகிறது.
4) சிருஷ்டி பரிணாமமாவது மற்றொரு வகை.
5) அனந்தன் அணுவாவது ஒரு வகை.
6) process of Creation சிருஷ்டி ஏற்பட்ட வழி என்பதும் ஒளிவதாகும்.
இதை ஜீவனின் எழுவகை என்கிறார். முதற் புத்தகம் 27ஆம் அத்தியாயம் இதை விளக்குகிறது.
வேதாந்த ஞானம்
வேதாந்தம் வேதத்தைக் கடந்தது. மனிதனுக்கு அறிவு (Reason) உண்டு. அறிவு புலன்களால் உலகையறிகிறது. புலனின்றி நேரடியாக மனத்தால் உலகை அறிய முடியும். மனம் புலன்களினின்று விடுபட்டால் அறிவு ஞானமாகிறது (Reason becomes intution). இது வேதாந்தம் கண்ட உண்மை. மனிதன் ஞானம் பெற்றால் பாதாளமும், பரமாத்மாவும் ஞானத்தில் இணையும். பரமாத்மாவில் ஞானம் நேரடியாக ஒளியாக இருக்கிறது. பாதாளம் வாழ்வுக்குரியது. வாழ்வில் ஞானம் செயலாகத் தலைகீழாக உள்ளது. வாழ்வு தலைகீழே மாறினால் ஞானம் வெளிவரும். மேலேயுள்ள பரமாத்மாவின் ஞானமும், கீழே பாதாளத்தின் ஞானமும் இணைந்தால் அது (Self) பிரம்மம். அதுவே உலகம்.
மனம், வாழ்வு, ஜடம்
இன்றுவரை விஞ்ஞானமோ, ஆன்மீகமோ இவை என்ன என்று ( definition) விளக்கம் தரவில்லை. சர்க்கார், சட்டம், கல்வி, பொருளாதாரம் போன்ற எல்லாக் கருத்துகளும் விளக்கப்பட்டுள்ளன. ஆனால் மனம், வாழ்வு, ஜடம் விளக்கப்படவில்லை. உலகில் அறிவு வளர்ந்துள்ளது. அது விஞ்ஞான அறிவு. ஆனால்
– விஞ்ஞானி ஜடம் என்ன என்று கூற முடியாமல் தவிக்கிறான்.
– Biologist வாழ்வு என்ன என்று கூற வேண்டும்என நினைக்கவில்லை.
– Psychologist மனம் என்ன என்று அறியவில்லை.
– Doctor உடல் நலம் என்றால் என்ன என்று கூறுவது முக்கியம் என நினைக்கவில்லை.
– Philosopher energy என்றால் என்ன எனக் கூறவில்லை.
பகவான் இவற்றை 1914இல் விளக்கியுள்ளார். அவர் கூறிய விளக்கங்கள் புரிந்தால் மனம் நமக்குக் கட்டுப்படும், வாழ்வு கட்டுப்படுவது தோல்வியில்லை என்பது தெரியும். ஜடம் விளங்கினால் நம் ஆத்மாவுக்கு அது கட்டுப்படும்.
மனம் என்பது மனோசக்தி. சத்தியஜீவியம் இரண்டாகப் பிரியுமிடத்தில் ஏற்படுகிறது. பிரியுமிடத்தில் உற்பத்தியாகும் மனம் பிரிக்கும் கருவியாகிறது. சத்தியஜீவியம் முழுப்பார்வையுடையது. அதன் பார்வைக்கு உலகம் முழுவதும், ஏன் பிரபஞ்சம் முழுவதும் தெரியும். சத்தியஜீவியம் இரண்டாகப் பிரியும் பொழுது இடையில் ஏற்படும் மனம் ஒரே பார்வையில் இருபுறமும் பார்க்க முடியாது. ஒரு பகுதியை ஒரு பார்வையிலும், திரும்பி மறுபகுதியையும் பார்க்க வேண்டும். பார்வை பகுதியாகிறது. இது பிரிக்கும் மனத்தின் தன்மை. அதிலிருந்து நம் மனம் வரை எந்த நேரத்திலும் மனம் ஒரு பகுதியை மட்டும் பார்க்கும். அதனால் அதன் பார்வை பகுதியானது. பகுதியாகச் செய்வது பிரிப்பது. பிரிப்பது தொடரும். ஏனெனில் மனம் அனந்தமானது. அனந்தம் முடிவற்றது. அதனால் முடிவற்று மனம் பிரிக்கிறது. பிரிப்பது தொடர்வதால் அகண்டம் கண்டமாகி, அணுவாகி, “துச்சேன” என்ற சிறு பகுதிக்கு வருகிறது. இதகு மேல் பிரிக்க முடியாது என்பதாலும் பிரிக்கும் மனம் அனந்தமானது அதனால் அது செயல்படாமலிருக்க முடியாது என்பதாலும், பிரிந்த அணுக்கள் சேர்ந்து ஜடம் உருவாகிறது.
வாழ்வு
மனத்தில் ஞானம், உறுதியுண்டு. உறுதியில் ஒளியில்லை. ஞானம் ஒளிமயமானது. ஒளி உறுதிமேல் செயல்பட்டால் சக்தி பிறக்கிறது. இதை சக்தி லோகம், வாழ்வு என்கிறோம். ஒளி உறுதியில் மறைவது வாழ்வு. ஒளி முழுவதும் உறுதியில் மறைந்தால் சக்தி ரூபம் பெறு இருண்டு ஜடமாகிறது. ஜடத்தை பல வகைகளாக வர்ணிக்கலாம். அவற்றுள் இது ஒன்று.
ஜடம்
– பிரம்மத்தின் முடிவு – சிருஷ்டிக்க முடிவு செய்தது – சச்சிதானந்தத்தில் தெரிகிறது.
– சச்சிதானந்தம் சத் எனப்படும். இது ஜீவன். முழுமையான விழிப்புடைய ஜீவன் Conscious Being. பகவான் இதை Self- Conscious being எனவும் கூறுவார்.
– இது தன்னிச்சையாகச் செயல்படும். (Self-Conception)
– தன்னைப் பிரபஞ்சத்துள் வெளிப்படுத்த சத் முடிவு செய்தது.
– அவ்வெளிப்பாடு substance பொருளாயிற்று. அது Spiritual substance.
– பிரபஞ்சம் சத்தின் வெளிப்பாடு. (பிரம்மத்தின் வெளிப்பாடு எனவும் கூறலாம்.)
– பிரபஞ்சத்தில் மனமும், வாழ்வும் செயல்படுகின்றன.
– மனம் பிரிக்கும், வாழ்வு சக்தியை வெளிப்படுத்தும்.
– மனத்திற்குப் பிரபஞ்ச கடமையொன்றுண்டு.
– மனம் எதையும் அணுவாகும்வரைப் பிரிக்கும் திறனுடையது.
– அணுவைப் பிரிக்க முடியாது. ஆனால் மனம் செயல்படுவதை நிறுத்தாது.
– பிரிக்க முடியாத மனம் செயல்படுவதை நிறுத்த முடியாது என்பதால் சேர்க்கும். பிரிப்பதும், சேர்ப்பதும் ஒன்றன்றோ! – அணுக்கள் சேர்ந்த தொகுதி ஜடமாகும்.
– இதுவே ஜடத்தின் விளக்கம். சத்புருஷன் தன்னைத் தன்னிச்சையாகப் பிரபஞ்சத்தில் வெளிப்படுத்திப் பொருளாகி, அப்பொருள் மனத்தால் அணுவாகப் பிரிக்கப்பட்டுச் சேர்ந்த தொகுதி ஜடம்.
– ஜடம் பிரம்மம். மனமும், வாழ்வும் பிரம்மம்.
– ஜடம் ரூபம் பெற்றது. சக்தியை உட்கொண்டது.
– மனம் ஜடத்திற்கு ரூபமளித்தது. வாழ்வு ஜடத்திற்கு சக்தியளித்தது. இச்சக்தி ஜடத்துள் மறைந்துள்ளது.
– பிரம்மம் தன்னைத் தன்னுள் கிரகித்துக் கொண்டதால் ஜடம் ஏற்பட்டது.
– அதனால் ஜடத்தில் பிரம்மம் தன்னை மறந்து விட்டது.
– பிரம்மம் ஜடத்துள் கலந்து ஒளிந்து சிக்கியுள்ளது.
– ஜடத்துள் இரகஸ்யமாக மறைந்துள்ள கடவுளை – பிரம்மத்தை – கண்டுபிடிக்க வேண்டி மறைந்துள்ள ஜீவியத்திற்கு ஜடம் ஆசை காட்டுகிறது.
Page NO..239 The Life Divineஇல் Matter என்ற அத்தியாயத்தின் கடைசி பாராவில் உள்ள 7 கருத்துகள் 7 வாக்கியமாக அமைகின்றன. அவற்றுள் இது முக்கிய கருத்து. அதன் விளக்கம் கீழேயுள்ளது:
- ஜடம் என்பது சத் என மேலே கூறினோம்.
சத் ஜடமாக மாற சித் வழியாக வருகிறது.
சத் ஜடமாக மாற உதவுபவை மனமும், வாழ்வும் என்பதை மேலே கூறினோம்.
ஜடம் என்பது ரூபம் பெற்றது.
ஜடத்திற்கு இந்த ரூபத்தை அளித்தது மனம். ஏனெனில் எல்லா ரூபங்களும் மனத்தால் அளிக்கப்பட்டவை.
மனம் தந்த ரூபத்தை சித்திக்க வைத்தது வாழ்வு.
ஜடம் பெற்ற ரூபத்துள் சித் – ஜீவியம் – மறைந்துள்ளது.
இந்த ஜீவியத்துள் ஜீவன் மறைந்துள்ளது. ஜீவன் என்பது சத்.
சத் – சித் – சக்தி – ரூபம் – ஜடம் என்ற வரிசைஏற்படுகிறது. அதையே ஜீவன் – ஜீவியம் – வாழ்வு –ரூபம் – ஜடம் எனலாம்.
ஜடத்துள் அதன் சத்தியமான ஜீவியம் ஒளிந்துள்ளது.அந்த ஜீவியத்துள் சத் என்ற ஜீவன் மறைந்துள்ளது. – மறைவது சிருஷ்டி (involution).
– வெளிவருவது பரிணாமம் (evolution). –
சத் தன்னைத் தன்னுள் மறைத்து ஜடமாயிற்று.
ஒளிந்ததைக் கண்டுபிடிப்பது பரிணாமம். அதுவே சிருஷ்டிக்குக் காரணம்.
– கண்டுபிடிக்கும் வேலை ஜீவியத்திற்கு. கண்டுபிடிக்கப்பட வேண்டியது சத் – ஜீவன் – ஒளிந்துள்ள கடவுள் என்ற பிரம்மம்.
– இவ்வேலையை ஆரம்பிப்பது ஜடம்.
ஜடம் ஜீவியத்தை ஜீவனைக் கண்டுபிடிக்கத் தூண்டுகிறது, ஆசை காட்டுகிறது.
தூண்ட உணர்ச்சியைக் கருவியாக்குகிறது. –
உணர்ச்சியால் செயல்படும் மனிதன் தன் ஜீவியத்தால் ஒளிந்துள்ள ஜீவனை (கடவுளை) அடைய முயல்கிறான்.
– செயல் (மனிதச் செயல்) இறைவனைத் தேடுவதாகும்.
செயலுக்கு ஆரம்பம் உணர்ச்சி.
ஜடம் அவ்வுணர்ச்சியால் மறைந்துள்ள ஜீவியத்தை
அதனுள் ஒளிந்துள்ள ஜீவனைக் காணத் தூண்டுகிறது.
இதை பாஸிட்டிவாகவும், நெகட்டிவாகவும் கூறலாம்.
இரண்டும் இறைவனை நாடும் தவமாகும்.
கடமையுணர்ச்சியால் மனிதன் தன் ஜீவியம் செயல்பட்டு
கண்ணுக்குத் தெரியாத இலட்சியத்தை அடைய முயல்வது மனிதன் இறைவனை நாடுவதாகும்.
மனிதனுடைய எந்த செயலும் வாழ்வில் இறைவனை அடையும் தவமாகும், யோகமாகும்.
குடும்பம் முன்னுக்கு வரும் இலட்சியம் தன் உணர்வில் மறைந்துள்ளதை செயலால் அடைய முயலும் மனிதன் உண்மையில் இறைவனை குடும்பத்துள் தேடுகிறான்.
திருடனுக்கும் இதுவே உண்மை. திருட்டை நாடும் திருடன் இறைவனைத் தேடி தவம் செய்கிறான்..
– பிரபஞ்சத்தில் வெளிப்பட்ட பிரம்மம் ஜடம். – ஜடம் சக்தி பெற ரூபம். – இந்த ரூபம் பிரம்மம் தன்னைத் தனக்கே அடையாளமாகக் காட்டுவது. – ஜீவியம் தன்னை ஆனந்தமாக அனுபவிக்கும் புறம் ஜடம். – ஜடம் சச்சிதானந்தம். சச்சிதானந்தம் தன்னைத் தானே அனுபவிக்க மனம் என்ற அரங்கத்தில் புறமான ஞானமாகவும், செயலாகவும், ஆனந்தமாகவுமானது ஜடம்.
ஜடம் சச்சிதானந்தம் தவிர வேறில்லை.
– மனம் ஆத்மாவைப் புலன் வழி ஜடமாகக் காண்கிறது.
உடல் மீது வெறுப்பு
அழியும் உடலுக்கு அர்த்தமில்லைஎன தவசிகள் உடலைப் புறக்கணித்தனர். உடலை ஒதுக்குவது ஜடத்தை விலக்குவது. பூமாதேவியைப் புறக்கணிப்பது. பழைய நாகரீகங்கள் – மாயன், சால்டியன், வேதம், கன்பூசியஸ் – பூமியைத் தாயாகவும், வானத்தைத் தந்தையாகவும் வர்ணித்ததை பகவான் சுட்டிக் காட்டி, உடலை விலக்குவது சரியில்லை என்கிறார். மேலும் உடலே உயிருக்கும், ஜீவனுக்கும் உரிய பீடம் என்றும் கூறுகிறார்.
தர்மம், அதர்மம்
மனிதன் தர்ம நியாயத்திற்கும், பாவ புண்ணியத்திற்கும் கட்டுப்பட்டவன். அவனுக்கு மேலேயுள்ள தெய்வத்திற்கும், கீழேயுள்ள விலங்குக்கும் தர்மம், நியாயமில்லை. தெய்வம், மனிதன், விலங்கென மூன்றாகப் பிரியும் பிரபஞ்சம் நம் கொள்கையைப் பூர்த்தி செய்யாது. நம் கொள்கை பூரணம், முழுமை. அதனால் இந்த மூன்றுக்கும் பொதுவானது என்ன? ஆனந்தம் மறைந்தும், வெளிப்பட்டுமுள்ளது. மறைந்துள்ள ஆனந்தம் வெளிப்படுவது பரிணாமம். மேல் லோக ஆனந்தம் பூலோகத்தில் மின்னலெனத் தெறிக்கும். நிலையான மின்னலை நாடுவது பூரணயோகம். பெரிய மனிதனைத் தெரியுமானால் அவர் செல்வாக்கு ஒரு நேரம் நம் வாழ்வில் க்ஷணம் செயல்படும். நமக்குப் பதவி, அந்தஸ்து இருந்தால், அவருக்கு நாம் தேவைப் படுமானால், அவர் செல்வாக்கு நமக்கு நிலையாகப் பயன்படும். நம் உலகில் ஜடம் ஆனந்தத்தைப் பெற்றால் ஆனந்தம் நிலையாகும். பரிணாமத்தில் சச்சிதானந்தம் ஜடத்தில் – பொருள்களில் – தன்னை வெளிப்படுத்த முயல்கிறது. மனிதன் வெறும் ஜடத்தை நாடி ஏமாந்து போகிறான் என்று பகவான் கூறுகிறார். ஆனந்தம் ஜடத்தில் வெளிப்படுவது பூலோகச் சுவர்க்கம். சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி மறுப்பது வழக்கு.
ஆனந்தம் ஜடத்தில் வெளிப்படுவது பூசாரி சாமியிடம் நமக்காக வரம் கேட்டுப் பெற்று அளிப்பது. படித்ததற்கு அடையாளமாகப் பட்டம் பெறுகிறோம். இப்பொழுது பணம் கொடுத்து பட்டம் படிக்காமல் பெற்றுக் கொள்கின்றனர். அதற்கு அர்த்தமில்லை. கேலிக்கு உரியவராவோம். பட்டம் படிப்பால் நிறைவு பெறுவது ஆனந்தம் பொருளில் வெளிப்படுவது, பண்ணிய புண்ணியம் பயிரில் தெரியும் என்ற சொல் ஓர் அம்சத்தைக் குறிக்கும்.
விஞ்ஞானியும் துறவியும்
துறவி விஞ்ஞானியை ஏற்கவில்லை. விஞ்ஞானி துறவியை ஏற்கவில்லை. துறவி அவனது துறையில் முடிவான பிரம்மத்தை எட்டிவிட்டான். விஞ்ஞானி அவனது துறையில் அனைத்தும் சக்தி (energy) எனக் கண்டதுடன் நிறுத்திக் கொண்டான். அடுத்த கட்டம் போனால் energy is existence சக்தி என்பது பிரம்ம வாழ்வு, existence is being. அவ்வாழ்வு ஜீவன் என அறியலாம். விஞ்ஞானி அதைச் செய்ய வேண்டும் என்கிறார் பகவான்.
வேதம் கண்ட ஒற்றுமை, ஒருமை
வேத ரிஷிகளுக்கு மலை கடவுள், நதி ஜீவநதி என இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்தனர். புருஷனும், பிரகிருதியும் ஒன்று எனக் கண்டனர். உபநிஷதம் அவற்றைப் பிரித்தது. அது சன்னியாசத்தில் முடிந்தது. புத்தர் அதை நிலைநிறுத்தினார். இன்றுவரை இந்தியாவில் வாழ்வும், துறவறமும் பிரிந்து நிற்கின்றன. நாம் கூறுவது ஸ்ரீ அரவிந்தம், முழுமை, பூரணமாதலால் எதையும் விலக்க முடியாது. விலக்கிப் பூரணத்தையடைய முடியாது. வேதம் உடல் வாழ்வு, உபநிஷதம் மனம், இடைப்பட்டது வாழ்வு. மனத்தைக் கடந்தது ஆத்மா. அது வளராத ஆத்மா. வளரும் ஆத்மா அதைக் கடந்தது. அது சத்தியஜீவியம். பகவான் ஸ்ரீ அரவிந்தர் இந்த ஒற்றுமை சத்தியஜீவிய ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்கிறார். அதாவது மனிதன் உபநிஷத காலத்துப் பிளவை விலக்கி, வாழ்வு, மனம், ஆத்மாவைக் கடந்து வளரும் ஆத்மாவையடைய வேண்டும். அங்கு ஒற்றுமையைக் காண வேண்டும் என்கிறார்.
சிருஷ்டி, பரிணாமம்
இறைவன் உலகுக்கு வருவது சிருஷ்டி. மனிதன் இறைவனையடைவது பரிணாமம். மனிதன் சிருஷ்டியை அறிந்தது போல் பரிணாமத்தை அறிய வேண்டும் என விஞ்ஞானியையும், யோகியையும் பகவான் குறிப்பிடுகிறார். புல்லாகிப், பூடாகி, பல்விருகமாகி எனக் கூறிய மரபு பரிணாமத்தையறியும். ஆனால் சர்வம் பிரம்மம் என்றவர் அதைக் கருதாதது போல், பரிணாமத்தை ஒரு கொள்கையாக மரபு ஏற்கவில்லை. அதை ஏற்க வேண்டும். அதுவே பூரணயோகம்.
அறிவும், ஜீவியமும்
– அறிவு அறிய முடியாததை – கடவுளை – ஜீவியம் அறியும்.
– எண்ணத்தைக் கடந்த ஞானமுண்டு. அது வாழ்வு, மனம், சத்தியஜீவியத்தை ஆராயும்.
– மனம், வாழ்வு, ஜடம் என்பது மூவகையான சக்தி. வேலை என்பது சிருஷ்டியும், பரிணாமமுமாகும். உறுதி சிருஷ்டிக்காக சக்தியைப் படைத்தது.
– உறுதி முடிவில்லாத ஞானத்தை நாடுகிறது.
நாத்திகனின் மறுப்பு
– பிரபஞ்ச ஜீவியத்தைக் கடந்து பிரம்ம ஜீவியம் உண்டு.
– சாட்சி என்பது பிரபஞ்ச ஜீவியம். நமது ஜீவியம் விரிவதால் மட்டுமே அதையறிய முடியும்.
– அத்வைதம் கூறும் பிரம்மத்தின் பின்னால் அசத் உள்ளது.
– ஜடம் நித்தியமில்லைஎன துறவி அசத்தைக் கண்டு கூறுகிறான். பிரம்மம் மனித குலம் தவறிவிட்டதுஎனக் கூறுவதில்லை அது. மனிதன் சிறப்படையத் தேவையான
நிபந்தனையை அதன்மூலம் அவன் – பிரம்மம் – கூறுகிறான்.
பரம்பொருள்
– ஜடமும், ஆன்மாவும் முதலில் பிரபஞ்ச ஜீவியத்தில் சந்திக்கின்றன.
– மௌனம் செயலுக்கு ஆதாரம், செயலை மௌனம் நிராகரிக்கவில்லை.
– சிறந்த மனிதன் சத்தில் ஊன்றிய காலை எடுக்காமல் அசத்துள் நுழைய வேண்டும்.
– இது ஜடமும், ஆன்மாவும் பிரம்ம ஜீவியத்துள் சந்திப்பதாகும்.