பிரம்மம், புருஷா, ஈஸ்வரா
– மனம் சத்தியத்தை அறிய முடியாது. அறிவுக்குத் திறனில்லை. ஞானத்திற்கும் ஊடுருவும் பார்வைக்கும் அத்திறனுண்டு.
– மனம் பிரம்மத்தையறியப் பாடுபடுகிறது. பிரம்மம், புருஷா, ஈஸ்வரா ஆகிய மூன்றையும் இணைத்து ஏகனையும், அநேகனையும் ஒரே சமயத்தில் காணும்படி முயன்றால் மௌனமும் சலனமும் ஒன்றாகும். ரூபமும் அரூபமும் ஒன்றாகும், கண்டமும், அகண்டமும் ஒன்றாகும். மனத்தின் தடையைக் கடக்கலாம்.
– மாயையால் எதையும் செய்ய முடியும். தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொள்ள முடியும். தன்னுள் தன்னைக் கிரகித்துக் கொள்ள முடியும்.
– இதனால் பாதாளமும், பரமாத்மாவும் ஏற்படுகின்றன.
– நாம் சத்திலிருந்தால் அனைத்தையும் செய்வது மாயை என அறிகிறோம். அங்கிருந்து சாட்சிப் புருஷனையடையாமல் ஆன்மாவின் தீவிரச் செயலின் அனுபவத்தையடைந்தால், மாயை ஜீவனின் சக்தியாகக் காணப்படும்.
மாயை, பிரகிருதி, சக்தி என்பவை பிரம்மம், புருஷா, ஈஸ்வரனுடைய சக்திகளாகும்.
மாயை – சிந்தனையால் சிருஷ்டி செய்வது.
பிரகிருதி– தீவிரமாகச் செயல்படுவது.
ஈஸ்வரன் – இவையிரண்டையும் சேர்த்து செய்ய வல்லது.
சிந்தனையால் சிருஷ்டித்து, தீவிரமாகச் செயல்படுவது.
ஈஸ்வரன், பிரம்மம், புருஷனைத் தன்னுட்கொண்டது.
சக்தி, மாயை, பிரகிருதியைத் தன்னுட்கொண்டது.
பிரம்மம், புருஷா, ஈஸ்வரா, மாயை, பிரகிருதி, சக்தி இவற்றிடையே எந்த முரண்பாடும் இல்லை.
– ஆன்மீகம் யதார்த்தம், தெளிவானது. தத்துவ ஆராய்ச்சி ஏட்டுச் சுரைக்காய். யோகம் செய்தால் தெளிவு ஏற்படும்.
– ஏகன் என்பது அடிப்படை. அகந்தை இதை மறைக்கிறது. ஆத்மா பிரம்மத்திற்குரியது.
– சமர்ப்பணத்தாலும், சரணாகதியாலும் நாம் சத்தியத்தை அடையலாம். ஆத்மாவையும், சுபாவத்தையும் இறைவனுக்கு அர்ப்பணம் செய்வோம்.
– சத் புருஷனில் சிருஷ்டிக்கும், அதற்கு முன் நிலைக்கும் வித்தியாசமில்லை.
– காலம், காலத்தைக் கடந்தது என்பவை ஒன்றே. நித்தியத்தின் இரு நிலைகள் அவை.
– காலத்துள், காலத்தைக் கடந்தது வந்து உடனுறைந்தால் மூன்றாம் நிலைக் காலம் – அற்புதம், அதிசயம், ஆச்சரியம் – ஏற்படுகிறது.
பரமாத்மாவும், ஜீவாத்மாவும்
– அஞ்ஞானம் என்பது என்னஎன்று தெரிவது முக்கியம்.
– ஜீவன், நமது ஜீவனுடைய ஆத்மா என்பது பிரபச ஆத்மாவில் உள்ளது. அது பிரம்மத்தில் உறைகிறது. அமர வாழ்வு அவனுக்கே
– மூன்று தவறுகள்:
1) சிருஷ்டிக்கும் பிரம்மத்திகும் இடையே வெளி உள்ளதாக நினைக்கிறோம்.
2) முரண்பாடு முடிவானதாகக் கருதுகிறோம்.
3) சிருஷ்டி காலத்தால் ஏபட்டது எனக் கருதுகிறோம்.
– பிரம்மம் சொல்லைக் கடந்தது.
– வேண்டியது உயிர்வாழ வேண்டாதது வேண்டும். வேண்டாதது வாழ வேண்டியது வேண்டும். அவற்றிடையே முரண்பாடில்லை.
– தனித்தன்மை, பொதுத்தன்மை, சாரம்.
– முத்துவும், வைரமும் வேறு என்பது முதல் நிலை சத்தியம். இவையிரண்டும் பொது என்பது விஞ்ஞானம் கூறுவது. தனித்தன்மை தெரிந்தால் பயன்படுத்தலாம். பொதுத்தன்மை தெரிந்தால் அவற்றைச் செய்யலாம். சாரம் (பிரம்மம்) தெரிந்தால் ஒன்றை மற்றதாக மாற்றலாம். அது ரஸவாதம் எனப்படும்.
– பிரம்மத்திற்கும் சிருஷ்டிக்கும் வேறுபாடுண்டுஎனக் கருதுவது விஞ்ஞானத்தின் குறை. வேறுபாடில்லை.
இறைவனும், அசுரனும்
– நாம் அறியாமையால் வாழ்கிறோம். அறிவால் வாழலாம். அறிவால் வாழ்வது இறைவன். அறியாமையில் வாழ்வது அசுரன்.
– குறை பிரிவினையிலிருந்து எழுகிறது. அது லிமிட்டாகவும், குதர்க்கமாகவும் தெரிகிறது.
– உலகை இறைவனின் அற்புதமாக அறியும்வரை எந்த விளக்கமும் பயன்தாராது, நம்மை இறைவனாக நாம் அறிய வேண்டும். – லிமிட் என்பது நமக்கு, ஜீவனுக்கில்லை.
– இறைவனது சிருஷ்டியில் அஞ்ஞானமே பெரிய சக்தி.
– வலி ஆனந்தத்தை முழுமையாக அனுபவிக்க உதவும்.
– முழுமையை மனம் அனுபவிப்பதைத் தடை செய்கிறது. அதனால் எதிரானதையும் அனுபவிக்க முடியும்.
– தீமையை விலக்கினால் நன்மையையும் விலக்க வேண்டி வரும். (நாட்டில் லஞ்சத்தை முழுமையாக விலக்க முடியுமென்றால் எல்லா development activitiesஉம் உடனே நின்றுவிடும்.)
– லீலைக்கு ஜீவாத்மாவின் அனுமதியும், பரமாத்மாவின் அனுமதியும் தேவை. (எந்தக் காரியத்திற்கும், சிறியது பெரியதானாலும், இந்த இரண்டு அனுமதியில்லாமல் நடக்காது.)
– பிரம்மத்திற்கு எதையும் சுயமாக வெளிப்படுத்தும் உரிமையுண்டு. சிரமம் அதிகமானால், ஆனந்த அனுபவமும் அதிகமாகும்.
பிரபஞ்ச மாயை
– ஜடமனம் எதையும் நம்ப மறுக்கும்.
உயிரின் மனம் மாயையை நம்பும்.
சிந்தனைக்குரிய மனம் பிரம்மத்தை நாடும்.
- ஜடம் என்பது உடல்; தொட்டால் அறியும்; தொடாவிட்டால் அறியாது. கண்ணை மூடிக்கொண்டால் எதிரிலுள்ள ஸ்டூல் தெரியாது. தெரியாது என்பதால் இல்லை என்கிறோம். கையால் தொட்டுப் பார்த்தால்
ஸ்டூல் இருக்கிறது என்கிறோம். ஜடமான உடலுக்கு தான் தொட்டுப் பார்க்க முடியாத எதுவும் இல்லை என நம்பும். எதையும் நம்பமுடியாத தத்துவம் agnosticism எனப் பெயர்.
- உயிர் உற்சாகமுள்ளது. எதையும் கற்பனை செய்யும் திறனுள்ளது. கற்பனையில் தெரிந்தால் அதற்கு உயிர் வரும்; அதை நம்பும். அது உண்டா, இல்லையா என்பது கேள்வியில்லை. கற்பனை மகிழ்ந்தால் கருத்து ஏற்கும். உள்ளதையே இம்மனம் கற்பனையால் மட்டும் ஏற்கவல்லது. அதனால் இதற்கு மாயை இதமாக ஏற்புடையது.
- சிந்தனையின் இலட்சியம் இருப்பதன் அடிப்படையைக் காண்பது. ஆராய்ச்சியை நடுவில் நிறுத்தாவிட்டால் சிந்தனை பிரம்மத்தில் முடியும்.
– பகவான் மாயை என்ற தத்துவத்தை மறுத்து அனைத்தும் சத்தியம் என்ற கொள்கையை நமக்களிக்கிறார்.
– கனவு பொய்யன்று, ஆவி ரூபங்களும் பொய்யல்ல. கனவு அடிமனத்திற்கு உண்மை. ஆவிரூபங்கள் உள்ளதின் பிரதிநிதிகள்.
– ஆதியான ஜீவியம் மாயையை உற்பத்தி செய்யும். அஞ்ஞானத்தின் கருவியாக மனத்தை உற்பத்தி செய்யும். மனம் மாயையைக் கைவிட்டு பிரம்மத்துடன் இணைய வல்லது. இக்கொள்கையை பகவான் ஏற்கிறார்.
சத்தியமும், பிரபஞ்ச மாயையும்
– மனிதன் மறுக்கலாம். பார்ப்பதை மறுக்கலாம். பார்வையை மறுக்கலாம். பார்ப்பவனையும் மறுக்கலாம்.
– உலகில் தூய்மையான அக்ஷரமான சத்தியம் உண்டு. மாயையான உலகமும் உண்டு.
– பிரம்மத்தின் நிலைகள்:
1) ஜீவன் (self) என்பது பிரம்மம். 2) உலகிலுள்ள அனைத்தும் பிரம்மம். 3) உலகில் உள்ள அனைத்தும் ஜீவன், ஜீவனால் பார்க்கப்படும் ஜீவன் – அதை 4 நிலைகளில் காண்கிறது.
– உபநிஷதம் கூறும் மூன்று நிலைகள்
1) அகம், புறமற்ற பரமாத்மா. 2) ஒளிமயமான சமாதியில் பரமாத்மா திரளான ஜீவியமாகிறது. 3) அகமும் புறமுமான ஜீவன்.
– புத்தர் போட்ட முட்டுக்கட்டையை உடைக்க சங்கரர் வாதம் பயன்பட்டது. ஆனால் அதனால் முடிவான தீர்வைத் தர இயலாது.
– அறிவு கட்டிய அத்தனைக் கோபுரங்களும் தீர்க்கமான ஆன்மீக அனுபவத்தால் மாயமாய் மறையும்.
– தெய்வீக மனத்திற்கும் சத்தியஜீவியத்திற்குமிடையே ஒரு சுமுகம் உண்டு.
ஞானமும், அஞ்ஞானமும்
– அறியாமையற்ற பிரபஞ்சத்தை நம்மால் கருத முடியும். வேதம் அப்படி நினைத்தது.
– அனந்தமான ஆத்மாவின் இலட்சிய லோகமும், சிறப்பான ஒருமையும் சேர்ந்திருப்பது நடக்க முடியாதது.
– ஆழ்வார்கள் கற்பனை செய்த பூலோகச் சுவர்க்கம் இதினின்று எழுந்தது.
– சிருஷ்டியின் இரகஸ்யம் பிடிபடாதது எனநினைத்து புத்தர் அதை விலக்கினார்.
– நாமே அஞ்ஞானமாக இருப்பதால், அதன் ஆரம்பத்தை நாம் கண்டுபிடிக்க முடியாது.
– ஜீவனை ஜீவியம் மூலம்தான் காண முடியும்.
– ஜீவியத்தை ஊடுருவினால் ஜீவனும், ஜீவியமும் பிரம்மத்தில் இணைகின்றது. இதை பகவான் Supreme discovery உச்சகட்ட சித்தி என்கிறார்.
– அஞ்ஞானம் ஞானத்துடன் மூவகைத் தொடர்புள்ளது.
1) முழுவதும் தழுவுவது 2) எதிர்ப்பு 3) இடைப்பட்ட நிலை.
ஒரு முனை ஞானம், அடுத்த முனை அஞ்ஞானம் என்ற தொடர் சங்கிலி சிருஷ்டி. ஆரம்பத்தில் முழு அஞ்ஞானமிருந்தது. அது முழுஞானத்தை முழுவதும் ஆட்கொண்டது. அஞ்ஞானம் குறைந்து ஞானம் வளரும் பொழுது ஞானத்திற்கு வலு ஏற்பட்டதால் ஞானம் அஞ்ஞானத்தை எதிர்க்கிறது. இரண்டுக்கும் சமமான நிலை (compromise) இடைப்பட்ட நிலை.
– அஞ்ஞானமும், ஞானமும் பிரம்மத்தையடையும் இரு பாதைகளில்லை. அஞ்ஞானம், ஞானத்தின் பகுதி.
நினைவு, சுய–ஜீவியம், அஞ்ஞானம்
– நினைவு என்பது செயல்படும் முறை. சத்தியம் அதைக் கடந்து ஜீவியத்திலும், ஜீவனிலும் உள்ளது. கம்பனியில் கணக்கு என்பது நடைமுறை வரவு, செலவைப் புள்ளி விவரமாகக் குறிப்பது. கணக்கு முதலில்லை,கம்பனியில்லை. முதலும், இலாபமும் கணக்கைக் கடந்து உற்பத்தியிலும், விற்பனையிலும் உள்ளன.
– வேதம் இரு ஜீவியங்கள் உள்ளன எனக் கூறவில்லை. ஜீவியம் ஒன்றே அதன் அம்சங்கள் இரண்டு என்கிறது.
– தெய்வீக ஜீவியம் இருளிலோ, ஒளியிலோ மறைந்தில்லை. சலனமற்ற ஏகனையும், சலனத்தால் ஏற்பட்ட அநேகனையும் அனைத்தையும் தழுவும் சுய–ஞானத்துள் வைத்துள்ளது.
– நிகழ்காலம், கடந்த காலம் என்பவை மனம் விளையாடும் யுக்திகள்.
– பின்னணியிலுள்ள நிலையான ஜீவியம் காலத்தையும், காலத்தைக் கடந்ததையும் அறியும்.
– மேல் மனம், அதன் ஜீவன் என்பது ஆழ்ந்த பிரம்மம் காலம் என்ற அரங்கில் உயிரைத் திரணமாக மதித்து விளையாடும் ஆபத்தான விளையாட்டு.
The surface being is the adventure of Spirit in Time என்பது பகவான் வாக்கு.
Surface being என்பது மேல் மனத்தின் ஜீவன்.
இது காலம், மனம், அகந்தை, சிறியது என்பவையாலான அரங்கம்.
காலம் என்பது ஆன்மாவின் அகம், ஆன்மா தன் செயலைத் தானே பார்ப்பது காலம் என பகவான் விளக்கம் தருகிறார்.
ஆன்மா தான் ஏற்படுத்திய காலத்தின் ஆட்சிக்குள் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்வது ஒரு adventure ஆபத்தான விளையாட்டு.
தகப்பனார் தன் மகன் கையில் தான் ஈட்டிய பெரும் பொருளைக் கொடுத்து அவன் செய்யும் வியாபாரத்தைக் கண்டுகளிப்பது ஆபத்தான விளையாட்டு அல்லவா? அதேபோல் ஆத்மா மேல்மனத்தில் விளையாடுகிறது.
நினைவு, அகந்தை, சுய–அனுபவம்
– புலனுக்கும் அறிவுக்கும் இடையேயுள்ள கருவி ஞாபகம்.
– (புறம், செயல், விலகுதல், அகந்தை. கோபம் வந்த பின் கோபமாக மாறாமல், நினைத்துப் பார்ப்பது செயல், கோபம் புறம். நினைவால் விலகினால் நிதானம் வரும். போதுமான அளவு விலகினால் அகந்தை தெரியும். அகந்தை மனோமயப் புருஷன்.)
1) கோபம், பசி, ஆசை போன்றவை மனத்தில் எழும்.
2) எழுந்தபின் மனம் அதனினின்று விலகி நிற்க முடியும்.
3) விலகுதல் அதிகமானால், அகந்தையென அறியலாம்.
4) Concentration ஆல் அகந்தை விலகியவன் மனோமயப் புருஷனாகத் தெரியும். சமர்ப்பணத்தால் அதுவே சைத்தியப் புருஷனாகத் தெரியும்.
– மனம் செயலையறிய காலத்தால் ஜீவியம் பிரிக்கப்பட வேண்டும்.
– செயலோ, ஜீவியமோ முழுமையுடையவை, பகுதியானவை அல்ல.
நம் பார்வை – மனத்தின் பார்வை – முழுச் செயலைப் பகுதியாக்குகிறது.
– ஞானத்தின் உண்மையான அடிப்படையைக் காண நாம் நம் சுபாவத்தையும், ஆத்மாவையும் முழுமையாகக் காண வேண்டும். மேலே அல்லது உள்ளே காண்பது பகுதி. இரு இடங்களிலும் ஒரே சமயத்தில் காண்பது முழுமை.
இரண்டறக் கலந்த ஞானம், பிரிந்து நிற்கும் ஞானம் – நால்வகை
1) இரண்டறக் கலந்த ஞானம் – காலத்தைக் கடந்த பிரம்மம் நம்முள் தெரிவது.
2) நெருங்கிய நேரடியான தொடர்பின் ஞானம் – உள்மனம் (intution – நேரடி ஞானம்)
3) பிரிந்து நிற்கும் நேரடித் தொடர்பான ஞானம் – அடிமனம்.
4) பிரிந்து நிற்கும் மறைமுகத் தொடர்பின் ஞானம் – மேல்மனம்.
- 1) ஞானம் என்பது இறைவனை மனம் அறிவது. மனம் உயர்ந்து பரமாத்மாவையடைந்தால் அது இரண்டறக் கலந்துவிடும் – இது இரண்டறக் கலந்த ஞானம் எனப்படும். இது காலத்தைக் கடந்த பிரம்மம். இதை நாம் நம்முள் காண்கிறோம்.
- 2) பரமாத்மாவை விட்டகன்று நகர்ந்து செல்லும் பொழுது நேரடியான தொடர்பு விட்டுப் போகாத நிலை யோகியின் மனம் (intution). இதையறிவது உள்மனம். இதை நேரடி ஞானம் என்கிறோம். இதுவும் காலத்தைக் கடந்தது.
- 3) அஞ்ஞானம் மேலிட்டால் பரமாத்மாவினின்று பிரிந்துவிடுகிறோம். அந்நிலையில் நம் முழுமனம் பிரபஞ்சம் முழுவதும் பரவி நிற்கும். இதுவும், பிரிந்தாலும் தொடர்பு நேரடியானது. அடிமனம் எனப்படும் – இது காலமும் கடந்ததும் சந்திக்குமிடம்.
- 4) முடிவான நிலை அஞ்ஞானம் அகந்தையும் நுழைந்து பரமாத்மாவினின்று பிரிந்த நிலையில் தொடர்பு மறைமுகமானது. இது மேல்மனம்.
அஞ்ஞானத்தின் எல்லை
1) ஆதியின் அஞ்ஞானம் – பிரம்மத்தை மறப்பது 2) பிரபஞ்ச அஞ்ஞானம் – பிரபஞ்ச பிரம்மத்தை மறப்பது 3) உலகைப் பறிய அஞ்ஞானம் – அகந்தை உலகை மறப்பது. 4) காலத்தின் அஞ்ஞானம் – காலத்திற்குக் கட்டுப்படுவது 5) சூழலின் அஞ்ஞானம் – நம்மைச் சுற்றியுள்ள உலகங்களை அறியாதது 6) கரணங்களின் அஞ்ஞானம் – கரணங்கள் பிரிந்து நிற்பது. 7) நடைமுறை அஞ்ஞானம் – செய்வது அறியாதது.
அஞ்ஞானத்தின் உற்பத்திஸ்தானம்
– ஜீவியத்தின் தீவிரச் செயலின் தோற்றம் அஞ்ஞானம்.
– சக்தி நிலையாக இருக்கும், சலனத்தாலும் சக்தி வெளிப்படும். சலனத்திலும், நிலையிலும் சக்தி பிரம்மம். ஒரே பிரம்மம்.
– எனவே பூரண பிரம்மமோ, பூரணமான சச்சிதானந்தமோ அஞ்ஞானத்தின் உற்பத்தி ஸ்தானமாக இருக்க முடியாது.
– ஒன்று பல ஆனதால் அஞ்ஞானம் உற்பத்தியாகியிருக்க முடியாது. ஏனெனில் பிரம்மம் நூறு வடிவம் பெற்வல்லது.
– மனம் சத்திய ஜீவியத்தினின்று பிரிந்த பொழுது அஞ்ஞானம் உபத்தியாயிற்று.
– சித்–சக்தி செயல்படும் பொழுது தன்னைத் தன்னுள்ளே கிரகித்துக் கொள்வதால் அஞ்ஞானம் உற்பத்தியாயிற்று.
சித்–சக்தியின் தீவிர செறிவும் அஞ்ஞானமும்
– அஞ்ஞானம் என்பது இயற்கை. பிரம்மத்தையும், அனைத்தையும் மற்க்க முயன்றதால் ஏற்பட்டது.
– சாரமானது, பூரணமானது, பல முகங்களையுடையது, பிரிந்த ஜீவியம் பரமாத்மாவையும், ஜட இருளையும் பிரதிபலிக்கிறது. அதுவே சச்சிதானந்தம், சத்தியஜீவியம், தெய்வீக மனம், மனம் ஆகிய லோகங்களாகும்.
– குறிப்பிட்ட செறிவு மீதி ஜீவனைப் பின்னணியில் வைத்துள்ளது. ஆனால் அஞ்ஞானம் அவற்றிடையே எழுந்த தடையான சுவற்றால் ஏற்பட்டது.
நாம் ஒரு காரியம் செய்யும்பொழுது, நமக்கு அக்காரியம் தெரியும். அது மட்டும் தெரியும். காரியத்தை செய்வது நாம். எழுதும்பொழுது கை எழுதுகிறது. ஆனால் உடலின் மற்ற பகுதிகள், மனத்தின் இதர திறமைகள் எழுத்தில் வருவதில்லை. அவை அனைத்தும் ஒதுங்கி நின்று, கையை எழுத அனுமதிக்கின்றன. எழுதும்பொழுது, நம் முழுஜீவனின் இதர பகுதிகள் அனைத்தும் பின்னணியில் ஒதுங்கி நின்று எழுத்தை அனுமதிப்பதை நாம் அறிவோம். உலகம் முழுமையானது. ஒரு பஸ் ரோட்டில் போகும்பொழுது உலகம் அந்த பஸ்ஸை ஓட்டுகிறது (நம் கை எழுதுவதுபோல). உலகம் முழுவதும் ஒதுங்கி நின்று ஒரு செயலை நடத்துகின்றது.