உலகம் – மோட்சம் – அரவிந்தம் – 11

– கடந்த காலத்தை மறந்து, நிகழ்காலத்தில் நம்மை இழப்பது அடுத்தகட்ட கிரகிப்பு.

– அஞ்ஞானமும், சுய–கண்டுபிடிப்புமில்லாமல் சிருஷ்டியில்லை.

– திரை, பொன்மூடி, சத்தியஜீவியத்திற்கும், தெய்வீக மனத்திற்கும் இடையே எழுந்தது. அது அஞ்ஞானத்தின் ஆரம்பம்.

பொய், தவறு, குறை, தீமை இவற்றின் ஆரம்பம்

– ஜீவியம் மறைவிலிருந்து வெளிவரும் பொழுது ஞானம் அதனினின்று வருவதால் தவறு ஏற்படுகிறது.

– அகந்தை வாழ்வில் தன்னை வலியுறுத்துவதால் வெளிப்படும் ஞானம் சிதறுகிறது. இது பரிணாம வளர்ச்சி.

– வாழ்விற்கு நல்லதும் கெட்டதும் வளரும் பாதைகள்.

– தவறான அகந்தையின் ஜீவியம் தீமை வளரப் பயன்படுகிறது.

– அகந்தை பிணக்கை உருவாக்குகிறது. பிரம்மத்தினின்று பிரிந்த ஜீவன் வளர பிணக்கு அவசியம்.

– மனம் மூலம் வாழ்வை தர்மம் கட்டுப்படுத்துவது ஜீவனுடைய பிரச்சினையைத் தீர்க்க உதவாது.

– சுபாவம் பிரிந்ததால் தீமை உண்டாயிற்று. அதனால் மீண்டும் அது சேர்ந்தால் பிரச்சினை தீரும்.

– ஆன்மீக வளர்ச்சி மூலம் தெய்வீகச் சுபாவத்தை எட்டினால் தீமை அழியும்.

உள்ளதும் பூரண ஞானமும்

– ஏகனோ, அநேகனோ முடிவல்ல. இரண்டையும் உட்கொண்ட அது பிரம்மமே பரம்பொருள்.

– மனம் உலகைச் சிருஷ்டிக்கவில்லை. ஜீவியம் சிருஷ்டித்தது.

– புறத்தின் ஞானம் முடிவானதன்று. ஏனெனில் அதையும் அகத்தால் அறிய வேண்டும்.

– அனுபவத்தைச் சோதிக்க அதைப் போன்ற அனுபவம் மூலம் சோதனை செய்ய வேண்டும்.

– ஆராய்ச்சியை முடிவுவரைத் தொடர வேண்டும்.

– எழுவகை அஞ்ஞானத்தில் எதையும் ஏற்கக் கூடாது.

– இது அனுபவத்தால் பெறும் ஞானம். அறிவு பயன்படாது.

பூரண ஞானமும், வாழ்வின் இலட்சியமும்

– பொருள்களின் இரகஸ்யம், ஆதரவு, ஆதி பிரம்மம் என்பது நம் அடிப்படை.

– ஆத்மா வளரும் பொழுது சுய ஞானம் பெற்று அமரத்துவமடைகிறது. அது சத் புருஷனையறியும் பொழுது அமரத்துவம் கிடைக்கிறது. அப்பொழுது அதனால் பிரம்மத்தையும் அறிய முடியும். பிரம்மத்தின் சுபாவத்தை ஆத்மா பெறுவது நம் இலட்சியம்.

– பிரம்மத்தை விலக்கும் வாழ்வின் தத்துவம் எதையும் நாம் ஏற்க முடியாது.

– இரட்டைகளை ஏற்கும் தத்துவம் கடவுளை ஏற்கின்றன. ஆனால் கடவுள் ஆத்மாவுடன் இணைவதை மறுக்கின்றன.

– பிரம்ம வாழ்வு, பிரபஞ்ச வாழ்வு, புவி வாழ்வு, அனைத்தும் இணைந்த வாழ்வு என 4 வாழ்க்கைத் தத்துவங்கள் உள.

– வேதாந்தம் பிரகிருதியை பிரம்மமென ஏற்கிறது. ஆனால் ஜீவாத்மாவின் அமரவாழ்வை ஏற்பதில்லை.

– வாழ்வும் ஆன்மாவும் இணைய மனிதனை மையமாகக் கொண்ட ஆன்மீகப் பரிணாமம் தேவை.

கடவுள் – மனிதன் – இயற்கை நோக்கிய முன்னேற்றம் ஞானத்தை

– வாழ்வில் ஜீவியம் தன்னை உருவகப்படுத்தியதில் முதற் கட்டம் அஞ்ஞானம் சூழலை ஆள்வது, ஜீவனில் முழுமை பெறுவது அவன் இலட்சியம். சச்சிதானந்தமாக மாறி இதைச் சாதிக்கலாம்.

– அகந்தையைக் கடப்பது வாழ்வு தன்னையறியாமல் முயல்வது. வேதம் கண்ட அமர வாழ்வே உண்மையான இலட்சியம்.

– கடவுள், மனிதன், இயற்கையிடம் புருஷன் தன்னை வெளிப்படுத்துகிறது. கடவுளை மனிதன் மூலம் அறியும் பொழுது மனிதன் தன்னை விவரிக்க முடியாத விசாலத்தில் இழந்து விடுகிறான்.

– மனிதன் முதலில் தேடுவது அதிகாரம். அடுத்தது ஞானம்.

– சுயஞானத்தைத் தேடும்பொழுது நாம் அதைக் கண்டோம். அது தெரிந்தால் அனைத்தும் தெரியும்.

– மனிதன் தன் ஜீவனை அறிகிறான். அது பிரபஞ்ச ஜீவனுடன் ஒன்றியது. இது அதைப் பிரதிபலிக்கும்.

– கடவுள், மனிதன், இயற்கை ஆகிய மூன்றும் மனிதனில் விழிப்பாகச் சந்திப்பது அந்த ஞானம் தேடும் அடிப்படை.

பரிணாமம் – உயர்ந்து இணைவது

– ரூபத்தை உற்பத்தி செய்து, அடுக்கடுக்காக வைத்து, உள்ள நிலையைக் கடந்து, எல்லா நிலைகளையும் இணைப்பது பரிணாமம்.

– ஜடம், வாழ்வு, மனம் ஆகியவை பரிணாம சக்தியில்லை. சத்தியஜீவியம் அச்சக்தி.

– வடித்தெடுக்கப்பட்ட வழியோ, முன் கூட்டியறியக் கூடியதோ இல்லை பரிணாமம். அது உருமாற்றத்தின் ஆச்சரியம்.

– தாழ்ந்தது உயர மனிதன் கீழ் நோக்கிப் பார்க்கிறான். உயர்வதும், இணைவதும் இலட்சியங்கள்.

– உள்மனம் தன் வாயில் திறந்து ஆன்மீக மனத்திற்கும் சூட்சும ஆன்மாவுக்கும் உயர்த்தும். இது இரட்டை வாயில். புதிய பரிணாமத்தின் இரகஸ்யம்.

– கீழிருந்து மேலும், வெளியிலிருந்து உள்ளும் மையம் மாறும்.

எழுவகை அஞ்ஞானம், எழுவகை ஞானம்

– அமைப்பின் அஞ்ஞானம் அனைத்தின் சிக்கலான முடிச்சு.

– விழிப்பான ஜீவன் சிறியது என்பதால் மனத்தின் அஞ்ஞானம் நமக்குப் பிடிபடாது. அது பிடிபட்டபின் அனைத்தும் பிடிபடும்.

– உள்ளே போய், அடிமனம் சேர்ந்து, அங்கிருந்து பரமாத்மாவை நோக்கி உயர எழுவது அவசியம்.

– அமைப்பின் அஞ்ஞானம், மனத்தின் அஞ்ஞானம் ஆகியவற்றின் பெரும்பகுதியை பரமாத்மாவையடையாமல் விலக்கலாம்.

– பூரணமாக, சிறப்பாக இணைய மேலும் உயர்வது அவசியம்.

– பிரம்மத்தைப் புருஷனில் அறிவது, பிறப்பைக் கடந்த நிலையில் அறிவது அமர வாழ்வாகும்.

– இம்மாற்றங்கள் நடைபெற நாம் உள்மனத்துள் ஜீவனின் உயர்ந்த லோகங்களை அகந்தையை அழித்து அடைய வேண்டும்.

– இப்பாதை பிரபஞ்ச அஞ்ஞானத்தையும் கரைக்கும்.

– இங்ஙனம் சுயஞானம் பூர்த்தியடைந்து நடைமுறை அஞ்ஞானம் கரைகிறது.

– இது ஆன்மீகப் பரிணாமத்தை அறிந்து ஏற்பதாகும்.

புனர்ஜன்ம தத்துவம்

– வாழ்வின் புதிர்கள் இரண்டு. பிறப்பு முதற் புதிர். இறப்பு அடுத்தது. பிறப்பின் முன்னும், இறப்பின் பின்னும் உள்ளவை அறிவுக்கும் நினைவுக்கும் எட்டா. அதனால் மறுபிறப்பு எப்பொழுதும் புரியாத புதிராக இருக்கிறது.

– பௌத்தனுக்கும், மாயாவாதிக்கும் புனர்ஜென்மம் தேவை இல்லை, வேதாந்தம் லீலை என்பதால் மறுபிறப்பு இன்றியமையாததில்லை.

– பகவானுடைய தத்துவம் ஆன்மா வளர்கிறது, பரிணாம வளர்ச்சியுறுகிறது என்பதால் புனர்ஜென்மம் அவசியமாகிறது.

– மனிதனுடைய ஜீவியம் வளர்கிறது. அதற்கு முக்கியத்துவம் ஏற்படுகிறது. நம் மனத்திலுள்ள பிரம்மம் பிரபஞ்சத்தின் பிரம்மமானால் அல்லது அதைக் கடந்த ஆத்மாவானால், அவை பிரம்மத்தின் சக்தியானால் ஜீவாத்மா முக்கியம் பெறுகிறது.

– பகுதியான பிரிக்கும் மனம் ஐக்கியத்தை வெளிப்படுத்தி உடலளவில் வெளிப்பட்டால் இந்த லீலை முடிவடையும். – அதனால் புனர்ஜன்மம் இன்றியமையாதது.

மற்ற லோகங்கள்

– பரிணாமத்தின் வேகம் சிருஷ்டிக்குச் சக்தியளிக்கிறது.

– உலகம் பல கட்டங்களாக அமைந்துள்ளது என்பதால் ஜீவாத்மாவும், அவனது இலட்சியமும் உலகம் சிருஷ்டிக்கப்படு முன் இருந்தன என்றாகிறது.

– ஜடத்தின் முந்தையது. அறியாமை மனிதனின் அறியாமைக்கு

– மனம், உயிர், ஜடலோகங்கள் இருக்க வேண்டும். ஜடலோகம் மட்டும் இருப்பது பொருந்தாது.

– நிரூபணம் கேட்பது அறிவுக்குப் பொருந்தாது. எதையும் அதற்குரிய சட்டப்படி ஆராய வேண்டும்.

– இந்த லோகங்கள் ஜடத்திலிருந்து எழுவதால் அவை நமக்குத் தட்டுப்படாமலிருக்காது.

– மனிதன் உள்ளே சென்றால் பரந்த வாழ்வும் ஜீவியமும் காத்துள்ளன.

கர்மம், ஆத்மா, அமரவாழ்வு

– புனர்ஜன்மமுண்டு என்றால் அடுத்த லோகங்கட்குப் போகும் பாதைகளை அறிய வேண்டும்.

– பரவலாக ஆயிரம் எண்ணங்கள் உள. அவை அறிவுக்குப் பொருந்தா.

– ஆத்மா பிறப்பால் தன்னை வெளிப்படுத்தி, சுய அனுபவம் பெறுகிறது.

– ஜடமான மனம் ஆத்மா வளராதுஎனக் கருதுகிறது. அதை ஏற்காவிடில் கர்மம் நம்மைக் கட்டுப்படுத்தாது.

மன்னராட்சியில் மக்கள் மன்னராகும் வாய்ப்பில்லை.

மக்களாட்சியில் உண்டு.

நாம் மனதால் ஏற்பவை நம் வாழ்வில் பலிக்கும்.

கர்மம் அது போன்றது.

நமக்குப் பலன் தருவதும், பாதிப்பதும் நாம் ஏற்றுக் கொண்டவையேயாகும்.

நாம் கர்மத்தை ஏற்கிறோம்.

அது நம்மைப் பாதிக்கிறது.

மேல்நாட்டார் கர்மத்தை ஏற்பதில்லை.

நம்மைப்போல் அவர்கள் பாதிக்கப்படுவதில்லை.

கர்மம் பிரகிருதிக்குட்பட்டது.

பிரகிருதியைக் கடந்து ஜீவன் உள்ளது.

பிரகிருதியிலுள்ளவரை கர்மம் பாதிக்கும்.

அதைக் கடந்து ஜீவனுக்குப் போனால் கர்மம் பாதிக்காது.

சர்க்கார் அதிகாரிக்கு பரிட்சைகள் உண்டு, இன்கிரிமெண்டு, பிரமோஷனுண்டு.

அவை சட்டம்.

எவரும் அதை ஏற்க வேண்டும்.

இது பிரகிருதியைப்போல. அரசியலை ஜீவனுக்கு ஒப்பிடலாம். அரசியல் பரிட்சையில்லை, பிரமோஷனில்லை, இன்கிரிமெண்ட் இல்லை.

எத்தனை கட்டங்களும் எவரும், முடிந்தால், தாண்டிப் போகலாம்.

இது ஜடமான நம்பிக்கை.

சிந்திக்கும் மனம் ஆத்மா வளர்வதை அறிய முடியும்.

அதற்கு கர்மத்தை விட்டகலும் திறனுண்டு.

அது ஜீவனை எட்டலாம்.

கர்மம் அதற்கில்லை.

மனிதனும், பரிணாமமும்

– பிறப்பால் புறத்தில் ரூபமும், அகத்தில் ஜீவியமும் பரிணாம வளர்ச்சி பெறுகின்றன.

– மனிதக் குரங்கிற்குப் பரிணாம சக்தியிருந்ததுபோல் மனிதனுக்கு இல்லை.

– மனிதன் தன் நிலையைக் கடந்து உயரும் தலைமையுடையவன்.

– பரிணாமம் முந்நிலைக்குரிய ரூபத்தை நம்பியுள்ளது. அதை முழுவதும் வளர்க்கும் வாய்ப்பு பரிணாமம்.

– வளர்ந்த ஜீவியத்திற்குரிய வளர்ந்த உடல் தேவை என்பது வளர்ந்த ஜீவியம் உடலை வளரச் செய்யும்என மாறுகிறது. அதனால் பரிணாமம் இன்றியமையாததாகிறது.

ஆன்மீக மனிதனின் பரிணாம வளர்ச்சி

– தனியான ஆத்மாவைக் காணுதல் புருஷனைக் காண்பதாகும்.

– தாழ்ந்த பகுதிகள் – உடல், உயிர், மனம் – சிறப்படைந்தால் ஆத்மா வெளிவரும்.

– அஞ்ஞானம் ஞானமாகத் திருவுருமாற, ஆன்மீக அறிவு அவசியம்.

– ஆன்மீக ஜீவனைத் தன்னுள் கண்டு அதைப் பிறர் காண உதவுவது உண்மையான சேவை.

மூன்று திருவுருமாற்றம்

1) சைத்தியப் புருஷன் வெளிவருதல்

2) ஆன்மீகத் திருவுருமாற்றம்

3) சத்தியஜீவியத் திருவுருமாற்றம்.

– ஆன்மா முழுவதும் வெளிவருதல்எனில் நேரடியாக ஆன்மீக சத்தியத்தை அறிவது.

– மேற்கொண்டு திருவுருமாற, சத்தியஜீவியச் சட்டம் தாழ்ந்த பகுதிகளில் வெளிவர வேண்டும்.

சத்யாரோகணம்

– மேலிருந்து சக்தி கீழே வருவது அவசியம்.

உள்ளே விழிப்பது அவசியம்.

– சுதந்திரம் என்பது தாழ்ந்தது உயர்ந்ததற்கு அடங்க வேண்டும்.

– மனிதன் பிரபஞ்சத்தின் பொதுச் சட்டத்திற்கு உட்பட வேண்டும்.

– வேதம் கூறும் புறம் அகமானால் யுகம் க்ஷணமாகும்.

– மேலிருந்து வரும் சக்தி தாழ்ந்ததை உயர்ந்ததுடன் இணைக்கும்.

– முனிவர் மனம் முதற்படி.

– ரிஷி, யோகி, தெய்வமனம் அடுத்தவை.

– ஒளிமயமான அவசியம் ஜட இருளின் குருட்டு அவசியத்தை மீறிச் செயல்படும்.

சத்தியஜீவன்

– சத்தியஜீவியம் தெய்வீக மனத்தை வெளிப்படுத்தும்.

– அது அஞ்ஞானத்தின் சத்தியத்தை ஊடுருவியடையும்.

– புறம் அகமாகத் தலைகீழே மாறும்.

– மனம் இரண்டறக் கலக்க முயலும்.

– நித்தியத்துவத்திகு நிலையான வாழ்வுண்டு.

– ஜடம் ஆன்மாவை வெளிப்படுத்தும்.

– புறத்தை அகம் கட்டுப்படுத்தும் சக்தி. வலி அப்படி ஆனந்தமாகும்.

– சத்தியஜீவியத்தின் இலட்சியம் “to be” இருப்பது.

– ஆர்வம் பூரிப்பாகி, திருஷ்டியாகும். ஏக்கம், சக்தி, நிலையான ஆனந்தம்.

– பர்சனாலிட்டி புறச்செயலை அகத்தால் கட்டுப்படுத்தும். பர்சனாலிட்டிக்கு பொது சக்தி ஆதரவாக எழும்.

Manners, behaviour, character, personality நடத்தை, பழக்கம், சுபாவம் என்பவற்றைக் கடந்தது பர்சனாலிட்டி. சுபாவம் திறமையுடையது. ஒரு துறையின் திறமையை அடுத்த துறையில் பயன்படுத்தவல்லது. புதியதாக வருவனவற்றை ஏற்று பழைய திறமையால் புதியதை வெற்றிகரமாக்குவது பர்சனாலிட்டி. திறமையாக பஸ் நடத்தியவர் முனிசிபல் சேர்மனாக இருப்பது அவருடைய பர்சனாலிட்டியைக் காட்டும். பர்சனாலிட்டி என்பது அகத்திறமை. அதற்கு உலகம் ஒத்துவரும், அடங்கும், பணியும். Impersonal power, personal power என்பவை பொது சக்தி, தனிப்பட்ட சக்தி என ஆகும். பொது சக்தி என்பது சட்டம், உலகம், வழக்கு தரும் உரிமை. தனிப்பட்டது என்பது குறிப்பிட்டவரின் திறமை. ஒரு ஆபீசில் கிளார்க்காக இருப்பவர் திறமையால் ஆபீசர் வேலையை செய்தால், அவரிடம் வேலை பெற்றுக்கொள்வார்கள், பதவியைத் தரமாட்டார்கள். பதவியைக் கொடுத்தால் தயா விஷயமாகத் தருவார்கள். அப்படி ஒரு சட்டமிருந்தால் அவர் உரிமையுடன் அதைப் பெறுவார். சட்டம் impersonal பொது சக்தி. I.A.S ஆபீசர் மந்திரி வேலையைத் திறமையாக செய்வதற்கும், அத்திறமையால் அவர் மந்திரி பதவி வகிக்க சட்டம் வருவதற்கும் உள்ள வித்தியாசமிது.