உலகம் – மோட்சம் – அரவிந்தம் – 13

அது போன்ற ஆயிரம் மாற்றங்களால் சமூகம் உயர்ந்துள்ளது. இப்பொழுது ஸ்ரீ அரவிந்தம் ஆன்மீக மாற்றத்தைத் தருகிறது.

  • அதை மனிதகுலம் ஏற்றால் கர்மம் கரையும்.
  • காலத்தின் ஆட்சி முடியும்.
  • மனம் விரிந்து தோல்வியை இழக்கும்.
  • தீமை முழுவதும் கரைந்து மறையும்.
  • சத்தியஜீவிய அற்புதம் அன்றாட நிகழ்ச்சியாகும்.
  • யுகம் க்ஷணமாகும்.
  • புறம் அகத்தின் பகுதியாகும்.
  • ஜீவாத்மா பிரபஞ்ச ஆத்மாவாகி தானே பரமாத்மா என விளங்கும்.

வேட்டையாடியவன் விவசாயம் செய்ய முற்பட்ட பொழுதும், தான்யத்தை விளைவித்துத் தானே சாப்பிட்டவன், பிறருக்கு விற்று வியாபாரத்தை ஏற்படுத்திய பொழுதும், பண்ட மாற்றுக்குரிய பணம், சமூக சக்தியாகி உலகை ஆண்ட பொழுதும், பேச, கூட்டல், கழித்தல் போட ஏற்பட்ட கல்வி அறிவால் அரசபதவியை அறிஞனுக்கு அளித்த பொழுதும் இன்னும் ஆயிரம் செயல்களில் மனித முன்னேற்றம் ஏற்பட தலைகீழ் மாற்றத்தைக் கருவியாக்கியது. அவை அனைத்தும் பகுதியான மாற்றங்கள். ஸ்ரீ அரவிந்தம் அனைத்துப் பகுதிகளும் கொண்ட முழுமையான பரிணாம ஆன்மீக மாற்றம்.

காய்கனியை உண்டு வாழ்ந்தவன் பயிரிடப் பயின்றான். ஓரிடத்தில் காய் தீர்ந்துவிட்டால் அடுத்த இடம் சென்றான். மனிதன் நாடோடியாய் வாழ்ந்தான். இயற்கை கொடுத்த உணவை உண்டான். அறிவு வளர்ந்தது. தானே பயிரிட ஆரம்பித்தான். இயற்கை அது வரை உற்பத்தி செய்ததை அவனே விவசாயியாகி உற்பத்தி செய்தான். அதன் விளைவாக நாடோடி மனிதன் ஊரும், குடியுமாக ஓரிடத்தில் நிலைத்தான். அடுத்த கட்டத்தில் சுத்தி, சக்கரம், பலகை, வீடு, பாத்திரம் என ஆயிரம் பொருள்களை கற்பனையால் உருவாக்கினான். இவை இயற்கை உற்பத்தி செய்தவையில்லை. அவற்றை உற்பத்தி செய்ய பாக்டரியை ஏற்படுத்தினான். நாடோடி இயற்கை உற்பத்தி செய்த தான்யத்தை இவனே உற்பத்தி செய்தான். இயற்கையிலில்லாத பொருள்களை மனதால் உற்பத்தி செய்து, அவற்றை உற்பத்தி செய்ய இயற்கையிலில்லாத பாக்டரியை ஏற்படுத்தினான். இவை மாற்றம். செயலின் போக்கு தலைகீழ் மாறுகிறது. உடல் விடுதலை பெற்றது. கடுமையான உடலுழைப்பு கடுமையிழந்தது. தனக்காக உற்பத்தி செய்தவன் பிறருக்காக உற்பத்தி செய்து, இல்லாத வியாபாரம் என்ற பழக்கத்தை

ஏற்படுத்தினான். வாழ்வு கடுமையிழந்து ஓரளவு சௌகரியம் பெற்றது. கல்வி, பணம், விஞ்ஞானம் போன்றவை எழுந்தன. புதியன மாற்றத்தை ஏற்படுத்தின. மனிதன் இயற்கையினின்று விடுபட்டான். வனவிலங்குகளினின்று பெரு விடுதலை பெற்றான். குளிர், புயல், பசம், பூகம்பம் ஆகியவற்றிலிருந்து பெரும்பாலும் விடுதலையடைந்தான். அவன் பெற்ற வசதிகள் விடுதலைகளாகும். அவை ஆயிரம், பதினாயிரம். அதுவே நாகரீகம்.

1900இல் இப்பெரும் சாதனைக்குப்பின் மனிதன் தான் பெற வேண்டிய விடுதலைகள் மேலும் ஏராளம் என அறியாத நிலையில் பகவான் செயல்பட ஆரம்பித்தார். அச்சமயம் மனிதன்

  • காலத்திற்குக் கட்டுப்பட்டவன்.
  • தோல்வியை விலக்க முடியாத நிலையிலுள்ளவன்.
  • அறியாமையிலிருந்து தப்பிக்க முடியாதவன்.
  • கர்மம் ஆட்சி செலுத்தியது.
  • தீமை புவியெங்கும் பவனி வந்தது.
  • அகந்தை ஆர்ப்பாட்டம் செய்து, ஆக்ரமித்துக் கொண்டிருந்தது.

அதுவரை மனிதன் ஜடமான உடலிலிருந்தும், உயிரிலிருந்தும், மனத்திலிருந்தும் தலைகீழ் மாற்றத்தால் அனுதினமும் விடுதலை பெற்றவாறிருந்தான். பகவான் ஆன்மீக மாற்றம் உண்டுஎனக் கண்டார். ஆன்மாவுக்குப் பரிணாம வளர்ச்சியுண்டுஎனக் கண்டார். கண்டது நாராயண தரிசனமாயிறு. உலகம் கர்மத்திலிருந்தும், காலத்திலிருந்தும், மனத்திலிருந்தும், தீமையிலிருந்தும், வேதனையினின்றும், மரணத்திலிருந்தும், பாவத்திலிருந்தும் தலைகீழ் மாற்றத்தால் விடுதலை பெறலாம்எனக் கண்டார்.

  • அவர் கண்ட தத்துவம் ஆன்மீகப் பரிணாமம்.
  • அதுவே ஸ்ரீ அரவிந்தம்.
  • அதை ஆன்மீகத் தலைகீழ் மாற்றம் எனலாம்.

இக்கருத்து வாசகர் மனத்தை சிறிதளவேனும் தொட்டால், The Life Divine  புரியும், மனமாற்றப் பலன் பெறலாம், அமெரிக்க கோடீஸ்வரனாக இந்திய மக்கள் சுபிட்சம் பெறலாம்.

எதையும் நம்பாத ஜடமனம் வளர்ந்து பிராணனில் (vital mind) மனமாகச் செயல்பட்டால் இல்லாத மாயையை உற்பத்தி செய்து அதில் திளைக்கிறது. மேலும் பரிணாமத்தால் சிந்தனை மனமானால் அது பிரம்மத்தை இலட்சியமாகக் கொண்டு, பகுதியான பிரம்மத்தை முடிவாகக் கொள்கிறது. தொடர்ந்த வளர்ச்சி மௌனம், திருஷ்டி, நேரடி ஞானம், ஞானம் ஆகியவற்றைக் கடந்து சத்தியஜீவியத்திற்குக் கொண்டு வரும் பொழுது பூரண பிரம்மம் பொலிவு பெறும் சிருஷ்டி பிரம்மத்தின் முன்னிலையில் பிரபஞ்ச முழுவதும் மூன்றாம் நிலைக் காலத்தில் எழுந்து அற்புதத்தை அவனியில் வாழ்வாக நிலை நிறுத்தும்.

ஜடத்தில் உள்ள உயிர் நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. ஜடம் தாவரமானால்,

– தானுள்ள இடத்தில் உள்ள உணவால் உருவம் உயிர் பெறுகிறது.

– மிருகம் இடம் விட்டு இடம் சென்று இயற்கையில் உள்ளதை உண்டு உயிர் வாழ்கிறது.

– மனிதனும் விலங்காக வாழ்க்கையை ஆரம்பித்தான்.

– விலங்கில் செயல்படாத மனம் மனிதனில் செயல்படுவதால்,

– விவசாயத்தால் இயற்கையின் உற்பத்தித் திறனை தானே மேற்கொண்டான்.

– தொழில் (industry, manufacturing) என்பது மனம் ஜடத்தில் செயல்பட்டுப் பொருளை உருவாக்கி உற்பத்தி செய்வது. அது இயற்கையிலில்லாத பொருள். அப்பொருளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையும் இயற்கையிலும், உலகிலும் இல்லாதது.

– மனம் பிராணனில் – சமூகத்தில் – செயல்படுவதால் வியாபாரம், பேச்சு, போக்குவரத்து, நகரம், மனித உறவு,

கலை என உற்பத்தியாகி ஜடமான மனிதனின் விலங்கு வாழ்வை மனித வாழ்வாக மாறி ஆன்மா வாழ்வில் சட்டம், பண்பை உற்பத்தி செய்வது நாகரீகம்.

  • அவறிற்கு அடிப்படையான ஆதாரமாக மனம் சமூகத்தில் சிருஷ்டித்தது கல்வி, சாஸ்திரம் என்றனர் முன்னோர்.
  • ஆன்மா தன்னில் செயல்படுவது (Concentration that dwells on itself) தவம், யோகம். இவற்றின் கருவி மனம்.
  • The partial Spirit acts through its own aspects of Silence,Light,Intution and Knowledge. பகுதியான ஆன்மா தன் அம்சங்களான மௌனம், ஜோதி, ஞானம் செயல்பட்டு தன்னைக் கடந்து முழுமையான ஆன்மா ஆவது சத்தியஜீவியம்.

சத்தியஜீவியம் பிரம்மம் தேடும் ஆனந்தத்தைச் சிருஷ்டிக்கிறது

விவசாயம் உயிரை வளர்க்கும் உணவை உற்பத்தி செய்கிறது. இதில் மனம் இயற்கையின் செயலை ஏற்றுச் செயல்படுகிறது. In agriculture mind organises the activity of Nature to produce food that sustains life..

தொழிலில் (industry) மனம் ஜடத்தில் அறிவை வளர்க்கும் பொருள்களைச் சிருஷ்டித்து, அவற்றை உற்பத்தி செய்யும் பாக்டரியையும், விநியோகம் செய்யும் வியாபாரத்தையும், விளக்கம் தரும் கல்வியையும், அவை அனைத்திலிருந்து விடுதலை தரும் மோட்சத்தையும் சிருஷ்டிக்க அடிகோலிற்று.

விடுதலை பெற்ற ஆன்மா தன்னையறியவில்லை. It is an unconscious accomplishment.

விடுதலையைத் துறந்த ஆன்மா தன்னையறிந்து பிரம்மம் தேடிய ஆனந்தத்தை சிருஷ்டிக்க சத்தியஜீவியத்தை பிரபஞ்சத்தில் எட்டியது.

மனம் அறியாமையில் சிருஷ்டித்தது. தன்னையறிந்த பின் ஞானத்தில் மனம் சிருஷ்டிக்க முயலும் பொழுது தானே சத்தியஜீவியமாக பரிணாம வளர்ச்சி பெறுகிறது.

The human soul mistakenly taken to be the desire soul,comes out of ignorance to become the psychic which by further evolution discovers itself as Ishwara,the Supramental Being,the Psychic Being in Material Substance thus covering the entire gamut of the play from the Self-Conscious Being to its inversion Matter where Mind serves as the formal object to initiate knowledge,action and delight of existence.

நமது அன்றாட வாழ்வில் சத்தியஜீவியம்:

  • எப்படி பரமாத்மா ஜீவாத்மாயிற்று என்பது சிருஷ்டி ஏற்பட்ட வழி.
  • அதைச் செய்தது சத்தியஜீவியம்.
  • Page No..129 The Life Divineஇல் இந்த விளக்கமிருக்கிறது.

அதை முடிவில் சுருக்கிக் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.

– சிருஷ்டி என்பது பிரகிருதி எனும் இயற்கை.

– புருஷன் ஜீவன், பிரகிருதி இயற்கை எனும் சிருஷ்டி. புருஷன் பிரகிருதியாவது சிருஷ்டி.

– பிரகிருதி என்பது முழுமையாக புருஷனுடைய ஞானதிருஷ்டி. புருஷன் தன் திருஷ்டியால் சிருஷ்டித்தான். (Seer will)

அது அவன் இச்சை.

– தன்னிச்சையால் சிருஷ்டிக்கும் கருவி சித்–சக்தி.

– சித்–சக்தி சத் புருஷனுடைய (Conscious Being) இச்சை (Will).

– சத்புருஷன் பரிணாமம் எனும் வேலையில் ஈடுபட்டு உள்ளான்.

– வேலை என்பது சத்தியத்தை சக்தியின் ரூபமாக்குவது.

– சத்தியம் என்பது புருஷன் நிர்ணயித்த சத்தியம்.

– புருஷன் தான் ஏற்கனவே சிந்தனையால் சிருஷ்டித்த சத்தியத்திற்கு ரூபமும் சக்தியும் தருவது சிருஷ்டி என்ற பிரகிருதி.

சத்புருஷன் தானே விரும்பி நிர்ணயித்த சத்தியத்திற்கு தன் இச்சையால் ரூபமும் சக்தியும் தருவது சிருஷ்டி என்பது பகவான் விளக்கம். எதை நமக்குக் கேட்க உரிமையில்லைஎன ரிஷிகள் கூறினார்களோ அதை இச் சொற்களால் பகவான் விளக்குகிறார்.

நம் வாழ்வில் நாமே நமக்கு பிரம்மம் – அதாவது புருஷன் – சத் புருஷன்.

நாமே நம் வாழ்வின் சிற்பி.

நமது வாழ்வு நமது சத்தியத்தை வெளிப்படுத்துகிறது.

எது நமக்கு சத்தியம்என நாம் (Self-conception) நிர்ணயிக்கிறோம்.

சிந்தனையால் நிர்ணயித்ததை செயல்படுத்துவது நமது செயல் (will) உறுதி, இச்சை.

நாம் நிர்ணயிக்கிறோம், நாமே செயல்படுத்துகிறோம்.

செயல்படுத்துவது எனில் எண்ணம் ரூபம் பெறுகிறது.

ரூபம் பெறும் எண்ணம் தான் பெற்ற சக்தியின் அளவு திறன் பெறுகிறது.

(நமக்கு அக்கறையுள்ள அளவு நாம் சாதிக்கிறோம்).

பிரம்மம் உலகை சிருஷ்டித்ததும், நாம் நம் வாழ்வை உருவாக்குவதும் ஒன்றே – முறை ஒன்று, நிலை வேறு.

பிரம்மம் தெரிந்து, விரும்பிச் செயல்படுகிறது. நாம் தெரியாமல் ஆசையால் உந்தப்பட்டுக் கண்மூடியாகச் செயல்படுகிறோம். கண்மூடியாகச் செயல்படும் பொழுதும் பிரம்மத்தின் முறையைக் கடைப்பிடிக்கிறோம். பிரம்மம் சத்தியத்தால் செயல்படுகிறது. நம் சத்தியம் துளி, பொய் அதிகம். பொய் குறைந்து மெய் அதிகமாவது ஆன்மீக முன்னேற்றம். எந்த அளவு முன்னேற்றம் தேவையோ, அந்த அளவு மெய் வேண்டும்.

  • மனிதன், எந்த அளவு உயர விரும்புகிறானோ அந்த அளவு சத்தியத்தை மேற்கொண்டால், அவன் தன் பர்சனாலிட்டிக்கு ஏற்றவாறு சாதிப்பான்.
  • அன்பன் அதை அன்னையை ஏற்கும் அளவில் விரைவாக, முழுமையாகச் சாதிப்பான்.

பிரம்மம் தேடும் ஆனந்தம்

பிரம்மமே ஆனந்தம். ஏன் பிரம்மம் ஆனந்தத்தைத் தேடுகிறது? There are grades and variations in ananda as in anyother thing. . மாற்றம் நாம் நாடுவது. ஏற்றம் விரும்பத்தக்கது. அனந்தமான பிரம்மம், தான் பெற்றுள்ள ஆனந்தத்தை அனந்தமாக மாற்றவல்லது.

  • இந்த சிருஷ்டியில் ஒளிந்து கண்டுபிடிக்கும் ஆனந்தத்தைப் பிரம்மம் தேடுகிறது.

ஒரு கேள்வி, இதுவரை சிருஷ்டியிலில்லாத ஆனந்தத்தை இனிப் பரிணாமம் மூலமாக மனிதன் பெறுவதை பிரம்மம் அனுபவிக்கப் போகிறது என நாம் அறியலாம். அது உண்மை, முழு உண்மையில்லை. உண்மை கீழ்க்கண்டவாறுள்ளது.

  • பிரம்மம் என்றுமே முழுமையானது. நம் ரிஷிகள் அதன் ஓர் அம்சமான அசையாத பிரம்மத்தைக் கண்டு அதுவே முடிவானது என்றனர். பகவான் முதலில் முழுப் பிரம்மத்தைக் கண்டார்.

– இது முழு ஆனந்தமுடையது.

– இது என்றும் அதுபோலவே இருந்து வருகிறது.

– மனிதன் இதை இனிக்கண்டு சச்சிதானந்தத்தின் முழுமையை அறிந்து யோக முன்னேற்றம் பெற வேண்டும். அதுவே பூரணயோகம்.

  • மனிதன் பரிணாமத்தால் முழுப் பிரம்மத்தையும், அதன் முழு ஆனந்தத்தையும் கண்டால் முழுமையான பிரம்மானந்தத்தை அனுபவிப்பது, மனிதன் மட்டுமன்று, இறைவனான மனிதன் என்ற பிரம்மமும் அப்புதிய ஆனந்தத்தை அனுபவிக்கும்.
  • அதனால் நாம் காணப் போவது இனி ஏற்பட வேண்டும் என்பதால் முழுப் பிரம்மமும், அதன் பூரண பிரம்மானந்தமும் இனிமேல்தான் மனிதனால் சிருஷ்டிக்கப்பட வேண்டும்என நாம் நினைக்கத் தோன்றும். அதை விளக்க,

– முழுப் பிரம்மமே முழுமுதற் கடவுள். ரிஷிகள் அதை அறியவில்லை. பகவான் ஸ்ரீ அரவிந்தர் அதைக் கண்டார்.

– அதில் அகந்தை, தீமை, மனம், காலம், மரணம் சிறுமையில்லை.

– பரிணாமத்தால் அந்த முழுப் பிரம்மமும் வளர்ந்து அது இதுவரையறியாத ஆனந்தத்தை மனிதன் இறைவன் ஆவதால் அறிய முற்படுகிறது.

  • இதைச் சாதிக்க பிரம்மம் ஜடமாகி, தாவரம், மிருகமாகி,

மனிதனாகி, சத்தியஜீவனாக முயல்கிறது.

– மனித முன்னேற்றம் மனத்தின் முன்னேற்றம்.

– இதை நாம் சமூக முன்னேற்றமாகக் காண்கிறோம்.

– இது மேல்நிலை அம்சங்கள் கீழுள்ள அம்சங்களில் வெளிப்படுவதாக அமைகிறது.

– வேட்டையாடியவன், விவசாயம், வியாபாரம், தொழில், நகர வாழ்வு, கல்வி, விஞ்ஞானம், ஆன்மீகம் மூலம் இதையடைய முயல்கிறான்.

  • சாதகனுக்கு இரு பாதைகள் எதிர்கொள்கின்றன.

1) இன்றைய சமூக முன்னேற்றத்திகுப் பரிணாம சக்தியைப் பயன்படுத்துவது.

2) பரிணாம வளர்ச்சியை மனிதனைக் கடந்து எடுத்துச் செல்லுதல்.

முதலாவது வாழ்வு ஆன்மாவால் வாழ்ந்து வளர்வது. அடுத்தது ஆன்மா வாழ்வில் வளர்ந்து அதுவே புவி வாழ்வாவது.

முத்து, வைரம்

முத்துவையும், வைரத்தையும் அறிய முடியாத நிலையில் மனிதன் வாழ்ந்தான். சமூகம் வளர்ந்த பின், அவற்றின் மதிப்பு தெரிந்து போற்றிப் பயன்படுத்தி பெருமைப்பட்டான். விஞ்ஞான அறிவு அதிகமாக வளர்ந்த பொழுது, முத்துவும், வைரமும் இயற்கையில் எப்படி உருவாகின (Process of making them) என அறிந்து, அதன் மூலம் அவனே அவற்றைச் செய்தான். முத்துவும், வைரமும் பிரம்மம் என்ற ஞானம் சித்தித்த ரிஷி முத்துவைக் கையில் எடுத்து வைரமாக மாற்ற முடியும். அது இரஸவாதம். இது The Life Divineஇல் உள்ள உதாரணம், விளக்கம்.

தனித்தன்மை, பொதுத்தன்மை, சாரம் என்பதை அறிவதால் அவற்றைப் பயன்படுத்தவும், செய்யவும், மாற்றவும் முடிகிறது. பயன்படுத்த சமூக அறிவும், செய்வதற்கு விஞ்ஞான அறிவும், மாற்ற ஆன்மீக ஞானமும் தேவை. விஞ்ஞான அறிவு ஆன்மீக அறிவாக மாற insight ,intution, integral experience  உள்ளுணர்வு, ஞானம், பூரண அனுபவம் தேவை. பூரண ஞானம் இரண்டறக் கலப்பதால் வருவது. ஞானம் ரிஷியைக் கடந்த யோகியுடையது. உள்ளுணர்வு அறிவைக் கடந்து ஞானத்தையடையும் வழியில் உள்ளது. அறிவு ஞானமாகு முன் உள்ளுணர்வு insight எழும் வாயில்களை 88 ஆகக் கீழே எழுதியுள்ளேன். கீழேயுள்ள The Life Divine கருத்து எது முழுமையாகப் புரிந்தாலும் insight மின்னலாகத் தெறிக்கும்.