The Psychic
This is a Yoga of spiritual evolution. Starting from Matter the hidden spirit in it gains evolutionary experience by its movement in the process of generating life and collects its spiritual experience at the psychic centre which is tangible only in the Mind. Starting from there, the Yogi goes up and down to complete its experience through the journey.
Evolution is to find the hidden Sat through the dynamism of Chit by the leader of it, viz. Psychic. So He says that the body is the Delight of being tempting the hidden consciousness to find the secret Godhead.
*****
The range of spiritual mind
Higher mind Silence முனி
Illumined mind Light ரிஷி
Intuitive mind Knowledge யோகி
Overmind Knowledge தெய்வம்
unhampered
by Ignorance
- மனத்திற்கும் சத்திய ஜீவியத்திற்கும் இடையே இந்த 4 நிலைகள் உள்ளன. தெய்வீக மனத்திற்கும் மேல் ஒரு பொன் மூடியுள்ளது.
- பொன்மூடியைக் கடந்தவுடன் நிர்வாண நிலையுண்டு.
- மனம் என்பதை மேற்சொன்ன 4 நிலைகளாலும், மனித மனத்தாலும் குறிப்பிடுகிறார்.
- சத்திய ஜீவியம் இரண்டாகப் பிரியும்பொழுது காலத்தைக் கடந்ததும், காலத்திற்குரியதுமாக அவற்றிடையே சத்திய ஜீவியத்தின் சிறு பகுதியாக மனம் உற்பத்தியாகிறது.
- சத்திய ஜீவியத்திற்கு முழுமையுண்டு.
- தன் முழுமையையிழந்து பகுதியான மனத்தை சத்திய ஜீவியம் உற்பத்தி செய்கிறது.
- சிருஷ்டி சத்திலிருந்து ஜடத்தை நோக்கி வரும்பொழுது தன்னை பிரம்மம் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து ஜடமாகிறது.
- சத்திய ஜீவியம் முழுமையை இழந்து மனமாவது அதன் பகுதி. மனத்தைப் பிரிவினையின் கருவியாக உற்பத்தி செய்கிறது.
- ஆன்மாவை (spiritual substance) மனம் பிரித்து வாழ்வையும், ஜடத்தையும் உற்பத்தி செய்கிறது.
- பிரம்மம் சிருஷ்டியின் அடியில் ஜீவனாகவும் மேலே சக்தியாகவும் உள்ளது. ஜீவன் என்றும் முழுமையானது. அதைப் பிரிக்க முடியாது. அதன் ஜீவியத்தையும் பிரிக்க முடியாது. பிரிவது Force சக்தி.
******
யோக விளக்கம்
மனிதன் தன் உயர்ந்த கரணமான ஆன்மாவை உடலிலிருந்து விடுவித்து அதன் ஆதியை அடைவது மோட்சம். ஆன்மா வேறு, உடலும் மனமும் வேறு என ஏற்றுக் கொள்வதால் மேற்கொள்ளும் பாதை மோட்சம்.
உடலும், வாழ்வும், மனமும் ஆன்மாவின் வேறு உருவங்கள், அவற்றுள் ஆன்மா பொதிந்துள்ளது. அது அனுபவம் பெற உடலைத் தாங்கியுள்ளது, விடுவிக்கக் கூடாது. பள்ளிக்குப் படிக்க வந்த பையனிடம் படிப்பை முடிக்கச் சொல்ல வேண்டும், வீட்டுக்கு அனுப்புவது மோட்சம் போலாகும். உடல் உழைப்பதும், உயிர் வாழ்வதும், மனம் சிந்திப்பதும் ஆன்மா அவற்றுள் பிறவியின் அனுபவத்தைப் பெறுவதாகும். அனுபவம் சேருமிடம் சைத்தியப் புருஷன். இவனை உடலில், முதலில் காண முடியாது. மனத்தில் காணலாம். அங்கு கண்டு அவன் வளர்ச்சியை மேலே 4 நிலைகளிலும் கீழே 3 நிலைகளிலும் தொடர்ந்து உடல் சத்திய ஜீவனாகவும், சத்திய ஜீவியத்தில் ஈஸ்வரனாகவும் முடிப்பது ஆன்மீகப் பரிணாமமாகும். இதைப் பல பிறவிகளில் முடிக்க வேண்டும் என்பதால் மறுபிறப்புண்டு.
******
Four types of Knowledge
1. The surface mind gets its knowledge indirectly through the various senses.
2. The subliminal goes beyond the sense organs to get the knowledge of the environment without the medium of the sense organs.
3. Intuition is direct knowledge, not through the sense organs or senses.
4. Final knowledge is the knowledge of the spirit that identifies with the Superconscient.
- ஞானம் knowledge என்பது ஜீவியத்தின் வெளிப்பாடு.
- ஞானம் அடுத்த கட்டத்தில் Light ஒளியாகிறது.
- மீண்டும் Light மனிதனுக்குப் புரியும் அறிவாகும்.
- அவற்றுள் கடைசி கட்டமான அறிவு புலன்கள் மூலம் நாம் பெறும் அறிவு. கண்ணால் பார்ப்பதும், காதால் கேட்பதுமான அறிவு கண், காது என்ற பொறிகளால் நாம் பெறுவது.
- அறிவது மனம். புலன் கருவி. மனம் நேரே அறிய முடியும். அதற்குப் புலன் உதவி அத்தியாவசியமில்லை.
- இன்று நமக்கு ஐம்புலன்களுண்டு. 12 புலன்களிலிருந்து மனம் வளர்ந்ததால் மற்ற புலன்களை நாம் இழந்துவிட்டதாக அன்னை கூறுகிறார்.
- அடிமனம் புலனின்றி நடப்பவற்றை பதிவு செய்து கொள்ளக் கூடியது.
- ஒரு கிரேக்கப் பேராசிரியரிடம் வேலை செய்த படிக்காத பெண்ணுக்கு ஜன்னி வந்தபொழுது அவர் படித்த பாடங்களை அவள் மனப்பாடமாகக் கூறினாள்.
- ஒரு சமஸ்கிருதப் பண்டிதரின் சமையல்காரன் ஸ்லோகங்களை சரளமாகச் சொன்னான்.
- நம் அறிவு மேல் மனத்திற்குரியது. அடுத்தது அடிமனம்.
- நேரடி ஞானம் (intution) யோகியுடையது. அவருக்குப் புலனோ மனமோ இல்லாமல் நேரடியாக அறிய முடியும்.
- முடிவான ஞானம் இறைவனுடன் ஐக்கியம் பெறுவதால் எழுவது.
The 12 Aspects of Spirit
Peace, Silence, Truth, Goodness, Knowledge, Power, Beauty, Love, Joy, Infinity, Eternity, Unity.
Peace – Structure less Existence
Silence – Absence of Thought and Absence of acts
Truth – Objective state of Existence
Goodness – Combination of Truth and Knowledge
Knowledge- Consciousness in the plane of Time
Power – Will in Time
Beauty – Ananda seen by mind
Love – Soul seeing Bliss
Joy – Nerves experiencing ஆனந்தா
Infinity – Beyond Space
Eternity – Beyond Time
Unity – Unity of substance different from union of Consciousness.
*****
Contradiction to Unity
முரண்பாடு
Contradiction முரண்பாடு Matter ஜடம்
Conflict பிணக்கு Life வாழ்வு
Compromise விட்டுக்கொடுப்பது Mind மனம்
Harmony சுமுகம் Supermind சத்திய ஜீவியம்
Union இணைவது Consciousness ஜீவியம்
Unity ஐக்கியம் Sat சத்
பிரம்மம் சிருஷ்டியில் மேலிருந்து கீழே வரும்பொழுது ஏற்படும் பல மாறுதல்களில் மேற்சொன்னதும் ஒன்று. மாறுதல்கள் பல.
1. சத் பல நிலைகளைக் கடந்து ஜடமாகிறது.
2. எதுவுமேயில்லாத பிரம்மம், எப்படியும் விவரிக்க முடியாத பிரம்மம், ஐக்கியமே உருவான பிரம்மம் ஜீவனாக முதல் மாறுகிறது. அது சத் புருஷன்.
3. அந்நிலையில் ஐக்கியம் பாதிக்கப்படுவதில்லை.
4. ஐக்கியம் தன்னைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து முடிவில் ஜடத்தில் முரண்பாடாகிறது.
5. ஜடத்தில் முரண்பாடும், வாழ்வில் பிணக்கும், மனத்தில் விட்டுக் கொடுத்து வாழ்வதும், சத்திய ஜீவியத்தில் சுமுகமும், ஜீவியத்தில் இணைவதும், சத்தில் மீண்டும் ஐக்கியம் பெற்று பரிணாமம் பூர்த்தியாகிறது.
6. ஐக்கியத்தை இழந்து முரண்பாடாவது சிருஷ்டி. கீழே வருவது.
7. முரண்பாடு மீண்டும் ஐக்கியமாவது பரிணாமம்.
8. பிரம்மம் தன்னைத் தன்னுள் மறைத்து ஜடமாகும் பாதை ஐக்கியம் முரண்பாடாவது.
******
பிரம்மம்
| இதுவரை நாமறிந்தது | ஸ்ரீ அரவிந்தம் |
| அடையலாம், விளக்க முடியாது | விளக்கலாம் |
| Indeterminable சிருஷ்டிக்காது | Has self-determination பிரபஞ்ச சிருஷ்டி பிரம்ம சிருஷ்டி |
| Self contained being தனித்து வாழ்வது | Has principles and truths and powers சக்தி உண்டு, வெளிப்படும் |
| Not relative உலகோடு தொடர்புள்ளதன்று | உலகமே பிரம்மம் பிரம்மம் வேறு, உலகம் வேறன்று |
| World is its Lila லீலை | ஆனந்தத்திற்காக லீலை |
| All negating Absolute neti, neti | Is an Absolute that is relative |
| Dwells sufficient to itself on its immobile delight | Seeks delight in emerging from its opposite |
| Solely a Force restoring in inactive sameness | Must have endless powers of its being. Must have endless truths of its own self-awareness |
| Don’t ask, accept creation | Creation is self-manifestation Every possibility is a truth in the Absolute |
One and the Many
The one secret of creation is seeking the joy of Union after consciously separating
பிரிந்தவர் கூடிப் பெறும் இன்பம் பேரின்பம்
——————————————————————————————————————————————
Reason minus sensation is Intuition
——————————————————————————————————————————————-
Brahman Purusha Ishwara
Maya Prakriti Shakti
Finite, relative, One, Silence, mutable, Time, personal, Manifestation, Self and nature, Being, Individual, Form and their opposites are all parts or partial expressions of the ONE.
Time Becoming காலம் இல்லறம்
Timelessness Being கடந்தது துறவறம்
Simultaneous Integrality Being of the Becoming
——————————————————————————————————————————————-
4 Ideas on which Life Divine Rests
1. Reconciling one without a second with சர்வம் பிரம்மம்.
2. God is known in the descent and not in the ascent.
3. The scientist does not know his field as fully as the Sannyasi knows Spirit.
4. Aryan balance.
*******
மனிதன் என்பவனை நாம் மனிதன் என்கிறோம். அவனிடம் நல்ல குணமிருந்தால் அதை பாஸிட்டிவ் எனவும், கெட்ட குணமிருந்தால் நெகட்டிவ் எனவும் கூறுகிறோம், அதனால்,
- மனிதன் இரு பிரிவுகளாக இருப்பதாக அர்த்தமில்லை.
- ஒன்றை விலக்க முடியும் என்றாகாது.
மனிதனைப் பிரிக்க முடியாது, பிரித்து அறியலாம். பிரிக்க முடியாது. அதே போல் பிரம்மம் ஒன்றே, உலகம் ஒன்றே. அவற்றைப் பிரித்து அறியலாம். தனித் தனிப் பாகங்களாகப் பிரிக்க முடியாது. இரண்டும் சேர்ந்த முழுமை பூரண யோகத்தின் அடிப்படை.
அறிவு பிரித்துப் பார்ப்பதைச் செயலால் பிரித்து அவை வேறுவேறு பகுதிகள் என்றால் அது உண்மையில்லை. அதன் அடிப்படையில் நாம் புரிந்து கொள்பவை அனைத்தும் தவறாகும். நமக்கு வேண்டியவை, வேண்டாதவை என உண்டு.
- நாம் வேண்டியதை சேர்த்துக் கொள்கிறோம், வேண்டாததை விலக்குகிறோம்.
- இன்று வேண்டாதது, நாளை வேண்டும் என்பது முக்கியம்.
- எதையும் விலக்கக் கூடாது. முழுமை என்பது அதுவே.
- எந்த அளவுக்கு வேண்டாததைச் சேர்த்துக் கொள்கிறோமோ அந்த அளவுக்கு முழுமையுண்டு.
- எவ்வளவு சீக்கிரம் வேண்டாதது வேண்டியது எனப் புரிகிறதோ, அவ்வளவு சீக்கிரம் முழுமை வரும்.
- வாழ்வில் விலக்குவதை தேடிப் போக வேண்டியது விதியாக செயல்படுவதை அனுபவம் கூறுகிறது.
அவசியமான நேரம், ஆபத்தான நேரம், முக்கிய விஷயம் வந்த நேரம் விலக்க முடியாதவை தங்களை வலியுறுத்துவதைக் காண்பது வாழ்க்கையில் ஸ்ரீ அரவிந்த இரகஸ்யம்.
- தற்காப்புக்காக விலக்க அனுமதியுண்டு.
- அப்பொழுதும் இவை விலக்கப்பட வேண்டியதில்லை என்ற ஞானத்தோடு தற்காப்புக்காக விலக்குவது முறை, சட்டமாகும்.
Sri Aurobindo has realized God in his body .
மோட்சமடைபவன் ஆன்மா அவனைவிட்டுப் பிரிந்து பரமாத்மாவை அடைகிறது. அவனது 4 கரணங்களும் அதை சாதிக்கவில்லை. அப்படிப்பட்ட யோகம் இதுவரை இல்லை.
- ஆன்மா ஆண்டவனை அடைவது மோட்சம்.
- நான்கு கரணங்களும் இறைவனாக மாறுவது திருவுருமாற்றம்.
அப்படி மாற யோகம் செய்தால் மனிதன் மனத்திலிருந்து உயர்ந்து சத்திய ஜீவியத்தை அடைந்து, சத்திய ஜீவியம் அவனுள் எல்லாக் கரணங்களிலும் இறங்கி வந்து நிரம்பும்.
பகவான் சத்திய ஜீவியத்தை எட்டிய பின்னும் சத்திய ஜீவியம் இறங்கி வரும் அளவில் அமையவில்லை. 1926ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி தெய்வீக மனத்தை பகவான் எட்டியது முழுமை பெற்றதால், அது இறங்கி வர ஆரம்பித்து அவர் மனம், வாழ்வு, உடலை, நிரப்பியதை சித்தி தினம் என நாம் தரிசன நாளாகக் கொண்டாடுகிறோம். அன்று அவர் தனிமையை நாடினார். பிறகு சத்திய ஜீவியத்தை அடைந்தார். இது பிரம்மத்துடன் நிரந்தரத் தொடர்புள்ளது. சத்திய ஜீவியம் அவர் உடலில் இறங்கி வந்து நிரப்பியது, அப்படி சித்தித்தது அவருடைய physical consciousness உடலின் ஜீவியத்தில் நடந்தது. அடுத்த கட்டம் உடலின் ஜடப்பொருள். அதைச் செய்தது அன்னை.
வேத ரிஷிகள் இயற்கையோடு இணைந்த வாழ்வை நடத்திய பொழுது தங்கள் ஜடமான உடலும், ஜடமான மலை, நதியும் ஒன்று எனக் கண்டனர். உடலின் அன்னமயப் புருஷன் விழித்து எழுந்ததால் ஏற்பட்ட சித்தியிது. பூரண யோகத்தில் உடலின் சைத்தியப் புருஷன் அதைச் செய்ய வேண்டும். பகவானுக்குப் பின் அன்னை யோகத்தை உடலில் தொடர்ந்தார்.
*****