4. திருவுருமாற்றத்தை முதற்பலனாகத் தருவது சரணாகதி, அது அடக்கத்திற்குரியது. நாம் நல்லது வேண்டும். கெட்டது வேண்டாம் என்கிறோம். ஒரு நாணயத்தின் தலை மட்டும் வேண்டும் என்றால் நாணயமில்லை. தங்க சுரங்கத்தில் தங்கம் கனிப்பொருளாக இருக்கிறது. கனிப்பொருளை சுத்தம் செய்து, உருக்கி தங்கம் பெறவேண்டும். தங்கம் வேண்டும், கனிப்பொருள் வேண்டாம், எனில் தங்கமில்லை. ஞானம், அஞ்ஞானமானதால், இனி ஞானம் அஞ்ஞானத்திலிருந்து எழ வேண்டும். அஞ்ஞானத்தை ஒதுக்கினால் எதிலிருந்து ஞானம் வரும்? ஞானம் வருவது தடைப்படும். ஏழ்மையை ஒதுக்கினால் செல்வம் எப்படி ஒதுக்கப்படும் எனலாம். ஏழை பணக்காரனாகாவிட்டால் நாடு ஏழையாக இருக்கும்.
5. வளராத ஆன்மா, வளரும் ஆன்மாவாக மாறியது. அதுவே சைத்திய புருஷன். சத் என்ற அகம் சத்தியம் என்ற புறமான பொழுது ஆன்மா அவற்றிடையே ஏற்பட்டது. அந்த ஆன்மாவுக்கு ஆதி, அந்தம், மாற்றம், வளர்ச்சியில்லை என்பது இந்திய மரபு. பிறப்பிலேற்பட்ட புத்தி வளராது, கர்மம் அனுபவிக்கப்பட வேண்டியது போன்றவை இவை. சச்சிதானந்தம் உலகமாக மாறி, பரிணாமத்தால் மீண்டும் சச்சிதானந்தமாகும்பொழுது ஆனந்தம் வளர்கிறது (Bliss becomes Delight) ஆன்மா வளர்கிறது என்பது ஸ்ரீ அரவிந்தம். சத், சித், ஆனந்தம் மூன்றும் முதலிலிருந்ததைவிட உயர்ந்ததாகின்றன. சிருஷ்டி, பரிணாமம் என்ற பாதைகளில் சென்ற பின் வளர்ச்சியுண்டு. பரிணாமத்தைப் பற்றி மரபு பேசுவதால் அவர்கள் வளராது என்றனர். பிரம்மம் எண்ணத்தால் உலகை சிருஷ்டித்தது என்பதால் எண்ணம் பிரம்மத்தை எட்டும் என்கிறார்.
5.எண்ணமே கெட்டது என்கிறார் அன்னை.
உடல் இருளாலானது. இருள் தீமை. எண்ணம் உடலில் எழுவதால் அது இருளின் வெளிப்பாடு. அதனால் எண்ணமே தீமை என்கிறார். அத்துடன் எண்ணம் பிரம்மத்தை எட்டும் என மரபுக்கு எதிராகவும் பேசுகிறார். சிருஷ்டியில் இரு அம்சங்களுண்டு.
- சத்திய ஜீவியம் சத் என்பதன் எண்ணத்தால் (Real Idea) உலகை சிருஷ்டித்தது.
- பிரம்மம் தன் எண்ணத்தால், இச்சையால் உலகை சிருஷ்டித்தது என்கிறார் (Self-Conception).
- குறைய முடியாததும், வளர முடியாததும் பிரம்மம்.
குறைய முடியாதது பிரம்மம் என்பதை அக்ஷய பாத்திரம் மூலம் அறியலாம். வளர முடியாது என்றால் எப்படிப் புரியும். பூவுலகம் சலனத்திற்கு உட்பட்டது. அது சலனத்தால் எடுப்பதால் குறையும், நிறையும். பிரம்மம் சலனத்தால் பாதிக்கப்படாதது என்பதால் குறைவும், நிறைவும் அதற்கில்லை. பொருத்தமான உதாரணம் சொல்வது சிரமம். மகாத்மா காந்தி, ஐன்ஸ்டீன் போன்றவர்களை உலகம் தாழ்த்தவோ, உயர்த்தவோ முடியாது. குறை சொல்வதால் அவர்கள் குறையப் போவதில்லை. நோபல் பரிசால் உயரப் போவதில்லை. அவர்கள் மனித நிலையைக் கடந்தவர் என்பதுபோல், பிரம்மம் மனித நிலையைக் கடந்தது. பிரம்மம் குறையாது, வளராது என்ற கருத்தை மனம் கணிதத்தில் ஏற்பதுபோல் ஏற்க வேண்டும். மேலும் ஜடத்திலும் அதை ஏற்பது அவசியம். முக்கியமாகப் பணம் செலவு செய்தால் பெருகும் என்ற சொந்த அனுபவம் பிரம்மத்தை ஜடத்தில் அறிய உதவும். பணம் செலவு செய்தால் பெருகும் என்ற அனுபவம் தருவது பணமில்லை, பிரம்மம். பிரம்மத்தை மனிதன் திட்டவட்டமாக, தெளிவாக, ஐயம் திரிபு அற ஜடத்தில் அறிவதற்கு இவ்வனுபவம் உதவும்.
பெருகும் பணம் பிரம்ம சித்தி.
ஸ்ரீ அரவிந்தர் காயத்ரி மந்திரம் எழுதியுள்ளார். வேறு சில மந்திரங்களையும் பல சமயங்களில் எழுதினாலும் ஸ்ரீ அரவிந்தர், அன்னை என்பவையே சக்தி வாய்ந்த மந்திரங்கள் என்கிறார்.
சாவித்திரியிலும், Life Divineலும் ஒவ்வொரு வாக்கியமும் மந்திர சக்தி வாய்ந்தவை என்பதை சோதனை செய்தும் பார்க்கலாம். மந்திரம் போன்ற சொற்களே இந்நூல்களில் ஏராளமானவையுண்டு. உதாரணமாக,
There is a Silence behind Silence.
Body rules the mind is a minor truth.
Mind rules the body is a major truth.
This seems to be the complete process of creation.
The taste of Ignorance is over.
Ignorance is the greatest product of creation.
At the gates of the Transcendent stands the Self pure, Silent,immobile.
பகவான் எழுதியவற்றை அவர் எழுதியபடி புரிந்து கொள்வது ஸ்ரீ அரவிந்தர் நேரடியாக தீட்சையளிக்கும் மந்த்ரோபதேசமாகும். நாம் நூலைப் படிக்கும்பொழுது அவர் கருத்துகளைத் திரட்டி மனதில் ஒன்று சேர்க்கிறோம். பகவான் Life Divine எழுத ஆரம்பிக்கும்பொழுது அவர் மனதில் ஓர் எண்ணம் இருந்தது. நாம் நம் மனதில் அவருடைய பல எண்ணங்களைத் திரட்டி ஒன்றாக்குவதுபோல் அவர் தம் மனதிலிருந்த ஒரு எண்ணத்தைப் பல பாகங்களாக்கி நூலை எழுதினார். கொஞ்சம் கொஞ்சமாக நாம் அதை அடையலாம். அந்த ஓர் எண்ணம்,
பிரபஞ்சத்தை சிருஷ்டித்த மந்திரம்.
நூலில் நான்கு இடங்களில் அதை நான்கு பாகமாகப் பிரித்து நூலின் ஆரம்பத்திலும், இரண்டாம் பாகத்தின் முன்னும் இரண்டாம் புத்தகத்தின் இரு பாகங்களுக்கு முன்னும் ஸ்ரீ அரவிந்தர் எழுதியுள்ளார். அவை நூல் எழுந்த மூலம். விவரமாகப் புரிந்து மனதில் ஏற்றால் அந்த நான்கு பகுதிகளும் எண்ணத்தில் கனிந்து உணர்ச்சியை ஆட்கொண்டு ஜீவனைத் தொடும். நூல் 1070 பக்கங்களில் சுமார் 1000 முதல் 1500 கருத்துகள் உள்ளன, 56 அத்தியாயங்கள் 3 பகுதிகளாக எழுதப்பட்டன. இவற்றை முழுவதும் மனம் அறிந்தால் ஒருவர் multiple genius பல துறைகளில் மேதையாவார். இந்த இரகஸ்யம் ஓரளவு வெளிப்படும் வகையில் நூலின் அமைப்பை சுருக்கமாகவோ, விளக்கமாகவோ கூறலாம். சில கட்டுரைகளில் சுருக்கமாகக் கூறியவற்றை இங்கு முடிந்தவரை விளக்கமாகக் கூறுவது நோக்கம்.
அறிவுக்குத் தடையான அம்சங்கள் சிக்கலாக மாறுகின்றன. அந்த சிக்கல்கள் பலவற்றை அவிழ்க்கும் வகையாக மேற்கூறிய குறிக்கோளை எட்ட முனைவது கட்டுரையின் நோக்கம்.
வாசகர் நூலைப் படிக்க ஆரம்பித்தவுடன் முதல் அனுபவம் முதலிரண்டு பக்கங்களில் என்ன எழுதுகிறார் என்று புரியவில்லை என்பது. அத்துடன் மனம் களைத்து சோர்ந்து கொட்டாவி வரும். பல கொட்டாவிகள் வந்தால் நூலை மூடி வைத்தால் பல மாதங்கள் Life Divine நினைவு வராது. பெரும்பாலோர்க்கு இதுவே ஆரம்பம். அநேகருக்கு முடிவும் இதுவே. ஆங்கிலம் அற்புதமாக இருக்கிறது என்பது அனைவருடைய அனுபவம். சொல் நயம் செப்பலோசையாக இருக்கும். படிக்க அளவு கடந்த ஆசையும், தொட மறுக்கும் உணர்வும் வாசகர்கள் அனுபவம். ஆங்கிலம் தாய் மொழியானவர் ஒருவர், இதுபோல் நினைத்தபொழுது நான் சித் சக்தி என்ற அத்தியாயத்தைப் படித்துக் கொண்டிருந்தேன். ” நீங்கள் சொல்வது சரி. ஆனால் அத்தியாயம் என்ன கூறுகிறது, என்ன வாதங்கள், எப்படி எழுதப்பட்டிருக்கின்றன என அறிந்தால் நாவல் படிப்பதுபோல் (Page turner) கடினமான இதே அத்தியாயமிருக்கும்” என்றேன்.
அத்துடன் அந்த அத்தியாயம் விளக்குவதையும், வாதங்கள் வரிசைப்பட்டிருப்பதையும், அவற்றிற்கெல்லாம் சிகரமாக விரயம் சுருக்கமாக விளக்கப்பட்டிருப்பதையும் அவர் திருப்திப்படும்வரை சொன்னேன். அடுத்த ஆண்டு அவர் தம் நாட்டிலிருந்தபொழுது தினமும் காலையில் ஒரு அத்தியாயம் படிப்பதாகச் சொன்னார்.அப்படி இந்த 10ஆம் அத்தியாயம் வந்தபொழுது Pageturnerஆக இருந்தது எனவும் கூறினார்.
ஆங்கிலம் தடை எனில் நூலைத் தமிழில் எழுதினால் மொழியின் தடையிருக்காது. அத்தியாயங்களை பகவான் அமைத்த பாங்கை மட்டும் இக்கட்டுரையில் எழுத முற்படுகிறேன். இக்கட்டுரை பயன்பட நூலை பலமுறை படித்திருக்க வேண்டும். என்றாலும் முதலில் படிப்பவர் மனதிலும் ஓரளவு படும் வகையில் எழுத முயல்கிறேன். அதற்கு முன் பகவான் உலகுக்கு அருளிய புதுக் கருத்துகளை எழுதுகிறேன். நூலின் அமைப்பு இக்கருத்துகளை வெளிப்படுத்துவதாக அமைவதால் இவற்றை அறிவது உதவும்.
- இறைவன் ஆனந்தம் தேடி உலகை சிருஷ்டித்தான்.
- தேடுவது அவன் திறமை, நாடுவது அவன் உரிமை.
- கண்டுபிடிப்பது ஆனந்தம்.
- மறைந்ததைக் காண்பது ஆனந்தம்.
- தானே தன்னுள் மறைந்து, மறைந்ததை மறந்து, மீண்டும் நினைவு வருவது ஆனந்தம். நினைவைத் தொடர்ந்து தன்னை மீண்டும் கண்டுபிடிப்பது பேரானந்தம்.
- இது லீலைக்கு ஸ்ரீ அரவிந்தர் அளிக்கும் விளக்கம்.
- மறைவது சிருஷ்டி.
- கண்டுபிடிப்பது பரிணாமம்.
- காலத்தைக் கடந்த அனந்தமான பிரம்மம் தன்னை மறைக்க தன் அம்சங்களை ஒவ்வொன்றாய் இழக்கிறது.
சிருஷ்டிக்கு அப்பாற்பட்ட பிரம்மம் தன் நிலையை இழந்து சிருஷ்டிக்குள் வருவது முதல் நிலை.
- அம்முதல் நிலை சத் என்ற சத் புருஷன், Self-Conscious Being
- இதை Being,Existence சத், ஜீவன் எனவும் கூறுகிறோம்.
- ஒன்றை எதிரெதிரான இரண்டாகப் பிரித்து ஒன்றை மற்றதினுடன் இணைத்து முழுமையை அடைய இயற்கை பின்பற்றும் முறை சிருஷ்டியின் ஆரம்பத்தில் ஆரம்பிக்கிறது.
- பிரம்மம் தன்னை சத், அசத் எனப் பிரித்து சிருஷ்டியை ஆரம்பிக்கிறது.
- Being வந்தவுடன் Non-Being வரும்; Existence வந்தவுடன் Non-Existence வரும். அவற்றையே சத், அசத் என்கிறோம்.
- சத் என்ற சத் புருஷன் சச்சிதானந்தமாகும்.
- பிரம்மத்திற்கு சத்தாக வேண்டிய அவசியமில்லை என்பதுபோல் சத்திற்கு சித்தாக வேண்டிய அவசியமில்லை. சித்திற்கு ஆனந்தமாகும் அவசியமில்லை. அவசியமில்லாததை ஏற்பது சுதந்திரத்தை இழப்பது, அதுவே மறையும் பாதை.
- சத் சித் ஆக மாறி சித் ஆனந்தமாக மாறுவது சச்சிதானந்தம் ஏற்படுவது.
- வேறு வகையான மாற்றமும் உண்டு. இதை அகம், புறம் என்போம்.
- சத் என்ற அகம் சத்தியம் என்ற புறமாகும்.
- சத் என்ற அகத்தையும், சத்தியம் என்ற புறத்தையும் இணைப்பது ஆன்மா Spirit எனப்படும். இதை Spiritual substance என்கிறார்.
- பிரபஞ்சமும், உலகமும் இந்த substanceஆல் ஆனவை.
- மேல் லோகங்களில் Spiritual substance ஆக இருப்பது கீழ் லோகங்களில் material substanceஆக மனத்தால் மாறுகிறது.
- இந்த spirit ஆன்மா, என்பது ஆதியில் பிரம்மம்.
- பிரம்மம் மறைவது எனில் Spirit மறைவதாகும்.
- Spirit ஆன்மா தன்னுள் மறைந்து Matter ஜடமாகிறது.
- Spirit அதுபோல் மறைவதன் முன் 12 அம்சங்களாகப் பிரிந்து தலைகீழ்மாறி எதிராக உருவம் பெற்று சிருஷ்டி involutionயைப் பூர்த்தி செய்கிறது.
- இதையே சச்சிதானந்தம் உலகமாக மாறுகிறது என்கிறோம்.அதுவே சிருஷ்டி.
- சத், சித், ஆனந்தம், சத்திய ஜீவியம் தலைகீழே மாறி ஜடம், சைத்திய புருஷன், வாழ்வு, மனமாக மாறுவதும் ஆன்மாவின் 12 அம்சங்கள் தலைகீழே மாறுவதும் ஒன்றே. இருவகையாக விளக்கப்படுவது.
- சத் சித்தாக மாறி ஆனந்தமாக மாறுவது ஒரு மாற்றம். சத் என்ற அகம் சத்தியம் என்ற புறமாக மாறுவது அடுத்தவகை மாற்றம்.
- சத் சத்தியமாகவும், சித் ஞானமாகவும், ஆனந்தம் அனந்தமாகவும் மாறினால் சத்தியம் ஞானம் அனந்தம் என்பது சத்திய ஜீவியமாகும். இவை அகம் புறமாகும் மாற்றமாகும்.
- சத், சித், ஆனந்தம் என்பவை ஆன்மாவாக மாறும்பொழுது ஆன்மாவின் அம்சங்கள் 12 என்றோம். சத் என்பது ஐக்கியம், சத்தியம், நன்மை எனவும், சித் என்பது ஞானம், உறுதி எனவும், ஆனந்தம் என்பது அழகு, அன்பு, சந்தோஷம் எனவும் மாறுகின்றன.
- ஆன்மாவுக்கு அடிப்படையில் 4 அம்சங்கள் உள்ளன. அவை மௌனம், சாந்தி, அனந்தம், காலத்தைக் கடந்த நிலை.
- இந்த 12 அம்சங்களும் எதிராக மாறுவது சிருஷ்டி.
| Silence * Activity | Peace * Movement | Unity * Division | Truth * Falsehood |
| Goodness * Evil | Knowledge * Ignorance | Will * Weakness | Beauty * Ugliness |
| Love * Hatred | Joy * Pain | Infinite * Finite | Timeless * Time |
| மௌனம் * சப்தம் | சாந்தி * சலனம் | ஐக்கியம் * பிரிவினை | சத்தியம் * பொய்மை |
| நன்மை * தீமை | உறுதி * உறுதியின்மை | அழகு * விகாரம் | அன்பு * வெறுப்பு |
| சந்தோஷம் * வலி | அனந்தம் * அந்தம் | காலத்தைக் கடந்த நிலை * காலம் |