- எப்படிப் படிப்படியாக தங்கள் நிலையை இழந்து எதிராக மாறுகின்றன என்பது சிருஷ்டியின் பல்வேறு நிலைகள்.
- சிருஷ்டியில் 12 அம்சங்கள் மாறுவதும் ஒரே சமயத்தில் நடந்தாலும் சிருஷ்டியை விளக்க ரிஷிகளும், ஸ்ரீ அரவிந்தரும் பயன்படுத்திய அம்சம், Knowledge எதிராக Ignorance ஆக மாறுவது ஞானம் அஞ்ஞானமாக மாறுவது.
- இதுவரை மனிதன் பெற்றிருந்த பெரிய கருவி மனம்.
- மனம் பகுக்கும் கருவி, பகுதியானது. இதனால் முழுமையை அடைய முடியாது.
- ரிஷிகள் பிரம்மத்தை மனத்தால் பார்க்க முயன்றபொழுது முடியவில்லை என்பதால் சமாதியில் பிரம்மத்தைக் கண்டனர். பிரம்மத்தின் பகுதியைக் கண்டனர்.
- கண்டது பகுதி, பார்த்தது மனம், சமாதியில் (unconscious) பார்த்தனர்.
- அதனால் காண முடியும், விளக்க முடியாது என்றனர்.
- சத்திய ஜீவியம் முழுமை. முதல் ஸ்ரீ அரவிந்தருக்கு சித்தித்தது.
- சத்திய ஜீவியத்தில் பிரம்மம் என்றும் நின்று நிலை பெறும்.
- சத்திய ஜீவியத்தால் பிரம்மத்தை முழுமையாகக் காணலாம்.
- விழிப்பில் காணலாம்.
- அதனால் விளக்கலாம்.
- அப்படி விளக்கி எழுதப்பட்ட நூல் Life Divine.
- காலம், இடம் என்பவை ஜீவியத்தின் அகம், புறம்.
- ஜீவியத்தின் அகமான காலம், புறமான இடமாகிறது.
- காலமும், இடமும் உலகம் செயல்பட அவசியம்.
- பரமாத்மா ஜீவாத்மாவானதும், புருஷன் பிரகிருதியானதும், ஒன்று பலவாக மாறியதும் சிருஷ்டி. அது எப்படி நடந்தது என நாம் கேட்கக் கூடாது என்பது இதுவரையுள்ள நிலை.
- இதை double opening என்கிறார் ஸ்ரீ அரவிந்தர். பரமாத்மா இரண்டாகப் பிரிந்து ஜீவாத்மாவாகி, மீண்டும் ஒன்றாவது சிருஷ்டியின் இரகஸ்யம் என்பது ஸ்ரீ அரவிந்தம்
- பரமாத்மா என்பது ஜீவன் Being,Purusha அதன் ஜீவியம் சித் எனப்படும். சித் தன்னுள்ளிருந்து சக்தியை வெளிப்படுத்துகிறது. சக்தி பிரகிருதி எனப்படும். மனம் என்ற பகுக்கும் கருவி சக்தியைப் பகுப்பதால் பல ஜீவாத்மாக்கள் பிரகிருதியில் எழுகின்றனர். பலவாகத் தோன்றினாலும் ஜீவாத்மா என்பது ஒன்றே.
- பரமாத்மா ஜீவாத்மாவாக மாறுவது அகந்தை ஏற்பட்ட வழி.
- பரமாத்மா, ஜீவாத்மா, அகந்தை என்பவை சத்திய ஜீவியத்தின் 3 நிலைகள்.
- சத்திய ஜீவியத்தில் காலத்தைக் கடந்த பகுதி மேலேயும், காலத்துள் உள்ள பகுதி கீழேயும் உள்ளது.
- இவற்றிடையே மனம் ஏற்பட்டது.
- மனத்திற்கு ஞானம்; உறுதி என இரு அம்சங்கள் உள்ளன.
- ஞானம் உறுதிமேல் செயல்பட்டால் சக்தி வெளிப்பட்டு வாழ்வு என்ற லோகம் உற்பத்தியாகிறது. இப்பொழுது ஞானம் தன்னை ஓரளவு இழக்கிறது.
- தன்னை ஓரளவு இழந்த ஞானம், முழுவதும் இழந்துவிட்டால் வாழ்வு ஜடமாகும். இதையே வேறு வகையாகவும் கூறலாம். மனம் புலன்வழி ஆன்மாவைக் கண்டால், மனத்தின் புலன்கட்கு ஆன்மா ஜடமாகத் தெரிகிறது.
- ஜடம் உற்பத்தியாவதை மேலும் ஒரு வகையாக விளக்கலாம். இருசக்திகள் சந்தித்தால் ரூபம் ஏற்படுகிறது. ரூபம் சலனமிழந்தால் ஜடம் ஏற்படுகிறது.
- இது ஆன்மா முதல் ஜடம்வரை சிருஷ்டியின் பாதை.
- இனி பரிணாமம். அது ஜடத்தில் ஆரம்பித்து சத் வரை உயர்ந்து எழுவது.
- ஆன்மாவுக்கு ஆதியில்லை, அந்தமில்லை, வளர்ச்சியில்லை மாற்றமில்லை என்பது மரபு. சிருஷ்டியிலும், பரிணாமத்திலும் ஆன்மா வளர்கிறது என்பது ஸ்ரீ அரவிந்தம். பூரண யோகத்தை ஆன்மீகப் பரிணாம யோகம் என்கிறார்.
- ஆன்மா என்பது புருஷன், சாட்சி என்பது மரபு.
- பிரகிருதி என்ற உலகத்திற்கு ஆன்மா உண்டு என்பதும், பிரகிருதியின் உலக அனுபவ சாரம் அதன் ஆன்மாவில் சேருகிறது எனவும், சேர்வது தொடர்வதால் ஆன்மா வளர்கிறது எனவும், அந்த ஆன்மாவுக்கு சைத்திய புருஷன் எனவும், அது மனிதனில் சைத்திய புருஷனாக ஆரம்பித்து மேலே போய் சத்திய ஜீவியத்தில் ஈஸ்வரனாகவும், கீழே போய் உடல் சத்திய ஜீவனாகவும் மாறுவது என்பது ஸ்ரீ அரவிந்தம்.
- இந்த ஆன்மீகப் பரிணாமத்தை நாடி ஒவ்வொரு ஜீவாத்மாவும் உடலைத் தாங்கி உலகில் உலவி வருகின்றன.
- உடலின் கடமையும், திறமையும் முடிந்தவுடன், மறு உடலை நாடுவது மறு பிறப்பு.
- ஆன்மீகப் பரிணாமம் நெடிய யாத்திரை என்பதால் பல ஆயிரம் உடல்கள் தேவைப்படுவதால் மறுபிறப்பு இன்றியமையாததாகிறது.
- வளரும் ஆன்மா புது உடலைத் தேடுவதற்கு பதிலாக, வளர்ந்த ஆத்மாவுக்கேற்ப உடல் வளர்வது சத்திய ஜீவன் பிறப்பதாகும். அதுவே சத்திய ஜீவியத் திருவுருமாற்றம்.
- அஞ்ஞானம் என்பது அசித்தி, அவித்யாயில்லை, ஞானத்தின் மறுஉருவம்.
- முரண்பாடு என்பது முரணானதில்லை. உடன்பாட்டின் எதிர்ப்புறம்.
- அகந்தை என்பது மனிதனில்லை, ஜீவனில்லை. பரமாத்மாவிலிருந்து பிரிந்த நிலை.
- சிருஷ்டி என்பது கடவுளால் ஏற்பட்டதில்லை, கடவுளே சிருஷ்டியாக மாறினார்.
- சிருஷ்டித்தது பிரம்மாயில்லை, சத்திய ஜீவியம்.
- இந்த ஞானம் அறிவால் பெறப்படுவதில்லை. அனுபவத்தால் பெறக்கூடியது.
- உலகில் தீமை படைக்கப்படவில்லை. பிரிந்து நிற்கும் அகந்தை பிரிந்து நிற்பது தீமையாகத் தோன்றுகிறது.
மேற்சொன்னவை ஸ்ரீ அரவிந்தத்திற்குரிய புதிய நிலைகள். பகவான் இவற்றை விளக்க முயன்றால் நாம் புரியவில்லை என்கிறோம். இதைத்தான் விளக்குகிறார் என்று தெரிந்தவுடன் புரியும். அது போன்ற சிக்கல்கள் ஆயிரம். சில உதாரணங்களை மட்டும் கூறுகிறேன். புரியாத இடம் இதுபோன்ற விளக்கத்தால் புரிந்தால், அளவு கடந்த சக்தி மனத்துள் எழும். அது மந்திர சக்தி.
பிரபஞ்ச சிருஷ்டியைப் பற்றிய அத்தியாயத்தில் சிருஷ்டியின் இரகஸ்யத்தைப் பற்றி விளக்கமாகக் கூறியபின், அடுத்த பாராவில் முதல் வரியில் பிரம்மம் நமக்கு சச்சிதானந்தமாகத் தெரிகிறது என்று ஆரம்பிக்கிறார். சிருஷ்டிக்கும் இதற்கும் தொடர்பு தெரியவில்லை.
தொடர்பும் ஏற்படுத்த முடியாது தவிப்போம். இந்த அத்தியாயத்தின் கடைசி பக்கங்களில் திடீரென ஒரு பாராவில் இங்கு நாம் அஞ்ஞானத்தைப் பற்றி அறிவது அவசியம் என்கிறார். சிருஷ்டிக்கும் அஞ்ஞானத்திற்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியாது. சத்திய ஜீவியத்தைப் பற்றிய மூன்று அத்தியாயங்களுக்குப் பின் மனத்தைப் பற்றிய அத்தியாயத்திற்கு முன் தெய்வீக ஆத்மா என்று ஒரு அத்தியாயம். இதற்கு முன் அத்தியாயத்துடனோ, பின் அத்தியாயத்துடனோ இந்த அத்தியாயத்திற்கு என்ன தொடர்பு என்றால் சிந்தனைக்கு எட்டாது. சிந்தனை ஆரம்பிக்காது.
அதிகமாகப் படித்த பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் பகவான் தரிசனம் பெற்றவர். பகவான் நூல்களைப் படித்து விட்டு தனித்தனியாகத் திட்டு திட்டாகப் புரிகிறது. மொத்தமாகப் புரியவில்லை என்றார்.
இலக்கியப் பேராசிரியர் ஒருவர் பகவானைப் பற்றிப் பல நூல்களை எழுதியவர். தம் ஆன்மீக சித்திகள் நம் பரம்பரையில் வந்த வழிக்குரியவை என ஸ்ரீ அரவிந்தர் காண முயல்கிறார் என்று கூறினார். பரம்பரை பகுதி. ஸ்ரீ அரவிந்தர் முழுமை. Life Divine முழுவதும் எப்படி ஸ்ரீ அரவிந்தம் பரம்பரையிலிருந்து முழுவதுமாக மாறுபட்டது என எழுதியுள்ளார்.
சட்டம் சக்தி வாய்ந்தது. ஆனால் நாம் போட்டது சட்டம். நாம் சட்டத்தை மாற்றலாம். கர்மம் சக்தியின் விளைவு. சக்தி ஜீவனுக்குட்பட்டது. சக்திக்குக் கட்டுப்பட்ட மனிதனை கர்மம் ஆளும். ஜீவனை கர்மம் ஆளமுடியாது.
நாட்டில் நிர்வாகம் சட்டத்திற்குக் கட்டுப்பட்டது. அரசியல்வாதிக்குக் கட்டுப்பட்டதல்ல. காங்கிரஸ், DMK அரசில் கலெக்டர் கலெக்டராக இருப்பாரே தவிர காங்கிரஸ் கலெக்டர், DMK கலெக்டர் என்பதில்லை. நீதிபதியும், எலக்ஷன் கமிஷனரும் சட்டத்திற்குட்பட்டவர்கள். மந்திரிகளுக்கு அடங்கியவரல்ல என்ற விபரங்கள் இன்று தெரிவதுபோல் அன்று தெரியாது. Life Divineஐப் படிப்பதில் புரியாதவை என்பவற்றைவிட குழப்பமானவை என்பவையுண்டு.
ஒரு சிக்கலைக் கருதுவோம்.
P.174ல் ஜடம் என்பது ஆழ்மனத்தின் உறுதி என ஒரு விளக்கம் உள்ளது. முதலிரண்டு பாராக்களில் இது விளக்கப்பட்டு முடிவான கருத்தாக எழுதப்பட்டுள்ளது. பத்து, இருபது முறை படித்தபின் எதுவும் புரியவில்லை. இதெல்லாம் தத்துவம். நம் சிற்றறிவுக்கு எட்டாது என்று தோன்றுகிறது. அது பொதுவாக சரி. அதுவே முடிவல்ல. இதுபோல் புரியாத இடங்களில் பேப்பரும் பென்சிலும் எடுத்து குறிப்பு எடுத்து நிதானமாகப் படிக்க வேண்டும் என்கிறார் அன்னை. அதை செய்து ஊன்றி கவனித்தால், ஆசிரியர் மனம் எண்ணத்தை எப்படிக் கருதுகிறது என எழுதியவர் கோணத்தில் பார்த்தால் உதவும். அதையும் கீழே செய்து பார்ப்போம்.
1. மனம் சத்திய ஜீவியத்தில் எழுவதால் அதன் ஆதி இறைவன் என முன் அத்தியாயம் கூறியதை முதல் வரி மீண்டும் கூறுகிறது.
2. கீழ் லோகத்திற்குரிய மூன்று கரணங்களான உடல், வாழ்வு, மனம் ஆகியவற்றுள் மனம் உச்சியிலுள்ளது.
3. மனம் தெய்வசக்தியின் சிறப்பான செயல் அல்லது மேல் லோகத்தில் கடைசி நிலையிலுள்ள கரணம் மனம் எனப்படும்.
4. மனம் புருஷனையும், பிரகிருதியையும் பிரித்துக் காட்ட வல்லது. புருஷனும் பிரகிருதியும் ஒன்றானவை. தனித்தனியானவையல்ல. ஆனால் பிரித்துப் பார்க்க விரும்பினால் மனம் பிரித்துக் காட்டும் திறன் உடையது. ஒரு கம்பெனியின் கணக்குகளை மட்டும் தனியாக எடுத்துப் பார்த்தால் விளங்கும். அதனால் கம்பெனி வேறு, கணக்கு வேறு என்றாகாது.
5. ஆத்மா அஞ்ஞானத்திலிருப்பதால் மனம் பிரித்துக் காட்டுவதை பிரிந்தவை என தவறாக நாம் நினைக்கிறோம்.
6. சத்திய ஜீவியத்திலிருந்து மனம் பிரியாதவரை மனம் அஞ்ஞானத்தின் கருவியாகாது. பிரிக்கும் மனத்தின் திறன் ஞானத்திற்கே பயன்படும்.
7. மனம் பிரபஞ்சத்தில் சிருஷ்டிக்கும் கருவியாகிறது.
8. மனத்தின் இத்திறனை நாம் அறிவதில்லை.
9. மனம் புரிந்து கொள்ளும் கருவி. உலகில் நடப்பவற்றை நமக்குப் புரியவைக்கும் கருவி என நாம் நினைக்கிறோம்.
10. ஜடத்தில் உற்பத்தியான சக்திகளை அதன் மனத்தின் ஆரம்பமாகக் கருதுகிறோம்.
11. சமீபகாலமாக நடக்கும் சோதனைகள் மூலம் இந்த சக்தியுள் மனம் மறைந்துள்ளது என நாம் அறிகிறோம்.
12. மறைந்துள்ள இம்மனம் ஜடத்தினின்று தானே வெளிவரும்.
13.முதலில் அது உயிராகவும், முடிவில் மனமாகவும் வெளிவரும் என அறிகிறோம்.
14. முதலில் வருவது தாவரங்களுக்குரிய உணர்வு.
15. முடிவில் விலங்குகளிலும், மனிதனிலும் வெளிப்படும் மனம் வெளிவரும்.
16. ஏற்கனவே ஜடம் என்பது சக்தியின் உருவம் (Matter is only substance of Force) என நாம் முன்னொரு அத்தியாயத்தில் கண்டோம்.
17.எனவே ஜட சக்தி என்பது சக்தி உருவமான மனம்(Energyform of Mind)எனப் புரிகிறது.
18. Material force is,in fact,a subconscious operation of will.. ஜடசக்தி என்பது ஆழ்மனத்தின் உறுதி செயல்படுவதாகும்.
Matter is substance of Force.
Mind is Energy-form.
Force is Energy.
Therefore Matter is Mind.
ஜடம் என்பது சக்தி (Force).
மனம் என்பது சக்தியின் ரூபம் (Energy-Form).
Force= Energyஎனவே ஜடம் என்பது மனம்.
மனம் விழிப்பாக இருந்தால் மனமாகும்.
மனம் மறைந்திருந்தால் ஆழ்மனம் என்கிறோம்.
மனம் மறைந்திருப்பது ஜடமாகும்.
ஜடம் என்பது ஆழ்மனத்தின் உறுதி செயல்படுவதாகும்.
இது தத்துவமான விளக்கம்.
நடைமுறை உதாரணம்,
- வாயில் சொன்னால் மனம் உள்ளவன் கேட்டு அதன்படி நடக்கிறான்.
- மனம் இல்லாதவன் சொல்லுக்கு அசையமாட்டான்.
- மனம் இல்லாதவன் வெறும் ஜடம், உடல்.
- மனம் சொல்லாக வெளிப்படாமல் செயலாக வெளிப்பட்டு ஓங்கி ஒரு அறை கொடுத்தால், சொல்லுக்கு அசையாதவன் செயலான அடிக்குப் பணிவான்.
- நல்லவனுக்கு ஒரு சொல். நல்ல மாட்டுக்கு ஒரு அடி என்பது பழமொழி.
- ஜடம் மனம் என்பது அடிபட்ட பின் உத்தரவை ஏற்பவனைக் காட்டுகிறது.
******
இதயத்தின் எழுச்சி
ஆதி முதல் மனிதன் இறைவனைத் தேடுகிறான். இறைவன் ஜோதியாகவும், ஆனந்தமாகவும், அமரத்துவமாகவுமானவன். ஆனால் உலகில் மனிதன் இவற்றிற்கு எதிரான இருளையும், வலியையும், மரணத்தையுமே காண்கிறான். உடன்பாட்டை இறைவன் முரண்பாடாக காட்டுவது சிருஷ்டி, அதன் இரகஸ்யமும் கூட, இருளான மனமாகிய ஜடம் ஜோதியான மனமாவது பரிணாமம் என்று வேதாந்தம் கூறுவதை நாம் அடுத்த கட்டத்திற்கு எடுத்துப் போய் சத்திய ஜீவன் பிறந்து உலகில் மனித வாழ்வு, தெய்வீக வாழ்வாகும் என்பது அறிவுக்குப் பொருத்தமானதே.
நாத்திகனின் மறுப்பு.
ஜடம் ஜடமே என்பதை நாம் ஏற்க முடியாது. ஜடமும் ஆன்மாவும் ஒன்றே என்பதே பொருத்தம். இது முடியுமா எனப் பார்ப்போம். எண்ணத்தின் பின்னும், உயிருக்குப் பின்னும் அது உள்ளது என மனம் அறிகிறது. இறைவன் அறிவுக்குப் புலப்படவில்லை எனில், அறிவின் ஆதியான ஜீவியத்திற்குப் போனல் புலப்படுமல்லவா? எண்ணத்தைக் கடந்த ஞானம் உடல், வாழ்வு, மனம், சத்திய ஜீவியம் ஆகியவற்றை விளக்கவல்லது. மனமும், உயிரும், உடலும் மூவகையான ஒரே சக்தியென வேதம் கூறுகிறது. அச்சக்தியை உறுதி (will) உற்பத்தி செய்தது. மனிதனுக்கு பின்னாலுள்ள உறுதி இறைவனின் உறுதியாகும். அவ்வுறுதி ஜடத்துள் புதைந்துள்ளது. பரிணாமத்தால் அது வெளியெழும் பொழுது அது தேடுவது ஞானம், சக்தியுள்ள ஞானம், எல்லையற்று அவற்றை உறுதி நாடுகிறது. அதற்கு எல்லையில்லை, கம்பியில்லாத் தந்தி தூரத்தை அழித்து கம்பியையும் அழித்தது போல், மேலும் உள்ள தடைகளை receiver,sender அழிக்கும். கடைசியான தடை மனிதனின் அகந்தை.
சன்னியாசியின் துறவறம்
பிரபஞ்சத்தில் ஜடமும் ஆன்மாவும் ஒன்றென சென்ற அத்தியாயத்தில் கண்டது போல் கடந்த நிலையிலும் அவையொன்றே எனக் காண வேண்டும். பிரபஞ்சத்தில் சாட்சி புருஷனைக் காண நாம் மனத்தை விட்டு அகன்று ஜீவியத்தைத் தொட வேண்டும். பிரபஞ்ச ஜீவியம் தானே இயங்குவது. சத் என்பது பிரம்மம். அசத் என்பது அதன் பின்னுள்ளது. பிரம்மத்தைக் கண்டு துறவி உலகை உதறித் தள்ளுவது அவன் குறையோ, மனிதகுலத்தின் இயலாமையோ இல்லை. அது ஒரு தேவையான கட்டம்.
Ch – 4
பரம்பொருள்
ஜடமும், ஆன்மாவும் பிரபஞ்சத்தில் இணைவதைக் கண்டோம். அசத், மௌனம் ஆகியவை உலகைக் கடந்தவையில்ல, உலகை பின்னிருந்து உய்விப்பவை. மனிதன பூரணம் பெற சத்தில் ஊன்றிய காலை எடுக்காமல் அசத்திற்குப் போக முயன்றால், இரண்டையும் உட்கொண்ட பரம்பொருளான பிரம்மத்தை அடுத்த கட்டத்தில் அடைவான். இதுவே ஜடமும் ஆன்மாவும் கடந்த நிலையில் ஒன்றாவதாகும்.
Ch – 5
மனிதனின் ஆன்மீக லட்சியம்.
பரம்பொருள் அறிவைக் கடந்தது. ஒன்றானது. சத் சித் ஆனந்தத்தைக் கடந்து அசத் இருப்பதை வேதாந்தம் கண்டது. ஜடமானாலும், ஆன்மாவானாலும் இருமுனைகளும் இருந்தால் தான் செல்லும். பரமாத்மா, பிரபஞ்சம், ஜீவாத்மா ஆகிய மூன்றும் தேவை. அவை அனைத்தும் என்றும், எங்கும் ஒன்றே. நம் பார்வைக்கு வேறுபட்டுத் தோன்றுகின்றன. பாதாளத்தையும், பரமாத்மாவையும் இறைவன் படைத்தான். அகந்தை அளவை விட்டகன்று இவையிரண்டையும் இணைக்கிறது. எனது ஜீவாத்மாவே இரகஸ்யத்தை பெற்றுள்ள இடம். தெய்வீக ஆன்மா சித்த புருஷர்களாகப் பெருகுகிறது. மனிதனின் ஆன்மிக இலட்சியமும் இதுவே.
Ch – 6
மனிதனும் பிரபஞ்சமும்
பிரம்மம் மனிதனால் வெளிப்பட ரூபம் பெறுகிறது. இதை விஷ்ணு என்பர். மனமும், வாழ்வும், உடலும் அனந்தனை அதன் மூலம் வெளிப்படுத்தும், பிரபஞ்சம் தன்னைப் பூர்த்தி செய்ய பெறவேண்டி ஜீவாத்மாவை ஏற்படுத்துகிறது. பிரபஞ்சத்தின் மூலமே ஜீவாத்மா தன்னைப் பூர்த்தி செய்து கொள்ளும். வாழ்வுக்கு மனோமய புருஷனே ஜீவன். தெய்வீக வாழ்வுக்கு அடுத்த உயர்ந்த நிலையான விஞ்ஞானமய புருஷன் வேண்டும் சத், சித் ஆனந்தத்தைக் கடந்த அசத்தை ஆழத்தில் கண்டு முடிவான தீர்வை அடையலாம்.
Ch – 7
அகந்தையும் அதன் இரட்டைகளும்
ஜீவாத்மா பிரபஞ்ச முழுவதும் பரவி தன் உடலுள்ள ஆன்மாவைக் கண்டால், அகந்தையிலிருந்து விடுபடலாம். மரணம் என்பதொரு மாற்றமே என்ற உணர்வு மனிதனுக்குரியது. பூமி சூரியனைச் சுற்றி வருவதை அறிய மனிதன் பிரபஞ்சத்தையும் பிரம்மத்தையும் அடையவேண்டும். பகுத்தறிவால் பிரம்மத்தை அறிய முடியும். அகந்தையை மறந்த வாழ்வுக்கு ஆனந்தம் சுயமானது எனத் தெரியும். மனிதனில் அனந்தன் மலர இயற்கை எதிர்பார்க்கிறது.