வேதாந்த ஞானம்
புலன்களை விட்டகன்ற பகுத்தறிவு பாதாளத்தையும், பரமாத்மாவையும் இணைத்து பிரம்மத்தை சித்திக்கும். பிரபஞ்சத்தை வேதாந்தம் ஆத்மா மூலம் அறியும். திரைமறைவில் ஞானம் பிரம்மத்தைக் காண்கிறது. சோஹம், சர்வம், பிரம்மம், அகம் பிரம்மாஸ்மி என்பவை வேதாந்த மந்திரங்கள்.
Ch 9
சத் புருஷன்
சத் என்பது சக்தி, காலத்தையும், இடத்தையும் கடந்தது உண்டு என அறிவு அறிவுறுத்துகிறது. கடந்தது பிரம்மம். நாம் அறிவைக் கடந்து செல்வோம். சத் என்பது சலனம். சலனம் காலமும், இடமும் இரண்டும் உண்மை. அனந்தன் உண்மை. காலம் உள்ளது. சிருஷ்டி என்பது ஜீவன். ஞானம் சிருஷ்டியில் லயிப்பது காலம். பிரம்மம் நம்முள் உள்ளது. அங்கு சென்று அனந்த காலத்திற்கு நாம் தங்கலாம். சத் என்பதும், உலகம் என்பதும் ஜீவனும், சிருஷ்டியுமாகும். இவையிரண்டையும் அறிவது விவேகம். ஸ்தாணு, சலனம், ஐக்கியம் என்பவை அறிவுக்குரிய சொற்கள். பிரம்மம் இவற்றைக் கடந்தது, சத்தைக் கண்டோம். சித் என்பது என்ன? சித் சத்தின் சக்தியா? தனிப்பட்ட சக்தியா என்பது கேள்வி.
Ch – 10
சித் சக்தி
சிருஷ்டியே ரூபமும் சக்தியுமானது. பஞ்ச பூதங்களும், பஞ்சேத்திரியங்களும் ஜடத்திலிருந்து சப்த பிரம்மமாக எழுகின்றன. ஜீவியம் உற்பத்தியானது எங்ஙனம்? இரு சக்திகள் சந்தித்தால் ரூபம் உருவாகிறது. இரு ரூபங்கள் சேர்ந்து உணர்வு எனும் ஜீவியம் எழுகிறது.
சக்தி சந்திப்பது. அது தாவரம் முதல் உலோகம் வரை அனைத்திலும் உண்டு. அதற்கு அறிவுண்டு அதாவது ஜீவியம் உண்டு. இயற்கையின் விரயமில்லை என்பது அறிவுண்டு என்பதுடன் திறமையும் உண்டு எனக் காட்டுகிறது.
Ch – 11, 12
ஆனந்தம் பிரச்சினையும் விடையும்
பிரம்மம் தேடுவது ஆனந்தம். உலகில் துன்பமில்லை. வாழ்வுக்கு தர்மமில்லை. பாதாளமும், பரமனும் தர்மத்தை ஏற்கவில்லை. சிருஷ்டியின் ஆனந்தம், பரிணாமத்தில் ஆனந்தமாவதே பரமனுக்கும், மனிதனுக்கும், பாதாளத்திற்கும் பொதுவானது. இதை சாதிக்க சச்சிதானந்தம் ஜீவாத்மாவை பிரபஞ்சத்திற்குக் கொண்டு போகிறது. ஜடத்தில் ஆனந்தத்தை வெளிப்படுத்துவது சச்சிதானந்தத்தின் இலட்சியமும். ஜடத்தை மட்டும் நாடும் மனிதன் ஏமாந்துபோகிறான்.
ஜீவனுக்கு உலகம் மாயை. உலகம் பிரம்ம சத்தியமில்லை, உலகம் சிருஷ்டியின் சத்தியம். ஆண்டவனே ஆட்டமாகவும், ஆடுபவனாகவும், அரங்கமாகவுமிருக்கிறான். அசைவற்ற ஆனந்தம் அனைத்திலும் அலையாக எழுமானந்தமாவதே உள்ளுறை சூட்சுமம், இரகஸ்யம், நாம் ஆனந்தமயமான அமைப்பு. வலியை ஏற்கும் அவசியம் நமக்கில்லை. சுதந்திரமான சுமுகம் ‘ அகந்தையற்றவனுக்குண்டானால், அகந்தை அழியும். அனைத்துக்கும் விடுதலை கிடைத்தபிறகே விடுதலைக்கு அர்த்தமுண்டு. பிரபஞ்சத்தைத் தழுவிய மனிதனுக்கு வலியில்லை.
Ch – 13
தெய்வீக மாயை
பிரம்மத்தைக் கண்டு கொண்டோம். சிருஷ்டி புதிராக உள்ளது. அனந்தம் சிருஷ்டியாக அளவு தேவை. அந்த அளவு மாயை. ஸ்தாணுவின் சத்தியம் பூலோக சத்தியமாக மாயை எனும் கருவி தேவை. அனைத்தும் நம்முள்ளிருப்பதும், நாம் அனைத்து ஜீவனிலிருப்பதும் சிருஷ்டி, இது சத்திய ஜீவிய சத்தியம். மனம் காணாது.
ஸ்ரீ அரவிந்தம் இலட்சியக் கொள்கையைக் கடந்தது. உலகத்தையும் பிரபஞ்சத்தையும் மனம் விளக்க முடியாது, சத்திய ஜீவியம் விளக்கும்.அறிவை விட்டகன்றால், அரியாசனத்தில் ஞானம் வீற்றிருப்பது தெரியும்.
Ch – 14
சத்திய ஜீவியம் சிருஷ்டிக் கர்த்தா
தெய்வங்களின் பிறப்பிடம் சத்தியம் ஜீவியம்.
சத்தியம் சுயமாக உருப்பெறும் லோகம் சத்திய ஜீவியம்.
சொல்லும் செயலும் சேர்ந்த லோகம் இது.
காலத்தைக் கடந்ததும், காலமும் உள்ளது சத்திய ஜீவியம்.
மேலே சச்சிதானந்தமும், கீழே உலகமும் நடுவில் சத்திய ஜீவியமும் உள்ளன.
சத்திய ஜீவியம் பிரம்மம் லோகமானது.
ஜீவனின் எண்ணம் சத்திய ஜீவியத்திற்கு சிருஷ்டிக்கும் கருவி.
பிரிக்காமல் பகுக்கும் பாங்குடையது.
சத் புருஷன் ரூபத்தாலும் சக்தியாலும் தன் சத்தியப் படைப்பை தன்னுள் சிருஷ்டித்தது லோகம்.
ஜீவனின் எண்ணம் ஜீவனுள்ள சக்தி.
சத்திய ஜீவியத்தில் பிரிந்த நிலையில்லை. ஐக்கியம் உண்டு.
Ch – 15
சத்திய ஜீவியத்தின் உச்ச கட்டம்
சத்திய ஜீவியம் ஈஸ்வர ஜீவியம். அதன் அனந்தருணம்.
காலமும், இடமும் கண்டிப்பாகத் தேவை.
அகம் புறமாவது சிருஷ்டி.
பிரபஞ்சதே முதற் காரியமாகச் சிருஷ்டிக்கப்பட்டது.
*******