தமிழ் நாட்டில் பெரும்பாலான அன்பர்கள் அன்னையை ‘அமுதசுரபி‘ மூலமே அறிவார்கள். அன்னையை அறிந்தவுடன் முதற்காரியமாகத் தங்களுடைய தீராத பிரச்னையைத் தீர்க்க முற்படுவார்கள். முதல் நம்பிக்கையில்லாமல் செயல்பட்டாலும், பிரச்னை தீரும் வகையைக் கண்டு நம்பிக்கை ஏற்பட்டவுடன் அவர்கள் செய்யும் காரியம் இரண்டு. ஒன்று சமாதி தரிசனத்திற்கு வருவது, மற்றொன்று எனக்கு எழுதுவது. அதுபோன்று வந்த கடிதங்களில் சிலவற்றைத் தொகுத்து ஆராதனை என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளோம். அந்தத் தொகுப்பு வெளிவந்தபின் வந்த கடிதங்களை அடுத்த தொகுப்பாக வெளியிட முயல்கிறோம். அத்தொகுப்புகளில் வர இருக்கும் சில கடிதங்களை இக்கட்டுரைகளில் வெளியிடுகிறேன். பெரும்பாலும் அக்கடிதங்களுக்கு விளக்கம் தேவையில்லை என்பதால் கடிதத்தில் வெளியிட வேண்டிய பகுதியை மட்டும் கீழே தருகிறேன். தேவையானால் சிறு விளக்கமும் அளிக்க முயல்கிறேன்.
1. “ஒரு பயங்கரப் பிரச்னையின்போது நான் மிகவும் தவித்துத் துடித்தபோது அன்னையைப் பற்றிக் கேள்விப்பட்டு வேண்டிக் கொண்டதும், அந்த பயங்கரப் பிரச்னை ஒரு நிமிஷத்தில் தீர்ந்து
என்னைக் காப்பாற்றியது. அன்னையைப் பற்றி நிறையப் படித்தேன். படிக்கிறேன். பரிபூரணமாக ஏற்றுக் கொண்டேன். சதா சண்டையும், கத்தலும், கடுகத்தனை அமைதியில்லாத தனிமையுமாக இருந்த வீட்டில் (harmony) சுமுகம் பூ வைத்து வேண்டிக் கொண்டே வந்ததில் ஆச்சரியகரமான மாறுதல் ஏற்பட்டது. அன்னையைப் பற்றி உணர்ந்த அன்றிலிருந்து பூஜை, விரதம் முதலி யன குறைத்து அன்னையை மட்டும் பிரார்த்தித்து வந்தேன். ஜனவரி 12ருந்து மே 18 வரை எதிர்பாராத மாறுதல் இவரிடம் – கலகல எனப் பேசினார். ஓரளவு பணம் 700 ரூபாய் என்பது 900 ஆக மாறியது. அதிகக் கண்டிப்பு இல்லாமல் என்னையும் ஒரு மனுஷியாக உணர்ந்து நடத்தினார். இதுவரை அன்னையைக் கும்பிடுவதைக் கேலி செய்தவர், அவருடைய பிறந்த நாள் அன்று பாண்டிச்சேரிக்கு வந்துதான் ஆக வேண்டும் என்று கூப்பிடும் அளவுக்கு மாறுதல்”.
2. “ஒரு வாரத்திற்குமுன் ஒரு கடிதம் எழுதினேன். அதில் மாப்பிள்ளை, ஜாதகம் எதுவுமே சரியாக அமையவில்லை என எழுதினேன். தங்களுக்கு எழுதிய 15 நாள்களில் தங்களிடமிருந்து பூ அனுப்பியிருந்தீர்கள். ஒரு வாரத்திற்குள் கல்யாணம் நிச்சயமாய் விட்டது. நிச்சயம் வருகிற ஞாயிறன்று வைத்திருக்கிறார்கள்”.
3. “நான் மூக்கில் ஓர் அறுவை சிகிச்சை செய்துகொள்ள இருந்தேன். ரூ.1000/ ஆகுமென டாக்டர் கூறினார். கடன் வாங்கித்தான் செய்ய வேண்டும். இப் பணப்பிரச்னையை அன்னை யிடம் ஒரே ஒரு முறைதான் கூறினேன். ஒருநாள் என் தோழியைச் சந்தித்தேன். அவள் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் வேலை செய்பவள். அவளோடு அங்குப் போய் என்ன செலவாகும் என விசாரித்தேன். ஆபரேஷனுக்கு 2000/- ஆக மொத்தம் ரூ.4000/-ஆகும் என்றார். தோழி என் நிலைமையை விளக்கினாள். திடீரென டாக்டர் இலவசமாக ஆபரேஷன் செய்வதாகச் சொன்னார். மெடிகல் சூபரிண்டெண்டெண்ட்டிடம் கடிதம் வாங்கி வரச் சொன்னார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. முதல் தடை சொன்ன சூபரிண் டெண்டெண்ட் மனம் மாறி எங்களைப் பார்க்கா மலேயே கடிதம் கொடுத்தார். என்னுடைய தோழி எனக்கு அதிர்ஷ்டம்தான் என்றாள். நான் அதிர்ஷ்டத்தைப் பற்றி நினைக்கவில்லை. அன்னையின் சக்தியைப் பற்றித்தான் நினைத் தேன். கடைசியில் 4000 ரூபாய் கொடுக்க வேண்டிய இடத்தில் 400 ரூபாய்தான் கொடுத்தோம்”.
4.”ஸ்ரீ அரவிந்தர், அன்னை அருளால் என் மனைவி மனநோய் நீங்கி குணம் அடைந்து வருகிறாள். கடந்த 5 ஆண்டுகளாக வாட்டி வந்த
நோய் ஸ்ரீ அன்னையின் அருளால் தற்சமயம் குணமாகி வருகிறது. எப்படியும் அன்னை நினைவைப் பூரணப்படுத்தினால் அனைத்துப் பிரச்னைகளும் தீர்ந்துவிடும் என்ற வேதவாக்கை அவுரங்காபாத்தில் வேலை செய்யும் என் மகன் இன்ஜினீயருக்கு எழுதினேன். தற்சமயம் அவன் பிரச்னைகளும் ஸ்ரீ அன்னை அருளால் நீங்கி நல்லபடியாக இருப்பதாக எழுதினான். எல்லாம் ஸ்ரீ அன்னையின் திருவருளே ஆகும்”.
5. “நான் ஒரு Diploma in Electronics & Communication மாணவி. நான் 6 மாதத்திற்கு முன் உங்களுக்குக் கடிதம் எழுதினேன். நீங்கள் அன்னை படத்தை என் நம்பிக்கைக்குப் பாத்திரமாக அனுப்பி யிருந்தீர்கள். என் வேண்டுதல்படி எனக்கு ஒரு மாதத்தில் வேலை கிடைத்தது”.
6. “அன்னையின் அருளால் என் பெரிய பெண் ணிற்கு L. I. C..யில் வேலை கிடைத்துள்ளது. B.Com., பரீட்சை முடிந்த அடுத்த நாள் வேலையில் சேர்ந்துள்ளாள். யாருடைய சிபாரிசும் இல்லாமல் நேரடியாக அவர்கள் வைத்த பரீட்சையில் பாஸ் செய்து கிடைத்திருக்கிறது. நேர்மை, சத்தியம், உண்மை, இவற்றைக் கொண்ட அவளுக்கு அன்னை கொடுத்த பரிசு என்றால் அது சத்தியமானது”.
7. “என் கணவர் தினமும் குடித்துக் கொண்டி ருந்தார். தற்போது குறைத்துவிட்டார். மேலும் ஓர்
இடம் வாங்க எண்ணி அன்னையை வேண்டி னேன். அதன்படி வாங்கியுள்ளேன்”.
8. “நான் ஒரு விதவை. எனக்கு ஒரே ஒரு மகன். நானும் அவனும் நான்கு வருடங்களாகப் பிரிந்து வாழ்ந்தோம். என்னுடைய வீட்டையும் மகனிடம் ஒப்படைத்துவிட்டு வாடகைக்கு வீடு எடுத்திருந் தேன். மகன் என்னை வந்து பார்ப்பதும் இல்லை. கண்டால் பேசுவதும் இல்லை. அன்னையின் ஆதரவு கிடைத்தபின் நான் அவ்விடம் என் கவலையை விட்டு விட்டேன். நான் அன்னையை அறிந்து ஆறு மாதம்கூட இருக்காது. ஆனால் என் மகன் என்னைப் பார்க்க பத்தாம் தேதி வந்தான். நான் என் மனமார்ந்த நன்றியை அன்னைக்கு அறிவிக்கிறேன்”.
9. “ஸ்ரீ அன்னையின் அருளால் எங்கள் தகப்பனா ருக்குக் கால் ஆபரேஷன் நன்றாகச் செய்யப்பட்டு குணமாகி வீடு திரும்பியுள்ளார். இந்த எழுபதாம் வயதில் அவருக்குக் குணமான வேகத்தைக் கண்டு அனைவரும் வியந்தனர்”.
10. “எங்களுக்குச் சொந்த வீடு அமைய அன்னைக்குக் காணிக்கை அனுப்பியிருந்தேன். அந்த வீடு W.4 நம்பர் வீடு. எங்களுக்குக் கிடைக்காமல் போய்விட்டது. தோல்வியையும் அன்னை கொடுத்ததாக எண்ணி நம்பிக்கையோடு இருந்தேன். என் வீட்டிலுள்ளவர்கள் முரண்பாடாகப் பேசினார்கள். நான் நம்பிக்கையோடிருந்தேன்.
W.4ம் நம்பர் வீடு 1 லட்சத்துப் பத்தாயிரம் ரூபாய். நான் வீட்டிற்கு எங்கும் அலைந்தேன். 2 லட்சத்திற்கு மேல்தான் இருந்தது. அன்னையிடம் “என் சக்தி உங்களுக்குத் தெரியும். இந்த வீட்டுப் பிரச்னையை நீங்கள்தான் தீர்க்க வேண்டும்” என்று வேண்டினேன். 25.06.90இல் பிரார்த்தனை செய்துவிட்டு ஹவுஸிங் யூனிட்டில் உள்ள ஒருவரைக் கேட்டேன். அவர் Y.4 வீடு இருக்கிறது என்றார். உடனே அன்னையை நினைத்துப் போனேன். 4 ஆம் நம்பர் வீட்டைப் பார்த்தேன். வீடு பிடித்திருந்தது. நானே வீட்டார் எதுவும் சொல்லாமல் 27.06.90 இல் 20 ஆயிரம் அட்வான்ஸ் கொடுப்பதாக வாக்கு கொடுத்தேன். 4 ஆம் நம்பர் ஓனர் மதுரையில் இருப்பதால் அவர்களையும் 27.06.90 இல் வரச் சொல்லி எழுதச் சொன்னேன். வீட்டின் விலை ரூபாய் 80 ஆயிரம்”.
11. “நாங்கள் சொந்தமாக வீடு கட்டிக்கொள்ள நல்லதோர் இடம்கிடைத்ததும், அதில் அழகான தொரு வீடு கட்டிக்கொள்ள முடிந்ததும், ஸ்ரீஅன்னையின்பேரருளால்தான். வீடு கட்டும் காலத்தில்‘ எவ்வளவோ பிரச்சனைகள். அவ்வ ளவும்ஸ்ரீஅன்னைக்குப்பிரார்த்தனைசெய்தவுடன் தீர்ந்துபோயின”.
12. “நான் 1987 ஆம் வருஷம் ஜூன் மாதம் ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அதில் எனக்கு இன்னும் திருமணமாகவில்லை என்று எழுதினேன்.
அன்னைக்குப் பிரார்த்தனை செய்யும்படி நீங்கள் எழுதியிருந்தீர்கள். அதன்படி அன்னை அருளால் 1987 ஆம் வருடம் ஆகஸ்ட் 19 ஆம் தேதி எங்கள் திருமணம் சிறப்பாக நடந்தது”.
13. “15 வருடங்களுக்கு முன் ரூ.2600 கடன் பெற்றவர் இப்பொழுது ரூ.1600 திருப்பி அனுப்பி யிருக்கிறார். எல்லாம் அன்னையின் அருள். என்னுடைய சிறு அசைவிலும் அன்னையின் உதவி கிடைக்கிறது”.
ஒரு சமயம் அமெரிக்கா, கனடா, ஹாலந்து ஆகிய நாடுகளிலிருந்து பக்தர்கள் வந்திருந்தார்கள். பொதுவாக இவர்கள் வெவ்வேறு மாதங்களில் வருவது வழக்கம். இம்முறை இம்மூவரும் ஒரே சமயத்தில் வந்திருந்தார்கள். மாதம் முதல் தேதியும், ஒவ்வொரு திங்களன்றும் இங்கு (calling) அழைப்புண்டு. இந்த நண்பர்கள் தங்கள் நாட்டில் “அழைப்பை” மேற்கொண்டதைப் பற்றி விவரமாகச் சொல்லிய பொழுது, அழைப்புக்குரிய நிபந்தனைகளையும், அதன் பல்வேறு முக்கியத் துவங்களையும் விளக்கமாகச் சொன்னேன். கனடாவிலிருந்து ஜான் வந்திருந்தார். அவர் மாலை தியானத்தில் கலந்து கொண்டு பிறகு தம் விடுதிக்குப் போய்விட்டார். அவர் வந்து 3 ஆண்டுகள் ஆகின்றன. அவர் 15 நாள்கள் தங்குவார். ஊருக்குப் புறப்படுமுன் நான் அவரை ஒருமுறை சந்திப்பேன். மற்றவர்கள் வந்து 15, 20 வருஷங்கள் ஆகின்றன. இவர்கள் தங்கள் நாட்டில் அன்னைக்குரிய சேவையை மேற் கொண்டுள்ளார்கள். என்னுடனேயே இங்கு இத்தனை வருஷங்களாகத் தங்கியிருந்தவர்கள்.
அழைப்பின் சிறப்புகளை மேலும் மேலும் சொல்லும் பொழுது அமெரிக்க நண்பர் மறுநாள் அழைப்பில் கலந்து கொள்ள ஜான் விரும்புவார்
என்றார். நான் அழைப்புக்கு ஒருவரை அனு மதிக்கும் முன் அவருடைய வீட்டில் அழைப்பை மேற்கொண்டு அதை எனக்கு விளக்கமாக எழுதச் சொல்லி, அதன் பிறகே முடிவு செய்வது வழக்கம். ஜான் புதியவர் என்பதால் எனக்குத் தயக்கம். அமெரிக்க நண்பர், ஜானைப் பற்றிச் சொன்னார். அவர் அழைப்பை மேற்கொண்டு கடைப்பிடிக்கும் முறையை விளக்கினார். அதனால் அவரை மறுநாள் அழைப்பில் கலந்து கொள்ள நான் சம்மதித்தேன். நேரம் இரவு 9.30 மணி. ஜான் விடுதிக்குப் போய்விட்டார். அவர் அறையில் ஃபோன் இல்லை. டிரைவர் வீட்டிற்குப் போய் விட்டான். விடுதி சுமார் 2 மைல்கள் தூரத்தில் உள்ளது. அனுப்ப ஆள் இல்லை. மறுநாள் காலையில் அழைப்பு 8 மணிக்குத் தொடங்கும். ஹாலந்து நண்பர் ராபர்ட் தாம் போய் ஆசிரமத்தில் ஜான் தியானத்திலிருக்கிறாரா எனப் பார்த்துச் சொல்லிவிட்டு வருவதாகப் போனார்.
ஜான் ஆசிரமத்தில் இல்லை. ராபர்ட் அவரைத் தேடி விடுதிக்குப் போனார். அவரைச் சந்தித்து மறுநாள் அழைப்புக்கு வரும்படிச் சொன்னார். “நானிருப்பது 15 நாள். அடுத்த அழைப்புக்கு முன் நான் கனடா புறப்பட்டு விடுவேன். நாளை அழைப்பில் கலந்துகொள்ள எனக்கு அளவு கடந்த ஆர்வமுண்டு. ஸான் பிரான்ஸிஸ்கோவிருந்து மாக்பர்லேன் சென்ற மாதம் என்னை ஃபோனில் அழைத்து அவர்
நடத்தும் அழைப்பின்போது, என்னையும் அழைப்பில் உட்காரும்படிக் கேட்டுக் கொண்டார். நான் மாதந்தோறும் அழைப்பை மேற்கொள் கிறேன். இங்கு வந்தபொழுது எனக்கு அழைப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்று அதிக அவா. என்னை நீங்கள் அழைக்காதது எனக்கு ஏமாற்றம். உங்கள் வீட்டிலிருந்து நேரே சமாதிக்குப்போய் அன்னையிடம் என் குறையைச் சொல்லிவிட்டு அறைக்கு வந்துவிட்டேன். இரண்டு மணி கழித்து நீங்கள் வந்து என்னை அழைப்பது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டது” என்று ஜான் பதில் சொன்னார்.
15. மாக்பர்லேன் கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்தவர். அவருடைய தாயாரும், சிறிய தாயாரும் தினமும் இன்றும் சர்ச் செல்பவர்கள். அதே காரணத்தால் சர்ச் இல்லாத ஊருக்குப் போக மாட்டார்கள். மாக்பர்லேன் கத்தோலிக்கப் பாதிரியாகப் போக வேண்டும் என்பது அவரது குடும்ப விருப்பம். அவர் 1970இல் ஆசிரமம் வந்து இங்கேயே தங்கிவிட்டார். ஒரு சமயம் அவருடைய சிறிய தாயாரிடம் ஃபோனில் பேசும்பொழுது, தம் காருடைய பின்புறக் கண்ணாடியை மாற்ற வேண்டும், அதற்கு அதிகச் செலவாகும். ஓய்வு பெற்ற நிலையில் அது தமக்கு அதிகச் செலவு என்று சிறிய தாயார் சொன்னார். அந்தக் கண்ணாடியை முதல் பொருத்திய ஒர்க்ஷாப்
பில்லுடன் காரைக் கொண்டு போய்விட்டால், தவறு அவர்களுடையது என்பதால், அவர்களே செலவில்லாமல் மாற்றி விடுவார்கள் என்றும், அந்த ரசீதை இந்த 3 வருஷத்திற்குப் பின் தேட முடியவில்லை என்றும் சொன்னார், 70 வயதான பெண்மணி. சமீபத்தில் வீடு மாற்றியவர். பழைய ரசீதை எங்கு போய்த் தேடுவது? அது கிடைத்தால் இப்பொழுது 1000 டாலர் மிச்சம். தேடியும் பார்த்து விட்டார். கிடைக்கவில்லை. ரசீதைக் கண்டுபிடிக்கும் மார்க்கம் மாக்பர்லேனுக்குத் தெரியும். சிறிய தாயார் அன்னைக்குப் பிரார்த்தனை செய்தால் ரசீது கிடைக்கும். ஆழ்ந்து ஊறிய கத்தோலிக்கரிடம் எப்படி அதைச் சொல்ல முடியும்? எந்தத் தெய்வத்திற்குப் பிரார்த்தனை செய்தாலும், உண்மையான பிரார்த்தனைகளை அன்னை அந்த தெய்வத்தின் மூலம் ஏற்பார் என்பது அவருக்குத் தெரியும். தன் சிறிய தாயாரிடம் அவர் பின் வருமாறு சொன்னார்:
“உங்களுக்கு இயேசுமீது அளவு கடந்த நம்பிக்கை இருக்கிறதல்லவா? இயேசுவுக்குப் பிரார்த்தனை செய்தால் ரசீது கிடைக்கும்” என்றார். இந்த 70 ஆண்டுகளாக அது போன்ற அனுபவம் தமக்கில்லை என்று பதில் வந்தது. “கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன், மனத்தைப் புறக்கணித்துச் சில நிமிஷம் இயேசுவுக்குப் பிரார்த்தனை செய்துவிட்டு, ரசீதைத் தேடுங்கள்” என்று சொல்விட்டுப் போனை வைத்து விட்டு,
ஆபீஸுக்கு வேண்டிய பேப்பர்களை எடுத்துக் கொண்டு, வீட்டை விட்டுப் புறப்படுவதற்கு ஆயத்தமான மாக்பர்லேன் ஃபோன் மணிச் சத்தம் கேட்டு ஃபோனை எடுத்தார். சிறிய தாயார், சிறு குழந்தை போல் ஃபோனில் ஆர்வமாகக் கண்களில் நீர் ததும்ப, பேச முடியாமல் சந்தோஷத்தில் மூழ்கி, “என் வாழ்நாளில் இல்லாத அனுபவம் இன்று கிடைத்தது. நீ சொன்னதுபோல் பிரார்த்தனை செய்தேன். அளவுகடந்த சந்தோஷம் ஏற்பட்டது. பிரார்த்தனையை முடித்து விட்டு, ரசீதைப் பிறகு தேடலாம் என வேறு வேலைக்குப் போகுமுன் டிராயரை மூடினேன். சரியாக வைக்க முயன்ற பொழுது அதனுள் நான் இத்தனை நாள் தேடிய ரசீது இருந்தது. எனக்கு அளவுகடந்த சந்தோஷம்” என்று சொன்னார்.
16. “என் தம்பிக்கு மனநிலை சரியில்லாமல் இருந்தது. தங்களுக்கு எழுதியதன் பலன் நல்லபடியாய் முன்போல் ஆகி வேலைக்குச் சென்று கொண்டிருக்கிறார். அவருக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது”.
17. “ஞாயிற்றுக்கிழமை தியான மையம் ஆரம்பித்துள் ளேன்… அன்று முழுவதும் வீடு சந்தோஷத்தால் நிரம்பியிருந்ததைப் பார்க்கும்பொழுது தினமும் தியானம் நடத்த முடியாதா என்று நினைத்தேன்”.
18. “ஒரு பஸ் டிரைவருக்குக் கான்சர் முற்றிவிட்டது. டாக்டர் ஆபரேஷன் செய்தார். கான்சர், அளவுகடந்து முற்றிவிட்டதால், மீண்டும் அதை மூடிவிட்டார். வயிற்றை மூடிவிட்ட டாக்டரும், மற்ற டாக்டர்களும் டிரைவர் ஒரு வாரத்திற்குமேல் உயிரோடு இருக்கமாட்டார் என்றார்கள். ஆஸ்பத்திரியின் தலைவர் என்ற முறையில் என் தாயார் டிரைவரைப் பார்க்கப் போனார். அவர் ஒரு blessing packetஐ டிரைவரிடம் கொடுத்தார். இது நடந்து 5 மாதம் ஆகிறது. டிரைவர் குணமாகி வேலையில் சேர்ந்து விட்டார். வலி யில்லை”.
19. “சென்ற வாரம் என் நண்பரின் மகன் நோய் வாய்ப்பட்டிருந்தான். தாயார் குழந்தையுடன் தனியாக இருந்தாள். குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தது. காரணம் தெரிய வில்லை. நான் குழந்தையைப் பார்க்கப் போனேன். அழுகை நிற்கவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தோம். அன்னை பிரசாதத்தைக் குழந்தை தலையணை யின் கீழ் வைத்தேன். ஆச்சரியமாகக் குழந்தை நிம்மதியாகத் தூங்கிவிட்டது”.
20. “மதர் கிருபையால் என் கணவருக்கு மதுரைலியிருந்து நானிருக்கும் ஊரான பெல்லாரிக்கு மாற்றல் கிடைத்துள்ளது”.
21. “உங்கள் கடிதம் கிடைத்த இருபது நாள்களில் என் சகோதரிக்கு ஒரு வரன் நிச்சயமாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது”.
22. “மீண்டும் என் பெண்ணுக்கு மூலம் ஆபரேஷன் செய்ய 18 ஆம் தேதி குறிக்கப்பட்டுள்ளது. ஒரு சாதகருக்கு ஆபரேஷன் இல்லாமல் மூலம் குணமானதைப் பற்றி எழுதியிருந்தீர்கள். நமக்கும் அதேபோலாகுமா என்ற ஐயத்துடன் பெண்ணை ஆபரேஷன் தியேட்டருக்குள் அனுப்பினோம். Blessing packetஐப் பெண்மீது தடவி அனுப்பினோம். சிறிது நேரத்தில் டாக்டர் வெளியே வந்து ஆபரேஷன் தேவையில்லை என்றார்”.