அன்பர்கள் வழிபாடு – 3

இணைபிரியாத ஆன்ம எழுச்சி:

இடையறாது நம் மனத்தை ஆட்கொள்வது ஒன்றுண்டு. அதை நாம் அறிவதில்லை. அறிந்தாலும் பொருட்படுத்துவதில்லை. விளையாட்டில் உற்சாகமுள்ள மாணவன் இரண்டு மணி நேரம் விளையாடினால், அதைப் பற்றி நண்பர்களுடன் ஐந்து மணி நேரம் பேசுவான். மீதி நேரம் முழுவதும் அவன் மனத்தை விளையாட்டு

ஆட்கொண்டிருக்கும். விளையாடும் வயதில், விளையாட்டு மனத்தை நிரப்பிக்கொண்டிருக்கும். திருமண வயதில் “இளநங்கை” மனதில் அகலாமல் வீற்றிருப்பாள். வேலைக்குப் போனபின் வேலை, குடும்பம், உயர்வு, அதேபோல் மனத்தில் உரிமை கொண்டாடும். வேலை மனத்திலிருந்தால், அதனடியில் மனைவியும், அதற்கடியில் விளையாட்டும் இருப்பதை நாம் அறிவோம். ஆனால், அதைக் கவனிப்பதில்லை. இவை இடையறாது முழுமனதை ஆட்கொண்டு இருப்பதை ஆங்கிலத்தில் occupation என்பார்கள். அவற்றுள் ஒன்று பிரச்சினையாகிவிட்டால் தீவிரமாக மனம் அதையே நினைப்பதை preoccupation என்பார்கள். நாயன்மார்கள் மனம் சிவபெருமானால் அதுபோல் நிரப்பப்பட்டிருந்தது. மகனுக்குப் பெயரிடத் திருநாவுக்கரசு என்பதை நினைத்தவர், அடுத்தடுத்த மகன்கட்கும் அதே பெயரையிட்டு, மூத்த திருநாவுக்கரசு, இளைய திருநாவுக்கரசு என்றார். திருமணமான பெண் ஆங்கிலம் கற்றுக்கொள்ளும்பொழுது, அவளைத் தினமும் 500 வாக்கியங்கள் எழுதச் சொன்னார். அவள் தன் மாமனை மணந்தவள். Uncle is tall, Uncle bought a bike, Uncle has come என 500 வாக்கியங்களில் 100க்கு மேல் மாமனைப் பற்றி எழுதினாள். அவள் மனம் மாமனால் நிரப்பப்பட்டுள்ளது. எது நம் மனத்தை நிரப்பியுள்ளது எனில் நம் வாழ்வில் வளரும் முனை நிரப்பியுள்ளது எனப் புரிகிறது. அதற்கு முந்தைய நிலைகள் படிப்படியாக அவற்றிற்கு அடியில் அமைந்துள்ளன.

உடல் வளரும்பொழுது உடல் வளர்ச்சியும், அதற்கு உரியவையும் மனத்தை நிரப்புகின்றன. உணர்வு வளரும்பொழுது ஆசை மனத்தை நிரப்புகின்றது. மனம் வளரும்பொழுது எண்ணம் மனத்தை நிரப்புகிறது. ஆன்மா நம்முள் வளர்ந்தால் பக்தி மனத்தை நிரப்பும். அந்நிலை இடையறாத நினைவுக்குரியது. நம்முள் அன்னை வளர வேண்டும். உடல், உணர்வு, மன வளர்ச்சியைத் தாண்டி ஆன்மாவில் அன்னை வளர்ந்தால், அம்மனநிலை இடையறாத அன்னை நினைவுக்குரியது ஆகும். உடலுக்குரிய பொருளையும், உணர்வுக்குரிய ஆசையையும்,

மனத்திற்குரிய அறிவையும் கடந்து, ஆன்மாவுக்குரிய அன்னையை நம் ஜீவன் விழைந்தால், இடையறாத அன்னை நினைவு பலிக்கும்.

இடையறாத நினைவு மிகப்பெரிய சாதனை; யோகசித்தியில் முதற்கட்டம் எனப் புரிகிறது. மிகப்பெரிய சாதனையை, இன்று நமக்குள்ள சக்தி சாதிக்க முடியாது. நமக்குத் தொழில் செய்ய, குடும்பம் நடத்த சக்தியுள்ளது. இது ஒரு தொழிற்சாலை நடத்தவோ, கட்சித் தலைவராக இருப்பதற்கோ போதாது. சக்திகளின் நிலை பல.

மிகச்சிறியதான சக்தி உடல் உழைப்பால் எழுவது. அது உழைப்பாளியின் சக்தி. அவனுடைய முழு உழைப்புக்கு, நெற்றி வியர்வை நிலத்தில் விழுந்தால் தினக்கூலி கிடைக்கும். அதைவிட உயர்ந்தது பிராணனுடைய சக்தி vital energy . இது மானேஜர் பதவியிலுள்ளவருக்குரிய தகுதி. அதற்கடுத்த உயர்ந்த நிலை மனத்தின் சக்தி. (Experts) தொழில் நுணுக்க வல்லுநருடைய சக்தி அது. மனத்தில் ஆன்மா வெளிப்பட்டால், வல்லுநர் புதியதாக ஒரு முறையைக் கண்டுபிடித்து புகழடைவார். இது மனத்தின் சக்தியைவிடப் பெரியது. பிராணனில் உள்ள ஆன்மா வெளிப்பட்டால் அடுத்த உயர்ந்த நிலை சக்தி எழும். அது சிப்பாயின் தைரியம், I.A.S. அதிகாரியின் நேர்மையிலிருந்து எழும் சுதந்திரமான தைரியம். அதற்கு அரசியல் தலைவர்களும் அடங்குவார்கள். கடைசி கட்ட உயர்நிலை சக்தி உடலில் உள்ள ஆன்மா வெளிப்படுவதால் எழுவதாகும். இது பூரணயோகத்திற்கு உரிய அன்னை சக்தி. இத்தனை சக்திகளையும் அன்னை நமக்கு வழங்குகிறார். எந்த நேரம் எது வருகிறது என நாம் அறிவதில்லை. பிரார்த்தனையால் திடீரென சூழ்நிலை மாறி ஆச்சரியம் போல் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அன்னையிடமிருந்து வருவது ஒரு காரியத்தைப் பூர்த்தி செய்து மின்னல் போல் மறையும். அதே சக்தி நம்முள்ளிருந்து எழுந்தால், அது நிரந்தரமாக இருக்கும். இந்த கடைசி கட்ட பூரணயோக சக்தி உடலிலிருந்து எழுவதால், அதிக வலுவுள்ளது. அதுவே இடையறாத அன்னை நினைவை சாதிக்கும்.

நாமுள்ள நிலையிலிருந்து அதை எட்ட நினைப்பது அறிவுடைமையா என்று நினைக்கலாம். மனம் இடையறாத நினைவை நாடினால், அது நம் முயற்சிக்குச் சித்திக்கும் எனப் பொருள். மனம் அதை நாடாதவர்க்கு அதில்லை.

மனம் அதை நாடுகிறது, அடிக்கடி இடையறாத நினைவு வேண்டும் என்று தோன்றுகிறது என்றால் பலிக்கும் வித்துளது எனப் பொருள். அதற்குரிய முயற்சி பலன் துரம். இந்நினைவு ஓரளவு இதற்குரிய சக்தியைத் தரும். நாம் உள்ள நிலையில் மற்றவர்களைவிட அதிகமாகச் சாதிக்க இது உதவும். நாம் செய்யும் காரியங்களில் இதுவரை நம் கண்ணில் படாதவை படும். எந்தத் தொழிலுக்கு முதன்முறையாகப் போனாலும், அங்கு இதுவரை பெயரெடுத்தவர்களை விட அதிகமாகச் சாதிக்க முடியும் என்பதைக் காணலாம். விவசாயத்தை மூன்று தலைமுறையாக அறியாதவர் அவசியத்தால் விவசாயத்தை மேற்கொண்டு செய்ததைக் கண்ட பரம்பரை விவசாயி, “நாமெல்லாம் இங்கேயே இருக்கிறோம். பரம்பரையாக விவசாயம் செய்கிறோம். இவர் ஊருக்குப் புதியவர்; விவசாயத்திற்குப் புதியவர். நம்மைவிட அளவுகடந்த சிறப்போடு செய்திருக்கிறார். நாம் இவரைப் பின்பற்ற வேண்டும்” என மேடை ஏறிப் பேசினார்.

பண வசூல் செய்வது என்பது மிகச்சிரமமான காரியம். இலட்சியமான காரியங்களுக்கு உண்டி குலுக்கலாம், தொகை வசூல் செய்வது முடியாது. முடியும் என்ற சூழ்நிலைகளிலும் அனுபவம் வேண்டும்; ஏராளமான அனுபவமும் தேவை. பத்து வருஷங்களாக இத்துறையில் அனுபவப்பட்டவர் 1967, 1968 ஆண்டுகளில் நல்ல பெரிய சந்தர்ப்பம் வந்தபொழுது, 20,000 ரூபாய்க்கு வாக்கு பெற்றார். வாக்கு கொடுத்தவர் அனைவரும் தினமும் ரூ.20,000 சம்பாதிப்பவர்கள். சுமார் 30, 40 பேர்களிடம் பம்பாய், டெல்லி, கல்கத்தா, நாக்பூரில் அவர்களை நேரடியாகச் சந்தித்த நேரத்தில் ரூ.20,000 வாக்குப் பெற்று, அதை வசூல் செய்ய ரூ.2,000 செலவு செய்து இந்த ஊர்களுக்கெல்லாம் போய்ச் செலவு செய்த தொகையான

ரூ.2,000த்தை வசூல் செய்து வந்தார். ரூ.20,000 வாக்கு (promise) ரூ.2,000 வசூலில் முடிந்தது. பக்தர் ஒருவர் பக்திக்காக ரூ.10,000 வசூல் செய்ய முன்வந்து ரூ.45,000 வாக்கு கிடைத்தது. அதை இவர் பக்தர் வாயிலாகவே கேள்விப்பட்டு வாய்விட்டுச் சிரித்துவிட்டார். பக்தர் ஊர் பயணம் போகவில்லை; யாரையும் கேட்கவில்லை. ரூ.1,73,000 வசூலாயிற்று. தொடர்ந்த உபரி வசூல், தொகையை ரூ.2,45,000க்கு கொண்டுவந்தது. “நீங்கள் எங்கும் போகவில்லை; யாரையும் கேட்கவில்லை. அத்துடன் முன்அனுபவமேயில்லை. எப்படி இது முடிந்தது?” என்று அனுபவசாலி பக்தரைக் கேட்டார். புதிய தொழிலும், அனுபவசாலியைவிடத் திறமை தானே எழுந்தால் உபரியான அன்னை சக்தி உள்ளிருந்து எழுகிறது என்று பொருள்.

ஆசிரியர் பயிற்சியின்றிப் பள்ளி நடத்தி நல்ல பெயர் வாங்குவது, ஆங்கிலத்தில் படிப்பின்றி, பயிற்சியின்றி பயிற்சி பெற்றவரைவிட நல்லபடியாகச் சொல்லிக்கொடுப்பது, மானேஜ்மெண்ட் அனுபவமேயில்லாமல், அத்துறையில் உலக வல்லுநர் போற்றும் வகையில் புத்தகம் எழுதுவது ஆகியவை அன்பர்கள் அனுபவம்.

நாம் ஆசையால் செயல்படுகிறோம். அதன் சக்தி அளவுக்கு உட்பட்டது. அறிவால் செயல்படுபவன் அதிக சக்தியுடையவன். அன்னை ஆன்மாவாலும், கரணங்களில் – மனம், உடல் – உள்ள ஆன்மாவாலும் செயல்படுவதால், அச்சக்தி அபரிமிதமானது. (Mother’s Energy) அன்னை சக்தி வெளிப்படுவதற்குப் படிப்பு, மந்திரம், தியானம் பயன்படும். இவை பழைய முறைகள் என்பதால் சிறு துளியே இவற்றால் வெளிப்படும். தியானத்தை அன்னை எப்பொழுதுமே பாராட்டியதில்லை; விரும்பியதில்லை. தியானத்தின் உச்சக்கட்ட சமாதியைப் பகவான் தன்னையறியாத நிலை என்கிறார். வேலையில் அன்னையை வெளிப்படுத்தினால், தியானம் உற்பத்தி ஆகும். நாம் செய்யும் வேலையில் ஆசையை வெளிப்படுத்துகிறோம், அறிவை வெளிப்படுத்துகிறோம். அதற்குப் பதிலாக, வேலையைச் சமர்ப்பணம் செய்தால் வேலையில் அன்னை வெளிப்படுவார். ஒரு

மணிக்கு 40 இரசீதுகள் எழுதும் பெண், சமர்ப்பணம் செய்தபொழுது ஒரு மணியில் 69 இரசீதுகள் எழுதினார். அன்று வேலை முடியும்பொழுது களைப்பே தெரியவில்லை, தியானம் மனதில் நிறைந்து இருந்தது என்றார். இந்தச் சக்தியே அன்னையை நினைவுகூரும். மனத்தில் எழும் இச்சக்தியைப் பக்தியால் உயர்த்தினால் உடல் சக்தி வெளிப்படும். அது இடையறாத நினைவை ஏற்படுத்தும். அச்சக்தியை நிலைப்படுத்தினால் இடையறாத நினைவு நிலைக்கும்.

நாம் இன்று செய்யும் செயல்களைக் கவனித்துச் சமர்ப்பணம் செய்தால், அன்னை சக்தியை அவற்றின் மூலம் வெளிப்படுத்தினால், உள்ளே பெரிய சக்தி எழும். செய்யும் காரியத்தில் இதுவரை தென்படாதது தென்படும். புதிய பார்வை ஏற்படும். புது எண்ணங்கள் தோன்றும். புதுத் திறமைகள் உருவாகும். யோகத்தை மேற்கொண்டால், எந்தப் புதிய திறமையையும் உருவாக்க முடியும் என்கிறார் பகவான். நம் திறமை உயரும், சக்தி உயரும்; அது நினைவை எழுப்பும். நினைவு இடையறாது இருக்கும். இந்நிலை நிலைப்பெறும்.

இடையறாத அன்னை நினைவு இன்று உலகில் கிடைத்தற்கு அரியது. அதை விழைந்தால், பலிக்கும் என்று அறியலாம். மனம் அதை நாடினால் பலிக்கும் என்பதால், அதற்குரிய ஆன்மீக முயற்சி – தவம், விரதம் – அதைப் பெற்றுத் தரும்.

இடையறாத அன்னை நினைவு பலித்து நிலைக்கும் முன்,

உடலின் ஆன்மீக சக்தி வெளிப்பட வேண்டும். அதற்கு முன்,

உயிரின் ஆன்மீக சக்தி (சைத்தியப்புருஷன்) வெளிப்பட வேண்டும். அதற்கு முன்,

மனத்தின் ஆன்மீக சக்தி வெளிப்பட வேண்டும். அதற்கு முன், மேல்மனத்திருந்து உள்மனத்திற்குப் போக வேண்டும்.

அது பலிக்கச் செயலைச் சமர்ப்பணம் செய்ய வேண்டும்.

சமர்ப்பணம் பலிக்க அளவுகடந்த அன்னை சக்தி தேவை.

நம் பார்வை அகன்று, ஆழ்ந்தால்தான் அச்சக்தி வெளிப்படும்.

பார்வை வளர, ஆர்வம் தேவை.

ஆர்வம் எழ, செயலில் முதன்மையான நிலை வேண்டும்.

செயல் முதன்மையாக, நாம் நமக்காகச் செயல்படாமல் அன்னைக்காகச் செயல்பட வேண்டும்.

நாமுள்ள இன்றைய நிலையில் செயல்திறனில் முதன்மை பெற்று, பார்வை அகன்று விரிந்து, சூட்சுமமடைந்து, சமர்ப்பணம் பூர்த்தியாகி, உள்மனத்தை அடைந்து, மனம், உயிர், உடல் ஆகியவற்றின் ஆன்மீக சக்திகள் படிப்படியாக வெளிப்பட்டு அன்னை நினைவு ஏற்பட்டால், இந்நிலைகள் நிலைபெறுவதால், நினைவு இடையறாத அன்னை நினைவாக நிலைக்கும்.

இது பலிக்க அவன் நம்மைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். அன்னை நம்மை நாடி வருவதால், நம்மை அன்னை தேர்ந்தெடுத்து இருக்கிறார் என்றாகும். எனவே, அன்னை பக்தருக்கு இடையாத நினைவு பலிக்கும்.

சமர்ப்பணம், சரணாகதி, பிரார்த்தனை, ஆர்வம், தியானம் மனத்தை ஒரு நிலைப்படுத்துவது. பக்தி விசாரம் போன்றவைகள் வேறு வேறல்ல. ஒரு வகையில் அத்தனையும் ஒன்றே என்கிறார் அன்னை. இவற்றுள் எதையும் கடைசிவரை பின்பற்றினால் அதன் மூலம் எந்தப் பலனையும் அடையலாம். ஒன்றை முழுமையாகப் பின்பற்றுவதால், மற்றதின் பலன் வருவதும் உண்டு என்பது அனுபவம்.

இது உண்மையானால், பிரார்த்தனையால் இடையறாத அன்னை நினைவைப் பெற முடியும். இடையறாத அன்னை நினைவு வேண்டும்

என்ற பிரார்த்தனையை ஆரம்பித்தவுடன், மற்ற நினைவுகள் தானே விலகி, அன்னை நினைவு முன்வருவதைக் காணலாம்.

இடையறாத அன்னை நினைவு

என்ற மலரைக் கையில் எடுத்தவுடன் அன்னை நினைவு தானே மேலோங்குவதைக் காணலாம். அம்மலரை பக்தியுடன் பாராட்டினால் இந்த இலட்சியம் பூர்த்தியாகும். பிரார்த்தனை ஆரம்பித்தவுடன் அன்னை நினைவு வருவதைப்போல, கொஞ்ச நேரத்தில் மனம் பிரார்த்தனையை விட்டகல முயல்வதைப் பார்க்கலாம். மனம் அதுபோல் அகல்வதைத் தடுக்கக்கூடியவர்க்கு இப்பிரார்த்தனை பலன் தரும். எவ்வளவு நேரம் மனம் பிரார்த்தனையில் ஈடுபடும் என்பது மீண்டும் நம்மை மனத்தின் சக்திக்கு எடுத்துச் செல்லும். பிரார்த்தனையைப் பலன் தரும் வகையில் இதுநாள்வரை பயன்படுத்தியவர், இப்பொழுது நினைவுக்காகப் பிரார்த்தனையை மேற்கொள்ளுமுன், பிரார்த்தனையால் அன்னை சக்தி அதிகமாகும் வகையில் பிரார்த்தனையைப் பின்பற்ற டியுமானால், பிரார்த்தனை பலன் தரும். அத்துடன் மனோசக்தி அதிகமாகும். இது பலிக்க பிரார்த்தனை பலிக்கும் என்ற நம்பிக்கை வேண்டும். பிரார்த்தனை எழும்பொழுது சிறிது, சிறிதாக எழுமிடம் மனத்தில் ஆழப்படுதல் அவசியம். அது ஒரு வகை தியானம். ஜீவன் அன்னையை நாடினால் பிரார்த்தனை மனத்தின் ஆழத்தை அதிகப்படுத்தியபடியிருக்கும்.

நாம் மனம் என அறிவது மேல்மனம். மேல்மனம் முழுவதும் ஒன்றில் ஈடுபட்டால் நம் ஆர்வம் அதிகரித்து உச்சக்கட்டத்தில் நம்மை மறந்துவிடுகிறோம். என்னை மறந்தேன்; சூழ்நிலை தெரியவில்லை; நேரம் போனதே தெரியவில்லை என்பது மேல்மனம் முழுவதும் அன்னையிடம் ஈடுபடுவதால், இப்படி நேர்வதுண்டு; ஆனால் குறைவு. இந்த நேரம் அன்னை நினைவு சிறப்பாக இருக்கும். அந்நிலையை விட்டு வெளிவந்தால், கொஞ்சம் கொஞ்சமாக அன்னை நினைவு பின்னணிக்குப் போய் மறைந்து விடும்.

வேண்டும். ஓர் எண்ணம் எழுந்தால், அதன் மேற்பகுதியில் எண்ணத்தின் போக்கும், உள்ளே ஆன்மீக சாரமும் உண்டு. நாம் எண்ணத்தை மேலெழுந்தாற்போல் அனுமதிக்காமல் சமர்ப்பணத்தால் அதன் உள்ளுறை சாரத்தை நாடினால், அது சைத்தியப்புருஷனில் கொண்டுவரும்.

பரிசோதனை:

நம் உச்சக்கட்டத் திறமைக்கு மீறிய அளவில், அதற்கடுத்த (level) நிலையில் ஒரு (Project) வேலையை மேற்கொண்டால், அது முடியும்வரை நம்மால் வேறெதையும் நினைக்கவே முடியாது. அதையும் (complete act) பூரணச் செயலாக்க முடிவு செய்தால், அது நிச்சயம் பலிக்கும். அன்னை நினைவால் அத்திட்டத்தைப் பூர்த்தி செய்தால், அது பூர்த்தியாவதுடன் இடையறாத அன்னை நினைவு நிரந்தரமாகப் பலிக்கும் அஸ்திவாரம் எழும்.

நான் சொல்லும் பரிசோதனை எவராலும் கேலி செய்யக் கூடியது என்பதால், இதை நம்பிக்கையுள்ளவர், நம்பிக்கை இருப்பதால் தானே செய்ய முன்வர வேண்டும். எவரைக் கலந்து ஆலோசித்தாலும் அவர்களுடைய நம்பிக்கையின்மையாலும், நையாண்டியாலும் ஆரம்பிக்கவே முடியாமற் போய்விடும். சைக்கிள் வாங்க முடியாதவரை, கார் வாங்கச் சொல்வது போன்ற சோதனை இது. சொஸைட்டியில் இருந்த வாலிபர் ஒருவர் திறமையுள்ளவர்; ஆனால் அன்னை மீதும், எந்த உயர்வு மீதும் நம்பிக்கை இல்லாதவர். அவரது பழக்கங்கள் எல்லாக் காரியத்தையும் கெடுக்கக் கூடியவை. 2000 ரூபாய் சம்பாதித்தவரை 1977இல் இராஜினாமா செய்து, தொழில் ஆரம்பிக்கச் சொன்னேன். அவருடைய சோம்பேறித்தனத்தால் தடைகள் எழுந்தபொழுது, இந்த வாலிபர் கேலியாக நினைப்பதைக் கண்டு மனம் விட்டுப் பேசச் சொன்னேன். “நல்ல வேலையை விட்டு வந்துவிட்டார். பனம்பழத்தை குருவித் தலைமீது வைப்பது போன்றது

உங்கள் யோசனை” என்றார். சோம்பேறிக்கும் திட்டம் பலித்துப் பல கோடி தொழிலுக்கு அவர் அதிபதியாகிவிட்டார். கேலி செய்தவர் இன்று 550 ரூபாய் சம்பளத்திற்கு கடையில் வேலை செய்கிறார்.

தனக்குள்ள உச்சக்கட்டத் திறமையைக் கற்பனையின்றிக் கணித்து, அதற்கடுத்த கட்டத்தில் திட்டத்தை ஏற்று, பூரண செயல் ஆக்கினால், அது பலிக்கும். அது முக்கியமல்ல. அதன் மூலம் கிடைக்கும் இடையறாத அன்னை நினைவு முக்கியம். கல்சுவர் வைத்துக் கூரை போட்டு வீடு கட்ட முடியாதவர் மெத்தை வீடு கட்டினார். அவர் பின்பற்றிய முறை இது. Bank குமாஸ்தா வேலைக்கு செலக்ஷன் ஆகவில்லை என்ற பின் I.A.S. எழுதி பரீட்சை பாஸாகி, நேர்முகத் தேர்வில் வெற்றி பெறாமல் பாங்க் ஏஜண்ட் ஆனவர், இம்முறையைப் பின்பற்றினார். S.S.L.C. வந்தால் போதும், தாண்ட டியாது என்ற இருவரில் ஒருவர் தொழிற்பட்டமும், அடுத்தவர் Ph.D. பட்டமும் பெற்ற முறை இது. இது பலிக்க வேண்டிய நிபந்தனைகள் இரண்டு.

  • 1. திறமையிருப்பதைக் கற்பனையின்றிக் கணிக்க வேண்டும்.
  • 2. நம்பிக்கை வேண்டும்.

மேலும், இச்சோதனையை அன்னை நினைவுக்காக மட்டும் செய்யும் மனப்பான்மை நிச்சயமாக இடையறாத அன்னை நினைவைத் தரும்.

மனம் பேசிக்கொண்டேயிருக்கிறது. அதற்கு ஓய்வில்லை. மனத்தில் ஆயிரம் கேள்விகள் உண்டு. அது கேட்டபடியிருக்கும். பகவான் (censor) இதைச் சோதிப்பவன் என்கிறார். புரியாததை மனம் கேட்கும். புரிந்ததை இனி கேட்காது, ஏற்றுக்கொண்டவற்றில் கேள்வி எழாது, தெளிவேற்பட்டால் கேள்வி நிற்கும், புதியது பழையதானால் கேள்விக்கு இடம் இல்லை. கேள்விகள் நிற்க வழி என்ன? புரியாதது புரிவதும், ஏற்க முடியாததை ஏற்பதும், தெளிவில்லாதது தெளிவடைவதும், புதியது பழகிப்போவதும் கேள்விகள்

நிற்கும் மார்க்கம் என அறிகிறோம். இதுபோல் உலகளவுள்ள கல்லாததைக் கற்க யுகங்களாகும் அல்லவா? ஆம். அதுவே உண்மை. மனம் நிதானமாக, ஒவ்வொன்றாய், ஆர அமர, அவசரமின்றிக் கற்கும் பாங்கு உடையது. ஆனால், இதுவே ஒரே வழி என்பதல்ல. மனத்தைக் கட்டுப்பாட்டால் விலக்கி, ஒதுக்கி, நாம் முன்னே செல்லலாம். அதுவே தவத்தை மேற்கொண்டவர்கள் தேர்ந்தெடுத்த வழி.

பூரணயோகம் அனுஷ்டிக்கும் பாதை சரணாகதி. நம் நிலைக்குரிய முறை மெதுவானது. நமக்கு உயர்ந்த நிலைக்குரிய முறை வேகமானது. நாம் நம்மைவிட உயர்ந்த நிலையை விரும்பி ஏற்றுக்கொண்டால், நம் நிலைக்குரிய மெதுவான முறை தானே விலகும். அடுத்த நிலைக்குரிய உயர்ந்த வேகமான முறை செயல்பட ஆரம்பிக்கும். இது சரணாகதியின் மார்க்கம். நாம் அன்னையைச் சரணடைவதை மார்க்கமாகக் கொண்டுள்ளோம். அன்னை சத்திய ஜீவிய அவதாரம். அதுவே பரிணாமத்தின் (evolution) உச்சக்கட்டம். நாம் அன்னையைச் சரணடைய முயன்றால், சரணாகதி உடனே உச்சக்கட்டத்தில் பூர்த்தியாவதில்லை. நமக்குகந்த கட்டத்தில் பூர்த்தியாவது வழக்கம். அடுத்த கட்டம் நாமுள்ள கட்டத்திற்குரிய கேள்விகளை எழுப்பாது. நாமுள்ள கட்டத்தில் புரியாதவை அடுத்த கட்டத்திற்குப் புரியும். நாம் ஏற்றுக்கொள்ள முடியாதவற்றை அடுத்த கட்டம் எளிதாக ஏற்றுக்கொள்ளும். நமக்குப் புதியதானவை அடுத்த கட்டத்திற்குப் பழையவை. அடுத்த கட்டத்தில் நம் சரணாகதி முயற்சி பூர்த்தியானால், மனம் கேள்விகளை எழுப்பாது. அமைதியுறும். கேட்பவன் வேலை செய்யமாட்டான். கேட்பவன் வேலை செய்யாவிட்டால், அன்னை நினைவு அதிகமாக எழும். எழுந்த நினைவு அதிக நேரம் இருக்கும்.

மனத்தால் அடுத்த கட்டச் சரணாகதி பூர்த்தியாவதைவிட, உணர்வால் அடுத்த கட்டச் சரணாகதி பூர்த்தியாவது கடினம். மனம் அடங்கிய பின்னும், உணர்வு எழும். எழும் கேள்விகளை ஒதுக்குவது போல், எழும் உணர்வுகளை ஒதுக்க முடியாது. மகள் நினைவு வந்தால்,

அன்னை மறந்துபோகும். தனக்கு வரவேண்டிய பிரமோஷனைப் பறித்துக்கொண்டு போனவன் நினைவெழுந்தால் ஆத்திரம் எழுவதைத் தடுப்பது எளிதல்ல. தான் உணர்ச்சி வசப்பட்டு உத்தமமாக விரும்பிய பெண், வேறொருவரை விரும்புகிறாள் என்றறிந்த நிகழ்ச்சி மனத்தை உறுத்தும்பொழுது, பூரணயோகமும், அன்னை பராசக்தியும் உள்ளத் திரையில் இடம் பெறா. அடுத்த கட்டத்தில் அன்னை உணர்வில் பூர்த்தியானால் மகள் நினைவு வராது; பிரமோஷனைப் பெற்றவன் மீது கோபம் வராது; தன்னை விட்டு அடுத்தவனை விரும்பும் பெண் மீது பிரியம் ஏற்படாது; அவை மாயையாக மறைந்துபோகும். அது யோக முன்னேற்றம். மகளும், பிரமோஷனும், பெண்ணும் அகன்று, அன்னை காட்சி தருவார். அன்னை நினைவு உணர்வை உத்தமம் ஆக்கும். அது நிலைக்கும். உடல் அதுபோல் அன்னையை நினைப்பது இதற்கும் அடுத்த கட்டம். இதைவிடச் சிரமமானது. அதுவும் பூர்த்தியானால், நினைவு நிலையாக இடம் பெறும்.

இடையறாத அன்னை நினைவைத் தடுப்பவை எவை, அவற்றை விலக்கி, அதைப் பெறுவது எங்ஙனம் என்பதையே கட்டுரையில் முக்கியமாக இதுவரை கருதினோம். இனி, இந்நினைவை அளிப்பவை எவை, அவற்றைப் பெறுவது எங்ஙனம், பெற்று நிலைப்பெறச் செய்யும் வகையுண்டா என்பவற்றையும் பார்ப்போம்.

அபிப்பிராயம் அழிந்து மனமும், நோக்கம் மாறி உணர்வும் அன்னையை நாடுகின்றன. மனமும், உணர்வும் முக்கியமானவை; ஆனால் ஜீவனின் பகுதிகள். ஜீவனை முழுமையாக நடத்திச் செல்வது அபிப்பிராயமோ, பழக்கமோ, நோக்கமோ அல்ல. இவற்றால் ஜீவன் நடத்திச் செல்லப்பட்டால் மனம் அல்லது உடல் அல்லது உணர்வு ஜீவனை நடத்துவதாகும். அதாவது, பகுதி முழுமையை ஆள்வதாகும். ஜீவனின் முழுமை ஜீவனுக்கேயுண்டு. இதன் ஜோதிமயமான ஆன்மீகப் பகுதி சைத்தியப்புருஷனாகும். சைத்தியப்புருஷன் நம் ஜீவனின் ஆன்மீகத் தலைவன். அதற்கு முந்தைய நிலை எது?

ஆசை அழிந்து பிராணமயப்புருஷனும், அகந்தை கரைந்து சைத்தியப்புருஷனும் வெளிப்படுகிறான். பிராணமயப்புருஷன் வெளிப்பட்ட பின் ஜீவனின் திறன் பல மடங்கு அதிகரிக்கப் படுகிறது. பிராணமயப்புருஷன் ஆட்சி செய்வது ஆழ்ந்த நோக்கம். பகவத் கீதை ஆழ்ந்த நோக்கத்தைச் சரண் செய்யச் சொல்கிறது. ஆழ்ந்த நோக்கம் வாழ்வாக – மனித வாழ்வாக – இருந்தால் பிராணமயப்புருஷன் செயல்படுகிறான். ஆழ்ந்த நோக்கம் தெய்வீக வாழ்வானால் செயல்படுவது சைத்தியப்புருஷனாகும்.

சாதாரண மனிதனுக்கு அபிப்பிராயமே இருப்பதில்லை. நாலு பேர் சொல்வதை – சமூகத்தின் அபிப்பிராயத்தை – அவனும் சொல்கிறான். சொந்தமாக அபிப்பிராயம் என்றிருப்பதில்லை. நோக்கம் சாதாரண மனிதனுக்கு (survival) பிழைத்தால் போதும். “எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும். தொந்தரவு கூடாது. நிம்மதி வேண்டும்” என்பதே பொதுவான இலட்சியம். அதுவே நோக்கம். ஆழ்ந்த நோக்கமும் மக்களுக்கு அதுவே. வாழ்ந்தால் போதும், எப்படியாவது வாழ்ந்தால் சரி, யாருக்கும் தொந்தரவு இல்லாமல், யாரையும் எதிர்பார்க்காமல் போனால் போதும் என்பவர் எளிய மனிதர். இந்த நோக்கம் மாறி இலட்சியம் எழ வேண்டும். தெய்வீக இலட்சியம் வேண்டும். நாம் அன்னையை ஏற்று, அன்னைக்காக வாழவேண்டும் என்ற நோக்கமும், அதுவே ஆழ்ந்த நோக்கமாகவும் அமைய வேண்டும். குடும்பத்திலுள்ளவன் கடமைக்காகவும், உயர்ந்தவன் அன்புக்காகவும் வாழ்கிறான். தேசபக்தன் நாட்டின் மீதுள்ள அன்புக்காக உயிர் வாழ்கிறான். மனித குலத்தை நேசித்த பெருமக்கள் பலர். அதையும் தாண்டித் தெய்வத்திற்காக, தெய்வ அன்பிற்காக வாழும் நோக்கம் எழுந்து, அதுவே ஆழ்ந்த நோக்கமானால், அந்தத் தெய்வம் அன்னை ஆகும்பொழுது, மனம் அன்னையில் லயிக்கும், அன்னையை நாடும், அன்னை நினைவு எழுந்தபடியிருக்கும். அந்நினைவு இடையறாதும் இருக்கும்.

நமக்கென ஓர் ஆழ்ந்த நோக்கம் இருந்தால் அது குடும்பத்தின் கடமையைப் பூர்த்தி செய்வதாக இருக்கும். அதன் அன்பைப் பெறுவதாக அமையும். நாட்டின் நலன் கண்களில் நீரைப் பெருக்கும். உலகம் உய்ய உத்தமர் நெஞ்சம் நிறைந்து தழுதழுப்பது உண்டு. இவை உயர்ந்த நல்ல ஆழ்ந்த நோக்கங்கள். இது போன்றவையுள்ள மனிதன் அன்னை மீது இடையறாத நினைவை நாடினால், இன்றுள்ள நோக்கத்தைச் சரணம் செய்து அன்னை வாழ்வான தெய்வீக வாழ்வை நாடி, அதையே தன் ஆழ்ந்த நோக்கத்தின் குறிக்கோள் ஆக்கினால், அன்னை நினைவு இடையறாது எழும்.

இடையறாதெழும் அன்னை நினைவு, சில சமயம் அன்னை தரிசனமானால் நினைவு நிலைத்துவிட்டதெனப் பொருள். இடையறாத அன்னை தரிசனம், இடையறாத அன்னை நினைவுக்கு அடுத்த உயர்ந்த கட்டம் என்பதால், அது தென்பட ஆரம்பித்த உடன் முந்தைய நிலை, நிலைபெற்றுவிட்டதாக நாம் அறியலாம்.

இடையறாத அன்னை தரிசனம்:

நினைவு முதிர்ந்து தரிசனமாகிறது. நினைவு மனத்திற்குரியது. மனத்தின் ஒரு பாகமான எண்ணம் நினைவால் நிறைந்தபொழுது நினைவு நிரந்தரமாகிறது. தரிசனம் காட்சிக்குரியது. அதன் நிலைகள் பல.

நிஷ்டையிலுள்ள தபஸ்வி கண் மூடியிருக்கும்பொழுது அவர் மனம் காட்சிகளைக் காண்கிறது. கண் புலன், காண்பது மூளை. மூளையில் காட்சிக்கும், ஒலிக்கும், சுவைக்கும் உள்ள நரம்பு மையங்கள் உள்ளன. கண், காட்சியை இந்த நரம்பு மையத்திற்கு அறிவிக்கிறது. மனம் அதைக் காண்கிறது. காண்பது கண் அல்ல. காண உதவும் கருவி கண். சாப்பிடுவது வாய், கையல்ல. சாப்பிட உதவும் கருவி கை. கண் முழுவதும் சரியாக இருந்து, மூளையில் காணும் பகுதி பழுதானால் கண்ணுக்குப் பார்வையிருக்காது. பார்ப்பது

மனம், புலன் உதவியால் மனம் பார்க்கிறது. புலன் உதவியின்றும் மனம் பார்க்க முடியும். அதற்கு மனம் புலனிருந்து விடுபட வேண்டும். நிஷ்டை புலனை – கண்ணை – அவிப்பதால், மனம் நிஷ்டையில் விழித்துக்கொண்டு பார்க்கிறது. இது சூட்சுமப் பார்வை. மனம் இதுபோல் கேட்கும், சுவைக்கும், தொட்டு உணரும், வாசனையறியும்.

மனத்திற்குரிய இத்திறன் உணர்வுக்குண்டு. உணர்வு என்பது (vital) பிராணன் எனப்படும். ஆசையுள்ள மையம் இது. உணர்வால் இந்த 5 புலன்களாக மனம்போல் செயல்பட முடியும். சினிமா பாட்டை நாள் முழுவதும் கேட்டு ரசித்து, அதிலேயே திளைப்பவர் வயிற்றிலிருந்து – நாபி – பாட்டு கிளம்புவதை அறிவார். உணர்ச்சி வசப்பட்ட பக்தர்கள் தாம் வணங்கும் கடவுள்களை இங்குக் காண்பதுண்டு. உடலுக்குத் இத்திறனுண்டு. ஐம்புலன்களின் திறன் உடையது உடல். நாம் அவற்றை நாகரிகம் பெற்றபின் இழந்து விட்டோம். உடலால் காண முடியும், கேட்க முடியும். மூலாதாரத்தில் உடல் காட்சிகளைக் காண்பதுண்டு. (அன்னையின் உருவத்தை மூலாதாரத்தில் கண்டால், வியாதி மறையும்). இவை மனத்தின் காட்சி, உணர்வின் காட்சி, உடலின் காட்சிகளாகும். உணர்வு மார்பிலும் காண்பதுண்டு. மார்புக்குப் பின் ஆன்மா – சைத்தியம் – உள்ளது. அங்குக் காண்பது ஆன்மீகக் காட்சி; ஆன்மா பெறும் தரிசனம். நாம் அதையே “தரிசனம்” என்கிறோம்.

புலன்கள் அவிந்தால் மனம் காட்சியைக் காண்கிறது என்றோம். ஆன்மா எப்பொழுது தரிசனம் காணும்? ஜீவன் கரணங்கள் – மனம், உடல் – மூலம் வெளிநடந்து இயங்குகிறது. அதுவே வாழ்வு. ஜீவன் கரணங்களில் ஈடுபடுவது குறைந்து, அழிந்தால், அதாவது ஜீவன் கரணங்களிலிருந்து விடுபட்டால், விடுதலையடைந்தால், ஆன்மா விழிப்புறும். விழிப்புற்ற ஆன்மா காட்சியைக் காணவல்லது. காட்சி தரிசனமாகும். ஆசிரம தரிசன நாட்களில் சூழல் செறிந்திருக்கும் வேளை என்பதால் தியானத்தில் அன்னை தரிசனம் தருவார். பிறந்த

நாள், தரிசனத்திற்குரிய நேரம். தியானம் ஆழ்ந்த நேரம் தரிசனம் கிடைக்கும். விழிப்பான நேரத்தில் கிடைக்கும் அன்னை தரிசனம் பூரணயோகத்திற்குரிய தரிசனம். பூரணயோகம் விழிப்பில் நிஷ்டையை நாடுவதால், விழிப்பிலும் தரிசனம் உண்டு. அது சிறப்பு.

உயர்ந்த மனம் (higher mind) எண்ணத்தை இழந்த நிலையில் ஞானம் பெறுவது. இடையறாத அன்னை நினைவு இம்மனத்திற்கு உரியது. சத்வ குணமுடையது இம்மனம். முனிவர் நிலைக்குரியது இது. ஒளிமயமான மனம் ( illunined mind) ஞானத்தை ஜோதியாகப் பெறுவது. இடையறாத அன்னை தரிசனம் இதற்குரியது. இது ரிஷியின் நிலை. இதற்கடுத்தது யோகியின் நிலை. இங்கு எண்ணமோ, ஒளியோ இல்லை. ஞானம் நேரடியாக உள்ளது. இங்கு அன்னை ஞானம் இயல்பாக அமைந்துள்ளது. நம் ஜீவியம் ஞானமாக மாறுமிடம் இது.

இடையறாத தரிசனம் பெற, முதலில் இடையறாத நினைவு நிலைக்க வேண்டும். மனம் ஆன்மா ஒன்றி லயிக்க வேண்டும். எண்ணங்களும், செயல்களும், மனத்திலிருந்து எழுவதற்குப் பதிலாக, ஆன்மாவிருந்து எழ வேண்டும். கரணங்கள் – மனம், உயிர், உடல் – தங்கள் முனைப்பை இழந்து அமைதியடைய வேண்டும்.

பொதுவாக, காட்சிகள் அகத்தில் எழுந்து, ஆன்மாவை அடைய வேண்டும். பொதுவான காட்சிகள், அன்னையாக மாறி, அது ஆன்ம தரிசனமாகி, அன்னை தரிசனமாகி, அடிக்கடி ஏற்பட்டு, நிலையாகி, நிரந்தரமாக வேண்டும். இடையறாத நினைவுக்குச் சொல்லிய 20 கருத்துக்களும் இடையறாத தரிசனத்திற்குப் பயன்படும். எந்த சப்தம் கேட்டாலும் அன்னையை நினைக்க வேண்டுமென்றோம். இதற்கு “நினைப்பை”, “காண வேண்டும்” என மாற்றிக்கொள்ள வேண்டும். அன்னை தரிசனத்தின் வகை பல. வானளாவ அன்னை காட்சியளிப்பதிருந்து, உள்ளே தரிசனம் தரும் வரை பல நிலைகள்

உண்டு. எல்லாப் பொருட்களும் அன்னையாகக் காட்சியளிப்பதுவே முடிவான தரிசனம்.

12. சுத்தம்:

சுத்தம், புறத் தூய்மை, அகத் தூய்மை என இரு பகுதிகளாகும். இரண்டும் இருந்தால் சிறப்பு. வாழ்க்கையில் அது முழு யோகம். அகத் தூய்மை மிக உயர்ந்தது. அதை நான் இங்கு எடுத்து விளக்கவில்லை. புறத் தூய்மையை மட்டுமே குறிப்பிடுகிறேன். அதற்குரிய சிறப்பை விளக்கவே இப்பகுதியில் முயல்கிறேன். (purity of atmosphere) வீட்டுச் சூழல் தூய்மை என்றும் ஒன்றுண்டு. அன்னையின் திருவுருவப்படம் அந்தத் தூய்மையை வளர்க்கும். தெய்வச்சிலை, படங்கள் அதை வளர்க்கும். குட்டிச்சாத்தானை வணங்கினால், சித்து விளையாடுபவர்களுடன் தொடர்புகொண்டால் அந்தத் தூய்மை கெட்டு, இருளின் சூழல் ஏற்படும். பிறருக்குத் தீங்கு செய்யும் மந்திரப் பிரயோகங்கள் உள்ளவர்களுடன் தொடர்பு கொண்டால், அவர்கள் சம்பந்தப்பட்ட பொருள்கள், படங்கள் வீட்டிருந்தால், அன்னையின் திருவருள் அங்கு செயல்படாது. அப்படியே செயல்பட்டாலும் மிகக்குறைந்த பலனையே தரும்.

வீட்டில் புறத் தூய்மை என்றால் என்ன? என்பது எளிமையான கேள்வியாகத் தோன்றுகிறது. அன்னையின் சக்தி (Mother’s Force) (supramental Force) சத்தியஜீவிய சக்தியாகும். அது ஓர் இடத்தில் வர, வந்து நிரந்தரமாகத் தங்க, புறத் தூய்மை (physical cleanliness) அத்தியாவசியம். இது எவ்வளவு முக்கியமானது, கடினமானது என்பதை விளக்க ஒரு நிகழ்ச்சியைச் சொல்லுகிறேன். ரூ.25 இலட்சம் செலாவணியுள்ள கம்பெனி முதலாளியின் மனைவி கல்லூரிப் பேராசிரியர். அவர்களுடைய வீட்டில் முக்கிய விருந்து நடந்த அன்று உள்ளே நுழைந்தவுடன் நமக்கு அறிமுகமானது “அழுக்கு வாடை”. வீட்டில் பல நாட்களாகச் சேர்ந்துள்ள தூசி, அழுக்கு,

அழுக்குத் துணிக்குவியல், இவை எல்லாவற்றையும் மறைத்து வைத்தாலும் தாங்கள் இருப்பதை அறிவிக்க அவை வாடை மூலம் நம்மை வந்து அடைகின்றன.

கையை வைத்த இடங்கள் தூசியில்லாமல் இருப்பது என்பது எத்தனை வீடுகளில் இருக்க முடியும்? நம் வீட்டிற்கு அந்தத் தகுதி உண்டா? சுவரில் மாட்டியுள்ள படங்களைத் தொட்டுப் பார்த்தால், விரலால் கோடிட்டுப் பார்த்தால், நாம் எத்தனை நாளைக்கு ஒரு முறை அந்த படங்களைச் சுத்தம் செய்கிறோம் என்பது நினைவுக்கு வரும். “குடித்தனம் செய்யும் பெண்ணின் சுத்தத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால், அலமாரிக்கு அடியில் பார்த்தால் தெரியும்” என்பார்கள். நாம் தினமும் குளிக்கின்றோம். சிலர் தலையில் தினமும் தண்ணீர் விட்டுக் கொள்வார்கள். தலைமுடி நீளமாக இருப்பதால் தமிழ்நாட்டுப் பெண்கள் தினமும் தலையை நனைப்பதில்லை. வங்காளத்தில் அந்தப் பழக்கம் உண்டு. தலையை தினமும் நீராட்டாவிட்டால் தலையில் அழுக்கு சேர்வது இயல்பு. வீட்டைப் பெருக்குகிறோம். ஆனால் வீட்டில் உள்ள மேஜை, நாற்காகளைத் தட்டுகிறோம். அவற்றில் உள்ள தூசி நாம் பயன்படுத்துவதால் அகற்றப்படுகிறது. தினமும் மேஜை, நாற்காலி, படம், அலமாரி, இவற்றை நாம் சுத்தம் செய்வதில்லை. அதிகக் குப்பை சேர்ந்தால் சுத்தம் செய்கிறோம். படங்களுக்குப் பின்புறம், சோபா சீட்டிற்கு அடியில், அலமாரிக்குப் பின்புறம் ஒட்டடை சேரும். எண்ணெய் பொருள்கள் உபயோகிக்கப்படுவதால், பெஞ்சு, ஸ்டூல், முதயவற்றில் அழுக்கு படை படையாக ஒட்டிக்கொண்டு இருக்கும். சமையல் அறை ஆசாரமானவர்கள் வீடுகளில் சுத்தமாக இருக்கும். மற்ற வீடுகளில் சுத்தமாக இருக்காது. (store foom) சாமான்கள் அறை ஒரு வீட்டில் சுத்தமாக இருந்தால், அதை மிகச் சுத்தமான வீடாக நாம் கருதலாம். ஜன்னல், கதவு, மேஜைக்கு அடிப்புறம் முதல் ஆரம்பித்து ஸ்டோர் அறை வரை எல்லா இடங்களையும், எல்லாப் பொருள்களையும், எல்லா நேரத்திலும் சுத்தமாக வைத்துக்கொள்ளும் அவசியத்தை நாம் உணர

வேண்டும். உணர்ந்தவர்களுக்கு ஒரு பிரச்சினை. ஆபீஸ் வேலை, குடும்பப் பொறுப்பு, மற்ற காரியங்களை நிறைவேற்றியபின், இந்த அளவு வீட்டில் தூய்மையை நிலைநிறுத்த முடியுமா என்பது கேள்வி. என்னுடைய பதிலுக்கு இரு பகுதிகள் உண்டு. 1. இந்த அளவு தூய்மையை நம் இன்றைய அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக நிறைவேற்றுவது இயலாத காரியம். 2. தூய்மையை நாம் அன்னையின் வழிபாடாக ஏற்றுக்கொண்டு அதை நிறைவேற்ற கங்கணம் கட்டிக்கொண்டால், நம் அத்தியாவசியமான வேலைகள் எதற்கும் குந்தகமின்றி நிறைவேறும். அத்துடன் நம் அத்தியாவசியமான வேலைகள் சிறப்புறும். என் இரு பதில்கள் முரணானவைபோல் தோன்றுகின்றன. முரண்பாட்டை நீக்கி, விளக்கம் கொடுக்கிறேன்.

பொதுவாக நாம் ஆபீஸ், குடும்ப வேலைகள் முடிந்தபிறகு, முக்கியமாக நேரத்தைச் செலவிடுவது எதில் என்று பார்த்தால், சினிமா, நண்பர்களை வரவேற்றுப் பேசுவது, விசேஷங்களுக்குச் சென்று அதிகபட்ச நேரத்தைச் செலவிடுவது, சாரமில்லாத பத்திரிகைகளைப் படிப்பது, அக்கம் பக்கத்துச் செய்திகளை அத்தியாவசியமாகச் சேர்ப்பது என்பன போன்ற செயல்களில் என்று தெரியும்.

மாறாக, பரீட்சைக்குப் படிக்கும்பொழுது, வீடு மாற்றும் பொழுது, திருமணம் ஏற்பாடு செய்யும்பொழுது, எப்படி அவற்றிற்கு முக்கிய முதலிடம் கொடுத்து, பின்னரே அன்றாட வேலைகளை இரண்டாம்பட்சமாகச் செய்கிறோமோ, அதுபோல், “வீட்டின் சுத்தம் அன்னை வழிபாடு” எனக் கொண்டு, அதற்கு முதலிடம் கொடுத்து, வீட்டில் உள்ள அனைவரும் திருமணத்திற்கு வேலை செய்வதைப் போல் வேலை செய்து, சுத்தத்தை முழுத் திருப்தியுடன் பூர்த்தி செய்த பிறகு கவனித்தால், ஆபீஸ் வேலை, குடும்பப் பொறுப்பு, அத்தியாவசியமான கடமைகள் எதுவும் தடைபடவில்லை என்று தெரியும். சுத்தத்தைத் தலையாய காரியமாக மேற்கொண்டு நிலைநிறுத்தியபின் நேரமில்லை என்பது வம்பளப்பதற்கு, ஊர்

சுற்றுவதற்கு, சினிமா பார்ப்பதற்குத்தானே அன்றி, அவசியமான கடமைகளுக்கு நேரமில்லாமல் இல்லை என்பது தெரியவரும். இந்த முறையின் ரகஸ்யமே அதுதான். வீணான காரியங்களில் மனதைச் செலுத்தாமல் இருக்க முடிவு செய்தால்தான் சுத்தத்தைத் திருப்தியாக நிறைவேற்ற முடியும்.

அப்படிப்பட்ட சுத்தம் அன்னைக்குச் சிறந்த வழிபாடு. அந்த வழிபாடு ஒன்றே வாழ்க்கைச் சிறப்பைத் தேடித் தரும்.

13. ஒழுங்கு (Orderliness):

ஒழுங்கு என்பது (discipline) கட்டுப்பாட்டைக் குறிக்கும். இங்கு ர்ழ்க்ங்ழ்ப்ண்ய்ங்ள்ள் என்ற கருத்தை ஒழுங்கு என்ற சொல்லால் குறிக்கின்றேன். Discipline, regularity என்பவற்றுக்கும், ஒழுங்கு என்ற தமிழ்ச் சொல் பொருந்தும். என்றாலும், Orderliness என்பதே என் தலைப்பு. அதைக் குறிக்கவே ஒழுங்கு என்ற சொல்லைப் பயன்படுத்துகிறேன்.

பொதுவாக (discipline) கட்டுப்பாடு என்றால் என்ன என்பது எல்லோருக்கும் தெரியும். அதேபோல் regularity என்றாலும் தெரியும். இவை இரண்டையும் நீக்கி (orderliness) ஒழுங்கு என்ற கருத்தை மட்டுமே இங்கு நான் கருதுகிறேன். மேலும் தெளிவுபடுத்த வேண்டுமானால் (clumsiness) குழறுபடி என்ற கருத்துக்கு எதிரானது ஒழுங்கு என்று நான் குறிப்பிடுவது.

அலமாரியில் உள்ள புத்தகங்கள், மேஜை மீதுள்ள பொருள்கள், ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே இங்கு கூறப்படும் கருத்து. அலமாரி, மேஜையில் ஆரம்பித்து, வீட்டில் உள்ள எல்லா இடங்களிலும் உள்ள எல்லாப் பொருள்களும் – தலையணை, பாய், பெட்டி, படுக்கை, சமையல் சாமான்கள், மற்ற அறைகளில் உள்ள பொருள்கள் – வேலை நடக்காத நேரத்தில் அழகாகவும்,

அடுக்காகவும், வரிசையாகவும், ஒழுங்காகவும், நிரந்தரமாகவும் இருக்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும். இதையே ஒழுங்கு என்று நான் குறிப்பிடுகிறேன். ஒழுங்கு இருந்தால், அதற்குரிய சுத்தம் தேவை என்பதைச் சொல்லத் தேவையில்லை.

வீட்டில் உள்ள பொருள்கள் பலவகைப்பட்டவை; சமையல் சாமான்கள், கடப்பாரை, அரிவாள் போன்ற கருவிகள், புத்தகங்கள், படுக்கை சம்பந்தப்பட்டவை, எப்பொழுதோ உபயோகிக்கப்படும் பொருள்கள் எனப் பல தரப்பட்டவை. அவையெல்லாம் உபயோகமில்லாதபொழுது ஒழுங்காக, சுத்தமாக அடுக்கி வைக்கப் பட்டிருக்க வேண்டும்.

ஓர் எலெக்டிரிக் பில் வேண்டுமானால், L.I.C. ரசீது வேண்டுமானால், B.A. சர்ட்டிபிகேட் வேண்டுமானால் வீடு முழுவதும் தேடுவது பெரும்பாலோர் பழக்கம். அப்படியின்றி, எவை, எங்கு இருக்கின்றன என்ற தெளிவுடன் வைக்கப்பட்டு இருந்தால், ஒன்று வேண்டும் எனும்பொழுது நேராகச் சென்று எடுத்துக்கொள்ளலாம். அந்த அளவுக்கு ஒழுங்குமுறை தேவை. இம்முறையின் சிறப்பு மனதில் இருக்கிறது. மனம் முறையாக இருந்தால்தான், பொருள்களை முறையாக வைக்க முடியும் (பொருள்களை ஒழுங்குபடுத்தி வைக்க வேண்டும் என்பதன் மூலம், மனத்தை முறைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே பொருள்). முறைப்படுத்தப்பட்ட மனத்தில் அன்னையின் சக்தி தீவிரமாகச் செயல்படும்.

இதைச் செய்வதில் என்ன கஷ்டம்? ஒருவர் இதைக் கையாள ஆரம்பித்தால் 2, 3 நாட்களுக்குப்பின் அதை விட்டுவிடுவார். அப்படியே அவர் தொடர்ந்து செய்தாலும், இவர் அடுக்கி வைப்பதையெல்லாம் மற்றவர் கலைத்துக்கொண்டே வருவார். அவருக்குப் பயித்தியம் பிடித்துவிடும்.

வெற்றிகரமாக, தொடர்ந்து, சிறப்பாக ஒழுங்கைக் கடைப்பிடிக்க

வேண்டுமானால், அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். முதலில் வீடு முழுவதையும் ஒழுங்குபடுத்தியபின் அவரவர்கள் தங்கள், தங்கள் பகுதியில் ஒழுங்கைக் கலைக்காமல் தொடர்ந்து கடைப்பிடிக்க ஒத்துக்கொள்ள வேண்டும். அந்த ஒத்துழைப்பில்லாமல் இதைச் செய்ய முடியாது.

சுத்தம் (Supramental Force) அன்னையின் சக்தி வந்து தங்க அவசியம் என்பதைப்போல், ஒழுங்கு, குறிப்பாக மனத்தில் ஒழுங்கு, அன்னையின் சக்தி நம்முள் வந்து செயல்படவும், தங்கவும் அவசியம். சிறப்பாக இதைச் செய்து முடிக்க வேண்டுமானால்,

  • 1. நாம் முதலில் நம் மனத்தில் தீர்க்கமான முடிவை எடுத்து, ஒழுங்கைப் பூரணமாக ஏற்படுத்தி, தொடர்ந்து நிலைநிறுத்த வேண்டிய அவசியத்தை உணர வேண்டும்.
  • 2. வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் நம்மைப் போன்ற தீவிர முடிவுக்கு வரவில்லை என்றாலும், செய்து வைத்த ஏற்பாடுகளைக் கலைக்கக்கூடாது. தொடர்ந்து இருக்க வேண்டும் என்ற அளவிலாவது தீவிரம் கொள்ள வேண்டும்.
  • 3. ஒழுங்கைப் பூரணமாக நிலைநாட்டத் தேவையான மற்ற பழக்கங்களை விரும்பி ஏற்றுக்கொள்ள வேண்டும்.
  • 4. மாதம் ஒரு முறை அல்லது இரு முறை முதலில் ஏற்படுத்திய அளவுக்கு ஒழுங்கை மீண்டும் திருத்தி அமைக்க வேண்டும் (Every month the original level of orderliness must be restored).
  • 5. ஒவ்வொரு மாதமும் அல்லது வாரமும் ஒழுங்கின் தரத்தைச் சிறிதளவு உயர்த்த வேண்டும்.

14. தணிவான பேச்சு:

பொதுவாக நாம் உயர்ந்த குரலில் பேசுகிறோம் என்பது நமக்கே தெரிவதில்லை. மேலைநாட்டார் குழுமியுள்ள இடத்தில் நாம் பேசும்பொழுது அவர்கள் குரல் அளவுக்கும், நம் குரல் அளவுக்கும் உள்ள மாறுபாடு தெரியும்.

பேச்சு என்பது சக்தி (energy). சக்தி என்பது செல்வம். பேச்சைக் குறைத்தால் சக்தி சேரும். சக்தி சேர்ந்தால், பணம் சேரும். அதிக அளவு செல்வத்தைப் பெற பேச்சைப் பெரிதும் குறைத்தல் நலம்.

முதலில் நாம் உயர்ந்த குரலில் பேசுகிறோம் என்று உணர வேண்டும். எதிரில் உள்ளவர்கட்குக் கேட்கும் அளவிலேயே குரலைத் தாழ்த்திப் பேச முயன்று, வெற்றி காணவேண்டும். அதன் பின்னர் பேச்சின் அளவு (i.e number of words) குறைக்கப்பட வேண்டும். ஒரு 10 நிமிஷம் நாம் பேசியபின் – சுமார் 800, 1000 வார்த்தைகள் 10 நிமிஷத்தில் பேசப்படும் – மீண்டும் நாம் சொல்லியவற்றை நினைவுகூர்ந்து அதற்கு ஒரு (precise) சுருக்கம் எழுத வேண்டும். அப்படிப் பார்த்தால் அதே கருத்துகளைச் சுமார் 40, 50 வார்த்தைகளில் சொல்லியிருக்கலாம் என்றுத் தெரியும். குரலின் அளவைத் தாழ்த்தியும், வார்த்தைகளின் ஓட்டத்தைச் சுருக்கியும் பேச வேண்டும்.

குரலைத் தாழ்த்துவதால் நாம் நம் பிராணனை (vital) நம் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருகிறோம். வாழ்க்கையை நடத்துவதே பிராணன் என்பதால், பிராணன் கட்டுப்பட்டால் வாழ்க்கை கட்டுப்படும். கட்டுப்பட்ட வாழ்க்கையின் மூலம் அன்னை செயல்படுவது எளிது. வாழ்க்கை நமக்குக் கட்டுப்பட்டு விட்டதால், அன்னையால் நம் வாழ்க்கையை எளிதில் வளப்படுத்த முடியும்.

தாழ்ந்த குரலும், குறைந்த சொற்களும், உயர்ந்த வாழ்க்கை நிறைந்து விளங்க உதவும்.

15. சண்டைகளைத் தவிர்த்தல்:

வாய்ச்சண்டை (quarrel), வாக்குவாதம் (discussion), ஒருவரோடு ஒருவர் பேசாமருத்தல் (disharmony), பிணக்கு (conflict), விதண்டாவாதம் (contention) ஆகியவை நம் வாழ்வில் பங்குபெறுகின்றன. “நாலு பேர் சேர்ந்தால் சண்டை வராமல் இருக்காது”, “எவ்வளவு பெரிய இடமானால் என்ன, அங்கே போய்ப் பார்த்தால் தெரியும். எங்கேயும் இதெல்லாம் இருக்கும்”, “சென்ட்ரல் காபினெட்டிருந்து, உள்ளூர் காலேஜ்வரை சண்டையில்லாத இடமே இல்லை”, “பெரிய மதாசாரியார்களெல்லாம் தவிர்க்க முடியாததை, நம் வீட்டில் இருக்கக்கூடாது என்றால் எப்படி அது நடக்கும்?” என்றெல்லாம் சொல்லி, நாம் சண்டையிடுவது சகஜம் என்று கொள்கிறோம்.

நாம் பழகும் இடத்தில் எந்தச் சண்டையும் என்னால் வரக் கூடாது என்ற முடிவை ஓர் அன்பர் கொண்டால், சண்டைகளைத் தவிர்ப்பதே என் கொள்கை என்றொருவர் ஆரம்பித்து அதில் வெற்றி பெற்றால், அன்னையிடம் அவர் பரிசு பெறலாம். இப்படி ஒருவர் சொன்னால் அதற்கென்ன அர்த்தம்? அவர் மனதில் வெறுப்பு, கசப்பு, பிணக்கு, பொறாமை இல்லை என்று பொருள். அந்த வெற்றியை அவர் பெற்றபின் அவர் நெஞ்சம், அன்னையின் பொக்கிஷம்.

சண்டைகளைத் தவிர்க்க நாம் என்ன செய்யலாம்?

  • 1. சண்டை அன்னைக்குப் பிடிக்காது என்பதால், அதை அறவே நீக்க வேண்டுமென முடிவு செய்தல்.
  • 2. நம்முடன் ஒருவர் சண்டைக்கு வந்தால், “இதற்கு நான் எப்படித் துணையாவேன், அந்தக் காரணத்தைக் கண்டுபிடித்து

விலக்குவேன்” என்ற கொள்கையை மேற்கொள்ள வேண்டும்.

  • 3. பிறர் சொல்வதில் உள்ள உண்மையை அலசிப் பார்த்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • 4. நம் கருத்தில் உள்ள தவற்றை ஆராய்ந்து விலக்க வேண்டும்.
  • 5. நம் பழக்கத்தில் சண்டையை வளர்ப்பதற்குத் துணையானவற்றைக் கண்டு விலக்க வேண்டும்.

16. குறை கூற மறுத்தல்:

அன்னை (psychic education) சைத்தியப்புருஷனை முன் கொண்டுவரும் கல்வி என்ற பகுதியில் 10 சட்டங்களைச் சொல்கிறார். இது அவற்றில் ஒன்று.

மேல்நாட்டு மனநூல் (psycology) துறையில் ஒரு வாசகம் உண்டு. “உனக்கு ஒருவரைப் பற்றித் தெரிய வேண்டுமானால், அவரைத் தூண்டி பிறரைக் குறைகூறச் சொல். பிறர் மீது அவர் கூறும் எல்லாக் குறைகளும் அவரிடம் இருக்கும்”. நம்மிடம் உள்ள குறைகள் நம் கண்ணுக்குத் தெரியாது. ஆனால் உண்மையிலேயே, நம் குறைகளை – நமக்குத் தெரியாதவற்றை – நாம் விரும்புவது இல்லை; வெறுப்பதும் உண்டு. பிறரிடம் நம் குறைகளைக் கண்டவுடன் நம் வெறுப்பு வெளிப்படுகிறது. பிறர் மீது நாம் குறை கூறுவதன் மூலம் நாம் நம்மிடம் உள்ள குறைகளை வெளிப்படுத்துகிறோம். நாம் அவர் மீது குறை சொல்லிவிட்டால் மனம் திருப்தியாகிவிடுகிறது. குறை சொல்லாவிட்டால் அந்தச் சக்தி ( energy) நம்மைத் திருத்திக்கொள்ள உதவும். குறையைச் சொல்லிவிட்டால் நம்மைத் திருத்திக்கொள்ளும் வாய்ப்பை இழந்துவிடுகிறோம்.

“பிறரைத் திருத்த முடியவில்லை என்றால், அவர் மீது குறை கூறாதே” என்கிறார் அன்னை.

பிறரிடம் ஒரு குறையைக் கண்டபின், அதைப் பேச மனம் துடிக்கும். அந்தத் துடிப்பு நமக்குக் கட்டுப்படாது. அவருடைய குறைக்குக் காரணம் புரிந்துவிட்டால், குறை சொல்லத் தோன்றாது. ஆகவே குறையைச் சொல்வதற்குப் பதிலாக, அதன் காரணத்தை அறிய முற்பட வேண்டும். அந்தக் குறையுள்ள மனிதனுடன் நாம் பழகவேண்டியது எதனால்? நம்மிடம் உள்ள ஒரு குறையே குறை உள்ள ஒரு மனிதனை நம்மிடம் கொண்டு வந்துள்ளது என்று உணர வேண்டும். நம் குறையை அகற்றினால், அவர் மாறுவார் அல்லது நம்மை விட்டகலுவார்.

ஓர் இளைஞன் தன்னைவிட 10 வயது பெரியவர் ஒருவருடன் பழகினான். பெரியவருடைய முழு சுயநலம் இளைஞனைப் பாதித்தது. ஏன் சுயநலமி என்னிடம் வரவேண்டும்? என யோசனை செய்தான். சுயநலம் நிரம்பியவருடனும், அவர் மனம் கோணாமல் தன்னால் பழக டியும் என்று தான் பெருமைப்படுவதை உணர்ந்தான். அடுத்த நாளிலிருந்து அந்தச் சுயநலமிக்கு வேறு வேலை வர இவர்களுடைய சந்திப்பு 1%ஆகக் குறைந்துவிட்டது.

யார் மீதுள்ள குறையையும் வெளியில் சொல்ல முழுவதுமாக மறுத்தால், நம் மனத்திலுள்ள குறைகளை அகற்ற முடியும். இது அன்னை விரும்பும் மனப்பாங்கு. இதை ஏற்று பூரணமாகப் பயின்றால், அன்னை நம்மிடம் பூரணமாக வந்து தங்குவார்கள்.