மனத்தையும், ஜடத்தையும் விலக்கினால் மீதியுள்ளவை அனைத்தும் வாழ்வு (life) என்ற தலைப்பில் வரும். நாம் அறிந்தது குடும்ப வாழ்வு, சமூக வாழ்வு, உலக வாழ்வு ஆகும். குடும்பம் சமூகத்திலிருந்து ஓரளவு மாறுபடுவதை நாம் எளிதில் புரிந்து கொள்ளலாம். அதே போல் சமூக வாழ்வு உலக வாழ்வில் ஒரு பகுதி என்பதும் தெளிவு. சமூகம் என்பது நாகரீகமடைந்த மனிதனை மட்டும் சொல்கிறது. அதைத் தாண்டிய மனிதர் ஓரளவும், மற்ற ஜீவராசிகள் ஏராளமாகவும் இருக்கிறார்கள். வாழ்வு எனப்படுவதன் பகுதிகள் இவை. மனிதன் ஏற்படுவதன் முன் ஏற்பட்டது வாழ்வு. வாழ்வின் உண்மைகள் என்று நான் குறிப்பிடுவது எல்லா நாட்டிற்கும் பொருந்தும்; எல்லா காலத்திற்கும் பொது. ஒரு நாட்டுச் சட்டம் அடுத்த நாட்டில் செல்லாது. ஓர் ஊர்ப் பழக்கம் அடுத்த ஊருக்குப் பொருந்தாது. ஆனால் உயிருள்ள அனைத்திற்கும் பசியுண்டு, உறக்கம் உண்டு, மரணம் உண்டு, வலியுண்டு. அதே போல் வாழ்வின் முழுமைக்கும் பொருத்தமான உண்மைகளைக் கீழே தருகிறேன். ஆகர்ஷண சக்தி பிரபஞ்சத்திற்குப் பொது.
அன்னை வாழ்வை ஏற்று, யோகம் செய்தவர்கள்; வாழ்வைப் புறக்கணிக்கும் யோகத்தைப் புறக்கணித்தவர்கள்; வாழ்வை ஏற்று, அதைத் தெய்வீக வாழ்வாகத் திருவுருமாற்றம் செய்ய முனைந்தவர்கள். எனவே வாழ்வின் அம்சங்களையும், குணங்களையும், தன் சட்டங்களையும் தெளிவாகப் புரிந்துகொண்டால், அன்னையை அதிகமாகப் புரிந்துகொள்ளலாம். இவை ஆன்மீகச் சட்டங்களில்லை; மனிதன் வகுத்தவையல்ல; சர்க்கார் ஏற்படுத்தியவை அல்ல. உதாரணமாக, பயிற்சியால் மனிதன் எட்ட முடியாத நிலையில்லை என்பது மனிதனுக்கும், நாய்க்கும், கிளிக்கும் பொருந்துவதோடு, தாவரங்களுக்கும் பொருந்தும். அவை போன்றவற்றை எழுதி, அவற்றில் விளக்கம் தேவைப்பட்டவைகளுக்கு மட்டும் விளக்கம் தருகிறேன்.
- எந்த மனிதனையும் பயிற்சி அவன் உள்ள சூழ்நிலையின் உச்சக்கட்டத்திற்குக் கொண்டு போகும்.
இக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு 100 ஆண்டுகட்கு முன் பெர்னாட்ஷா ஒரு நாடகம் எழுதியிருக்கின்றார். அதை “ஸ்ரீ அரவிந்த அன்னை” ஆகஸ்ட் 91 இதழில் விமரிசித்து நீண்ட கட்டுரை எழுதியிருக்கின்றேன்.
- பிறப்பாலும், வளர்ப்பாலும் கிடைக்காத மனிதத் தன்மை, பின்னர் கிடைக்காது.
மனிதக் குழந்தையாகப் பிறந்தாலும் காட்டிலேயே வளர்ந்தால், மிருகம் போலவே வாழ்கிறான் என்பதைச் சமீபத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சி காட்டுகிறது. காட்டில் காணாமற்போன குழந்தை முட்டி போட்டு நடப்பதையும், பேச முடியாமல் ஊளையிடுவதையும் கண்டார்கள். வளர்த்தால், நாம் வளர்ப்பது போல் குழந்தை வளரும். நம் குழந்தைகளைப் பற்றி நாம் சொல்லும் குறை, நம்மையே சொல்லிக்கொள்வதாகும். எப்படி அன்பாக வளர்த்தாலும், பிறப்பில் அன்பில்லாத குழந்தைக்கு அது வாராது. புத்திசாலித்தனம், உடல் அமைப்புப் போல அன்பும், மனிதத் தன்மையும் பிறப்பில் பெற்றோர் கொடுப்பது. அது ஒரு வரையறையை ஏற்படுத்திவிடும். அது போக, இருப்பதை நாம் பேணி வளர்க்க வேண்டும். இவை இரண்டுமே ஒருவரின் மனிதத் தன்மையை நிர்ணயிக்கும்.
- அவசரமாகச் செயல்படுவதை நாம், ஆர்வமாகச் செயல்படுவதாக அறிகிறோம்.
- சமூகம் நம்மை இலட்சிய வாழ்வுக்குத் தயார் செய்வதில்லை. எப்படியாவது பிழைக்கக் கற்றுக் கொடுக்கின்றது.
- நம்முடைய ஆழ்ந்த உணர்வை நாம், தெய்வம் என உணர்கின்றோம்.
தெய்வம் என்பது வானுலகில் உறைவது என்று நாம் அறிவோம். நம் ஜீவாத்மாவிலும் உள்ளது தெய்வம் என நாம் அறிகிறோம். ஆனால், நடைமுறையில் மனிதன் வணங்குவது பல தெய்வங்களையே. மனித மனநிலைகள் பல்வேறாகப் பிரிந்திருப்பதால், ஆதி நாளில் மனிதனுக்கு உள்ள எல்லா நிலைகளுக்கும் தெய்வங்களை உருவாக்கியுள்ளனர். இதற்கு ஒரு பொதுப்படையான அஸ்திவாரம் உண்டு. இடத்திற்குச் சக்தியுண்டு, செயலுக்குச் சக்தியுண்டு, ஸ்தாபனத்திற்குச் சக்தியுண்டு என்பதே அவ்வுண்மை. ஓரிடத்தில் ஏராளமான மரங்கள் வளர்ந்து, நெடுநாள் அது காடாக இருந்தால், காட்டுக்குத் தனிச் சக்தி ஏற்படுகிறது. அதிக நாள் கழித்து அந்தச் சக்தி உருவம் பெற்று, உயிர் பெற்று தெய்வமாகிறது. ‘காட்டில் மோகினிப் பிசாசு’ இருக்கின்றது என்று வழங்கும் சொல்லில் உள்ள கரு இது. ஜல தாரைகளுக்கும் இதே தத்துவம் உண்டு. அங்கும் ஜீவனுள்ள சக்திகள் உலவுகின்றன. ஆங்கிலத்தில் அவற்றை nymph என்றும், காட்டில் உள்ளவற்றை elf என்றும், அவற்றுள் நல்லதை மட்டும் செய்யக் கூடியவற்றை fairy என்றும் கூறுவர். குட்டிச் சாத்தான், மோகினி, கொள்ளிவாய்ப் பிசாசு போன்றவைகளைப் பற்றி நாம் கேள்விப்பட்டு இருக்கின்றோம். கிராமம் சேர்ந்து வாழுமிடம் என்பதால், அங்கு கிராம தேவதைகளுண்டு. முனியன், வீரன், ஐயனார் என்று அழைக்கப்படுபவை அவை.
ஜடம், உணர்ச்சி, அறிவு, தவம், யோகம், தெய்வம் என்று படிப்படியாக வாழ்வு அமைந்துள்ளது. ஒவ்வொரு நிலைக்கும் உரிய தெய்வங்கள் பல. சிவன், விஷ்ணு ஆகியவர்கள் தெய்வ லோகத்திற்கு உரியவர்கள் என்பதால், அவர்கள் பிரபலமானவர்கள். ஆயிரக்கணக்காக மற்ற தெய்வங்களிருந்தாலும், பொதுவாக அவர்களுக்குப் பெயர் இருப்பதில்லை. வழிபாட்டுக்குரிய தெய்வங்களுக்கு மட்டும் பெயர் உண்டு. மழை அத்தியாவசியமானது என்பதால், மாரியைக் கொடுக்கும் அம்மன் ஒன்றுண்டு. மாரியம்மன் கோவில் இல்லாத ஊரில்லை. குடும்பத்திற்கு ஒரு தெய்வம் ஏற்பட்டு, அதைக் குலதெய்வமாக வழிபடுகிறோம். சிவன், விஷ்ணு ஆகியவர்கள் மனத்தின் உயர்வுக்குரிய தெய்வங்கள்; மோகினி போன்றவை ஜடத்திற்குரிய தெய்வங்கள். ‘நமக்கில்லாத சக்தியை உடையவர்கள்’ என்ற பொருளில் தெய்வம் என்கிறோம். Vital beings உணர்ச்சிக்குரிய தெய்வங்களே பிரபலமானவை. சிவன், விஷ்ணு கோயில்களைவிடப் பிரபலமான சிறிய கோவில்கள் உண்டு.
Vital beings உணர்ச்சிக்குரிய தெய்வங்களுள் நல்ல தெய்வங்களுண்டு; கெட்ட தேவதைகளும் உண்டு; துஷ்ட தேவதைகளும் உண்டு. இந்தத் தேவதைகள் ஆன்மீகப் பக்குவம் உள்ளவர்களை நாடி, ஆக்கிரமித்துக்கொண்டு சித்து விளையாடுவது உண்டு. அவை பிரபலமானால், அவர்களைத் தெய்வங்கள் என்றும், மகான்களென்றும் உலகம் கருதும். ஆசாரமான பரம்பரையில் வந்தவர்கள் சித்து விளையாடுமிடங்களைத் தெய்வமில்லாத இடம் என்று புறக்கணிப்பார்கள். இவை பொதுவான விஷயங்கள்.
நாம் நம் குடும்ப வழிபாட்டுப் பழக்கத்தை ஏற்றுக்கொள்கிறோம். நம் குடும்ப மதத்தை ஏற்றுக்கொள்கிறோம். நாமாகச் சொந்தமாகப் பட்டம் பெறுவதைப் போல் பாஷையைத் தெரிந்தெடுப்பதில்லை; மதத்தைத் தெரிந்தெடுப்பதில்லை; இருப்பதை ஏற்றுக்கொள்கிறோம்.
நம் மனத்தினுள் உள்ள ஆன்மாவால்தான் தெய்வத்தை உணர முடியும். ஆன்ம விழிப்பு யாரோ ஒருவருக்குண்டு. எனவே நாம் பிறந்து, வளர்ந்த சூழ்நிலையிலுள்ள வழிபாடுகளையும், தெய்வங்களையும் ஏற்றுக்கொள்வதே பொதுவான பழக்கம்.
ஆன்மா விழிப்பாக இல்லாவிட்டால், அனைவருக்கும் உணர்வு விழிப்பாக இருக்கிறது. ஆழ்ந்த உணர்வுள்ளவர்கள் தங்கள் உள்ளம் நிரம்பும் இடங்களில் தெய்வத்தைக் காண்கிறார்கள். உள்ளத்தை நிரப்பும் பெரியவர்களை மகான்களாக ஏற்றுக்கொள்கிறார்கள். இந்த ‘மகான்கள்’ உண்மையானவருக்கு மகான்களாகவே அமைவார்கள். மற்றவர்களுக்கு, மற்ற சிறு தேவதைகள் தெய்வங்களாக அமையும். நாம் ஏற்றுக்கொண்டது தெய்வமானால், அங்கு ஆழ்ந்த சாந்தியோ அல்லது ஆனந்தமோ இருக்கும்.
தன் உள்ளம் உணர்வால் நிரம்பும் நிலையை மனிதன் என்றும் தெய்வமாகக் கருதுகிறான். அது உண்மையாகவுமிருக்கும்; பொய்யாகவும் இருக்கும்.
- இதுவரை தான் அறியாததை மனிதன் ‘அற்புதம்’ என்று ஏற்றுக் கொள்கிறான்.
- மனித வாழ்வு புறச் சூழ்நிலையாலும், வெளியிலிருந்து வரும் சக்திகளாலும் ஆளப்படுகிறது.
- ஒருவர் வாழ்வில் நடந்த அனைத்து நல்லவைகட்கும் உற்பத்தி ஸ்தானமாக ஓரிடம் மட்டும் அமையும். அது ஒரு நபராகவோ, ஒரு சந்தர்ப்பமாகவோ, ஒரு சுபாவமாகவோ இருக்கும்.
- அதே போல் ஒருவருக்கு ஏற்பட்ட அனைத்துத் துர்அதிர்ஷ்டங்களுக்கும் உறைவிடமாக ஒன்றே அமையும்.
- வாழ்வு பல நிலைகளில் அமைந்துள்ளது. அடுக்கடுக்காக அமைந்துள்ள அந்தப் பல நிலைகள் வாழ்வு செயல்பட அவசியம்.
- அனைவரும் ஏற்றுக்கொள்வதை உலகம் பகுத்தறிவு என்கிறது.
பொதுவாக அனைவரும் ஏற்றுக்கொள்வது பகுத்தறிவுக்குப் பொருத்தமானதாக இருக்கும். உலகம் தட்டையானது என்று அனைவரும் ஏற்றுக்கொண்ட காலம் உண்டு. அனைவரும் ஏற்றுக் கொண்டதால் அது உண்மையாகாது. இன்றும் அது போன்ற பல உண்டு.
அனைவரும் ஏற்றுக்கொள்வதால் மட்டுமே ஒரு விஷயம் உண்மையாகிவிடாது, பகுத்தறிவாகிவிடாது என்று நாம் தெளிவு பெற வேண்டும்.
- ஒரு ஜன்மத்தில் ஒரு மனிதன் கற்றுக்கொள்வது ஒரு பாடம். அடுத்த பாடம் கற்றுக்கொள்ள அடுத்த ஜன்மம் எடுக்க வேண்டும்.
- தேவைகளின் பிடியிலிருந்து விடுபட்ட மனிதன், முதல் காரியமாகத் தன் தாழ்ந்த ஆசைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறான்.
- குறையே வாழ்வின் அஸ்திவாரம். நிறைவு அஸ்திவாரமில்லை.
நம் வாழ்வில் குறை என்றுணர்வன கண் பார்வையில்லை, வருமானமில்லை, புத்தியில்லை என்பன போன்றவை. வாழ்வு வளர்வது; வளர வேண்டியது; வளர்ச்சியில்லை என்றால் வாழ்வு, சாவாக மாறிவிடும். நிறைவு, முடிவு, குறைவு, ஆரம்பம் என்றால் இக்கூற்று விளங்கும். வாழை குலை தள்ளும்பொழுது நிறைகிறது. நிறைவு வந்தவுடன் வாழை மரம் செத்துவிடுகிறது. அதனால் நிறைவு தவறு ஆகாது. ஒரு கட்டடம் முடிந்த பின், மாடியில் இன்னும் ஓர் அறை கட்ட வேண்டும் என்று எண்ணமிருந்தால், அதற்குரியவற்றில் கற்களை அரைகுறையாக விட்டு வைப்பார்கள். அது பூர்த்தியான அழகான வீட்டிற்கு திருஷ்டிப் பரிகாரமாக அமையும். அப்படி விட்டு வைப்பதால்தான் மேலும் ஒன்று எளிதில் கட்ட முடியும். குறையாக, கண் உறுத்தலாகத் தோன்றுவது நிறைவின் ஆரம்பம். இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால், குறை என்பது குறையன்று, ஆரம்பம்; அத்துடன், வாழ்வின் அஸ்திவாரமும் ஆகும் என்பது விளங்கும்.
தத்துவரீதியாகப் பார்த்தால், எல்லாக் குறைகளுக்கும் இந்த விளக்கம் பொருந்தும். Error is the handmaid of Truth என்று ஸ்ரீ அரவிந்தர் இதையே கூறுகிறார்.
- குருவையும், கோவிந்தனையும் ஒன்றாகக் கண்டால், முதலில் குருவுக்கு நமஸ்காரம் செய்.
இது வைஷ்ணவப் பரம்பரையில் வந்த வழக்கு. நம்மவர் அனைவருக்கும் பொருந்தும். இதற்கு உள் அர்த்தம் ஒன்றுண்டு. உன்னால் கோவிந்தனை எட்டித் தொட இயலாது. குருவை நாடி, வணங்கி, சேவிக்கலாம். கோவிந்தன் தெய்வமானாலும், எளிய மனிதனுக்கு எட்டாத தெய்வம். குரு மனிதனானாலும், பக்தனுக்கு எட்டும் தெய்வம். நம்மால் எட்டித் தொடக்கூடிய மனிதர், நம்மால் எட்ட முடியாத தெய்வத்தைவிட அதிகப் பலன் தருவார் என்பதே இதன் உள் அர்த்தம். இது பல மதங்களிலும் நடைமுறையில் உள்ளது.
- ஒருவருக்கு ஏற்பட்ட ஆன்மீக அனுபவம் பலர் வழிபாட்டுக்குரிய மதச் சடங்காகிறது.
ஆழ்வார்களும், நாயன்மார்களும், ரிஷிகளும், மகான்களும் கடவுளைக் கண்டவர்கள். நாம் கடவுளைப் பற்றி அவர்கள் வாயால் கேட்டறிகிறோம். நமக்கு ஆன்மீக அனுபவம் ஏற்படுவது முடியாது. அந்த அனுபவம் ஏற்பட்டவர்கள் சொல்லும் உண்மையை ஏற்று, அதை வழிபாடாகக் கொள்வதே நம்மால் முடியும்.
- அணு ஜடத்தின் அஸ்திவாரம். அது போல் செயல் வாழ்வின் அடிப்படை.
- நீ சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் தவறாது தலையிடாவிட்டால், உன்னால் உயிரோடிருக்க முடியாது.
- நிகழ்ச்சிகளின் போக்கை நிர்ணயிப்பது மனித உள்ளத்தின் அந்தரங்க நோக்கம்.
- ஒருவனுடைய அந்தரங்க நோக்கமே ‘அவர் யார்?’ என்று நிர்ணயிக்கிறது.
- தனி மனிதனாக எப்படி வாழ முடியும் என்ற பயம் சமூகத்தை உருவாக்கியுள்ளது.
- ஒத்திட்டுப் பார்க்க ஒருவர் இல்லை என்றால், தான் பெற்ற உயர்வுக்கு மதிப்பில்லை. மறுப்பவர் எவரும் இல்லை எனில், இலட்சியவாதி இலட்சியத்தைப் பொருட்படுத்தமாட்டான்.
- எந்தச் சாதனையையும் நாடாத மனிதன் தனக்குப் பிடித்த அபிப்பிராயத்தை முழுமுதற் கருத்தாகக் கொள்கிறான்.
- மனிதன் தன் சுயநலத்தை மட்டும் பாராட்டுகிறான். தன் சுயநலத்திற்குத் துணையாகவுள்ள மனிதர்களையும், செயல்களையும், கொள்கைகளையும் ‘இலட்சியம்’ என ஏற்றுக் கொள்கிறான்.
- குரலைத் தாழ்த்திப் பேசுவது உண்மையான ஆன்மீக முன்னேற்றம்.
- எவ்வளவு உயர்ந்த கட்டுப்பாடானாலும், சுபாவத்தை ஒட்டி இருந்தால்தான் அது பலன் தரும்.
- தன் இதயத்தின் ஆசையை மனிதன் ‘ஆன்மா’ என்று பெயரிட்டு அழைக்கின்றான்.
- சூட்சுமத் திருஷ்டி, ஞான திருஷ்டியாகாது.
- இறைவனுக்கும், மனிதனுக்கும் உள்ள தொடர்பின் இரகஸ்யத்தை அறிவது விவேகம்.
- ஆழ்ந்த அன்பின் கரை படிந்த உருவத்தை நாம் வெறுப்பு என அறிகிறோம்.
இருவர் பழகுதல் உறவுக்கு அடிப்படை. குடும்பத்தில் பழகினாலும், இரத்த பாசத்தால் பிணைக்கப்பட்டிருந்தாலும், தொழில் செய்யுமிடத்தில் தினமும் பழகினாலும், பழக்கம் உறவை ஏற்படுத்துகிறது. உறவால் பற்று, பாசம், அன்பு ஏற்படுகிறது. தனக்காக ஏற்படுவது பற்று; பிறருக்காக ஏற்படுவது பாசம்; பாசத்தின் உயர்ந்த தெய்வீக உருவம் அன்பு.
நெடுநாள் ஒரே வீட்டில் குடியிருந்தவர்கள் பிரியும்பொழுது மனம் வேதனைப்படுகிறது. பிரிந்தபின் வேறு உறவுகள் ஏற்படுகின்றன. உயிருக்குயிராக 6, 7 ஆண்டு இருந்தவர்கள் நினைவு இன்று வருவதில்லை; மீண்டும் பார்த்தாலும் ஆர்வம் எழுவதில்லை என்ற உறவுகள் நம்மைத் திகைக்க வைக்கின்றன. இங்கு உண்மையில் உறவே ஏற்படவில்லை. பழக்கம் இருந்திருக்கின்றது. பழக்கம் போன பின் உறவும் போய்விட்டது. Out of sight, out of mind தூரப் போனால் மறந்துவிடுகிறது என்று சொல்கிறது ஆங்கிலப் பழமொழி.
இலட்சிய நட்பை விவரித்து பிளேட்டோ, ‘பிரிவால் துன்பம் ஏற்பட்டால், அது உயர்ந்தது’ என்கிறார். அதுவும் ‘மற்றவரால் எந்தப் பலனும் இல்லாத உறவானால், அது பிரியும்பொழுது துன்பம் கொடுத்தால், அதுவே இலட்சிய உறவு’ என்கிறார்.
அன்பு தெய்வீகமானது. பெற்றோருக்குக் குழந்தைகள் மீதுள்ளது பற்று; இரத்தத்தால் ஏற்பட்டது. குடும்பத்திலும், நட்பிலும் இருப்பது பாசம். பற்று உடலில் உற்பத்தியானது; பாசம் உணர்வால் ஏற்பட்டது. அன்பு ஆன்மாவில் எழுகிறது. அருகில் இருக்கும்பொழுது ஊற்றாக எழும். இனிமை இதன் குணம். பிரிவால் துன்பம் தாராதது. ஒரு குறிப்பிட்டவருக்கு மட்டும் செல்வது பற்றும், பாசமும். அன்பு அனைவரையும் நாடும்.
நாம் நடைமுறையில் பாசத்தை அன்பாக நினைக்கின்றோம். பாசத்தை அடுத்தவர் ஏற்றுக்கொண்டால் மனம் நிறைகிறது; ஏற்றுக் கொள்ளாவிட்டால் கோபம் வருகிறது. பாசத்தில் குறை ஏற்பட்டால் மனம் கொதிக்கிறது. பாசம், வெறுப்பாக மாறுகிறது. யார் மீது நமக்கு வெறுப்பிருக்கின்றதோ, அவர் மீது உண்மையில் நமக்குப் பாசம் அதிகம். பாசம் இல்லாத இடத்தில் குறை ஏற்பட்டால், அந்த உறவு மடிந்துவிடும்.
- நாத்திகனுடைய மனத்தில் இறைவனிருக்கின்றான். ஆஸ்திகனுடைய வேஷம் அவனியிலில்லை.
பக்தி உண்மையானது. வழிபாடு பக்தியை வெளிப்படுத்தும் முறை. இது உண்மையாகவும் இருக்கலாம்; போலியாகவுமிருக்கலாம். நாத்திகன் வழிபாட்டின் போலித்தனத்தை வெறுத்து ஒதுக்குகிறான். அவன் மனத்தில் உண்மையுள்ளது. போலி வழிபாட்டை எதிர்க்க வந்த நாத்திகன், வழிபாட்டையே எதிர்க்கின்றான். முடிவாக, இறைவனையே நம்ப மறுக்கின்றான்.
ஆஸ்திகன் உண்மையாகவும் இருக்கலாம்; போலியாகவும் இருக்கலாம். ஏனெனில், அவன் வழிபாடு போலி வேஷத்தை மூடி மறைக்கும்.
நாத்திகன் போலியாக இருக்க முடியாது. ஏனெனில் அவனிடம் வழிபாடில்லை. ஆழ்ந்த நம்பிக்கை தெய்வத்தின் பேரில் இருப்பதால் தான் அவனிடம் அது வெறுப்பாக மாறி, மறுப்பாக வெளிவருகிறது. தெய்வத்தின் மீது நம்பிக்கையே இல்லாதவனுக்கு மறுப்பு எழுப்பும் வேகம் இருக்காது.
- வாழ்வில் எந்த அம்சம் பூரணம் எய்தி சிறப்படைந்தாலும், அங்குத் தெய்வம் பிறக்கும். கற்புடைய மாதரின் தெய்வீக சக்தி, அவர்களுடைய கற்பு சிறப்படைவதால் ஏற்படுகிறது.
- பொதுவாக மனிதனைச் சோம்பேறி என்கிறார் அன்னை.
வேலை செய்யப் பிரியப்படாதவனை நாம் சோம்பேறி என்கிறோம். அன்னை அதைச் சொல்லவில்லை. உதாரணத்திற்கு, இரசாயன உரமிடும் விவசாயத்தைச் சொல்கிறார். உரமில்லாமல் பயிரிட்டால், ஏக்கரில் 15 மூட்டை நெல் கிடைக்கும். இரசாயன உரம் 30 மூட்டை பெற்றுத் தரும். இரசாயன உரமிடாமல் மண் வளத்தைக் காத்து, எருவிட்டு, மண்ணில் தானே மண் சத்தி உண்டாகி, அதில் மண்புழு ஏற்பட்டால், அதே 30 மூட்டை நெல் எடுக்கலாம். உரத்தை வாங்கித் தூவுவது எளிது. மண்ணைப் பாதுகாத்து, அதன் சத்தை வளர்ப்பது கடினம். இந்தக் கடின வேலையைச் செய்ய எவரும் முன் வரமாட்டார். அதை சோம்பேறித்தனம் என்கிறார் அன்னை.
ஒரு புது வேலை என்றால், ‘எப்படி நம் சிரமத்தைக் குறைக்கிறது?’ என்று நாம் கருதுகிறோம். உரலில் மாவு அரைப்பதை விட கிரைண்டரில் அரைப்பது எளிது. எளிதானவற்றை மனம் நாடுகிறது. எளிதானவற்றை நாடும் மனம் சோம்பேறியானது.
பட்டம் படித்தால் சுலபமாக வேலை கிடைக்கும். பட்டம் பெறாமல் திறமை பெற வேண்டுமானால், அது சிரமம். பட்டத்தை ஒதுக்கி, படிப்பை நாட எவரும் விரும்பமாட்டார்கள். இந்த மனப்பான்மையை அன்னை சோம்பேறித்தனம் என்கிறார்.
- வெளிநாட்டு ஆக்கிரமிப்பு ஏற்படும்பொழுது நாட்டில் மறைந்து இருந்த வலிமை, ஒற்றுமை, தேசபக்தி வெளிப்படும்.
- உணர்வுக்கு உண்மையானவற்றைச் ‘சத்தியம்’ என மனம் ஏற்றுக்கொள்கிறது.
சத்தியம் என்பது ஆன்மாவுக்குள்ள உண்மை. மனத்தால் சத்தியத்தை தெளிவாக அறிய முடியாது. உணர்வுக்குச் சத்தியத்தை அறியும் திறன் அதைவிடக் குறைவு. உடலால் சத்தியத்தை அறிய முடியாது.
கோர்ட்டில் வக்கீல் அடித்துப் பேசினால், மேஜையை தட்டிப் பேசினால், கட்சிக்காரருக்குத் திருப்தி. சத்தம் செல்லுபடியாகாது, சட்டமே செல்லும் என்பதை மறந்து கட்சிக்காரர் திருப்தியடைகிறார். வக்கீலுக்கே திருப்தி ஏற்படுகிறது. தீர்ப்பு வரும்பொழுது உண்மை தெரியும்.
- சத்தம் உணர்வுக்குரிய உண்மை. அதையே சத்தியம் என்று நினைப்பது இயல்பு. தவறு செய்யாதவனுக்கு முன்னேற்றமில்லை.
இலாபத்தைத் தேடுபவனுக்கு இலாபம் வரும்; நஷ்டமும் வரும். ‘நஷ்டம் ஒருபொழுதும் கூடாது’ என்பவன் தொழில் செய்ய முடியாது; சம்பளத்திற்கு வேலை செய்ய வேண்டும். அவனுக்கு நஷ்டம் கிடையாது. சம்பளத்திற்கு வேலை செய்பவனுக்குச் செல்வம் சேராது.
- எந்த வயதிலும் உடல் இளமை பெறும். உடற்பயிற்சியாலும் அதைப் பெறலாம்.
வயதானால் உடல் தளர்கிறது. தளர்ந்த உடல் மீண்டும் இளமை பெறாது என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். உடற்பயிற்சியை மேற்கொள்பவர்களுக்கு, இது உண்மையில்லை என்று தெரியும். 78 வயதில் ஓர் அமெரிக்கப் பெண் விமானத்திலிருந்து குதிக்கும் பயிற்சியை (sky-diving) மேற்கொண்டார். அதை மிகவும் ரசித்துப் பயின்றார். ‘என் வாழ்நாளிலேயே நான் மிகவும் உற்சாகமாக இருப்பது இப்பொழுதுதான்’ என்றார். வயதானால் உடல் தளரும் என்பது உண்மை. இந்த உண்மையை நாம் 50ஆம் வயதிலேயே ஏற்றுக் கொள்கிறோம். ஏற்றுக்கொள்வதால் தளர்ச்சி ஏற்படுகிறது. தொடர்ந்து உடற்பயிற்சி செய்பவர்கள் 87, 88 வயதில் திடகாத்திரமாக இருக்கிறார்கள். பார்வைக்கு 55 வயது போல் காண்கிறார்கள். 93 வயதில் தாமே கார் ஓட்டுகிறார்கள். இவையெல்லாம் உடலைப் பற்றிய உண்மைகள்.