– முதலில் சர்க்கார் மீது நம்பிக்கை
– அடுத்தாற்போல் பவுன், வெள்ளி மீது நம்பிக்கை
– அடுத்த உயர்ந்த கட்டத்தில் சர்க்கார் மீது அதிக நம்பிக்கை
– கம்பனி முதல் மீது நம்பிக்கை
– கம்பனி டெக்னாலஜி மீது நம்பிக்கை
அப்படி கம்ப்யூட்டர் கம்பனிகள் பெருகின, வளர்ந்தன. அந்த நம்பிக்கையை நல்லபடியாகப் பயன்படுத்தாவிட்டால், கம்பனிகள் சரிந்து விடுகின்றன.
- இவையெல்லாம் செய்வது மனிதன். உலகில் மனிதன் மீது இன்னும் நம்பிக்கை ஏற்படவில்லை. அது ஏற்பட மனிதனுக்குத் தன்னம்பிக்கை வேண்டும். தன்னம்பிக்கையுள்ள மனிதன் ஏராளமான பணம் உற்பத்தி செய்யமுடியும். உலகிலுள்ள பணம் முழுவதும், அவனைத் தேடிவரும். நாணயஸ்தனுக்கு அந்நிலையுண்டு. அதையும் கடந்தது அன்னை மீது நம்பிக்கை. இன்று கம்ப்யூட்டர் கம்பனிகள் (dot. com companies) சரிகின்றன. ஏனெனில் மக்கள் வைத்த நம்பிக்கைக்கு கம்பனிகள் பாத்திரமாக இல்லை. அப்படி ஒரு கம்பனியிருந்தால் அது வளரும். யாருக்குத் தன்னம்பிக்கை இருக்கிறதோ, அன்னை மீது நம்பிக்கையிருக்கிறதோ, அவர் கம்ப்யூட்டர் கம்பனிகள் சரிவதைத் தடுக்க முடியும்.
- தன்னம்பிக்கையுள்ளவர் எந்த அளவு பணமும் தன் வாழ்வில் உற்பத்தி செய்யமுடியும் என்பது இங்கு கருத்து. அது அன்னை மீதுள்ள நம்பிக்கையானால் அதற்கு அளவில்லை.
- பணம் என்பது நம்பிக்கை. சர்க்கார் மீது, பவுன் மீது, சர்க்காரின் நாணயத்தின் மீது, முடிவாக தன்மீது, அதையும் கடந்து அன்னை மீது உள்ள நம்பிக்கை பணம். அந்த நம்பிக்கை பணத்தை உற்பத்தி செய்யும். எப்படி என்பதை கூறுவோம்.
- இதன் அம்சங்கள் ஆயிரம். நடைமுறை அம்சங்கள் அதைவிட அதிகம். அந்த கோணங்களிலிருந்து பணம் உற்பத்தி செய்வதை விளக்க எழுதப்பட்ட நூல் இது.
- இதுவரை உற்பத்தியான பணம் ஏராளம். ஆனால் எவ்வளவு பணம் உற்பத்தி செய்யமுடியுமோ அதில் உற்பத்தியானது கடுகளவு. அபரிமிதமாகப் பணம் உற்பத்தி செய்யும் வழிகள் அனந்தம்.
அன்பு, அதிகாரம், சந்தோஷம், அறிவு, நல்லது, செயல்திறன், மனித ஒற்றுமை, அழகு, மௌனம், சாந்தி போன்ற எந்த உயர்ந்த அம்சத்தையும் அளவுகடந்து உற்பத்தி செய்யலாம் என்பது தத்துவம். புதியன வரும்பொழுது, ஆபத்து‘, எனக் கூக்குரல் எழுகிறது. சர்க்கார் புதியதாக வருபவை – அணுகுண்டு, cloning, பிளாஸ்டிக் – எவையானாலும் அவற்றை நல்லதற்கு மட்டும் பயன்பட சட்டம் இயற்றுகிறது. அபரிமிதமான பணத்திற்கும் அது போன்ற சட்டப் பாதுகாப்புண்டு.
அனந்தம், அபரிமிதம், அதிகபட்சம்
நமது அதிகபட்சத் திறமை நம் வாழ்வில் பயன்பட்டால், பலன் அதிகபட்சமாகும். அது அபரிமிதமன்று. அபரிமிதம் அதிகபட்சத்தைக் கடந்தது. அபரிமிதம் அனந்தமன்று. அனந்தம் என்பது முடிவற்றது.
- அதிகபட்சம் என்பது நம் திறமைக்கு அதிகபட்சம்.
- அபரிமிதம் என்பது தேவையைக் கடந்தது.
- அனந்தம் என்பது இவையிரண்டையும் கடந்த முடிவில்லாத பலன்.
ஆன்மீகரீதியாக உயர்ந்தது என்பது பிரம்மம். தாழ்ந்தது என்பது உடல். இன்று உடல் உழைத்து சம்பாதிக்கிறது. அதிகபட்சம் சம்பாதிக்க அறிவைப் பயன்படுத்துகிறது. ஒரு பில்லியன் டாலர் என்பது 4500 கோடிப் பணம், ரூபாய். உலகில் 450 பேர் இந்த அளவு சொத்துள்ளவர்கள் என்று கணக்கெடுத்துள்ளார்கள். இவர்கள் அறிவால் உழைத்துச் சம்பாதித்தவர்கள். அறிவிலிருந்து பிரம்மத்திற்கு இடையே 9 நிலைகள் உள்ளன. மேலே செல்வது 9 நிலை, இறங்கி வருவது மேலும் 9 நிலை.
பிரம்மம் உடல் வெளிப்படுவது அனந்தமான அபரிமிதத்தை மனிதயத்தனத்தின் அதிகபட்சமாக நாம் அறிவோம்.
சாதனை நமது இலட்சியம். அபரிமிதமான பணம் சம்பாதிப்பது நம் சாதனையாக இருப்பது இலட்சியமானால், பணத்தைப் பற்றிய கருத்துகளை விளக்கவேண்டும். இந்த ஞானத்திற்குத் திறன் உண்டு. ஞானத்தைப் பெற்றவர் திறனாக மாற்ற மனத்தாலும், ஆத்மாவாலும் உழைக்க முன்வரவேண்டும்.
ஞானம் எப்படிப் பலனாக மாறும்? திறனால் பலனாகும். அறிவு என்பது ஞானம், உறுதி என்பது (Will) திறன். உறுதிக்கும் அதனுள் புதைந்துள்ள ஞானம் உண்டு. ஞானத்திற்கு உறுதி பணிந்து செயல்பட்டால், செயல்பாடு ஆகும். அது பாடாவதியாகவுமாகும். விவரம் தெரியாமல் உழைப்பது. விவரம் தெரிவது திறமை (Skill). அது பாடு என்பதாகாது. வேலையாகும். வேலை தெரியாதவன் திணறுவதை நாம் பார்க்கிறோம். வேலை தெரிந்தவன் ஆர்வமாக, அழகாக வேலை செய்வது பார்க்க இனிக்கும். வேலையை நூறு, ஆயிரம் பாகமாகப் பிரித்து ஒவ்வொன்றையும் செய்யக் கற்றுக்கொள்வது உறுதியான ஞானம் பெறுவதாகும். இது ஞானம் பலனாக மாறும் பாதை. பிரம்மம் உடலில் எப்படி வெளிப்படும், அது எப்படிப் பலனாக மாறும், அது பணமாக எப்படி மாறும் என்ற ஞானத்தை விளக்கமாகவும், விபரமாகவும், இந்நூலிலிருந்து பெறலாம்.
அணுவினுள் அகிலம் முழுவதும் பரவும் சக்தியுண்டு. இதை நேரடியாக வேறு சிரமமில்லாமல் வெளிப்படுத்தினால் உலகில் சக்திக்குப் பஞ்சமில்லை. (Solar power) சூரிய வெளிச்சம் மின்சாரமாகிறது என்பது ஓரளவு நடைமுறையில் வந்துள்ளது. (Wind power) காற்று மின்சாரமாகிறது என்பதும் ஓரளவு நாம் எங்கும் காண்கிறோம். இவை முழுவதும் நடைமுறைக்கு வந்தால் உலகில் (power) சக்திக்குப் பஞ்சம் உண்டா?
பண்டமாற்றாக ஆரம்பித்தது பணமாயிற்று. பவுன் பணம், பொருள் பணம், currency பேப்பர் பணமாயிற்று. தபால், தந்தி வந்தபொழுது பணத்திற்கு அதிக மதிப்பு வந்தது. விளம்பரம் வந்தபொழுது பேப்பர் விலை குறைந்தது, T.V. செலவில்லாமல் வருகிறது. ஒரு நியூஸ் பேப்பர் அடக்கவிலை ரூ.10/-, அதை 3 ரூபாய் கொடுத்து வாங்குகிறோம். மீதி விலையை விளம்பரம் தருகிறது. இன்ஸுரன்ஸ்மூலம் நாம் சிறு பிரீமியம் கட்டி, பெரிய தொகையைப் பெறுகிறோம்.
கம்ப்யூட்டர்போல் எது புதியதாக வந்தாலும், பொருள்கள் மலிவாகின்றன. அதாவது நமக்கு உபரியாகப் பணம் உற்பத்தியாகிறது. காற்றுபோல் ஒரு காலத்தில் பணம் அபரிமிதமாகும். அனைவருக்கும் அது கிடைக்கும். இது சமூகம் பெற்றுக்கொண்டு வரும் திறன். இன்றே அதைத் தன் வாழ்வில் அபரிமிதமாக அனுபவிக்க மனிதன் முன்வரலாம்.
இது யாருக்குப் பலிக்கும்?
பலிக்க என்ன செய்யவேண்டும்?
பலிக்கும் வகை எது? நாம் செய்யக்கூடியது என்ன? நமக்கே பலிக்குமா? நம் போன்றவர் எவருக்காவது பலிக்குமா? என்ற கேள்விகட்கு இந்நூல் பல இடங்களில் பதில் வரும். முடிவில் இதை விளக்கமாக எழுதுகிறேன். அதன் சுருக்கம்,
- கை வேலையில் (Skill) திறமை சிறந்தவர் – உடல்,
- பிறர் வாழ மனம் விழைபவர் – உயிர்,
- பிரம்மத்தை ஞானமாகப் பெறுபவர் – மனம்,
- செயல் பிரம்ம ஞானத்தை சத்தியமாக வெளிப்படுத்துபவர்,
ஆகியோருக்குத் தங்கள் வாழ்வில் அபரிமிதமான செல்வத்தை உற்பத்தி செய்யும் திறன் பக்கும்.
- மேல்நாட்டார் செயல் பிரம்மத்தைக் கண்டவர், உண்மை மட்டும் பேசுபவர்.
- அவை நம்மிடம் வித்தாக உள்ளன. அகத்திலும், புறத்திலும் அவ்வுண்மை வெளிப்படும்படி, சொல்லும், செயலும் அமையவேண்டும்.
மனத்தின் சிருஷ்டித் திறன் – பணம்
உலகம் மனத்தால் சிருஷ்டிக்கப்பட்டது, அகந்தையால் சிருஷ்டிக்கப்பட்டது என்பவை இந்திய ஆன்மீக மரபு. அதனால் வாழ்வு மாயை என்றும் கூறுகின்றனர். உலகத்தை சிருஷ்டித்தது சத்திய ஜீவியம் என்கிறார் ஸ்ரீ அரவிந்தர். மனம் சத்திய ஜீவியத்தின் பகுதி (subordinate power). சத்திய ஜீவியத்தில் ஜீவியம் இரண்டாகப் பிரிகிறது. ஞானம், உறுதி என்று பிரிகின்றது. ஞானம் உறுதிமேல் செயல்பட்டால் சக்தி பிறக்கிறது. அதுவே life வாழ்வு எனப்படும். மனம் வாழ்வை உற்பத்தி செய்தது. பணம் வாழ்வில் கடுகளவான பகுதி. வாழ்வை உற்பத்தி செய்த மனம் அதன் பகுதியான பணத்தை உற்பத்தி செய்ய முடியும்.
மனத்தில் நல்லதும், கெட்டதும் உண்டு. பணத்தை முடிவில்லாமல் மனம் உற்பத்தி செய்யும் என்பதை நாம் இங்கு எடுத்துக்கொண்டுள்ளோம். மனமே இரு பகுதிகளாக இருப்பதால், மனம் நல்ல பணத்தை உற்பத்தி செய்வதுபோல், கெட்ட பணத்தையும் உற்பத்தி செய்யவல்லது. நடைமுறையில் அவை கலந்தே காணப்படுகின்றன. பணம் நல்லதாக மட்டுமோ, கெட்டதாக மட்டுமோ இருப்பதில்லை. நல்லதும், கெட்டதும் கலந்த மனிதனால் சம்பாதிக்கப்பட்டதே பணம்.
மனத்தின் திறன்கள் பல. பணத்தை உற்பத்தி செய்வது மட்டும் நமக்குரியது. இக்கோணத்தில் மனம் எப்படியிருக்கிறது, எப்படியிருந்தால் பணம் உற்பத்தி செய்ய உதவும் என்பதை,
- அடுத்தவர் எவரானாலும் மனிதன் அவர் நிலை உயரப் பொறுக்கமாட்டான் என்று கூறலாம்.
- பிறர் பெரு வாழ்வு வாழ மனம் விழைவது பணத்தை மனம் உற்பத்தி செய்ய உதவும்.
இன்று சமூகம் தனி மனிதன் நல்வாழ்வு வாழ பல துறைகளில் பாடுபடுகிறது. எந்தக் காலத்திலும் சமூகம் தனி மனிதனுக்கு உதவியாகவுள்ளது. கடினமான வாழ்வைக் கடுமையற்ற வாழ்வாக மாற்றியுள்ளது. விலங்குபோல் நாடோடியாகத் திரிந்த மனிதனை ஊரும், உறவுமாக வாழ வைத்தது. வேட்டையாடியும், காய் கனியைப் புசித்தவனுக்கு விவசாயம் ஏற்பட்டது. தொடர்ந்து மனிதனுக்கு சமுதாயம் சேவை செய்கிறது. மருந்துமூலம் வியாதியிலிருந்து விடுதலையளித்ததுபோல் இன்று மனிதன் அனுபவிக்கும் அத்தனை சௌகரியங்களையும் அவனுக்கு அளித்தது சமூகம். சமூகம் மனிதனுக்குச் செய்த வேலைகளில் முக்கியமானவை பல. அவற்றுள் பணம் முக்கியமானது.
மனிதன் வாழ சமூகம் நல்லெண்ணம் கொண்டுள்ளது.
இந்த நல்லெண்ணத்தின் அம்சம் பணம், பணம் நமக்குச் செய்யும் சேவைகள். நாளுக்கு நாள் பணம் பெருகுகிறது. பெருகும் பணம் பெருகி வரும் நல்லெண்ணம். காலத்தை வென்று, கர்மத்தை வென்று, நல்லெண்ணமாக உருவம் பெற்றது பணம். பணம் நம் வாழ்வில் பெருகவேண்டுமானால்,
அனைவரும் தொடர்ந்து உயரவேண்டும் என்ற நல்லெண்ணம்
நம் மனத்தில் பெருகவேண்டும். அது அடிப்படையான நிபந்தனை.
இன்று பெரும் பணக்காரர்களாக இருப்பவர்கள் எல்லாம் இப்படிப்பட்ட மனநிலை உள்ளவர்களா என்ற கேள்வி மனத்தில் எழும். இது வேறு கேள்வி. இதனுள் வேறு பல அம்சங்கள் அடங்கியுள்ளன. ஏனெனில் பணத்தைப் பல வழிகளிலும் சம்பாதிக்கலாம். தவறாகவும் சம்பாதிக்கலாம். பணத்தை நல்ல முறையாகச் சம்பாதிப்பது மட்டும் நமக்குரிய கருத்து. இக்கேள்விக்குரிய பதிலின் சுருக்கத்தை மட்டும் கூறமுடியும்.
எவர் அதிகப் பணம் சம்பாதித்தாலும் பொதுமக்களுக்கு ஏதாவது ஒரு வகையில் பெரிய சௌகரியமில்லாமல் சம்பாதிக்க முடியாது.
மனிதன் சுயநலமானவன். அவன் சுயநலத்தைவிட்டு, பிறர் நலம் பேணுவது finite மனிதன் infiniteஆக மாறுவதாகும். ஸ்ரீ அரவிந்தர் மனிதனுடைய மிகப்பெரிய இரகஸ்யத்தைக் கூறுகிறார். அது ஆன்மா ஜடத்தை ஆளும் இரகஸ்யம். சமூகத்தில் கிராக்கியான பண்டங்கள் பல. நாளாக ஆக கிராக்கியான பண்டங்கள் அதிகமாகக் கிடைக்க சமூகம் வழி செய்தது. 1952 எலக்ஷனில் சுதந்திரம் பெற்ற காங்கிரஸ் தோற்றதற்கு அரிசி கிடைக்காததே காரணம். “ஆறு அவுன்ஸ் சர்க்கார் அழிக” என்று மக்கள் காங்கிரஸைத் தோற்கடித்தனர். இன்று நெல்லும், அரிசியும், கோதுமையும் உபரியாகக் கிடைக்கின்றன. 1970க்கு முன் கார் வாங்க முன் பணம் கொடுத்து காத்திருக்கவேண்டும். இன்று கார் வாங்க லோன் கொடுக்கும் பாங்க்குகட்கு லோன் பெற ஆளில்லை. ஒரு காலத்தில் கிராக்கியான சரக்கு, பிற்காலத்தில் உபரியாகக் கிடைப்பதுபோல்,
இன்று கிடைக்காத பணம் எதிர்காலத்தில் காற்று, தண்ணீர், நெல்போல் அபரிமிதமாகக் கிடைக்கும்.
உடலாலும், உணர்வாலும் மனிதன் உழைத்தபொழுதும் மனம் பின்னணியிலிருந்தது. பின்னணியிலிருந்த மனம் முன்னணிக்கு வந்து நேரடியாகச் செயல்பட்டது. வீராணம் ஏரியை இங்கிலாந்து இன்ஜினீயர்கள் வந்து பார்த்தனர். 1000 ஆண்டுகட்கு முன் இன்ஜினீயரிங் அறிவு வளராத காலத்தில் எப்படி இந்த ஏரியைக் கட்டினர் என ஆச்சரியப்பட்டனர். கோபுரம், பிரமிட் போன்றவை கட்டியது உடல் உழைப்பால் முடியாது. அது அறிவு வளர்ச்சியால் நடந்த செயல்கள். பணம் என்று முதல் ஏற்பட்டபொழுது அது ஓர் எண்ணம், அது மனத்தின் செயல். பணம் மனத்தால் ஏற்படுத்தப்பட்டது. மனம் எண்ணத்தாலானது. எண்ணக்கோவைகள் சிக்கலின்றி சீராக அமைந்தால், எண்ணம் நிர்வாகத் திறன் (organizing power) பெறுகிறது. அதுவே சட்டமாகிறது. மனத்திற்கே எண்ணமுண்டு. எண்ணம் செயலைக் கட்டுப்படுத்தும். செயல்களின் போக்கையறிந்து அவற்றை எண்ணத்தின் திறனால் கட்டுப்படுத்துவது கட்டுப்பாடு. அதன் சிகரம் சட்டம், ஒழுங்கு (rule). மனிதனுடைய உழைப்பு, பொருள்களை உற்பத்தி செய்து விநியோகம் செய்ய உதவும் கருவி மனம். உழைப்பின் சிறப்பு, பொருள்களின் அளவு, தன்மை, விநியோகத்திற்குரிய நிபந்தனைகள் மனத்தால் அறிந்து அதை நிதானப்படுத்தி நிர்ணயம் செய்வது விலை எனப்படும். விலை என்பது மனத்தால் குறிக்கப்படுகிறது. இவ்வெண்ணக்கோவைகளின் மையம் பணம். இதற்கு அமைப்பு, ஸ்தாபனம், நிர்வாக அமைப்பு எனப் பெயரிடலாம். இது மனத்தின் செயல். மனம் செயல்பட்டால், அங்கு இவ்வமைப்பிருக்கும். இது சமூகத்தில் ஒரு புரட்சிகரமான மாறுதல், சமூகம் வளர (evolutionary) உதவும் மாறுதல். அதனால் ஏற்பட்டவை,
- தன் உபரி சக்தி, உபரி உற்பத்தி அழிவதற்குப் பதிலாக அதை வேறொரு நாளைக்குப் பயன்படுத்த முடியும்.
- ஒருவருடைய உபரியை மற்றொருவர் பயன்படுத்தலாம்.
- சமூகம் தனி மனித வாழ்வைச் சிறப்பாக்க முடியும்.
- ஒவ்வொருவரும் அடுத்தவர் வாழ்வு பயனுற உதவ முடியும்
என்பவை பணம் ஏற்பட்டதால் ஏற்பட்ட பெரிய புரட்சிகரமான மாறுதல்கள்.
- Unity, Mutuality, Harmony, ஒற்றுமை, பரோபகாரம், சுமுகம்
என்பவை சத்தியஜீவிய வாழ்வுக்கு உயிர். அவற்றை நிலைநாட்டப் பயன்படுவது பணம் என நாம் அறிகிறோம்.
பணம் என்பது மனிதத் திறமையின் சின்னம். நேற்றைய உழைப்பைப் பணம் மூலம் நாளைக்குப் பயன்படுத்த முடியும். இளம் வயது சேமிப்பை வயோதிகத்திற்குப் பயன்படுத்தலாம் என்பது தினமும் வேட்டையாடி உழைத்தவனுக்குப் புரியாத ஒன்று. புலியானாலும், பல் போனபின், உடல் தெம்பு குறைந்தபின் பட்டினி கிடந்து சாகும். மனிதன் அப்படியிருந்தவன். சேமிப்பால் எதிர்காலத்தில் வாழலாம் என்பது காலத்தை வெல்வதாகும். கங்கையில் பிரவாகமாக வெள்ளம் கடலையடைகிறது. காவிரி வறண்டுள்ளது. கங்கை நீர் காவிரிக்குப் பயன்படாது. பணம் ஓரிடத்தில் சம்பாதிக்கப்பட்டாலும், வேறு இடத்தில் உதவும். வெளிநாட்டிலும் உதவும். இது இடத்தை வெல்வதாகும். தனி மனிதன் தனி மனிதனாகவே வாழ்ந்தால் பணம் இல்லை. சமூகமாக வாழும்பொழுதும் நோட்டிற்கு மதிப்பு வருவது மனிதனுக்கு சர்க்கார் மீது நம்பிக்கையிருப்பதால்தான். சர்க்கார் மீது நம்பிக்கை போன நாடுகளில் பணக்கத்தைகள் வீசப்பட்டன. காலத்தையும், இடத்தையும் வெல்லும் பணம் நம்பிக்கையால் உற்பத்தியாகிறது. இதன் மதிப்பு நிர்வாகத் திறமையைப் (organisation) பொருத்தது.
- கடந்த கால உழைப்பை எதிர்காலத்திற்கு உபயோகப்படுத்துவதும்,
- ஓரிடத்து உற்பத்தியை அடுத்த ஊருக்கு, அடுத்த நாட்டிற்கு எடுத்துப் போக உதவுவதும்,
- சமூகத்தை நம்பும் மனிதனுக்கு சமூகம் உதவும் கருவியாக இருப்பதும்,
- உழைப்பு, திறமை, தரம், மதிப்பு, இவற்றைச் சேர்த்து (organise) நிர்ணயிப்பதும் பணம் என்பதால்,
- Energy Organisation, trust, உழைப்பு, நிர்வாகத் திறமை, நம்பிக்கை ஆகியவற்றால் பணம் உற்பத்தி செய்யப்படுகிறது.
உழைப்பு என்பது சக்தி, நிர்வாகம் என்பது எண்ணக் கோவை, நம்பிக்கை என்பது மனம் ஏற்பது ஆகியவை முழுவதுமாக மனத்தின் அம்சங்கள். மனம்,
- சக்தியை அளவுகடந்து எழுப்பும்.
- Oragnisation நிர்வாக முறையை மனம் உற்பத்தி செய்ய அளவில்லை.
- முடிவில்லாத நம்பிக்கையை மனத்தால் எழுப்ப முடியும்.