உலகம் – மோட்சம் – அரவிந்தம் – 2

One and the Many ஏகன் – அநேகன்

சிருஷ்டி ஆனந்தத்திற்காக ஏற்பட்டது. ஆனந்தம் எழ லீலை வேண்டும். ஜீவனில், ஜீவியத்தில், ஆனந்தத்தில் லீலையுண்டு. ஊரில் அநேக விசேஷங்கள் தேர்தல், திருமணம், விழா, வெளியூர் சுற்றுலா அதிகமாக இருந்தால் வாழ்க்கை சுறுசுறுப்பாக இருக்கும். லீலை அதிகமானால் ஆனந்தம் அதிகமாகும், பரமாத்மா பரமாத்மாவாகவே இருந்தால் லீலையில்லை. ஆனந்தம் குறைவு. பரமாத்மா, ஏராளமான ஜீவாத்மாக்களானால், பரமாத்மாவுக்கும், ஜீவாத்மாவுக்கும் ஜீவன் பரிமாறிக் கொள்கிறது. ஜீவாத்மாக்கள் தங்களுக்குள் பரிமாறிக் கொள்கின்றனர். அது ஜீவியத்திலும் உண்டு, ஆனந்தத்திலும் உண்டு. ஒரு மரத்துண்டை இரண்டாக்கலாம், 4 ஆக்கலாம். அவை மீண்டும் கூடாது. இது பிரிவினை.

ஒருவர் பல கடமைகளை ஏற்றால் – தகப்பனார், தலைவர், முதலாளி – அவர் பிரிவதில்லை. அம்சம் பிரிகிறது, அங்கம் பிரிவதில்லை. நமக்குப் பல திறமைகள் எழுகின்றன. அவை 10 ஆக இருக்கலாம், 100 ஆக இருக்கலாம். திறமைகள் அதிகப்படுவதால், மனிதன் பல பாகங்களாகப் பிரிக்கப்படுவதில்லை. அதிகமான திறமைகள் வாழ்வை அதிகமாக அனுபவிக்கப் பயன்படும்.

  • இதைப் பிரியாத பிரிவினை எனலாம் (differentiation and not division).
  • பிரிந்த பகுதிகள் அடிப்படையில் ஒன்றானவை. 50 திறமைகள் பிரிந்து தோன்றினாலும், அடிப்படை மனிதன் ஒருவனே.
  • திறமைகள் பிரிந்தால் மனிதனும் அதுபோல் பிரிந்து விடுகிறான்எனப் புரிந்து கொண்டால், நூல் புரியவில்லை எனத் தோன்றும்.
  • மனம் பிரிக்கிறது ( divides). சத்தியஜீவியம் பிரிப்பது differentiation.
  • சத்தியஜீவியச் செயலை மனத்தால் புரிந்து கொள்ள முயன்றால் குழப்பம் எழும்.

நிலையான சலனம்

இதை ஸ்தாணுஎனக் கூறுவர். ஓடும் ரயிலில் நாம் தந்திக் கம்பங்களைக் காணும் பொழுது, நிலையாகத் தோன்றுவது போல் உலகம் நிலையாக இருக்கிறது. நிலையானது சத். அசைவது சக்தி. சலனமாக நாம் காண்பது நிலையானது. நிலையானதாக உள்ள சத் சலனமான சக்தியாக இருக்கிறது. சலனம் காலத்துள்ளும், நிலையானது காலத்தைக் கடந்தும் உள்ளது. மூன்றாம் நிலை காலத்துள் இவை இணைந்துள்ளன. மௌனத்துள் உள்ள சப்தம் போல் ஸ்தாணுவில் சலனம் உள்ளது. ஸ்ரீ அரவிந்தம் உலகில் மலர்ந்தால் இரண்டும் இணைந்து செயல்படும் அற்புதம் தெரியும்.

அகண்டமான கண்டம் INFINITY IN THE FINITE.

தத்துவத்தில் good,evil,Good,என ஒரு கருத்துண்டு. Good என்பது Self-existing good எனப்படும். நமக்கு நல்லது, கெட்டது என இரண்டுண்டு. கெட்டதற்ற நல்லது ஒன்றுண்டுஎன நம் அறிவுக்கெட்டாது. ஒளியும், இருளும் நாமறிவோம். இருளற்ற ஒளியென ஒன்றுண்டுஎன நாம் நினைப்பதில்லை. குறையும், நிறையும் உண்டு. குறையற்ற நிறை என்பது நம் அனுபவத்தைக் கடந்தது. கண்டம் சிறியது, அகண்டம் பெரியது. அகண்டம் கண்டத்துள் உண்டு. கண்டத்தையறியாத அகண்டமுண்டு என்பது ஸ்ரீ அரவிந்தத்திற்கேயுரிய கருத்துகள். உலகில் infinity என்பது finiteக்கு எதிரானது. பிரம்மத்திற்குரிய infinityக்கு எதிரான finite இல்லை என்பதால் அதை self-existing infinity என்கிறார் பகவான். மனிதனும் தெய்வமும் எதிரானவை. தெய்வம் மனிதனில் வெளி வந்தால் அது மனித தெய்வமாகும். அதுவே ஸ்ரீ அரவிந்த இலட்சியம். இதுவரை உலகம் காணாதது என்பதால் உதாரணம் தர இயலவில்லை. பகவான் அலிப்பூரில் கண்ட நாராயணத் தரிசனம் அகண்டமான கண்டம், மௌனமான சப்தம் வரிசைக்குரியது.

புறமான அகம்

அகம் ஒரு பகுதி, புறம் அடுத்த பகுதி. அகம், புறத்தை உட்கொள்ளக் கூடியது. அப்படி உட்கொண்டால் அது உயரும். ஜடம் வேறு, ஆன்மா வேறு என்பது நம் கருத்து. மனம் பிரபஞ்ச ஜீவியத்திற்கு உயர்ந்தால் ஜடம் சக்தியலையாகத் தெரியும். ஆன்மாவும் சக்தியலையாகத் தெரியும். மனமும், உயிரும் சக்தியலைகளாகத் தெரியும். ஜடமும், ஆன்மாவும் சக்தியலைகளாக இருப்பதால் பிரபஞ்ச ஜீவியத்தில் அவை இணைகின்றன, அவை ஒன்றேஎன அறியலாம். அதற்கும் அடுத்த கட்டம் உண்டு. அது கடந்த நிலை, காலத்தையும், சிருஷ்டியையும் கடந்த நிலை. பிரம்மம் சிருஷ்டியில் சத்தாக மாறியது. சத் ஏற்பட்டவுடன் எதிரான அசத் ஏற்பட்டது. சத் சித்தித்த ரிஷிகள் உண்டு. அசத் சித்தித்த ரிஷிகள் உண்டு. சத் சித்தித்தபின் அதைவிட்டு அசத்தையடைந்தவர் அசத் என்ற சித்தி பெற்றவர். பகவான் சொல்வது வேறு. சத்திலிருந்து

அசத்திற்குப் போக சத்தை விடவேண்டும் என்ற நிர்ப்பந்தமில்லை. சத்தை விடாமல் அசத்தை அடைவது முழுமையை நாடுவது. சத் பகுதி, அசத் பகுதி. இரண்டில் எது சித்திப்பதும் பகுதியான சித்தி. சத் சித்தித்தபின் சத்தில் ஊன்றிய காலை எடுக்காமல் அசத்தை எட்டினால், அது சித்தித்து விட்டால், சத்தும், அசத்தும் சித்தித்ததாகும். அது முழுமை சித்தித்ததாகும். அதனால் சத் உயர்கிறது, அசத்தும் உயர்கிறது. இரண்டும் இணைகின்றன. அவை பிரம்மத்தில் இணைகின்றன. அதே போல் அகமும், புறமும், உயர்ந்து உயர்ந்த அகமாகிறது. அதுவே அகமான புறம்.

ஆனந்தமான வலி

ஆனந்தம் அறியாமையால் வலியாகிறது. வலியை உணர்வது மனம், அதுவும் மேல் மனம். மனம் வலியைப் பொறுத்துக் கொள்ள முடிவு செய்தால் எந்த அளவு வலியையும் பொறுத்துக் கொள்ளலாம் என்று அன்னை கூறுகிறார். மயக்கமருந்து வருமுன் காயம்பட்ட கை, காலை வெட்டி எடுத்தனர். அவற்றை எப்படிப் பொறுத்துக் கொள்ள முடிந்தது? வலி அளவுகடந்து அதிகரித்தால் அது ஆனந்தமாகும் என்கிறார் அன்னை. வலிக்கு அனந்தமில்லை. பொய், தீமை, குறை, இருள் போன்றவை பெரியதாகலாம், அனந்தத்தை எட்ட முடியாது (can reach immensity never touch infinity). வலியும், ஆனந்தமும் எதிரானவை. அந்த ஆனந்தத்தை பகவான் Bliss என்கிறார். இரண்டையும் கடந்த ஆனந்தம், இரண்டையும் உட்கொண்ட ஆனந்தத்தை delight என்கிறார். ரிஷிகள் கண்டது அக்ஷரப் பிரம்மம். அது பகுதியான பிரம்மம். அசைவற்றது. பிரம்மம் அசையும், அசையாமலுமிருக்கும். அது முழுமையான பிரம்மம் என்பது ஸ்ரீ அரவிந்தம்.

அமிர்தமான விஷம்

அமிர்தம் அமர வாழ்வு தரும். விஷம் உயிரை எடுக்கும். இவை எதிரான கருத்துகள். உயிர் தரும் விஷமோ, உயிரை எடுக்கும் அமிர்தமோ உண்டா? இருள் அடர்ந்த ஒளி என்பது போல் விஷம் உயர்ந்த அமிர்தம் என்ற நிலை தத்துவத்திற்குண்டு,

 வாழ்க்கைக்கு ஒத்து வாராது. ஒளி அடர்ந்து, செறிந்தால் இருளாகிறது என்பது தத்துவம். விஞ்ஞானம் அதை ஆமோதிக்கும். பச்சை என்பது வெண்மையான ஒளியைப் பெற இடம் பச்சை நிறத்தை மட்டும் பிரதிபலித்து மற நிறங்களைக் கிரகித்துக் கொள்கிறது. அதையும் கிரகித்துக் கொண்டால் கறுப்பாகிறது. அதனால் கறுப்பான இருள் அடர்ந்த ஒளியாகும்.

பரமாத்மாவான ஜீவாத்மா

நாம் அகந்தையை ஜீவன், அல்லது ஜீவாத்மா எனத் தவறாகப் புரிந்து கொள்கிறோம். அகந்தை அழிந்தால் அல்லது கரைந்தால் அங்கு புருஷன் வெளிப்படுகிறான். அது World Purusha பிரபஞ்ச ஆத்மா. இதைப் புறத்தில் காணலாம். அகத்திலும் காணலாம். அகத்தில் பிரபஞ்சத்தைக் கண்டால், அதனுள் ஆத்மா தெரியும். புறத்தில் பிரபஞ்ச ஆத்மாவாகத் தெரியும் புருஷன் அகத்தில் பிரபஞ்ச அனுபவத்துள் பிரம்மத்தின் ஆத்மாவாகத் Transcendent Purusha  தெரிகிறது. அது பரமாத்மா. எனவே ஜீவாத்மாஎன நாம் அறிந்தது பரமாத்மாவாகும்.

வலுவான பலஹீனம்

வலிமை, எளிமையுண்டு. எதிரானவை. வலிமையுயர்ந்து பண்பால் எதிரியைத் தாக்க மனம் வாராவிட்டால் அது பலஹீனமாகக் கருதப்படும். அது பலஹீனமன்று. அதன் எதிரில் அதன் வலிமையை ஏற்று உலகம் அடங்கியிருப்பதும் உண்டு.

கோரமான அழகு

அழகு என்பது ஆனந்தத்தின் பகுதி. மனம் ஆனந்தத்தை அழகாக அறிகிறது. உயிர் ஆனந்தத்தைச் சந்தோஷமாக உணர்கிறது. ஆத்மா ஆனந்தத்தை அன்பாக அறியும். ஆனந்தம் அகம். அதன் புறம் அனந்தம். மனம், உயிர், ஆத்மா அனந்தத்தை அழகு, சந்தோஷம், அன்பாக உணர்கின்றன. அழகு என்பது ரூபம்.

சிறப்பான ரூபம் அழகு. (Perfect form is beauty). அழகில்லாமல் இருக்கலாம். அழகு எப்படிச் சிறப்பான ரூபமோ அதற்கெதிரான ரூபம் விகாரம், கோரம்.

                   அழகும் கோரமும் எதிரானவை.

  • அழகு எப்படிக் கோரமாக இருக்க முடியும்?

நிலைக்கேற்ப ரூபம் மாறும். நிலைகள் பல. ரூபங்களும் பல. ஒவ்வொரு நிலைக்குரிய அழகுண்டு. நாம் பேசும் பாஷை அழகாக இருக்கலாம், இல்லாமலிருக்கலாம். நாம் மழலை பேசினால் அது அசிங்கமாக இருக்கும். குழந்தை பேசும் மழலை அழகு. எது நமக்கு அசிங்கமோ, அது குழந்தைக்கு அழகு. பேச்சுக்குரிய ரூபம் மழலை. தோற்றத்திகுரிய ரூபம் அழகு. கார் டிசைன் போட கம்பனி டிசைன் என்ஜீனியர் படும்பாடு பெரியது. தோற்றம் அழகாக அமைந்து விட்டால், அதனால் கார் அதிகமாக விற்கும். Luggage stand கார் மீது வைக்க வேண்டிய அவசியம் ஒரு சிலருக்குண்டு. அதனால் தோற்றம் விகாரமாவதைப் பொருட்படுத்தாமல் அதை வைத்தனர். அது விகாரம் எனப் புரிந்து கொள்ளாமல், அதை அழகாக நினைத்துப் பலரும் அதை வைத்தனர். மனவளர்ச்சியற்றவர்க்கு அது அழகாகத் தோன்றும்.

  • மனவளர்ச்சியற்றவர்க்குப் பிறருக்குரிய விகாரம் அழகாகும்.
  • ஒருவருக்கு அழகு, அடுத்தவர்க்கு விகாரம்.
  • அழகு நிலைக்குத் தகுந்தாற் போல் மாறும்.
  • கோரம் அழகிற்குட்பட்டது, அழகு கோரத்திற்குட்பட்டது.

சந்தோஷமான வருத்தம்

பகவான் ஸ்ரீ அரவிந்தர் சந்தோஷத்தின் உறைவிடம். அவரை தரிசித்தவர்கள் பல மாதம்வரை அதை உணர்வார்கள். ஆயுள் முழுவதும் அவர் வருத்தமாக இருந்தார். அதை Psychic sadness ஆத்மாவின் வருத்தம் என்கிறார். அவர் தாங்கி வந்த அருளை உலகம் ஏற்காததால், சந்தோஷத்தின் சாகரமான அவர் வருத்தப்பட்டார். ஒருவர் சந்தோஷப்படும் காரியம் அடுத்தவர்க்கு

வருத்தம் தரும். ஜெயித்த கட்சி சந்தோஷப்படும் பொழுது தோற்ற கட்சி வருத்தப்படுகிறது. ஒரே நிகழ்ச்சி ஒருவருக்கு சந்தோஷத்தையும், அடுத்தவர்க்கு வருத்தத்தையும் தருகிறது. இரண்டும் ஒரேயிடத்தில் உற்பத்தியாகின்றன. சந்தோஷம், வருத்தம் என்பது மனநிலையைப் பொருத்தது. நிகழ்ச்சியைப் பொருத்தது.

ஞானமான அஞ்ஞானம்

ஞானமும், அஞ்ஞானமும் எதிரானவை. இரண்டையும் உட்கொண்ட பெரிய நிலை ஜோதி.

மனிதனான பிரபஞ்சம்

பிரபஞ்சம் மனிதனுள் உள்ளது. மனிதன் பிரபஞ்சத்துள் உள்ளான். பிரம்மம் இரண்டையும் கடந்தது, இரண்டையும் உட்கொண்டது.

மரணமான அமரவாழ்வு

மரணமற்றது அமரவாழ்வு. மரணம் உடலையழித்துப் புது உடல் பிறக்க வழி செய்கிறது. மரணத்தால் உடல் அழிவதால் ஆத்மா மீண்டும் புது உடலில் பிறக்கிறது. உடல் அழிந்தாலும், அழிவது குறிப்பிட்ட ஓர் உடல். உடல் என்பதை நிலைநிறுத்துவது மரணம், பிறப்பு. மரணம் வாழ்விற்கு நித்தியமளிக்கிறது என்பது பகவான் வாக்கு.

புருஷனான பிரகிருதி

புருஷனும் பிரகிருதியும் எதிரானவை. பிரகிருதியுள் புருஷன் உண்டு. அப் புருஷன் பரிணாம வளர்ச்சி பெறுகிறான். அது சைத்தியப்புருஷன். அவனுள் புருஷனும் பிரகிருதியும் அடங்கியவை.

பகுதி,முழுமை,  இரண்டையும்  உட்கொண்ட   பூரண   முழுமை   என்ற   தத்துவம் ஸ்ரீ அரவிந்தத்திற்கு அடிக்கல். அது தெளிவாகப் புரிந்தால், பெருந்தடை விலகும். இதுபோன்ற மற்ற கருத்துகளையும் எடுத்து ஆராய்ந்து விளக்கினால் மற்ற தடைகள் விலகும்.

பகுதி, முழுமை என்பதிலுள்ள அடுத்த அம்சம்

முழுமை பகுதியாகப் பிரிகிறது. பகுதிகளைச் சேர்த்தால் மீண்டும் முழுமை வரும் என்பது அறிவு ஏற்கும் கருத்து. அது சில சமயங்களில் சரி. சரியில்லாத சமயங்கள் உண்டு. ஒரு கடிகாரம் முழுமை. அதன் பாகங்களைப் பிரிக்கிறோம். மீண்டும் அவற்றை ஒரு கூடையில் ஒன்று விடாமல் எடுத்துக் கொண்டால், அது கடிகாரமாகாது. அது கடிகாரத்தின் பகுதிகளேயாகும். கடிகாரம் என்ற முழுமைக்கும், அதன் பகுதிகள் சேர்ந்த தொகுப்பிற்கும் இடையே ஒரு வெளியுண்டு. அது சூட்சுமமானது. பகுதிகள் எப்படிச் சேர வேண்டும் என்பது பகுதிகளில் இல்லை. அது நம் மனத்திலுள்ளது. சூட்சும ஞானம். அதன்படி பகுதிகள் சேர்ந்தால் பகுதிகள் கடிகாரமாகும். எனவே முழுமை பகுதிகளின் தொகுப்பை விடப் பெரியது என்ற கருத்து நூலின் பல இடங்களில் வருகிறது. அதன் சூட்சுமம் புரிய வேண்டும்.

REVERSAL , தலைகீழான மாற்றம்

– நண்பர்கள் எதிரிகளாவது, எதிரிகள் நண்பர்களாவது தலைகீழ் மாற்றம். – ஜனத்தொகை பெருகுவது நாம் பெற்ற சாபம் என்று 50 வருஷமாகப் பேசியவர் ஜனத்தொகை பெருக்கம் நமக்குச் சாதகமானது என்கிறார்.

மேல் மனம், உள் மனம், அடி மனம், சைத்தியப்புருஷன் என்பவை படிப்படியாக உள்ள நிலைகள்.

1) மேல் மனம்

நாமறிந்தது, நாம் வாழ்வது மேல் மனத்தில். மனிதனுடைய மனம் சுருங்கி, குறுகி, காலத்திற்குக் கட்டுப்பட்டு, அகந்தையும் செயல்படச் சம்மதித்து, சிறியதாக (finite) ஆவது மேல் மனத்தில்.

இதன் குணங்கள்:-

நம் மனம் தலைகீழாகச் செயல்படும் இடம். ஆனந்தம் வலியாக மாறித் தோன்றும். Infinite இங்கு finite ஆகத் தோன்றும். Eternity காலத்தைக் கடந்த நிலை Time காலமாகத் தலைகீழே மாறும். ஜீவாத்மா சுருங்கி, அஞ்ஞானத்திற்குட்பட்டு அகந்தையாக இங்குக் காட்சியளிக்கும். தெய்வீக மனம், divine mind இங்கு மனித மனமாகிறது creature mind. தெய்வீக மனம் சத்தியஜீவியத்திலிருந்து உற்பத்தியாகிறது. சத்தியஜீவியம் முழுப்பார்வையுடையது. அதன் ஒரு பார்வையில் உலகம் முழுவதும் தெரியும். தெய்வீக மனம் சிறியது. சிறியதானாலும் அந்த அளவில் முழுமையுடையது. அதகு சத்தியஜீவியம்போல் முழுப்பார்வையில்லை. ஒரு புறம் மட்டும் பார்க்க வல்லது. ஆனால் இருபுறமும் மாறி மாறிப் பார்க்கக் கூடியது. தெய்வீக மனம் இருபுறமும் பார்க்க மறுத்து ஒரு புறம் மட்டும் பார்க்க ஆரம்பிப்பது,

  • தெய்வீக மனம் மனித மனமாவது.
  • அது சத்தியஜீவியத்தை மனம் மறப்பது.
  • அறியாமை ஆரம்பிக்கும் இடம் இது.
  • திறமையை, கடமையை மறந்து பயன்படுத்த மறுப்பது அறியாமை.
  • இப்படி மறப்பதன் ஏழு கட்டங்கள் ஏழு அஞ்ஞானமாகும்.

– பிரம்மத்தை மறப்பது ஆதியின் அஞ்ஞானம். – பிரபஞ்சப் பிரம்மத்தை மறப்பது பிரபஞ்ச அஞ்ஞானம். – உலகை மறந்து அகந்தையை ஏற்பது அகந்தையின் அஞ்ஞானம்.

– காலத்தின் உயர்ந்த நிலைகளை மறப்பது காலத்தின் அஞ்ஞானம். – ஜீவனின் பெருநிலைகளை மறப்பது மனத்தின் அஞ்ஞானம். – ஒரு பகுதி மற பகுதிகளை மறப்பது அமைப்பின் அஞ்ஞானம். – செய்வதறியாத நிலை நடைமுறை அஞ்ஞானம்.

  • மேல் மனம் அடிமனம் தலைகீழே மாறுவதால் உற்பத்தியானது.
  • அறியாமையை உற்பத்தி செய்த ஆண்டவன் அது பூரணம் பெற (perfect) மேல் மனத்தை ஏற்படுத்தி அங்கு அதைப் பூரணமாக்கினான். அதற்காக அதைத் தலைகீழே மாற்றினான். படிப்பு முடியும்வரை பையன் உலகை மறக்க உலகைத் துறப்பது அவன் வாழ்வைத் தலைகீழே மாறுவதாகக் கொள்ளலாம்.

2) உள் மனம் INNER MIND

இது மேல் மனத்தின் ஆழ்ந்த பகுதி.

இங்கு காலம் காலத்தைக் கடந்த நிலையாகத் தலைகீழாக மாறுகிறது.

அகந்தை மனோமயப்புருஷனாகிறது.

புலன்களால் அறியும் மனம் சூட்சுமமாக அறியும் மனமாக விரிவடைகிறது.

மேல்மனத்திற்கில்லாத சூட்சுமம் பெறுகிறது. சூட்சுமம் ஆன்மீகமில்லை.

Finite கண்டம் infinite அதற்கெதிரான அகண்டமாகிறது.

வலியாக மேல்மனம் ஆனந்தத்தை உணரும். உள் மனத்திற்கு வலியைக் கடக்கும் திறனுண்டு. வலியை ஆனந்தமாக மாறும் திருவுருமாறும் திறனில்லை.

இங்குள்ள ஒரு நிலை நிர்வாணத்தையடைய உதவும்.

அடுத்த நிலை சைத்தியப்புருஷனைத் தேடிச் செல்லும் வாயிலாக அமையும்.

விரும்பினால் உலகையறியும் திறனுடையது.

உள்ளே போக அனுமதியளித்த உள்மனம் உயர்ந்து (தலை கீழே மாறி) மேலே போக உதவும் லோகமாகும்.

3) அடி மனம் SUBLIMINAL MIND

பாதாளமும் பரமாத்மாவும் சேருமிடம் இது.

இது பிரபஞ்சம் முழுவதும் பரவியுள்ளது.

இதில் மறைந்துள்ள குகையில் சைத்தியப்புருஷன் உறைகிறது.

பூரணயோகத்தை மேற்கொள்ளும் லோகம் இது.

வலியை ஆனந்தமாக்கும் திறனுடையது.

இதுவரை செய்த யோகங்கள் உள்மனத்துடன் முடிந்து விடுகின்றன.

அங்கு அதிகபட்சம் தெரிவது அக்ஷரப்பிரம்மம்.

அடிமனம் அக்ஷரப்பிரம்மம், க்ஷரப்பிரம்மம் சேர்ந்த முழு பிரம்மத்தையறிய வல்லது.

மேல்மனம் தலைகீழே மாறிய லோகம் அடிமனம்.

மேல்மனம், உள்மனம், அடிமனம், சைத்தியப்புருஷன் என்ற நான்கு நிலைகளும் இரண்டாகப் பிரிகின்றன. மேலேயுள்ளது ஜீவியம், அடியிலுள்ளது பொருள். எனவே 8 நிலைகள் உள்ளன.

ஒவ்வொரு நிலையும் விஷயத்தைத் தலைகீழே மாறித் தோற்றமாக்குகின்றன.

இந்த 8 தலைகீழ் மாற்றத்திகும் உதாரணம் தெரிவது நல்லது.

எந்த ஒரு செயலிலும் இந்த 8 தலைகீழ் மாற்றமும் உண்டு. அவை ஒரே செயலில் தெரிவது விவேகம்பெறும் தகுதி தரும். அவற்றுள் சில:

 முரண்பாடு உடன்பாடு. தடை முன்னேற்றக் கருவி.மேல்மனம் – ஜீவியம்
 தோல்வி வெற்றிக்குரிய பாதைநஷ்டமடையாதவன் செல்வம் பெற முடியாது. டைபாய்டு வந்து பிழைத்தவர் உடலில் உள்ள ஊனம் ஒன்று மாறுவதுண்டு.மேல்மனம் – பொருள்
 ஜடமான புலனறிவு சூட்சுமமாகிறது. மனிதன் பேசுவதும் நினைப்பதும் எதிரானவை.உள் மனம் – ஜீவியம்  
 அகந்தை மனோமயப்புருஷனாகிறான். சிந்தனை அழிந்து மௌனமாகி நிர்வாணம் எழுகிறது. காலம் மாறிக் காலத்தைக் கடந்ததாகிறது.உள் மனம் – பொருள்
 பூவுலகம் பிரபஞ்சமாகிறது. காலம் மாறி மூன்றாம் நிலையை எய்துகிறது.அடி மனம் – ஜீவியம்  
 வலி ஆனந்தமாகிறது. பாதாளம் பரமாத்மாவாகிறது.அடி மனம் – பொருள்  
 ஆனந்தம் பிரம்மானந்தமாகிறது. அகந்தையும், மனோமயப்புருஷனும் சைத்தியப்புருஷனாகின்றனர்.சைத்தியப்புருஷன் – ஜீவியம்  
 வேதனையான உலகம் அற்புதமாகிறது. உலகினின்று தீமையழிகிறது. பாதாளமும், பரமாத்மாவும் மனத்தில் சந்திக்கின்றன.சைத்தியப்புருஷன் – பொருள்