உலகம் – மோட்சம் – அரவிந்தம் – 9

தெய்வீக ஆன்மா

– தெய்வீக வாழ்வு உண்டானால் தெய்வீக ஆன்மா இருக்க வேண்டும்.

– இது முழுமையுடையது என்பதால் கீழ் லோகத்தையோ, மேல் லோகத்தையோ விலக்க முடியாது. அதனால் அவ்விரு லோகங்களிலும் தெய்வீக ஆன்மா இருக்க முடியாது. சச்சிதானந்தம் மேல் லோகத்திற்குரியதானதால் அங்கும் இருக்க முடியாது. அக்ஷரப் பிரம்மம் உள்ள சச்சிதானந்தம் மேல் லோகத்திற்கு மட்டும் உரியது. பகவான் கண்டது முழுப் பிரம்மம். இது க்ஷர, அக்ஷரப் பிரம்மம் இரண்டையும் உட்கொண்டது. மேலும் ஓர் அம்சமுடையது. இது வளரும் ஆன்மா உறையும் சச்சிதானந்தம். இதனுள் மேல் லோகமும், கீழ் லோகமும் உண்டு.

தெய்வீக ஆன்மா சச்சிதானந்த லீலையுள் உள்ளது.

– தெய்வீக ஆன்மா பிரம்மத்தின் முன்னிலையை விட்டகல்வது இல்லை.

– பிரம்மத்தையும், பிரம்மம் ஜீவன்களில் உறைவதையும், ஜீவன்கள் பிரம்மத்திலிருப்பதையும், பிரம்மம் ஜீவனில் ஜீவனுக்குத் தனித்தன்மை தருவதையும் தெய்வீக ஆன்மா சிந்தனையாலும், உள்ளுணர்வாலும், உணர்வாலும் அறிகிறது.

தெய்வீக ஆன்மா மூன்று விஷயங்களை அறியும். அவை,

1) Self பிரம்மத்தால் அத்தனை ஜீவாத்மாக்களும் ஆனவை.

2) அத்தனை ஜீவாத்மாக்களும் self பிரம்மம், இறைவனில் உள்ளன.

3) பிரம்மம் அத்தனை ஜீவாத்மாக்களுள்ளும் உள்ளது.

அறிவு என்பதற்கு 3 நிலைகள் உண்டு. அவை, (1) சிந்தனை, (2) உள்ளுணர்வு, (3) உடல் உணர்வு. சிந்தனை மனத்திற்கும், உள்ளுணர்வு emotions உணர்வுக்கும், உடல் உணர்வு உடலுக்கும் உரியது. இம்மூன்றாம் நிலையை எட்டினால் அறிவு பூரணம் பெறுகிறது. மனிதன் இவற்றை மனிதனாக அறியலாம், தெய்வமாக அறியலாம். தெய்வீக ஆன்மா இம்மூன்று நிலைகளையும் தெய்வீகமாக அறிகிறது

– வேதம் இம் மூன்று நிலைகளையும் கடவுள்களுக்குக் கொடுக்கிறது.

அக்னி அனைத்துக் கடவுள்கட்கும் தலைவன்.

எல்லாக் கடவுள்களும் அக்னியில் சேர்கின்றனர்.

அக்னி மற்ற கடவுள்கட்குச் சேவகன்.

மனமும் சத்தியஜீவியமும்

– உலகத்தை சிருஷ்டித்த செயலை இறைவனுக்குப் புறம்பானது என நாம் கருதுகிறோம்.

– சத்தியஜீவியம் இரண்டாகப் பிரியும் பொழுது மனம் உற்பத்தி ஆயிற்று.

– மனம் பிரிவினையாலுண்டானது. இது பிரிக்கும் கருவி. மனம் பிரிப்பது முடிவற்றது. அணுவாகும்வரை பிரிக்கிறது. இனி பிரிக்க முடியாத நிலையில் சேர்க்கிறது.

பிரிவினையும் சேர்ப்பதும் ஒன்றே.

– அடிமனம் மேல்மனத்தை ஆள்வதை அறிவது முதல் சித்தி. இது பிராணமயப் புருஷன்.

– மனத்திற்குரியது மனோமயப் புருஷன். மனோமயப் புருஷனுக்கும் மனத்தின் அறியாமையுண்டு.

வாழ்வு

– உறுதி சக்தியில் மறைந்தால் ஜடம் உற்பத்தியாகிறது.

– வாழ்வு உடல் உணர்வை மனத்திற்குக் கொண்டு போய் எண்ணமாக மாற்றி, அந்த எண்ணத்திற்கு உடலை கட்டுப்படுத்துகிறது.

– ஆழ்மனம் என்பது சக்தி மறைவதால் ஏற்படுவது.

மரணம், ஆசை, இயலாமை

– மரணம் வாழ்வுக்கு அமரத்வம் தருகிறது.

– பசி அன்பாக மாறும் இடையில் ஏற்படுவது ஆசை.

– இயலாமை பிணக்கால் இருபுறத்தையும் உயர்த்தி அன்பை உற்பத்தி செய்கிறது.

– பிரபஞ்சத்தில் வாழ்வு தன்னை வலியுறுத்த மரணம், ஆசை, பிணக்கைப் பயன்படுத்துகிறது.

  • 1) மரணம் – வாழ்வு:

மரணத்தால் உடல் அழிகிறது. ஆன்மா அடுத்த உடலில் ஜனிக்கிறது. அழிவது ஒரு உடல். ஆனால் உலகில் உடல்‘ அழிவதில்லை. ஒரு ரூபத்தில் அழிந்தவுடல், அடுத்த ரூபத்தில் எழுகிறது. அவ்வகையில் உடலு‘க்கு நித்தியத்துவம், அமரத்துவம் தருகிறது. ஒரு ஆபீசர் மாற்றப்படுகிறார். அடுத்தவர் வருகிறார். ஆபீசர்கள் மாறுகிறார்கள். ஆபீஸ் நிலையாக இருக்கிறது. அவருக்கு வேறு போஸ்டிங் வந்தது; வேலை போகவில்லை. வேலைக்கு நிரந்தரம் தருவது மாற்றல். உடலுக்கு அமரத்துவம் தருவது மரணம். ஒரே ஆபீசர் ஒரே ஊரிலிருந்தால் இலஞ்சம் ஏற்பட வழியாகும். ஒரே உடல் அமரத்துவமடைந்தால் வளரும் ஆன்மாவுக்குரியத் தகுதியை அதனால் தரமுடியாது. ஒரு பிறவியில்

ஆன்மா பெற்ற அனுபவத்தை அப்பிறவியில் உடல் ஆதரித்தது. ஆன்மா வளர்ந்தபின் அவ்வுடல் தொடர்ந்து சேவை செய்ய முடியாது. பள்ளி முடித்த பையன் கல்லூரி போக வேண்டும். படிப்பை பள்ளியிலேயே தொடர முடியாது.

2) பசி – அன்பு:

வாழ்வுக்கு மனத்தைப்போல், உடலைப்போல் வேகம் உண்டு. உடலின் வேகம் செயலுக்குரியது. மனத்தின் வேகம் அறிவை நாடும். வாழ்வின் வேகம் பசியில் ஆரம்பித்து அன்பில் முடியும். வாழ்வின் வேகத்தை ஆசை எனலாம். வாழ்வு சிறியது முதல் பெரியதுவரை நீடிக்கும். சிறியதற்கு வேகம் எழுந்தால் எடுத்துக் கொள்ளப் பிரியப்படும், முயலும். பெரியதற்கு வேகம் வந்தால் கொடுக்கப் பிரியப்படும். எடுத்துக்கொள்வது பசி. கொடுப்பது அன்பு. பசியும், அன்பும் வாழ்வின் சிறிய முனையிலும், பெரிய முனையிலும் உள்ள ஆசை.

3) இயலாமை – பிணக்கு:

முடிந்தவன் செய்வான். முடியாதவன் சண்டையிடுவான். பிணக்கில் இரு புறம் உண்டு. பிணக்கால் இரு புறமும் ஓரளவு அனுபவம் பெறும். அதனால் உயரும். உயர்வதால் ஏற்படுவது அன்பு.

4) வாழ்வு வலியுறுத்துவது (self-affirmation):

வாழ்வுக்கு மேல் மனமும், கீழே உடலும் உள்ளன. வாழ்வு உயிருடனிருப்பது வாழ்வுக்கு அவசியம். மரணம் வாழ்வுக்கு அமரத்துவம் தருகிறது என்றோம். ஆசையும், பிணக்கும் அன்பை உற்பத்தி செய்ய இருக்கின்றன.

  • வாழ்வு உயிருடனிருக்க மரணம் அவசியம்.
  • வாழ்வு தன் பரிணாமக் கடமையைச் செய்ய ஆசையும், பிணக்கும் அவசியம்.
  • வாழ்வின் கடமை உடல் உணர்வை மனத்திற்குக் கொண்டு போய் எண்ணமாக மாற்றி,அவ்வெண்ணத்தின் ஆட்சிக்குள் உடலைக்

கொண்டு வருவது. உடலுக்குரியது செயல், உணர்வுக்குரியது உறவு, மனத்திற்குரியது அறிவு. செயல் அறிவால் உறவை உயர்த்துவது பசியும், ஆசையும், பிணக்கும் அன்பாவது. அன்பு சைத்தியப்புருஷனுக்குரியது. பரிணாமம் சைத்தியப் புருஷனை உருவாக்க வாழ்வு ஓர் அரங்கமாக இருக்கிறது.

வாழ்வின் எழுச்சி

– அணு மனிதனை இரு கூறுகளாகப் பிரிக்கிறது.

– சைத்தியப்புருஷன் என்ற மையம் அன்பால் பிணக்கைச் சுமுகமாக்கக் கொடுத்து வளர்வது என்ற கொள்கையை ஏற்கிறது.

வாழ்வின் பிரச்சினை

– வாழ்வு என்பது சச்சிதானந்தத்தின் விழிப்பான சக்தி. அதன் மையம் துண்டு செய்யும் மனம். மனம் எதிரான இரட்டைகளை மோதவிடுகிறது. இதற்குத் தீர்வு வாழ்வில் மனம் தேடவேண்டும்.

– ஜீவியத்தின் நான்கு முனைகள் சத்தியஜீவியம், மனம், வாழ்வு, உடல்.

– மூன்று தடைகள்:

1) மனிதன் மேல் மனத்தில் வாழ்கிறான். 2) மனத்தால் மனிதன் பிரிக்கப்பட்டுவிட்டான். 3) சக்தியும் ஜீவியமும் பிரிந்துள்ளன.

– சக்தியும், ஜீவியமும் சுமுகமாக இணைய மனித ஜீவியம் பிரபஞ்சம் முழுவதும் பரவ வேண்டும். அது சத்தியஜீவியத்திற்கு உரியது. அதுவே நான்காம் நிலை.

இரட்டையான ஆத்மா

– மனம், உடல், உயிர், ஆன்மா ஆகியவை இரண்டிரண்டாகப் பிரிந்துள்ளன.

1) மனம் – அடிமனம் மேல்மனம்

2) வாழ்வு – வாழ்வு சூட்சும வாழ்வு

3) உடல் – ஜடமான உடல் சூட்சும உடல்

4) ஆத்மா – வளராத ஜீவாத்மா வளரும் சைத்தியப்புருஷன்.

– சைத்தியப்புருஷன் ஆசையை வென்று, ஆத்மாவை விடுதலை செய்து, சத்தியஜீவியத்தை அடைந்து, மூன்று திருவுருமாற்றங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

ஜடம்

– ஜடம் என்பது சச்சிதானந்தம்.

  • மனம் புலன்வழி ஆத்மாவை ஜடமாகக் காண்கிறது.
  • சத் பிரபஞ்சத்தில் ஆன்மீகப் பொருளாகி, மனத்தால் பிரிக்கப்பட்டும் சேர்க்கப்பட்டும் ஜடமாகிறது.
  • மனம், வாழ்வுபோல் ஜடமும் பிரம்மமே.
  • ஜடம் என்பது சக்தி பெற ரூபம் சக்தியைக் கொடுத்தது வாழ்வு.

ரூபத்தைக் கொடுத்தது மனம்.

  • சத் தன்னைத் தன்னுள்ளே கிரகித்து சிக்கலாகி, மறந்த நிலை ஜடம் எனப்படும்.
  • ஜடத்துள் ஜீவியம் ஒளிந்துள்ளது.
  • ஜீவியத்துள் ஜீவன் ஒளிந்துள்ளது.
  • ஜடம் ஜீவியத்தை ஜீவனைக் கண்டுபிடிக்கத் தூண்டுகிறது.
  • சச்சிதானந்தம் தன்னை மனத்தின் புலன்வழிக் காணும் பொழுது தானே அதற்கு ஜடமாகத் தெரிகிறது.

ஜடத்தின் முடிச்சு

– ஜடம் பரிணாமத்தால் சத்புருஷனாக உள்ள தடைகள் மூன்று.

1) அறியாமை 2) தமஸ் 3) பகுதியாகப் பிரிந்த நிலை.

– பிணக்கின்பின் சுமுகம் உண்டு. அற்புதமான ஐக்கியத்தை நோக்கி உலகம் செல்கிறது.

– வாழ்வு பிரிவினையை அனுமதிக்கிறது. தன்னுள் பொருள்களை கிரகித்து விழுங்குவது வாழ்வின் வழி.

– மனமும், சத்தியஜீவியமும் வாழ்விலிருந்தும், ஜடத்திலிருந்தும் பரிணாமத்தால் எழுகின்றன. பிரிவினை ஒழிய முடியும்.

– நம் மனத்தின் கண்ணோட்டம் தடை. பொருள் பல நிலைகளிலிருப்பதால் நம் மனம் மாறினால் பொருள் திருவுருமாறிச் சத்தாகும்.

பொருளின் பல கட்டங்கள்

– பொருள் ஏழு கட்டங்களிலிருந்தாலும் எல்லாம் ஒரே வகையின. அதனால் பரிணாமத்தால் ஜடம் உயர்ந்து சத்தாகும். நாம் காய்கறிகளைச் சாப்பிடுகிறோம். அவை ஜீரணமாகி உடலுடன் கலக்கின்றன. நம் உடலும், காய்கறியும் வேறு வேறு வகையான தானாலும் இரண்டும் ஒரே பொருளால் செய்யப்பட்டதால் அவற்றால் உடலுடன் கலக்க முடிகிறது.

சப்த லோகம்

– வேதம் உலகை 7 அல்லது 8 ஆகப் பிரிக்கிறது. 10 அல்லது 12 ஆகவும் பிரிக்கலாம். பகவான் மரபின் 7 பிரிவை 8 பிரிவாக்குகிறார். அப்படி அவர் புதியதாகச் சேர்த்தது சைத்தியப்புருஷன்.

– சத், சித், ஆனந்தம், சத்தியஜீவியம் மேலேயுள்ளவை. அவை தலைகீழே மாறி ஜடம், வாழ்வு, சைத்தியப்புருஷன், மனமாகின்றன.

தெய்வீக மனத்தின் மாயை

– அறியாமை என்பது முழுமையிலிருந்து பிரிந்து ஒரே விஷயத்தில் நிலைப்பது.

– மேல்மனத்திலிருந்து உள்மனம் சென்று அங்கிருந்து உயர்ந்து ஆன்மீக மனத்தை (முனி, ரிஷி, யோகி, தெய்வம்) அடைந்தால் சத்தியஜீவியத்தையடையலாம். இது சூட்சுமத் தொடர்பு. விவேகானந்தர் பகவானுக்கு சத்திய ஜீவியத்தைக் காட்டினார். எப்படி அதை அடைவதுஎனக் கூறவில்லை.

அதைக் கண்டுபிடிக்க பகவானுக்கு 10 வருஷமாயிற்று. மேலே போக உள்ளே போக வேண்டும் என்பது இரகஸ்யம்.

– மேல்மனத்திலிருந்து உள்மனம் சென்றடைந்தால்

1) மனோமயப் புருஷன் தெரியும். 2) நிர்வாணக் கதவு திறக்கும். 3) சைத்தியப்புருஷனை அடிமனத்தில் நாடும் வழி பிறக்கும்.

சைத்தியப்புருஷனை நாடினால் அங்கிருந்து உயர்ந்து ஆன்மீக மனம் வழி சத்தியஜீவியமடையலாம்.

– தெய்வீக மனம் One ஏகனுக்கு அனந்தமான வாய்ப்புகளை அளிக்கிறது.

பிரம்ம சிருஷ்டி பிரபஞ்ச சிருஷ்டி

– உலகை சிருஷ்டித்த சித்–சக்தி தன்னை நமக்கு வெளிப்படுத்துவதில்லை.

– விஞ்ஞானி ஜட உலகில் இரகஸ்யத்தைத் தேடுகிறான்.

– ஜீவியம் ஜட இருளினின்று பரிணாமத்தால் வெளி வருகிறது என்ற கொள்கை சரிஎன நிரூபிக்கப்பட்டது.

– ஏன் விதையிலிருந்து மரம் வருகிறது, ஆக்ஸிஜன், ஹைடிரஜனிலிருந்து ஏன் நீர் உற்பத்தியாகிறது என்று இக் கொள்கை விளக்குகிறது.

– ஜீன், குரோமசோம் என்ற ஜடப்பொருள் எப்படி மனித சுபாவத்தைத் நிரூபிக்கின்றன. தாங்கி வருகின்றனஎன அவை

– அகம் புறத்தை நிர்ணயிப்பதுபோல் மனம் ஜடத்தை ஆள்கிறது.

பகவான் சிருஷ்டியைப் பற்றிக் கூறுவது:

இறைவன் அனந்தமான ஜீவியஜோதி.

இறைவன் தானே உலகமாக முடிவு செய்து அணுவான ஜடமான இருளானான்.

இறைவன் உலகமானது சிருஷ்டி.

உலகம் மீண்டும் இறைவனையடைவது பரிணாமம்.

ஜடம் வாழ்வாகி மனமெனும் மனிதனாகியது பரிணாம வளர்ச்சி.

உலகில் ஆயிரம் பொருள்கள் உள்ளன.

மரம், செடி, மனிதன், கல், நீர், நெருப்பு போன்றவை அவை.

விஞ்ஞானிகளும், ரிஷிகளும் இவை எப்படி உற்பத்தி ஆயின எனக் கேட்கிறார்கள். (who determined them to be what they are?)

ஜடம் மரமாக வேண்டும் என முடிவு செய்தது யார்?

ஜடம் முதலில் மரம் அடுத்தது.

முதலிலுள்ள ஜடம் அடுத்து வரும் மரத்தை நிர்ணயிக்கிறது.

முதலிலுள்ளது அகம், அடுத்து வருவது புறம்.

எனவே அகம் புறத்தை நிர்ணயிக்கிறது.

இந்த ஜடம் அதன் முன் மனத்திலிருந்து எழுந்தது.

எனவே மனம் ஜடத்தை ஆள்கிறது.

– அம்மனம் மனித மனமில்லை, தெய்வீக மனம்.

– சத்தியஜீவியம் சிருஷ்டிக்கிறது. அதன் வழியை மனத்தால் அறிய முடிவதில்லை.

– தெய்வீக மனத்தில் ஐக்கியமில்லை. சத்தியஜீவியத்தில் ஐக்கியமுண்டு. அதனால் அது சிருஷ்டிக்கிறது.

– சத்தியஜீவியம் என்பது சச்சிதானந்தம், முடிவாக அது பிரம்மம்.

– அஞானத்தின் முக்கியத்துவத்தை அறிவது அவசியம்.

– பிரம்மத்திலில்லாதது உலகில் சிருஷ்டியாக வர முடியாது.