1) சங்கரர் எப்படி மாயையை நம்பினார்?
2) புத்தர் ஏன் பாதியில் விசாரத்தை நிறுத்தினார்?
3) அஞ்ஞான மாயைக்கும், தெய்வீக மாயைக்கும் எண்ணத்திலுள்ள தொடர்பு எது?
4) கணிதம் அறியாத அனந்தமெது?
5) தெய்வீகமனம் சிருஷ்டிக்கும் சத்தியம் ஏன் தனித்துத் துவங்குகிறது?
6) பிராணமயப் புருஷனிலிருந்து மனோமயப் புருஷனுக்கு மாறுவது எப்படி? மனோமயப் புருஷனிலிருந்து சத்தியஜீவனுக்கு மாறுவது எப்படி?
7) மாயை, சத்தியஜீவியம், அகமும்–புறமும், ஜீவியம், இயற்கை இவற்றிகுள்ள தொடர்பு.
8) ஜடம் பிரபச வாழ்வின் ஆனந்தம். தன் ஜீவியத்திற்குத் தன்னைப் புலன் உணர்வு அறியும் பொருளாகச் சமர்ப்பிக்கிறது.
9) மனம் உலகை சிருஷ்டித்தது என்ற முடிவுக்கு ரிஷிகள் எப்படி வந்தனர்?
10) ஜீவாத்மாவுக்கு அமரத்துவம் உண்டுஎன ஏன் ரிஷிகளால் அறிய முடியவில்லை? (அவர் மனம் ஜடமனம். அதனால் அறிய முடியாது).
11) எதையும் நம்ப மறுப்பவன், மாயாவாதி, பிரம்மம், பிரம்மத்தின் முழுமை.
12) மனம் சச்சிதானந்தத்தின் முறையான அடிப்படை. தன்னை மனம் மூலம் சச்சிதானந்தம் தனக்கே ஜடமாகக் காட்டுகிறது.
13) வாழ்வின் இரு புதிர்கள் – பிறப்பு, இறப்பு. (நினைவுக்குட்பட்ட மனம் நினைவைக் கடந்ததை அறிய முடியாது.)
14) நினைவு, மேல் மனம் அடிமனம் தலை கீழே மாறியது.
15) சன்னியாசி ஆத்மாவை அறிந்ததைப்போல் விஞ்ஞானி ஜடத்தை அறியவில்லை.
16) விரயமில்லை.
17) நம் வாழ்வில் சிருஷ்டியின் முறை செயல்படும் வகை (Process of creation in our life).
18) உள்ளுணர்வு – ஞானம் – பூரண ஆத்மானுபவம்.
- அறிவு காலத்தினின்று மூன்றாம் நிலைக் காலத்தைக் காண்பது உள்ளுணர்வு.
- உணர்வு காலத்தைக் கடந்த நிலையினின்று மூன்றாம் நிலைக் காலத்தைக் காண்பது ஞானம்.
- உடல் மூன்றாம் நிலைக் காலத்தைத் தன்னுள் உணர்வது பூரண ஆத்மானுபவம்.
19) முனிவர் – தெய்வ லோகத்திற்குப் போக உள் மனத்தை அடைவது தவிர்க்க முடியாதது. (தலைகீழ் மாறிய சிருஷ்டியை, பரிணாம நிலைக்கு மாற தலைகீழ் மாறும் வகை இது.)
20) அனைத்தையும் தன்னுட் கொள்ளும் பரிணாம முக்கியத்துவம் வாய்ந்தது சரணாகதி.
21) ஜீவனை சரணம் செய்தபின் பொருளையும் வெல்ல சுபாவத்தையும் சரணம் செய்ய வேண்டும் என்பதை அறிய பொருளையும், ஜீவியத்தையும் அறிய வேண்டும்.
22) ஏன் தெய்வீக ஆன்மா ஏற்பட்டது? அதன் அம்சங்கள் கடவுளையும், ஆத்மாக்களையும் அது அனுபவிக்கும் வகை.
23) ஜடம் எழுப்பும் எதிர்ப்பு – அஞ்ஞானம், தமஸ், பிரிவினை, அவற்றின் தத்துவம்.
24) யுகம் க்ஷணமாவது எங்ஙனம்? (புறம் அகமாவது யுகம் க்ஷணமாகும் காரணம்)
25) இலட்சியம் உலகை முந்தியது.
26) அகந்தையின் ஆரம்பம். அதன் அமைப்பு, செயல்.
27) முடிவுவரை முயற்சியை முடிக்கக் கூடாது. (பூரண யோகத்திற்குப் பூரண முயற்சி தேவை.)
28) அற்புதம் மனிதனால் பரிணாமத்தால் சிருஷ்டிக்கப்படப் போவதில்லை. அற்புதம் ஆதி காலம் தொட்டுள்ளது. மனிதன் சத்தியஜீவியத்திற்கு உயர்ந்து அதைக் காண வேண்டும்.
29) பிரம்மம் ஆனந்தத்தைப் பரிணாமத்தில் தேடுவதுபோல் சிருஷ்டியிலும் பெறுகிறது.
30) மேலெழும் பொழுது, ஒவ்வொரு நிலையிலும் ஒரு திறனை நாம் இழக்கிறோம். கீழே வரும் பொழுது ஒவ்வொரு நிலையிலும் ஒரு திறனைப் பெறுகிறோம்.
31) பிரம்மம் தனக்குப் புதிய ஆனந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வல்லது.
32) சிருஷ்டியில் சூட்சும வாய்ப்பு, கண்ணுக்குத் தெரியாத நிர்ப்பந்தம், பலன்என மூன்று நிலைகள் உள்ளன. வாய்ப்பை உள்ளுணர்வால் அறிவது நல்லது. குறைந்தபட்சம் அது சிந்தனைக்காவது எட்ட வேண்டும்.
33) பிறருக்கு எதையும் சொல்ல முடியாது என்றகருத்தில் பொதிந்துள்ள ஆன்மீகச் சாரத்தை அறிய வேண்டும். அதைக் கடந்து சென்று சிந்தித்து, உள்ளேயுணர்ந்து, உடலிலும் உணர்ந்து அணு தன்னையறிந்து பரிணாமத்தால் மலரும்படிச் செய்வது ஞானத்தைக் கடந்து செல்ல முயல்வதாகும்.
34) சத்தியஜீவியத் திருவுருமாற்றம் தவிர்க்க முடியாதது.
35) பூரணம் பெற தெளிவான கூர்மை பூரணம் சிறப்பெய்ய உதவும். அந்நிலையில் பகுதிகள் முழுமையை முழுவதுமாக உணரும்.
36) விதி பெற சுதந்திரம்.
37) சுதந்திரம் தன்னை இழக்கும் சுதந்திரத்தால் பேரானந்தம் பெறுவது.
38) மனமும் ஆத்மாவும் ஜடத்தில் செயல்படும் வேகம் அதிகம். அது செயலற்ற நிலையை எழுப்பும். அதனால் செயலற்ற நிலையே சிறந்த செயல் என்றேபடும்.
39) சர்வம் பிரம்மம் என்பதும், உள்ளது ஒன்றே என்பதும் எப்படி ஒன்று சேர்கின்றன?
வேத காலத்து ஐக்கியத்தை – புருஷப் பிரகிருதி ஐக்கியத்தை – ஏன் வேதாந்த ரிஷிகள் பிரித்தனர்? விஞ்ஞானி ஜடத்தை அறிந்ததைவிட சன்னியாசி ஆன்மாவை அதிகமாக அறிந்தும், ஏன் பிரம்மத்தின் முழுமையை அறியவில்லை? விஞ்ஞானி ஏன் ஜடத்தின் முழுமையைத் தவற விட்டு விட்டான்?
40) பிரபஞ்ச ஜீவியத்தினின்று எப்படி ஒருவர் பிரம்ம ஜீவியத்திற்குப் போக முடியும்? எப்படி பிரபஞ்ச ஜீவியத்தை எட்டலாம்?
41) விசாரம் நடுவில் நிறுத்தப்பட்டால் பிரபஞ்சம் எப்படி அதை ஏற்கிறது. ஏன்?
42) பாதாளமும், பரமாத்மாவும் இணைதல் ஏன் அவசியம்?
43) ஜீவாத்மாவே பிரபஞ்ச ஆத்மாவும், பரமாத்மாவுமாகும் என்ற கொள்கை நம் வாழ்வில் பழுத்துப் பலன் தருவது எப்படி?
44) அடிபட்டால் உடல் வலியால் பதிலிறுப்பது அவசியமில்லை. மரணம் உடலைத் தீண்ட முடியாமல் உடல் உணர்வு பெறுள்ளது.
காலமும், இடமும் அனந்தம்.
காலத்தைக் கடந்த அனந்தமுண்டு.
ஸ்தாணுவே சத்தியம்.
பிரபஞ்ச வாழ்வு அனந்தம்.
ஜீவன் சத்தியம், ஜீவியம் உண்மை. மனிதன் தர்மத்திற்குக் கட்டுப்பட்டவன். வாழ்வு அப்படிக் கட்டுப்பட்டதில்லை.
45) அறிவு புலனினின்று விடுபட்டால், ஞானமாகும்.
46) அளவும், தரமும் மாயை.
47) சக்தி ஜீவனின் செயல், தனிப்பட்டதில்லை.
48) சச்சிதானந்தம் சிருஷ்டிக்கு முன் ஏற்பட்ட நிலையற்ற சூட்சும ஆனந்தத்தை சிருஷ்டியில் ஜடப் பொருளில் நிலையாக வெளிப்படுத்த முயல்கிறது.
49) அசைவற்ற சாரமான ஆனந்தம் சலனத்தில் வெளிப்படும் முறைப்படுத்தப்பட்ட ஆனந்தமாகிறது.
50) சிருஷ்டியின் சாவியாக இரகஸ்யம், அதற்குரிய பூட்டான சிருஷ்டி.
மாயை பிரம்ம ஜீவியம்.
மாயை பிரிக்கும் கடனைத் திறமையாக மனம் எனும் கருவிக்கு அளித்தது.
51) தெய்வீக மாயை, சத்தியம்–ஜீவியம், சத்தியஜீவியம், ஜீவனுள்ள முழு எண்ணம், ஜீவனின் கதிரான அலை. இவற்றுள் பொதுவான அம்சங்கள் வேறுபாடு.
52) தெய்வீக ஜீவியத்தின் பொதுவான மனத்தின் உண்மை. ஆன்மீகச் சட்டம் ஞானி, ஞானம், ஞானம் அறிவது எனப் பிரிக்கிறது. சமமான சக்தி, மூன்றாகப் பிரியும் வகை.
53) ஏன் சத்தியஜீவியம் மூன்று நிலைகளை – கடவுள், ஜீவாத்மா, மனிதன் – ஏற்கிறது?
54) சிருஷ்டியின் முடிவு மனம். வாழ்வும், ஜடமும் சிருஷ்டியில்லையா?
55) தெய்வீக ஆன்மாவுக்கும் மனித ஆன்மாவுக்கும் உள்ள மாறுபாடு.
56) பிரபஞ்சம் அழிந்தாலும், வாழ்வு இருக்கும்.
57) மரணம் வாழ்வை அமரத்வம் பெறச் செய்கிறது.
58) மனோமயப் புருஷன் நம் ஆன்மாயில்லை.
59) பிணக்கால் அன்பெழும்.
60) சக்தியும் ஜீவியமும் பிரபஞ்சத்தில்தான் இணையும்.
61) லோகங்கள் 7 அல்லது 8, 10 அல்லது 12 ஆகும் என்பது ஏன்?
62) சைத்தியப் புருஷனை வாழ்விற்கும், ஜடத்திற்கும் இடையில் ஏன் வைத்தார்? ஏன் மனத்திற்கும் வாழ்விற்கும் இடையில் வைக்கவில்லை?
63) மேலே போக உள்ளே போக வேண்டியதின் அவசியம்.
64) முக்கிய ரூபத்தை அனந்தம் தன்னிச்சையால் எழுப்புகிறது என்ற கொள்கையை பகவான் எப்படி நிரூபிக்கிறார்?
65) – பிரம்மம், புருஷா, ஈஸ்வரா, மாயை, பிரகிருதி, சக்தி என்பவை ஒன்று.
– சுயசிந்தனை, சுய அளவீடு, சுயமாகக் கிரஹிப்பது என்பவற்றிற்கும் மாயை, பிரகிருதி, சக்திக்கும் உள்ள தொடர்பு.
– புதிய பரிணாம இரகஸ்யம் இரு வாயில்கள்.
– சிந்தனையால் சிருஷ்டிக்கும் மாயை, செயல்திறனால் சாதிக்கும் பிரகிருதி, ஆகியவை சக்தியில் இணைந்து இரண்டையும் செயல்படுத்துகின்றன.
– காலமும், கடந்ததும் இணைந்து மூன்றாம் நிலைக் காலம் எழுவது.
66) காலம் உலகை சிருஷ்டித்தது.
முரண்பாடு மூலம் வரை வாராது.
பிரம்மமே சிருஷ்டி, சிருஷ்டியே பிரம்மம்.
67) நன்மையை இழக்காமல் தீமையை விலக்க முடியாது. வேண்டாததை முழுமையாக அறிவது வேண்டியதை முழுமையாக அறிய உதவும்.
68) சுயஜீவியம் அஞ்ஞானத்தில் பெறும் சுயஅனுபவம் அகந்தை. ஆன்மாவுடன் நேரடித் தொடர்பு என்பது ஆன்மாவையும், இயற்கையையும் ஆழத்திலும் மேலும் அறிவது.
69) அஞ்ஞானம் மேல்மனத்தில் பூரணம் பெறுகிறது. மேல்மனம் அடிமனம் தலைகீழே மாறியது. சைத்தியப்புருஷன் ஆழ்மனக் குகையில் வசிக்கிறான்.
70) எளிமையான மாறுபாடு சிக்கலான குதர்க்கமாகும்.
71) பரமாத்மாவோ, ஜீவாத்மாவோ முடிவான சத்தியமில்லை.
72) ஐக்கியமும், பிரிவினையுமிருப்பது அவையிரண்டையும் உட்கொண்ட முழுமையிருப்பதைக் காட்டுகிறது.
73) பூரண ஞானத்திற்கும் மனத்தின் அறிவுக்கும் உள்ள வேறுபாடு.
74) மனித வாழ்வுக்கும் பூரண வாழ்வுக்கும் உள்ள வேறுபாடு.
75) பாதாளத்தையும், பரமாத்மாவையும் இணைப்பது – அவை இணைவது – என்றால் என்ன?
76) பாதாளம் உயர்ந்து பரமாத்மாவுடன் இணைந்து உயர்ந்து, உருவம் பெறு முழுமை பெறுவது.
77) பிறவியைக் கடந்த நிலை, பிரகிருதியைக் கடந்தநிலை என்பவற்றை சிந்தனையாலும், உள்ளுணர்வாலும், உடல் உணர்வாலும் அறிவது.
78) ஒவ்வொரு நிலையிலும் அஞ்ஞானம் கரைவதை ஓரளவு உணர்வது.
79) ஜடமனம் ஆத்மா சலனமற்றதுஎன அறிந்தால், உயிர், மனம், ஆன்மீகமனம் நம்புபவை எவை?
80) இடைப்பட்ட நிலைகள்
– உடல் பரிணாமவளர்ச்சி பெறும்பொழுது.
– அதை அடுத்தவர்க்கு அளிக்கும் திறன் பெறும் பொழுது.
81) சைத்தியப்புருஷன் ஏக காலத்தில் மேலும், கீழும் போவதை அறிவது.
82) உள்ளே போவதால் யுகம் ஏன் க்ஷணமாகும்?
83) ஜீவன் பிரபஞ்சத்தில் பரவி, சக்தி பெறு, தன்னையறிந்து, ஆனந்தம் பெறுவதை நமக்கே நாம் விளக்கலாம்.
84) திருவுருமாற்றத்திகு ஏன் சரணாகதி இன்றியமையாதது?
85) எப்படி எளிமையும், ஆடம்பரமும் ஒன்றாகும்?
86) அஞ்ஞானம் ருசிப்பதகும், ஞானம் ருசிப்பதகும் உள்ள வேறுபாடு.
87) பரிணாம வளர்ச்சியில் ஆன்மாவுக்குரிய அம்சங்களுண்டா?
88) அஞ்ஞானம் ருசிப்பது ஜடம்.
ஞானம் ருசிப்பது மனம்.
ஞானம் ஆத்மாவுக்கும், சத்தியஜீவியத்திற்கும் ருசிக்கும்.
******************