Skip to content
- கடமையை உணர்ந்து நடைமுறையில் பூர்த்தி செய்வது ஆன்மாவின் ஆர்வம்.
ஒரு வேலையை அதிகாரத்திற்குப் பணிந்து அல்லது கடமைக்காகச் செய்வது தவறாது பலனைத் தரும்.
அதே வேலையை அதன் ஆன்மீக முக்கியத்துவத்தை உணர்ந்து தன் அந்தராத்மாவின் முன்னேற்றத்திற்காகச் செய்தால், ஆன்மா மலரும்.
பிரார்த்தனையின் பலனுக்காக அன்னையை நம்பி வணங்கினால் பலன் தவறாது கிடைக்கும்.
பலனைத் தரும் அன்னையின் ஆன்மீக உயர்வை நம் ஆன்மாவில் உணர்ந்து நெஞ்சம் பூரித்தால் பலன் பெறுவதுடன் வாழ்வு சிறந்து ஜீவன் ஆன்மீகப் பெருவெளியில் அனந்தனின் அற்புதம் என மலரும்.
- மனத்தை ஒருநிலைப்படுத்துவதும் ஆத்ம சமர்ப்பணமும் ஒன்றே. நிலைப்படுத்தும் பொழுது நாம், மனத்தால் மட்டும் செயல்படுகிறோம். சமர்ப்பணம் செய்யும் பொழுது, புற நிகழ்ச்சிகளையும் மனம் தழுவுகிறது. முந்தையது மோட்சத்தை நாடுவது; அடுத்தது திருவுருமாற்றத்தை நாடுவது.
- திருவடியில் திருமுடியைக் காண்பதும்,
முதலாளியில் ஆண்டவனைக் காண்பதும்,
சிறிய மனிதனில் பெரிய ஆத்மாவைக் காண்பதும்,
கணவனில் ஈஸ்வரனைக் காண்பதும்,
மனைவியில் சக்தியைக் காண்பதும்,
சரணாகதி வாழ்வில் பூர்த்தியாகி யோக சித்தி அளிப்பதாகும்.
- மனம் திருவுருமாற்றம் பெற, தெளிவு தேவை. உணர்வு, திருவுருமாற்றம் பெற தெளிவு போதாது. நோக்கம் மாற வேண்டும். உடலுக்கு இந்த இரண்டும் போதாது. உடலில் உள்ள ஆன்மா வெளிப்பட்டுச் செயல்பட்டால்தான் உடல் திருவுருமாற்றமடையும்.
- மனம், உள்ளே சுமுகத்தால் அமைதி பெறாவிட்டால், வலிமையானவன் கடுமையாகவும், எளிமையானவன் சோகமாகவுமிருப்பான்.
- சுமுகத்தால் ஏற்பட்ட அமைதி இறைவனுடன் கலக்கும் நிலையை அளித்தால் செயலில் இனிமையும், உதார குணமும் வெளிப்படும்.
- சாஷ்டாங்க நமஸ்காரம், சரணாகதியை உடலால் வெளிப்படுத்துகிறது. அடுத்தவன் வலிமையையும், உயர்வையும் ஏற்றுக்கொள்வதால் சரணாகதி உணர்வில் வெளிப்படுகிறது.
மற்றவரின் எல்லாக் கருத்துகளையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலை – மனம் சரணாகதியை ஏற்றுக்கொண்டதாகும்.
ஏதும் அறியேன் என்பது வழக்கு மட்டுமல்ல, சத்தியம் என்று தெளிவுற நம்புவது அடக்கம். அடுத்தவரின் நிலை எதுவானாலும், அதற்கு உயர்ந்த மதிப்பை உள்ளபடி கொடுத்து மனதால் ஏற்றுக்கொள்வது நடைமுறையில் உண்மையான சரணாகதியை வெளிப்படுத்தும் அடக்கமாகும்.
- தேச பக்தி, வாழ்க்கையில் வெற்றி, போன்ற உணர்ச்சியில் இலட்சியத்தை நாடுவதால் மனிதனால் பெரிய காரியத்தைச் சாதிக்க முடிகிறது. யோகத்தை மேற்கொண்டவர் சாதனை செய்ய வேண்டுமானால், அன்னைக்கே நாம் மேலும் மேலும் உரியவராக வேண்டும் என்ற உணர்வு மேலிட்டு நிறைய வேண்டும்.
- உலகிலில்லாத ஒன்றைத் திறமையாலோ, சுயநலத்தாலோ சிறிய மனிதன் சாதிப்பதுண்டு. அது பளிச்சிடும் அற்புதமானாலும், அதை மற்றவர்கள் பின்பற்றமாட்டார்கள். தனித்தே நிற்கும். உலகம் போற்றினாலும், ஏற்றுக் கொண்டு பின்பற்றாத பெருஞ்சாதனையாக நிற்கும்.
- தன்னலமற்ற தன்மை, பெருந்திறமை, பெருந்தன்மை அல்லது எந்தப் பெரிய குணம் சாதித்தாலும், தன் சாதனையை அதனால் உலகுக்கு வழங்க முடியும். உலகமும் ஏற்றுக்கொள்ளும்.
- தனி மனிதனின் சாதனைகள் தனித்தே நிற்கும். அவை உலகத்தின் சாதனைகளாக மாற, அவன் மனம் விரிந்து உலகத்தைத் தன்னுள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
- சக்தி, சுபாவம், பண்பு (power, character, values).
வேகம் நிறைந்த சக்தியின் (force) வெளி உருவம் சக்தி (power).
மனோ சக்தி உருவம் பெற்றால் சுபாவமாகிறது.
ஆன்மாவின் வெளிப்பாடு நம் வாழ்வில் பண்பெனும் உருவம் பெறுகிறது.
- ஆன்மா தன்னை உணர்ந்து பரமாத்மாவை நோக்கிச் செல்லும் பாதைக்கு “யோகம்” எனப் பெயர். அன்னை மீதுள்ள நம்பிக்கையை, நாம் கண்மூடித்தனமாகவும் வைக்கலாம். கண்மூடித்தனமான நம்பிக்கையை தன்னை அறிந்த நம்பிக்கையாக மாற்றுவது நல்லது.
- எந்த விஷயம் மீண்டும், மீண்டும் ஆயிரம் முறை நம் மனத்தைத் தொடுகிறதோ, அந்த விஷயத்தில் நமக்கு அதிகபட்ச அக்கரையுள்ளது என்று பொருள். அதுவே நம் ஜீவியத்தின் நிலை (level of consciousness).
- பேசாமலிருந்தால், கேட்டு நடக்காத காரியம், கேட்காமல் நடப்பதைக் காணலாம். சிந்தனை செய்யாமலிருந்தால், சிந்தித்து விளங்காதவை சிந்திக்காமல் விளங்குவதைக் காணலாம்.
- ஒவ்வொரு செயலிலும் மனிதன், தான் அதை அதிகபட்சம் அனுபவிக்க முயல்கிறான். ஒவ்வொரு செயலிலும் அதிகபட்சம் அன்னையைக் கண்டு அனுபவிக்க முயல்வது யோக சித்தி.
- ஒரு தலைமுறையில் முன்னோடிகளால் சாதிக்க முடிந்ததை அடுத்த தலைமுறையில் எல்லோராலும் சாதிக்க முடிகிறது. சமூகம் இந்த நோக்கோடு ஸ்தாபனங்களை உருவாக்குகின்றது. சத்தியஜீவியத்தை மனிதன் ஸ்தாபிக்க, இறைவன் ஏற்படுத்திய ஸ்தாபனம், “அன்னை” எனும் அவதாரம்.
- அழைப்பு:
முதலில் உன் சுபாவத்தின் சிறப்பிலிருந்து விலகி, பிறகு அன்னையை அழைத்தால் மனம் நிறைந்து, சக்தி பெருகி, பூரிக்கும். சுபாவத்திலிருந்து கொண்டே அன்னையை அழைப்பது சலிப்பேற்படுத்தும், களைப்பு ஏற்படுத்தும், விரக்தியை உற்பத்தி செய்யும்.
- உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியுமானால், அளவுகடந்த சக்தி உன்னுள்ளே எழும்.
- மனத்தின் உயர் நிலைகளை எட்டுவதும் ஜீவனின் ஆழத்தைத் தொடுவதும் யோகப் பாதையின் இரு பிரிவுகளாகும். ஆழ்ந்த நிலையை அடைந்து உயர்வை நாடுவது பூரணம்; பூரணயோகத்திற்குரிய இலட்சணம்.
- ஆன்மாவும், சக்தியும் பிரிந்து, சக்தி ஆன்மாவை மறந்த நிலை, மனிதனுடைய நிலை. தான் மறந்த ஆன்மாவை, சக்தி நினைவுபடுத்திக் கொண்டால், சக்தி சரணாகதியை நாடுகிறது எனப் பொருள். சரணாகதியை மனிதன் விரும்பி நாடுவது, மனிதன் தன் தெய்வீகத்தை உணர்வதாகும்.
- தான் கட்டுப்பட வேண்டிய நிர்ப்பந்தமில்லாத இடத்தில், தன்னை அழித்து, அன்பாலும், அடக்கத்தாலும் அடுத்தவருக்குப் பணிந்து போகும் பண்பே வாழ்வில் சரணாகதிக்குச் சமமானது.
- தாழ்ந்த குணங்களை விடுவதற்கு எடுக்கும் முயற்சியைவிட, உயர்ந்த குணங்களைத் தீவிரமாக நாடுதல் நல்லது.
- தனிப்பட்ட வாழ்வின் முடிவு அல்லது பொது நலத்திட்டம் போடும் பொழுது உள்ள நிபந்தனைகள் பல, சம்பந்தப்பட்டவருக்கு மட்டுமே தெரியும். வெளியிலிருப்பவர் முடிவைப் பற்றி நினைப்பது முடிவுக்குள்ள அம்சங்களுடன் தொடர்பில்லாமலிருக்கும். உள்ளேயிருப்பவர்கள் எள் விவகாரங்களை வெளியிடும் பொழுது முதலில் ஏற்பட்ட வெளியார் அபிப்பிராயம் ஒவ்வொரு முறையும் மாறும். உண்மை என்ன என்பது நாள் கடந்த பின்னரே வெளிவரும்.
ஒரு காரியத்தைப் பற்றிப் பல அபிப்பிராயங்கள் ஏற்படுகின்றன. காரியத்திற்குப் பொருந்தாத ஓர் அம்சத்திலிருந்து ஓர் அபிப்பிராயம் ஏற்படுகிறது. எல்லா அபிப்பிராயங்களும் அதே போல் ஏற்பட்டவையே.
- காலம் மனத்தில் ஏற்பட்டது. எனவே சுபமுகூர்த்தத்தில் மனத்திற்குள்ள நம்பிக்கை நம் வாழ்க்கையை நிர்ணயிப்பது இயல்பே.
- அன்னை பக்தர் ஒரு காரியத்தைச் செய்வதால் அந்த நேரம் சுப முகூர்த்தமாகிறது. பக்தரின் செயல் நேரத்தைப் புனிதப்படுத்துகிறது.
- மனம் அழிந்துவிட்டால் 10இல் 9 பேர் இறந்துவிடுவார்கள்.
- பூரண யோக முறைகளைச் சுருக்கமாக எழுதுகிறேன்.
-
- சைத்திய புருஷன் வெளிப்படுதல்
- அகந்தை அழிந்து ஆன்மா விடுதலை பெறும் முதற்கட்டம்
ஜீவாத்மா பிரபஞ்சத்தின் ஆன்மாவாக மாறுதல்
ஜீவாத்மா பரமாத்மாவாக மாறுதல்.
- அகந்தை கரைதல்
சைத்திய புருஷனின் வெளிப்பாடு
மனித சுபாவம் தெய்வ சுபாவமாக மாறுதல்
ஞானம், பக்தி, கர்மம் இணைந்து பூரணம் பெறுவது.
- மனோமய புருஷனின் தூய்மை
ஆன்மாவுக்கு அகந்தையிலிருந்து விடுதலை.
சுபாவத்தைக் குணங்களிலிருந்தும்,
துவைதத்திலிருந்தும் (dualities) விடுவிப்பது.
சமத்துவம் நிலைப்பது.
நம்பிக்கையின் அடிப்படையில் செயல்படுவது.
சத்தியஜீவியத்தை எட்டித் தொடுவது.
- அறியாமையிலிருந்து மனத்தை ஞானத்திற்கு
அழைத்துச் செல்வது – 3 நிலைகள் –
அறியாமையான மனம்
தன்னை மறந்த ஞானம்
தெய்வீக மனம்.
- ஞானம் பெற்று பூரணம் அடைதல்
பிரபஞ்சத்தோடிணைந்த பூரணம்
ஆனந்தத்தால் நிரம்பிய பூரணம்
அந்தராத்மாவில் அனைத்தும் பூரணம் அடைதல்
ஜடம் ஆன்மாவின் ஆதிக்கத்திற்குட்படுதல்.
- சமர்ப்பணம்
பற்றறுத்தல்
அகந்தை கரைதல்
மனோமய புருஷன் சித்திப்பது
பிரபஞ்சத்தின் ஆத்மாவாக மாறுவது
பரமாத்மாவை அடைவது
மனித சுபாவத்தைத் தெய்வ சுபாவமாக மாற்றுவது.
- ஆசை, அகந்தை, மனம் ஆகியவற்றைப் படிப்படியாக அழித்து சத்தியஜீவியத்தை அடைவது.
- ஆசை அழிவது
பிராணமய புருஷன் விடுதலை பெறுதல்
அகந்தை அழிதல்
சைத்திய புருஷன் வெளிவருதல்
மனத்தையும், பிராணனையும் அழித்து சைத்திய புருஷனை, சத்தியஜீவனாக மாற்றுதல்.
- மனத்தில் மேலெழுந்த நிலையிலிருந்து ஆழத்திற்குச் சென்று, சைத்திய புருஷனைக் கண்டு, ஆன்மீக மனத்தின் மூலம் சத்தியஜீவனை அடைதல்.
- சுதர்மம், சுபாவம், சொரூபம் ஆகியவற்றைக் கடந்து பரமனை அடைவது.
- அறியாமையின் ஏழு நிலைகளைக் கடந்து, ஞானம் பெறுதல்.
- செயலிலுள்ள அறியாமை
- ஜீவனின் அமைப்பிலுள்ள அறியாமை
- உள்ளத்தின் அறியாமை
- காலத்தால் ஏற்படும் அறியாமை
- அகந்தையின் அறியாமை
- பிரபஞ்சத்தை அறியாத நிலை
- ஆதியை உணராத அறியாமை
- மனிதன் தன்னைக் கொண்டு உலகத்தை அறிய முயல்கிறான். அது சுயநலத்தால் வரும் அறிவு. விலக்கான மனிதர்களும், விலக்கான நேரங்களிலும் தவிர, மனிதன், “நான் சரி; மற்றவர்கள் தவறு” என்ற கண்ணோட்டத்தையே மேற்கொள்கிறான்.
- பிரபஞ்சம் மனிதனாக உருவாகிறது.முதலில் உடலாகவும், பிறகு உணர்வாகவும், மனமாகவும் உருவெடுத்து முடிவில் ஆன்மாவாகிறது. அதையும் தாண்டிய நிலையில் ஆன்மா, பிரகிருதியில் வெளிப்பட்டு, பரமாத்மாவை அடையும் வழியைக் கோலுகிறது.
- சைத்திய புருஷனை அடைந்தால், பிரகிருதியை விட்டு அகன்றதாக அர்த்தம். அதுவே மேலெழுந்த மனத்தைத் தாண்டியதாகும்.
- மேலெழுந்த நிலை, பிரகிருதி.
ஆழ்ந்த நிலை, புருஷன்.
- அகந்தைக்கு ஆயிரம் நோக்கங்களுண்டு. இறைவனை நாடுவதைத் தவிர சைத்திய புருஷனுக்கு வேறெந்த நோக்கமுமில்லை.
- இடையறாத தரிசனம் நாடுபவர் மனித வாழ்வில் சிறப்புற வேண்டும். அதைப் பெற மனிதன் தன் திறமைகளைப் பூரணமாகத் தாண்டி வர வேண்டும். தாண்டி வர, அது போல முனைந்தால் அகந்தை அழியும். பூரணமான முயற்சியை நல்ல முறையில் மேற்கொள்ள வேண்டும். அப்படியானால், மனம் நேர்மையாகவும், உணர்வு முழுமையாகப் பயன்பட்டும், உடல் சிறப்பான முயற்சியையும் மேற்கொள்ள வேண்டும்.
அது இடையறாத தெய்வ தரிசனத்தைக் கொடுக்கும்.
- தோற்றத்திற்குரிய உருவத்தைத் தோற்றுவிப்பதன் மூலம் ஜீவியம் முன்னேறுகிறது. முன்னேற்றம், உருவத்தைப் புறக்கணித்து உள்ளுறை ஜீவனை மட்டும் ஏற்றுக்கொள்கிறது. உடலிலிருந்து தோற்றத்தை நீக்கி உள்ளுறை ஜீவனை மட்டும் நிறுத்த முயல்வது பூரண யோகம்.
- உடலிலிருந்து மனம், உணர்வுக்குரிய தோற்றத்தையும் அதற்குரிய உருவத்தையும் விலக்கி அவற்றால் ஏற்பட்ட உள்ளுறை ஜீவியத்தை மட்டும் உடலில் நிறுத்துவது யோகம். கிருஷ்ண பரமாத்மா வேண்டும், அவனது படை வேண்டாம் என்பதைப் போன்றது இது.
- சிறு முயற்சி பெரும் பலனைத் தரும் என்கிறார் அன்னை. முன்னேற்றச் சூழல் முதிர்ந்த நிலையில் (catalyst) எடுக்கும் சூட்சுமச் செயலுக்குரிய பலன் இது போன்றது.
- குருடு:
- உலகத்தில் நாம் முன்னேறக் கிடைக்கும் வாய்ப்புகளைக் காண முடியாதது.
- எதைக் குறையென உலகம் அறிகிறதோ, அதைச் சந்தோஷமாக அனுபவித்து, குறையென உணர முடியாத குருட்டுத்தனம்.
- உலகத்தின் பெருமையை உணருபவனும், தன் சந்தோஷத்தை அறிபவனும் ஆன்ம விழிப்பு பெறுவதில்லை.
- மேலெழுந்த நிலையிலுள்ள மனத்திலிருந்து ஆழத்திற்குச் செல்ல, பல வழிகளுண்டு. ஆழ்ந்து பார்த்தால் அவை அனைத்தும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான முறைகள் எனலாம்.
- சமாதி நிலையை நோக்கிப் போகும் நிஷ்டை.
- எண்ணத்தையும், உணர்வையும், செயலாற்றும் திறனையும் விட்டுவிட முடிவு எடுப்பது.
- எண்ணத்தையோ, உணர்வையோ, உடலசைவையோ ஒருமுகப்படுத்தி, ஒருநிலைப்படுத்துவது.
- பெரிய திட்டங்களைக் கைவிடுவது.
- மன உறுதியை அதிகபட்ச நிலைக்குக் கொண்டு போவது அல்லது கரைப்பது.
- நெடுநாளாகத் தடையான காரியத்தைப் பிரார்த்தனையும் பூர்த்தி செய்யாவிட்டால், அதை ஆராய்வது நல்லது. திறமை, விழிப்பு, நோக்கம், பண்பு ஆகியவற்றின் கண்ணோட்டத்தில் பூர்த்தியான ஒரு காரியத்துடன் இதை ஒப்பிட்டுப் பார்த்தால், எது தடை என விளங்கும்.
- எதிரானவை ஒன்றை விட்டு மற்றது விலகுவதற்குப் பதிலாக நெருங்கி வந்து சந்தித்தால் நடைமுறையில் பலன் கிடைக்கும்.
- பிரார்த்தனையும் காணிக்கையும் சேர்ந்து சேவையாகிறது.
- (Sensitivity) சொரணை என்பதே உடல் பெற்ற அறிவு.
- பிரார்த்தனை பலிப்பதை நாம் கண்டாலும், பலிக்கும் வகையை நாம் அறியோம். சூழலில் உள்ளதும், நம் மனதிலுள்ளதும் ஒன்றேயாகும். நம் மனதிலுள்ளது, சூழலில் ஓர் இழையாகும்.
நம்முள் உள்ளதை மனத்திற்குரியது, உணர்வுக்குரியது, உடலுக்குரியது எனப் பிரிக்கலாம். இவற்றுள் மனத்திற்குரிதற்கே வலிமை குறைவு. உணர்வுக்குரியதற்கு வலிமை அதிகம். உடலுக்குரியதற்கே அதிகபட்ச வலிமையுண்டு.
உடலிலுள்ள ஆன்மீகத் (will) திறனை வெளிக்கொணர்ந்து செயலாற்ற முனைவதே இந்த யோகத்தின் இலட்சியம்.
- குழந்தைக்கு நாம் கொடுக்கும் பொருளின் மதிப்பு தெரியாதது போல், மனிதனுக்கு இறைவன் கொடுப்பதின் மதிப்பு தெரிவதில்லை. அதனால், அவனால் நன்றி சொல்ல முடியவில்லை.
- ஆசையைக் கடந்து சென்ற பின், அது பூர்த்தியாவதும் உண்டு.
- எதை நம்மால் சாதிக்க முடியவில்லையோ, அது ஆட்கொள்ளக்கூடியது. நம் மனத்தை
- முழு மனதுடன் மனிதனுக்குண்டு. வெறுப்பதை முழு மனதுடன் விரும்பும் குணம்
- கடந்ததை விட்டகன்ற பின்னரே மனிதன் சாதிக்கின்றான். இருப்பினும் எதிர்கால சாதனையைக் கடந்த காலத்திற்கேற்ப அமைக்க முயல்வதும் மனித இயல்பே.
- தர்க்கமும், குதர்க்கமும் மனிதனுக்கு இன்றியமையாதவை. இடைவிடாமல் தன்னை அடுத்தவருடன் ஒப்பிட்டுப் பார்ப்பது அவன் உணர்வுக்குரிய பழக்கம். அதனால், அவனால் அவர்களுடைய நிலையைவிட உயர முடிவதில்லை. உடலால் வாழ்பவன் எதையாவது செய்தபடி இருக்கிறான். மனமும், உணர்வும், உடலும் இது போல் தங்கள் வாழ்வைக் காப்பாற்றிக் கொள்கின்றன.
- பெரிய திட்டங்களை மனதிலிருந்து அகற்றினால்தான் பெரிய ஆன்மீக அனுபவங்கள் கிட்டும் என்கிறார் அன்னை. வளர்ந்த மனமுடைய மனிதன் எதையாவது செய்தபடி இருக்கும் மனநிலையையே அன்னை இங்குக் குறிக்கின்றார்.
- பூரண யோகத்தில் வறண்ட தத்துவங்களில்லை. நம்முன் உணர்வாகவாவது அல்லது வாழ்வில் செயலாகவாவது நாம் அவற்றைக் காண முடியும்.
- குறி, ஜோஸ்யம், சகுனம் போன்றவை, அன்னை பக்தர்களுக்கு முடிவானவையில்லை. அவை ஓர் உண்மையைக் குறிக்கின்றன என்றாலும் நம்மை அவை கட்டுப்படுத்தாது. அன்னையை அழைத்தவுடன் நிலைமை மாறி, எதிரான சகுனம், குறி தோன்றுவதும் உண்டு. அவற்றை நம்புபவர்களையே அவை கட்டுப்படுத்தும். அன்னையை அறியாதவர்களுக்கும் அஃது உண்மை.
- முன்னேற்றப் பாதையில் ஒரு மனிதன் ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்குத் தொடர்ந்து போகிறான். கடைசி நேரத்தில் ஒரு நிகழ்ச்சியோ, குணமோ, பழக்கமோ அவனை முந்தைய நிலைக்குக் கொண்டு போய் அங்கேயே நிலைநிறுத்த முயலும். தனக்கு எது பெரிய தடையோ அதையே இலட்சியமாகக் கருதும் மனப்பான்மையும் மனிதனுக்குண்டு.
- ஒரு பலனைப் பெற, உடல், உழைக்கின்றது.
வேலைக்குரிய சக்தியை உணர்வு அளிக்கின்றது.
மனம் புரிந்துகொள்ள சிந்தனையை நாடுகிறது.
(Consciousness) ஜீவியம் அதே பலனைப் பெற விழிப்புடன் இருந்தால் போதுமானது.
மனம் முயன்று பெறுவது அறிவு.
உணர்வு சாதிப்பது சக்தி.
உடல் பலனைச் சாதிக்கின்றது.
ஜீவனுக்குரிய பலன் ஆன்மீக வளர்ச்சி.
- ஆபத்தைச் சமர்ப்பணம் செய்வது சிரமம்.
ஆசையைச் சமர்ப்பணம் செய்யத் தோன்றுவதில்லை.
மனத்தளவிலாவது செயலளவிலாவது ஆசையை அனுபவிக்கவே மனிதன் விழைகிறான்.
ஆசையைச் சமர்ப்பணம் செய்வது சிரமமானாலும் அவசியம்.
- அகந்தையின் சமூக உறவை விட முடியாதவர்களுக்குப் பரோபகாரம் முக்கியம்.
- மனத்தின் ஆழத்திற்கு அழைத்துச் செல்வது ஒருநிலைப்படும் மனம். மீதி அனைத்தும் – தியானம், மந்திரம், படிப்பு – அந்நிலைக்கு நம்மைத் தயார் செய்துகொள்வதேயாகும்.
- இறைவனை நோக்கிச் செல்லும் பாதையில் உன் அனைத்துச் சக்தியும் செலவாகிவிட்ட நிலையே முதற்படி.
- பெரிய திட்டத்தைச் செயலாற்றும் பொழுது அவிழ்க்க முடியாத சிக்கல் எழுமானால், அதன் பிம்பம் உன் மனதில் உணர்வின் சிக்கலாக இருக்கும்.
- அதே உணர்வின் பெரிய சிக்கல் சின்னம், சிறு காரியங்களிலும் தெரியும்.
- எவ்வளவு சிறு வேலையானாலும் அந்தச் சிக்கல் இருக்கும். எந்த வேலையுமில்லை என்றாலும் சிக்கல் மனதிலிருக்கும்.
- தீர்க்க முடியாத சிக்கல்கள் வேலையின் அளவைப் பொருத்ததல்ல. வேலை பெரியதானாலும், சிறியதானாலும், மனத்தின் அந்தரங்கங்கள் வெளிப்படுவதால் நாம் காண்பதே அச்சிக்கல்கள். வேலையிருந்தாலும் இல்லாவிட்டாலும் மனத்தின் சிக்கல்கள் மனதிலிருக்கும்.
- தாழ்ந்த வாழ்வை விட்டு மனிதன் உயர்ந்த வாழ்வை நாடினால், எதை எல்லாம் விட்டுவிட்டு உயர்ந்ததைத் தேடினானோ, அவையெல்லாம் இந்த வாழ்விலும் பெரிய அளவிலிருக்கும்.
- அன்பர்களைக் கீழ்க்கண்டவாறு பிரிக்கலாம்: இந்நான்கு வகைகளைச் சேர்ந்தவர்கள் பெறுவன, கீழ்க்கண்ட முறையில் அமையும்.
அன்னையில் நிலை பெறுவர். அனைவர்க்கும் சுபிட்சமும், மன நிம்மதியும், அந்தஸ்தையும் வழங்கும் நிலை அவர்க்கேற்படும்.- பலனுக்காகப் பிரார்த்திப்பவர்கள்.
- தங்கள் அந்தஸ்தை உயர்த்த முயல்பவர்கள்.
- மனச்சாட்சிக்கு உகந்த முறையில் வாழ்க்கையின் உயர்வை நாடுபவர்கள்.
- பலனை நாடுபவர்க்குப் பெரும்பாலும் பலன் கிடைக்கும்.
- அந்தஸ்தை நாடுபவர்க்கு அது கிடைக்கும்; கிடைத்தது திறமைக்கேற்ப பலிக்கும்.
- பிரார்த்திக்க வேண்டிய அவசியமில்லாமற் போகும்.
- பல சமயங்களில் பலன் உடனே கிடைக்கின்றது, மற்ற சமயங்களில் பலன் தடைபடுகிறது. நம் மனத்தின் உண்மைக்குப் பலனும், பொய்யிற்குத் தடையும் வருவதை நாம் காண்பதில்லை. தன் மனத்தின் பொய் பெரும்பலன் பெற விழையும் பழக்கம் பரவலாக உள்ளது.
- தன் பிரச்சினையைத் தானே தீர்க்க முயல்வது உயர்ந்தது. அனுபவமோ, அறிவோ இல்லாமல் அம்முயற்சியை மேற்கொள்வது ஆபத்து.
- அன்னைக்கு, பக்தன் கடிதம் எழுதுவதால் அன்னை பக்தனில் தன்னை அதிகமாக இருத்திக்கொள்கிறார்.
- மனத்தின் எழுச்சியைப் பூர்த்தி செய்வதை விட்டொழித்தால் மனிதன் தெய்வமாகலாம்.
- நீ மறந்த பொழுதும் உன்னையே நம்பியிருப்பது மனித உறவில் நிலையான தொடர்பு. அப்படிப்பட்ட மனிதனை முழுவதும் நம்பியிருப்பது போல் அவனிடம் நடந்து கொண்டால், அது தெய்வீகத் தொடர்பு ஆகும். மனித சுபாவத்தின் இருள் நிறைந்த சாகஸங்களை அறிய அது உதவும்.
- வாழ்வில் பொய்யும் மெய்யும் ஒரே திறனுடையவை, நோக்கம்தான் வேறு. காரியம் முடியும் என்று மனிதன் நம்பினால் மனிதன் எந்தத் திறமையையும் ஏற்றுக்கொள்வான். ஓரளவுக்கு அது ஆதாயமாக முடியும். எல்லையைத் தாண்டினால், பலன் எதிராக அமையும்.
பொய்யின் சாகஸத்தால் சத்திய சேவை செய்ய முடியாது.
விவரம் தெரியாதவர்கள், கேட்பவற்றையெல்லாம் நம்புபவர்கள், தாழ்ந்த பழக்கத்தை மேற்கொள்ள முடியாத பண்பாளர்கள் ஆகியவரைப் பொய்யின் சாகஸம் பிசைந்தெடுக்கும்.
இன்றைய நிலையில் இவர்களுக்கு அதிகமான வசதியுண்டு. அதற்கு எதிரான அறிவை உலகம் பெற்றால் ஆயிரமாண்டுகள் முன்னேறும். தனி மனிதனுக்கும், உலகத்திற்கும் இந்த அறிவைக் கொடுப்பது அன்னைக்குச் செய்யும் சேவை.
- எல்லாம் இறைவன் செயலென நாம் அறிவோம். நமக்கு முக்கியமான விஷயங்களில், இறைவனிடம் செயலை ஒப்படைப்பதற்குப் பதிலாக, நாமே பெரிய பொறுப்பை ஏற்று பெரிய ஆர்வத்துடன் செயல்படுகிறோம். நம்மால் எதுவும் முடியவில்லை என்ற பின்னரேதான், “இனி நடப்பது நடக்கட்டும், எல்லாம் அவன் செயல்” என்போம். முடியாது என்ற பொழுது “அவன் செயல்” என்று சொல்வதைப் போல் “எல்லாம் என்னால் முடியும்” என்ற பொழுது “எல்லாம் அவன் செயல்” என்று அவனிடம் நம் பொறுப்பை ஒப்படைத்து, செயலில் ஆர்வம் காண்பிப்பதற்குப் பதிலாக, அவனிடம் காரியத்தை ஒப்படைக்க ஆர்வம் காண்பிப்பது நல்லது.
- பண்புகள் மூலமே பிரபஞ்சத்தை நாம் அறிகிறோம் என்கிறார் பகவான். இன்று நம் உலகம் என நாம் அறிவது, நம் பண்புகளால் நிர்ணயிக்கப்படுபவை. முழு பிரபஞ்சத்தை நாம் இன்று அறிவதில்லை. முழு பிரபஞ்சத்தை அறிய, அதற்குரிய பண்புகளை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். முதற்படியாக இன்றுள்ள பண்புகளுக்கு அடுத்த நிலை பண்புகளை ஏற்றுக்கொண்டால், நம் உலகம் சற்று விரிவடையும்.
- நமக்குரிய யோக முறை எது என்று அறிந்து அதைப் பெற முனைய வேண்டும்.
அது போன்ற முறைகளில் பல:- உணர்வின் ஏக்கம் உச்சகட்டத்தை அடைவது.
- (THAT ‘அது‘) அது, உன்னை வந்தடையும் முறையைப் பூரணமாக அறிவது.*
- ஆன்மாவின் அக்கறையை அதிலிருந்து திருப்புவது.
- பிரச்சினை ஆழத்திலும், பிரார்த்தனை மேலெழுந்தவாரியாகவும் இருந்தால், நெடுநாள் பிரார்த்தனை செய்தாலும் பலனிருப்பதில்லை.
- அன்னையின் உடல் முழுமையான ஞானம் உடையது. அதேபோல் அன்னையின் மனமும், உணர்வும் முன்பு முழுமையான ஞானம் பெற்றிருந்தன. முடியாது என்பது அவற்றிற்கில்லை. முழுமையான ஞானம் என்றால் முடியாததில்லை என்று பொருள்.
- நமக்கு எங்கு முழுமையான ஞானம் இருக்கிறதோ, அந்த நிலையில் முடியாததில்லை என்று நாம் அறிவோம். அங்கு நாம் யோகத்தை ஆரம்பித்தால் பலிக்கும்.
- நம் அன்றாட வேலைகளில் நமக்கு முழு ஞானம் உண்டா? அதில் முடியாததில்லை என்று சொல்ல முடியுமல்லவா? ஆனால், அது கண்மூடித்தனமான ஞானம் (an unconscious possession).
- கண்மூடித்தனமான திறமையை, தெளிவான ஞானமாக மாற்றினால் அதுவே முதற்கட்டம். இன்று அன்றாட வேலைகளை “எதுவும் முடியாததில்லை” என்ற நிலையில் கண்மூடித்தனமாகச் செய்வதற்குப் பதிலாக, அவற்றை “எதுவும் முடியும்” என்று தெளிவாகச் செய்ய முடியுமானால் அதுவே முதற்கட்டம்.
- உணர்வில், நாம் கண்மூடித்தனமான முழு ஞானம் பெற்றுள்ளோம். உணர்வில் பெற்ற முழு ஞானத்தைத் தெளிவாகப் பெறுதல் முதற்படி. அதைப் பெற பிராணமய புருஷன் வெளிப்பட வேண்டும். ஆசை அழிந்தால் பிராணமய புருஷன் வெளிப்படுவான்.
- எப்படிப் பார்த்தாலும், முதற்படி, ஆசையை அழிப்பதாகும்.ஆசையை முழுவதும் அழிக்க முடியவில்லை என்றால், ஒரு செயலில் ஆசையை அழித்து, தெளிவு பெற்று, சைத்திய புருஷனை அச்செயலில் வெளிப்படுத்த வேண்டும்.
- செயல், ஜீவன் பெற்று, ஒளிமயமாகி, சக்தியால் நிரம்பினால் சைத்திய புருஷன் வெளிப்படும். அதுவே 4th dimension ஆன்மீக அம்சம் பெறுவது ஆகும்.
- சைத்திய புருஷன் வெளிப்படும் வரை, ஒரு செயலில் நம்மை நிலைப்படுத்துவதே முக்கியமான முதற்படி. அதாவது செயல், தன்னலமற்ற உதாரகுணத்தால் பெருநிறைவு பெற வேண்டும்.
- மனத்தின் தியானம் பெற்ற ஆழ்ந்த நிலையை உன்னை நோக்கி வரும் உலக சக்திகளின் அளவு நிர்ணயிக்கும். உன்னைச் சந்திக்க விரும்பும் மனிதர்களைக் கொண்டு நீ அதை அறியலாம்.
- இலட்சியத்தை, சுயநலம் பெறும் பலனின் அளவால் நிர்ணயிப்பது சரி இல்லை என்றாலும், அதுவும் அளவை நிர்ணயிக்கும் முறைகளில் ஒன்று.
- ஆன்மா, தன் கவலைகளை மறக்க வேண்டும்.
ஆன்மா, தன் சந்தோஷத்தை மறக்க வேண்டும்.
ஆன்மாவுக்குச் சந்தோஷமோ, கவலையோ இல்லையல்லவா?
அவற்றை ஏற்பதே ஆன்மாவுக்குக் கவலையாக முடிகிறது.
ஆன்மா சுதந்திரமாக இருக்க வேண்டுமானால், எதையும் ஏற்கக் கூடாது, சந்தோஷத்தையும் ஏற்கக்கூடாது.
- அருளைப் பெறும் ஆன்மீக விழிப்புணர்வின் மீது சுயநலமான வக்கிரம் பொய்யாகப் படர்ந்திருப்பதுண்டு.
- கொசுவும் கடிக்காத அளவுக்கு உயர்ந்த ஜீவியம் தாழ்ந்த உணர்வில் திளைப்பதுண்டு.
- சரணாகதியின் பேரில் மனிதன் தெரிந்த பாவத்தை விட்டு, தெரியாத பாவத்திடம் புகலிடம் தேடுகிறான்.
- உயர்ந்தது உனக்கு இனிமையானது என்று புரிந்துவிட்டால், இது வரை நீ ஆர்வமாகத் தேடியவற்றைத் தேடியது போல், இன்று உயர்ந்ததைத் தேடினால் உன் மனம் இறைவனை அடையும்.
- நம்முடைய பலனுக்காக, தவறான முறையில் ஒருவரை ஆதரிப்பது பாரபட்சமாகும்.
- தெய்வ நியாயத்தை ஒரு செயலில் கண்டபின், அதிலுள்ள தவற்றைப் புறக்கணித்து, அதை ஆதரிப்பது பாரபட்சமாகாது.
- அது போன்ற ஆதரவைத் தர மறுப்பது, பொய்யான உலகத்தை ஏற்று சத்தியமான இறைவனை மறுப்பதாகும்.
- உணர்ச்சியைக் கட்டுப்படுத்தி நல்ல பழக்கத்தை மேற்கொள்கிறோம்.
ஆசையைக் கட்டுப்படுத்தி நாகரீகமடைகிறோம்.
அகந்தையைக் கட்டுப்படுத்தி பண்பு பெறுகிறோம்.
மனதினைத் தாண்டி வந்தால், ஆன்மாவை அடையலாம்.
- மனம், அன்னையை நாடினால், உலகம் முழுவதும் உன்னை நாடும்.
- ஒரு சிரமத்தைச் சந்தர்ப்பமாக மாற்ற கட்டுப்பாடு தேவை. அதே சிரமம் அகவுணர்விலிருந்தால் அதை மாற்ற, கட்டுப்பாடு போதாது, நம்பிக்கை வேண்டும்.
- ஆசை அழிவதில்லை. அடுத்த உயர்ந்த நிலையில் திருவுருமாற்றம் அடைந்து தன்னைப் பூர்த்தி செய்துகொள்கிறது. ஆசை உயர்ந்த நிலையில் ஆனந்தமாகப் பூர்த்தியாகிறது.
- கிராக்கி செய்வது சின்ன புத்தியின் உத்தி; பொய்மையை வலுப்படுத்தும்.
- உயர்ந்த நாளில் பெரிய தவறு நடக்கிறது. இரண்டையும் புரிந்து கொள்வதே ஞானம்.
- அன்னை நினைவுடன் ஒரு காரியத்தை ஆரம்பித்தால், அதே நினைவுடன் அதைப் பூர்த்தி செய்ய வேண்டும்.