Skip to content
- ஞான யோகத்திற்கு நிஷ்டை கருவியாவது போல், ஆன்மாவின் வளர்ச்சிக்கு ஆர்வம் கருவியாகிறது.
- வேலை செய்ய உடலில் சக்தியைச் சேகரம் செய்ய வேண்டும் என்பதால் மனிதன் சோம்பேறியாகிறான்.
- கெட்ட பழக்கத்தில் தன்னையழிக்க மனிதன் பிரியப்படுகிறான். ஏனெனில் இது கட்டுப்பாட்டுக்கு எதிரானது. கட்டுப்பாட்டுக்கு, சக்தியும் தெம்பும் சேகரிக்கப்பட வேண்டும்.
- சொந்தமான சிந்தனைக்கு மனம் அளவுகடந்த சக்தியை, சேகரம் செய்ய வேண்டும். அது கடினம் என்பதால், நாலு பேர் சொல்வதைத் தன் அபிப்பிராயமாக மனிதன் ஏற்றுக்கொள்கிறான்.
- தவத்தை நாடுபவர் குறைவு. இது ஆன்மீக சக்தியால் நடப்பது. மனிதனுடைய எல்லாச் சக்திகளையும் – மனம், உணர்வு, உடல் – சேகரம் செய்து மனத்திற்கு மேல் குவிக்க வேண்டும் என்பதால் இதை நாடுபவர் அரிபொருள்.
- மேற்சொன்னவை மனித சக்திகள். பரிணாம சக்திகளும் நம்முள் உண்டு. அவை உயர்ந்தவை. இருக்கும் எல்லாப் பரிணாம சக்திகளையும் சேர்த்து உயர்த்தும் ஆர்வம் பூரண யோக சாதனம். உயர்ந்தோர்க்கும் இது எளிதில் முடியாதது.
- கட்டுப்பாட்டை ஆனந்தமாக அனுபவிப்பவன் யோக வாழ்வுக்குரியவன். சாதாரண மனிதன் வாழ்க்கையை அனுபவிக்க முயல்வான், கட்டுப்பாடு உற்சாகமளிக்கும். அதன் கடுமை குறைந்து ஒரு attitude நோக்கமாகவும் பின்னால் மாறலாம். அதுவும் ஜீவியமாகும். இக்கட்டத்தில் வாழ்வே பரிணாமமாகி, பரிபூரண யோகமாகும்.
- தத்துவத்தை அறிவால் அனுபவித்தாலும், நடைமுறையில் வாழ்க்கை அனுபவிப்பதைப் பெற்றாலும், அதன் சாரம் ஞானம். ஆன்மா இந்த ஞானத்தில் பிரதிபலித்தால் விவேகம் எழும்.
- வாழ்வில் மனித சூழ்நிலையை ஆர்வமாக அரவணைத்தால், முன்னேற்றம் பிறக்கும். இறைவனின் சத்தியத்தை ஆர்வமாக அணுகினால் அவனுக்கு, பரிணாம வளர்ச்சியுண்டு.
- தனக்குத் தெரிந்ததையும், முடிந்ததையும் செய்து முடிக்க முன்வருபவனுக்கு முன்னேற்றம் உற்பத்தியானால் அது நிற்பதில்லை.
- சட்டத்தால் (law or rule) நியாயத்தை வழங்க முடியாது. அவற்றால் அநியாயத்தைத் தடுக்க முடியும். அவற்றாலும் நியாயம் வழங்க முடியும். அதற்கு, சட்டத்திற்கு, பண்பு, நேர்மை, தெளிவு, நியாய உணர்வு தேவை.
- உடல் பழக்கத்தை வலியுறுத்தாவிட்டால், உணர்வு ஆசையை விட முன்வந்தால், மனம் அன்னை முடிவை ஏற்றால் ஆத்ம சமர்ப்பணம் முடியும்.
- பெரியவர்களுடைய குறையைக் காணுதல் முடியுமென்றாலும், எவரும் அதில் ஈடுபடுவதில்லை. சிறிய மனிதனின் நிறைவைக் காண பெரிய மனதுடைய மனிதரால் மட்டுமே முடியும்.
- பெரியதும், சிறியதும் ஆதியில் ஒன்றே என்றறிவது ஆன்மீகத் திருஷ்டி. நடைமுறையிலும் அவை ஒன்றே என்று பூரண யோகம் காண்கிறது.
- தேசத்தின் அகந்தையைப் (physical ego) போர் அழிக்கிறது.
- நாலு பேர் எதிரில் உணர்வு தன் உண்மை நிலையை அறிவது, “வெட்கம்” எனப்படும்.
- ஆனந்தத்தை உடல் தலைகீழாக உணர்வது வலியாகும்.
- மனம் ஒரு நம்பிக்கையை இழந்து அடுத்ததைப் பெறும் முன் உள்ள நிலை குழப்பமாகும்.
- நெடுநாள் உடல் உணர்வை வெளிப்படுத்திய பழக்கம் (sensitivity) உடலுணர்வாகும்.
- ஒரு பகுதி மூலம், சக்தி (force) திறனாக (power) வெளிப்பட்டு (skill) செயல்திறனாகிறது.
- சேவை உணர்வுள்ள குடும்பத் தலைவனுள்ள இடத்தில் வேலைக்காரர்கள் இனிமையான சேவை செய்வார்கள். தன்னை மறந்து அழித்து, பிறர் நினைவாக இனிமையான சேவையை அறிவோடு ஆரம்பித்து இதமாக முடிப்பது உண்மையான சேவை.
- கல்லூரிப் படிப்பு, மூட நம்பிக்கையை ஒழிக்கும். அறிவால் ஏற்பட்ட உணர்வை, பண்பை மாற்றும்பொழுது அழிக்கலாம். ஜீவியம் மாறி, நோக்கம் மாறினால் திருவுருமாற்றம் ஏற்படும்.
- கொடுமை, கடுமை, பொறாமை, துரோகம், வெறுப்பு, அறிவால் ஏற்படும் உணர்வு, தவறான அபிப்பிராயம் ஆகியவை பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்திற்கு அவசியமானவை. யோகமே இது போன்ற ஒரு முயற்சியாகும். பரம்பொருளுக்குத் தேவையற்ற ஒன்றாகும்.
- தன் நிலைக்கேற்ற உந்துதலை மனிதன் விரும்பி நாடுகிறான். யோகம் பரிணாமத்திற்குரிய ஆர்வம், மனித குலத்தால் விரும்பி ஏற்க இயலாத ஒன்றாகும்.
- சிருஷ்டியில் பரம்பொருளோடு ஐக்கியமானவனுக்கு யோகம் விருப்பமுடையதாக இருக்கும். ஏற்கனவே சொல்லியவை அந்தந்த நிலைக்குரியவனுக்கு விருப்பமுடையதாக இருக்கும்.
- எதனோடு நீ ஐக்கியப்பட்டிருக்கிறாயோ அதுவே நீயாகும்.இன்று நீ உணர்வாலான மனிதன் அல்லது மனத்திற்குரியவன். யோகத்தை மேற்கொண்டால் நீ வளரும் ஆன்மாவாகிறாய்; வளரும் பரம்பொருளாகவுமாகலாம். முன்னோர்கள், சிருஷ்டிக்கு முன்னுள்ள பரம்பொருளை அடைந்தனர். நாம் சிருஷ்டியில் பரம்பொருளாக மாற முடியும்.
- புற நிகழ்ச்சியால் உந்தப்படுவது மனித சுபாவம்.புற சூழ்நிலையின்றி, தானே உள்ளிருந்து செயல்படுபவன் தவறாது வெற்றி பெறுவான். உள்ளேயும் ஆரம்பிக்க மறுப்பவன், இறைவனை எதிர்பார்ப்பவன், அவன் இறைவன் திட்டப்படி நடப்பவன்.
- ஆசையால் உந்தப்படுபவன், ஆசையை வென்ற நிலை, அவன் செயலே நம் செயலாகக் கொண்ட நிலை.
- மிகப்பெரிய பலன் மிகச்சுருக்கமாக அமையும் வழியுண்டு. அதிகபட்ச அறிவைச் செயல்படுத்தி, கட்டுப்படுத்த முடியாத ஆசையை அதற்கு, சேவை செய்யச் சொல்வதே அவ்வழி.
- வேதாந்த இரகஸ்யம், தந்திரத்தில் முடிவது அது போன்றது.பகவான் கண்ட சூட்சும இரகஸ்யமும் அது போன்றது. அது போல் நமக்குரியதைக் காணுவது யோக இரகஸ்யம்.
- புதிய கொள்கையை, பழைய சௌகரியத்திற்காக, பகுத்தறிவின் பேரில் மாற்றிக்கொள்வது தெய்வச் சேவையின் பேரில் தெய்வத்தை, தனக்குச் சேவை செய்ய வைக்க முயல்வது, மனிதத் திறமைகளில் சிகரம் வகிப்பது. தன்னைக் காப்பாற்றிக்கொள்ள மனிதன் செய்யும் அம்முயற்சி தன்னை ஏமாற்றுவதாகிறது.
- கட்டுக்கடங்காத உணர்வை கட்டுப்படுத்தினால், உள்ளிருந்து இறைவன் எழுகிறான். அவன் பிரகிருதிக்குக் கட்டுப்படாத நிலையில் எழுவான்.
- அறியாமையை மீறிய நேரம் உள்மனம் திறந்து வழிவிடும். அறியாமையாலான மேல்மனத்தை விட்டு நகர்ந்தால், உள்மனத்தை நாடுவதாக அது அமையும்.
- உயர்ந்த சிஷ்யன் சாதாரண குருவுக்கு அமைந்தால், அவனுடைய நம்பிக்கை, குருவின் நம்பிக்கையைவிட உயர்ந்ததாக இருக்கும். உயர்ந்த குருவுக்கு உள்ள நம்பிக்கை சிஷ்யன் மீதுள்ள நம்பிக்கை சிஷ்யனுடைய நம்பிக்கையைவிட உயர்ந்ததாக இருக்கும்.
- கட்டுப்படாததை அடக்குவது, சக்தி (force) தன்னையறிவது, மேலிருந்து உள்ளே போவது, உள்மனம் விழிப்பது, பரமாத்மா முன்னிலையில் சமர்ப்பணம் செய்வது, பரந்த ஆழ்ந்தகன்ற விழிப்பு, பூரண ஆத்ம சமர்ப்பணம், உடலின் சைத்திய புருஷன் செயல்படுதல், அகந்தை அழிதல், காலத்தைக் கடந்த பொறுமை, முரண்பாட்டில் உடன்பாட்டைக் காண்பது, நம் நித்தியத்தை அறிதல், ஆன்மா ஜடத்தை ஆள்வது, சிருஷ்டியை அறிவது (process), சர்வம் பிரம்மம் என்பது ஒன்று தவிர மற்றதில்லை என்பதுடன் இணைத்துப் புரிந்துகொள்வது, ‘அது‘ தென்படுவது, அறிவு புலனிலிருந்து விடுபடுதல், ஜகத்குரு ஆகியவை, யோகத்தின் முதற்படிகளாகும்.
- உலகம் ஜடத்தால் ஆளப்படுகிறது. ஜடம் மனத்தை நிர்ணயிக்கிறது. சிருஷ்டியும், பரிணாமமும் மனத்தால் நடப்பவை. அவற்றுள் மனம் ஜடத்தை நிர்ணயிக்கிறது. எனவே ஜடத்தை மாற்றி அங்கு மனத்தை, பிரதிஷ்டை செய்தால், அளவுகடந்த முன்னேற்றமான மாற்றம் ஏற்படும் என்பது மட்டுமில்லை; அடுத்த பரிணாமக் கட்டத்தில் அளவால் நிர்ணயிக்க முடியாத வளர்ச்சிக்குரிய முன்னேற்றமும் எழும்.
- குடும்பம், நாடு, கம்பெனி, மனிதன் ஆகியவை தங்கள் நிலையில் முன்னேற்றம் பெறுவதற்குப் பதிலாக, அடுத்த பரிணாமக் கட்டத்திற்குரிய வளர்ச்சியைத் தரும் முன்னேற்றத்தைப் பெற, ஜடத்தை, ஆன்மாவால் மாற்றிக்கொள்ள வேண்டும்.
- அவை பழக்கம், நடத்தை, சுபாவமாகவும் பண்புகளாகவும் (சமூக, தார்மீக, ஆன்மீகப் பண்புகளாக) வெளிப்படுகின்றன.
- நோக்கம் ஓரிடத்தில் புரட்சிகரமாக மாறி, நடைமுறை தலைகீழாகும். தலைகீழ் மாற்றம் அளவுகடந்த சக்தியை, பரிணாம வளர்ச்சிக்காக வெளிப்படுத்தும். அதன் பலனாக எதிர்கால நோக்கம் பேரளவு மாறும்.
- சக்தி (force) தன்னை அறிவது (becoming conscious) நடைமுறையைத் தலைகீழாக மாற்றுகிறது. ஒருவருக்கு ஏற்படும் மாறுதல் மற்றவரையும் மாற்ற முடியுமானால், அவர் அன்னையின் கருவியாகிறார்.
- வாழ்வின் ஒவ்வொரு நிலைக்கும் அதற்குரிய கட்டுப்பாடுகள், அனுபவிக்கக்கூடிய சந்தோஷங்களுண்டு. அனுபவிக்க வேண்டியதை அனுபவிக்காதது அறிவின்மை. எவருக்கும் அது பயன் தரப்போவது இல்லை. அடுத்த உயர்ந்த நிலைக்குரிய கட்டுப்பாட்டை நினைத்து, தன் நிலையில் அவற்றை அறிவில்லாமல் பின்பற்ற முயலும் அறிவீனம் மனிதனுக்குண்டு. குழந்தை விளையாட வேண்டும். குடும்பஸ்தன் தான் அனுபவிக்க வேண்டியவற்றை அனுபவிக்க வேண்டும்.
- ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பரிணாமத்திற்குரிய சிருஷ்டி என்றவொன்று உண்டு. அதுவே நமக்கு அன்னை.
- இன்னல்களைக் கடந்து, சவாலை ஏற்று, வாழ்வில் முன்னேறுவது வாழ்வில் இன்பம். தனக்கே சவால் எழுப்பினால் அதைவிடப் பெரிய இன்பம் காத்திருக்கிறது. ஆன்மா, அளவுகடந்த இன்பத்தைத் தேடி, தன்னை அறியாமையிலிருந்து, மீண்டும் கண்டுபிடிக்க முயல்கிறது. அதுவே லீலை.
- மனம், எண்ணம்; உணர்வு, நரம்பு; உடலுணர்வு, உடல்; ஆகியவை சேர்ந்து புற மனிதன் ஆகிறான். உள்மனம் விழிப்புற, மனத்தில் எண்ணமற்று, அசைவற்ற உடலில் உடலுணர்வுகற்றுப் போகவேண்டும்.
- நம் இன்றைய திறமைகள், பண்புகள், அறிவாற்றல், நினைவாற்றல், கருத்தாற்றல் போன்றவை புனிதப்பட்ட நிலையிலும் அன்னையைச் சேர, தடையாகும். அவற்றைப் போற்றிப் புகழ்வதே பெருந்தடையாகும்.
- நம் சரணாகதியைப் பூர்த்தி செய்ய நாம் பிரார்த்திக்கின்றோம்.அது தம் கடமையா என அன்னை கேட்கிறார்.
பொதுவாக மனித ஆத்மா தன் சரணாகதியையும் அன்னைக்குச் சமர்ப்பிப்பது உன்னதமான நோக்கமாகும். நாமே இறைவன் என்ற நிலையை அன்னை நமக்களிப்பதால், சரணாகதி அதன் பகுதியாகிறது. அதன்பின், பழைய தன்னை அறியாத நிலைக்குச் சென்று, அதன்படி நடக்க முயன்றால், அந்த இடைவெளியில் நாமழிக்க முயலும் அகந்தை எழுகிறது.
- நம் சரணாகதியின் முழுப் பொறுப்பை ஏற்பது அகந்தையை முழுமையாக அழிக்க முன்வந்து, யோக முயற்சியில் முதிர்ச்சி அடைவது ஆகும்.
- நல்லது, கெட்டதான புற நிகழ்ச்சிகளை அகவுணர்வால் புரிந்து கொள்வது ஞானம். நல்லவை உள்ளுணர்வை நேரடியாகவும், கெட்டவை தலைகீழேயும் பிரதிபலிக்கின்றன.
- அது புரியாத நேரத்தில், அறிகுறிகளை மட்டும் நம்பி, சலனமற்ற சமத்துவத்தைப் பெற்றிருப்பது நம்பிக்கையுடன் செயல்படுவதாகும்.
- ஆர்வம் அடக்க முடியாமல் பீறிட்டெழுந்தால் அது தீவிரமாகி சத்தியஜீவிய அலையோசையாகிறது.
- நாட்டில் செல்வந்தர் சிலர் ஒரு புது பாஷனை ஏற்றுக்கொண்டால், அது சீக்கிரம் நாடு முழுவதும் பரவுவது, பகவான் 12 பேர் சத்தியஜீவியத்தைப் பெற்றால் பூமியே மாறிவிடும் என்பது போலுள்ளது.
- சிந்திக்காமல் புரிவது மனத்தின் உயர்வானால், உணர்வுக்கு அது போன்றது எது என அறிந்து செய்தால், உணர்வு, முனிவர் மனத்தைப் பெறும். உணர்வு வெளிப்படையாகச் செயல்படாமல் சாதிப்பது அது போன்றது.
- உனக்குரியதை அனுபவிக்காமலிருப்பதும், உரிமையில்லாததை அனுபவிக்க விரும்புவதும் மன்னிக்க முடியாதது. (கடைசி வரை ஏற்றுக் கொள்ளாததால் அது பூர்த்தியாகாமலிருக்கிறது).
- மனிதனின் பரநலம் (selflessness) தெய்வீகச் சுயநலமாக (selfishness) மாறுவது ஆன்மீக முன்னேற்றம்.
- வெறுப்பிலும், எதிர்ப்பின் கவர்ச்சியிலும் உணர்வின் பரிணாம இரகஸ்யம் உள்ளது. அதுவே மனதில் புரிந்துகொள்ளும் ஆர்வமாகும். ஒவ்வொரு நிலைக்கும் இதற்குரியதுண்டு. பரம்பொருள் ஜடத்தில் வெளிப்படும் முன் பகவான் பொறுக்க முடியாத ஆனந்தப் பூரிப்பு என்பது தெரியும் என்கிறார். அன்னை அதையே இடையறாத தீவிர ஆனந்தமென்கிறார்.
- உடலில் பரம்பொருளைத் தாண்டி, ஜடத்தில் பரம்பொருளுண்டு. அதுவே நம் ஜீவனின் அஸ்திவாரம். ஜடத்திலும் பரம்பொருள் தன்னை வெளிப்படுத்தும்.
- இன்று மனிதன் இறைவனுக்கு எதிர் நிலையிலிருக்கிறான்.கடவுளை நோக்கி அவன் செல்வது, ஆர்வம் எனப்படும்.
- தவறு, குறை, தீமை என்பவை பரிணாமத்தின் பல நிலைகள் என்கிறார் பகவான். நீயே அதுவானால், அல்லது அதன் பகுதியானால் அது வேதனையாகிறது. வெளியிலிருந்து பார்த்தால் அது, மாறுதலில் ஒரு நிலை எனத் தெரிகிறது. நீயே அதுவாயிருந்து, ஜீவியம் உயர்ந்தால், அவை அற்புதங்களாக மாறுகின்றன.
- ஒருவர் பெரிதும் விரும்பிப் பெற முடியாததை நாம் கொடுப்பது, யோக வாழ்வில் ஜடத்தின் உதாரகுணமாகும். தம் கட்டுப்பாடு இடம் கொடுக்காததை அளவுகடந்து ஒருவர் விரும்பினால் அதை மறுப்பது, வாழ்வில் ஜடத்தின் ஆன்மீக உதாரகுணமாகும்.
- தவறான வாழ்வு வியாதியை உற்பத்தி செய்கிறது. அது புது மருந்துகளைத் தோற்கடிக்கும் தீராத வியாதியாகவுமிருக்கும். உடல் அவ்வியாதியை அழிக்க எழுந்தால், வியாதி மறையும். பரம்பரையான சர்க்கார் சட்டம், மாற்றுச் சட்டத்தால் போகும். “மனம் மாறினால் ஜடம் திருவுருமாற்றமடையும்” என்ற பகவான் வாக்குக்கு இவை உதாரணங்கள்.
- இல்லாததை நம்புவது மூடநம்பிக்கை. இருப்பதை நம்ப மறுப்பதும், அழிய மறுப்பதை ஏற்க மறுப்பதும் மூடநம்பிக்கை. ஒரு முறை கண்ட அனுபவத்தை முடிவாகக் கொள்ளும் அறிவீனம் ஒன்று; எதிர்காலத்தை ஏற்க மறுக்கும் அறிவீனம் அடுத்தது.
- ஒரு முறை கண்டதில், உடலில் ஏற்பட்ட உணர்வை அறிவது மூடநம்பிக்கை. நடைமுறையில் ஒரு முறை கண்ட நிகழ்ச்சியைப் பொதுவான சட்டமாக மனம் ஏற்பது மூடநம்பிக்கை.
- அகந்தையைச் சரணம் செய்வது பெரிதல்ல. அகந்தை தானே தன்னைச் சரணம் செய்ய முன்வருவது பெரியது.
- மேல்மன வாழ்வு, உள்மனத்திற்குட்பட்டு, சமர்ப்பணம் செய்வது அந்த வகையில் பரிணாமம். ஜீவன், பரமாத்மாவை அழைத்து அதனுடன் இரண்டறக் கலப்பது அழைப்பு. அந்த வகையில் அது ஆன்மீகப் பரிணாம வளர்ச்சி.
- உள்ளெழுந்து வரும் ஆர்வத்தாலோ, புறச் சந்தர்ப்பத்தின் நிர்ப்பந்தத்தாலோ மனிதன் கடவுளை நாடுகிறான். ஏதோ ஒரு சமயம் தெய்வம் மனிதனை நேராகவோ, மறைமுகமாகவோ தன்னை நாடும்படி வற்புறுத்துகிறது.
- முதலில் சொல்லியது உணர்வு; அடுத்தது உயர்ந்த உணர்வு அல்லது சைத்திய புருஷன். அவதார புருஷனை மட்டுமே ஆண்டவன் நிர்ப்பந்திக்கிறான்.
- மரத்தின் வளரும் நுனி, மலரக்கூடியது. மகரந்தச் சேர்க்கையால் கருத்தரிப்பது. சமூகத்திலும், தனி மனித வாழ்விலும் புது வாழ்வின் வளரும் நுனி, செய்தி பரிமாறி மலர்கிறது. இது பயனுள்ள செய்தியாகவோ வதந்தியாகவோ இருக்கும். அதனால்தான் வாய்மொழி உலகெங்கும் க்ஷணத்தில் பரவுகிறது.
- தன் காரியம் – புத்தகம், கருத்து, திட்டம், etc. – நாடெங்கும் பரவ விரும்புபவர் “வாய்மொழி“யை நாட வேண்டும். அதை நல்ல முறையிலும் செய்யலாம்.
- சமூக வாழ்வு மலர்வதை உணர்வின் குறிக்கோளாகக் கொண்டு அதை, தம் வாழ்வு வெளிப்படுத்தும் வகையில் வாழ்பவருக்கு அது முடியும்.
- வாய்மொழி பரவும் நிபந்தனைகள் :
- அவ்வளர்ச்சியை உன் உணர்வுப்பெருக்கு நாட வேண்டும்.
- அவருடைய வாழ்வும், தொழிலும் அவ்வலையோசையோடு இணைந்திருக்க வேண்டும்.
- சமூக வளர்ச்சியார்வமும், அவன் செய்யும் நடைமுறையில் இணைக்கப்பட வேண்டும்.
- அவர் தொழில் அல்லது ல்ழ்ர்க்ன்ஸ்ரீற் சரக்கு அந்தச் சமூக வளர்ச்சியையும், அவரது இலட்சிய ஆர்வத்தையும் பிரதிபலிக்க வேண்டும்.
- இந்த நான்கு அம்சமும் இசைந்திணைந்த பூரண முழுமையாக வேண்டும்.
- அம்முனையில் அன்னையோடு தொடர்பிருந்தால் இந்த 5 நிபந்தனைகளும் தாமே சேர்ந்து, நினைத்த காரியம் முடியும்.
- இந்தச் சட்டத்தை நாமறிவது நடைமுறையில் செயல்பட ஓரளவு உதவும்.
- லீலையின் இரகஸ்யத்தைப் புரிந்துகொண்டால் பரம்பொருளைச் சிருஷ்டியாக மனத்தில் சித்தித்தது எனப் பொருள். இதுவே உணர்வின் சித்தியாக வேண்டுமானால், அவ்வறிவின் ஞானம் லீலையை உணர்வாக அறிய வேண்டும். அது உணர்வாகவோ, உடலுணர்வாகவோ இருக்கும்.
- சித்தி, உடலில் உள்ள ஜடத்தைத் தொட்டால், உடலுணர்வு மறைந்து சித்தியின் நிறைவு எழுகிறது. அது ஜடத்தைவிடத் திடமானது (denser). இந்நிலையில் பகவான் ‘பொறுக்க முடியாத ஆனந்தம்’ என்று கூறுவது காணப்படும். அன்னை அதையே ‘இடைவிடாத ஆனந்தப் பூரிப்பு’ என்கிறார்.
- பெரும் மாறுதல், திடீரென எழும் வளர்ச்சி, அடிக்கடி அருள் செயல்படுதல் ஆகிய நிலையிலுள்ளவர்கட்கு, அடிக்கடி பரிசுகள் கிடைக்கும். எதிர்பாராத பெரும்பலன் வரும். அவர்கள் மனநிலையின் பக்குவத்திற்கேற்பவே அவை அமையும். சூழ்நிலையால் நிர்ணயிக்கப்படா. உண்மையில் அவை சூழலைச் சுட்டிக்காட்டுபவை. சூழல் அவர்களுக்கு அனுப்பும் அழைப்பாகவும் அமையும்.
- ஆர்வம் அதிகப்பட்ட நாளில், அநேகர் உங்களை நாடி வருதலைக் காணலாம். மேலும் ஆர்வம் உயர்ந்தால் வருபவர்கள் குறைந்து மறைவதுடன் வீட்டிலுள்ளவரும் வெளியில் போய் உங்களைத் தனியே விடுவதைக் காணலாம்.
- அழைப்பு ஆழ்மனத்துள் சென்றால் அது நிலைக்கும். ஆழ்மனமே அழைத்தாலும் அது நடக்கும்.
- அகந்தையைப் பிரகிருதி உற்பத்தி செய்தது.சைத்திய புருஷன் ஆன்மாவினுடையது. அகந்தையைக் கரைத்து சைத்திய புருஷனை நாடுதல் எனில், நம் செயல் மையம் இயற்கையிலிருந்து ஆன்மாவுக்குப் போகிறது எனலாம். இதன் முதல் அறிகுறியாக எல்லா இயற்கையின் செயல்களும் எண்ணம், உணர்வு நம்மால் ஆரம்பிக்கப்படுவது நின்று, ஆன்மா ஆரம்பிப்பதற்காக நாம் காத்திருப்பதாகும்.
- எதுவும் முடியாத பொழுது நம்பிக்கையை நாடுகிறோம்.எல்லாம் முடியும் என்ற பொழுது நம்பிக்கையை நாடும் ஆன்மா, உயர்ந்த நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. அத்துடன் அன்னையின் உறவை அனுபவிக்கிறது. இனிவரும் எச்செயலும் அன்னையிடம் நெருங்கிவரும் சந்தர்ப்பமாக அறிகிறது.
- செயலை, சமர்ப்பணம் செய்வதைவிட அதன் விவரங்களை, சமர்ப்பணம் செய்வது கடினம். இதற்கு நம்பிக்கை விவரமானதாக இருக்க வேண்டும்.
- சேவை, ஊழியர் என்பவை சேவையில் பெருமைப்படுபவர்க்கே எழும். சேவையின் நோக்கம் மனிதனை உருவாக்குகிறது. சேவை, அன்பான ஊழியமானால் மனித நிலை உயரும். நான்கு பகுதிகளுமில்லாவிட்டால் முழு மனிதனில்லை. பிராம்மண, க்ஷத்திரிய, வைஸ்யன் சேவையின்றி, அதுவும் தாம் பெருமைப்படும் அன்பு ஊழியமின்றி முழுமை பெறமாட்டார்கள். கடைசிப் பகுதி என்பதால் இதைத் தயார் செய்வது மிகக்கடினம்.
- விரதமும், தவமும் இறைவனை வாழ்வில் சந்திக்க உதவா. முதிர்ந்த அனுபவம் செறிந்த மனப் பக்குவத்தால் இறைவனை வாழ்வில் காணலாம்.
- எதிர்பார்த்தல்: விஷயம் முடியும் என்பதை மனம் சுட்டிக்காட்டுவதை எதிர்பார்ப்பது குறிக்கும். உணர்வின் நம்பிக்கை எதிர்பார்க்கிறது. கடந்த கால அனுபவத்தால் ஒரு முறை அறிந்ததை ஆயிரம் முறை திரும்பச் செய்வது உடலின் பழக்கம். எதிர்பார்ப்பதும் அதற்கு இதுவே. இறந்து போனவரைத் தேடும் நிலையும் கண்ணுக்குண்டு. ரயிலில் அனுப்பிவிட்டு வீட்டுக்கு வந்த பிறகு அவரை வீட்டில் தேடுவதும் உடலுக்கு முடியும்.
- ஒரு கருத்து உன் எண்ணத்தில் பல முறை வரலாம். ஒரு அனுபவம் பல்வேறு அளவுகளில் மனதில் மீண்டும் மீண்டும் வரலாம். பழைய கருத்து புது வேகத்தோடு அடுத்த முறை மனதில் எழுந்தால் அது புதுக் கருத்தாகத் தோன்றும்.
- நேற்றிருந்த நிலையை மறந்து, இன்றுள்ள நிலையைப் பாராட்டுவது சமூகம். புதுப் பணக்காரனும், ஓய்வு பெற்ற ஆபீசரும் இதை உயர்வாகவும், தாழ்வாகவும் பெறுகிறார்கள். பிறர் மட்டுமல்ல, நாமும் நம்மை அதுபோல் நினைக்கிறோம். அதேபோல் மனிதன் தன்னை மனிதனாகக் கருதாமல், ஆன்மாவாகக் கருத வேண்டும்.
- பகுத்தறிவுக்கு ஒவ்வாதது என்பதால், அருளின் செயலை மனிதன் பிடிவாதமாக எதிர்க்கிறான். அருள் அவன் பகுத்தறிவுக்கு நேர் எதிராகச் செயல்படுகிறது. தனக்குப் பாதகமானது (அம்பாள் வெற்றிலைப் பாக்கு எச்சில்) என்பதில் அருளைக் காண்பதே விவேகம்.
- ( Physical organisation) உலகத்தின் இயக்கம் தானே நடப்பது. இரு செயல்கட்கு இடையேயுள்ள வெளி, அடுத்த செயலைத் தயார்படுத்தத் தேவைப்படுவது. ஜட உலகத்திற்குக் காலம் தேவை. உணர்வுக்கும், மனத்திற்கும் தேவையில்லை. ஜடம், உணர்வாக ஆயிரமாயிரம் ஆண்டுகளாகும். நம்மை நேரே சத்தியஜீவியத்திற்குப் போகச் சொல்கிறார் பகவான்.
- சிருஷ்டியின் ஆனந்தம் (delight) வாழ்வில் இரு பிரிவுகளாகின்றது; வலி, ஆனந்தம். இரண்டையும் ஏற்றால்தான் அனுபவம் முழுமைப்படும். ஒன்றை விலக்கி, மற்றதை முழுமையாக அனுபவிக்க முடியாது.
- வாழ்வில் ஆனந்தம் பெற நல்லதும், கெட்டதும் தேவை.இரண்டும் சேர்ந்து ஒரு நிகழ்ச்சியை ஏற்படுத்தும். மனிதன் முழு ஆனந்தம் பெற அவன் இரு பக்கங்களையும் அனுபவிக்க வேண்டும்.
- ஆண், பெண் எனும் வேறுபாட்டை ஜடம் பயன்படுத்துகிறது.உணர்வில் ஆனந்தம் பெற வலியும், சந்தோஷமும் அவசியம். மனதில் ஞானம் வர அறிவும், அறியாமையும் தேவை.
- தீமை, தவறு ஆகியவற்றை நாம் பொறுத்துக்கொள்வதுடன், ஜீவன் சிருஷ்டிக்க முயன்றால் தீமையை நன்மையின் பகுதியாக அறிந்து நாமே உற்பத்தி செய்து, பின்னர் அதைத் தாண்டி வர வேண்டும். திருடனுக்குப் பணம் கொடுப்பது பாவம். அதைத் திருப்பிப் பெறும் ஆனந்தத்திற்கு இணையில்லை.
- நினைவே ஒரு செயலைத் தீமையாக்குவது; அல்லது தீமையாகக் காண்பிப்பது; செயலில் தீமையில்லை; செயல் வெறும் செயலாகும்.
- தீய மனிதனுக்குப் பணிவது தீமையைவிடக் கொடியது.சரியான எண்ணத்துடன் செய்தால், நம்முள் உள்ள தீமையையும், நம்மை நாடி வரும் தீமையையும் அழிக்க முடியும்.
- நடத்தைக்குரிய சட்டங்களை மீறுவது எவராலும் ஏற்க முடியாத குற்றம், பாவமாகும். ஆனால் சில சமயங்களில் உன் உயிரைக் காப்பாற்றும். தம்பதிகளில் ஒருவர் அப்படி நடந்தால், அடுத்தவரை நரகத்திலிருந்து காப்பாற்றும் நேரமும் உண்டு.
- இந்த ஞானத்தை ஜீவனில் உணர்வது, உணர்ந்து உடலின் சொரணையையும் அழிப்பது, தார்மீக உணர்வை, திருவுருமாற்றம் செய்வதாகும்.
- படபடப்பு சக்தியாவது, தீமை நல்லதை உயர்ந்த நல்லதாக்குவது, பிரிவினை பேரானந்த இனிமையை மீண்டும் கண்ட ஒற்றுமையால் காண்பது ஆகியவை நம் வாழ்விலும் உணர்விலும் காணும் வரை, வெறுஞ்சொற்களாகவே இருக்கும். உள்ளிருந்து ஆன்மா எழுந்து, ஜடத்தை ஆட்சி செய்யும் வரை இதன் உண்மை புரியாது.
- அந்நிலையில் மனிதன் தன்னையறியும் தெய்வமாக மாறுகிறான்.
- இந்த ஞானம் ஏற்பட்டால் “Delight of the individual” மனித இலட்சியமாக, பகவான் வர்ணிப்பதை அறிய முடியும்.
- நம்பர் போடுவதில் குறை ஏற்பட்டால், மனம் ஏற்றுக்கொள்ளும் பொறுப்பை, செயலில் பூர்த்தி செய்யும் திறனை அதற்குரிய சிறப்புடன் பெறவில்லை எனப் பொருள்.
- (Form) உருவம் ஏற்படாமல் (content) உள்ளுணர்வு சிதறிப்போகும். உருவம் அழிந்து பதிந்தால் உள்ளுணர்வு கசங்கிவிடும்.