Skip to content
- மூகத்தின் உண்மையான அங்கமாக ஏராளமான பேர் மாறிவிட்டனர். மொத்தத்தில் அவர்கள் சிறுபான்மையினரே. மீதி பேர் அனைவரும் சமூகக் கட்டுப்பாட்டில் உள்ளவர்கள். மன வளர்ச்சியால் தெளிவு பெற்றவர்கள் ஆயிரத்திலொருவர். பரிணாம வளர்ச்சியை ஏற்றுக் கொண்டவர் இருவர் மட்டுமே.
- ஆதாயத்திற்காகச் செயல்பட்டால், தானுள்ள அளவிலேயே முன்னுக்கு வரலாம்.
- நாமுள்ள இடத்தின் இலட்சியம் அடுத்த அளவுக்கு நம்மை அழைத்துச் செல்லும்.
- பெரிய இலட்சியத்தையும், சிறிய முறையையும் நாடும் மனநிலை முரண்பாட்டின் மூலம் செயல்படும் நிலை.
- அரசியல், பொருளாதார, விஞ்ஞான வளர்ச்சியை, சமூகத்தின் அடிமட்டத்திலுள்ளவரே கொண்டு வருகின்றனர்.
- தாழ்ந்தவரின் தலைமையை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை சமூகத்திற்கும், அதன் தலைவர்களுக்கும் இருந்தால் புரட்சி வெற்றி அடையும்.
- அடிமட்டத்தின் அதிஉயர்வைப் பாராட்டினால், சமூகம் முன்னேறும்.
- ஆன்மாவால் முடியும் அத்தனையையும் சாதிக்க, மனம் உடலின் உயர்வை அறிய வேண்டும்.
- சிறியது, பெரிய பங்கு கொண்டால்தான், பூரணம் ஏற்படும்.
- மிகக்குறைந்த செறிவிலிருந்து (concentration) மிகஅதிகமான செறிவை நாடுவது நாம் காண்பது. இதுவே நம் யோக முயற்சி. இயற்கையாக இது நடந்தால் அது யோகம்.
- எங்கிருந்தாலும் உயர்வை மனிதனால் காண முடியும். கண்ட பின் தனக்கு அதைவிட உயர்வுண்டு என்று தனக்கே நிரூபித்துக் கொள்வான்.
- தாழ்வில் உள்ள உயர்வைக் காணுவது மனிதனின் பெருந்தன்மை. அத்துடன் உயர்வோடு சேர்ந்து உயர விரும்புவது இயற்கை.
- தானே ஏற்றுக்கொண்ட உயர்வைவிட தானுயர்ந்தவன் என முடிவு செய்வது, ஆராய்ச்சியின் பலன். அது தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும் வகையில் அமைந்த கர்வம்.
- நமது சிறிய பெரிய பிரச்சினைகளை எல்லாம் தீர்க்கப் பயன்படும் சக்தி, யோகத்தில் ஒரு செயலைப் பூர்த்தி செய்யத் தேவை.
- எல்லா அசைவுகளையும், யோக எழுச்சியாகச் செய்வது சாதனையை மேற்கொள்வதாகும்.
- மனிதனால் முடியாத இடத்தில் அன்னை ஆரம்பிக்கின்றார்.
மனிதன் அழைக்கும் நேரம் அன்னை செயல்படுகிறார்.
மனித முயற்சி அகந்தையின் வெளிப்பாடு.
மனித முயற்சி அவசியம். ஆனால் அன்னையைப் புறம்பாக்கும் முயற்சி கூடாது.
அன்னையை அழைத்து அவருள்ளே வந்தபின், அன்னை செயல் நம்மில் பூர்த்தியாக முயற்சி தேவை.
- பவித்திரமான ஆத்மாவினுள் அன்னை வந்தபின் அவன் முயற்சி அன்னைக்குத் தடையாகும். மற்றவர்கட்கு அம்முயற்சி தேவை. அன்னை சக்தியைப் பெற்று அனுபவிப்பதே முயற்சி.
- “உற்ற நண்பர்கள் துரோகம் செய்வார்கள்; எதிரியாவார்கள்; அருமையான திட்டங்கள் சூன்யமாகும்; இமயமலை போன்ற ஆதரவு, மலை என எதிர்க்கும்“. உன் இலட்சியத்தில் துரோகம் கலந்திருந்தால், அல்லது துரோகத்தில் நிறைவு காண்பவர் மீது உயிர் வைத்திருந்தால் வாழ்வு மேலே சொன்னது போலாகும்.
- தாராள குணமும், பெருந்தன்மையும் ஆன்மீகச் செயலில் அறிவீனமான தற்கொலைக்கொப்பாகும்.
- மனிதன் மனதால் பெருந்தன்மையை அறிந்து போற்றுவான். ஆன்மீகச் செயலில் ஆவியுலகம் கலப்பதால், பெருந்தன்மையில் ஆவி துரோகத்திற்குரிய சந்தர்ப்பத்தைக் கண்டு உன்னை அழிக்கும்.
- கட்டுப்பாடாகச் சாதித்து, சோம்பலில் ஓய்வெடுத்துக்கொள்வது மனிதச் செயல். இல்லையேல், மன நிம்மதி பெற அழிச்சாட்டத்தை நாடுவான். பூரணத்தில் சாதிப்பவர் பூரணத்தில் நிம்மதியான ஓய்வு பெற முடியும்.
- சொத்தாலும், அன்பாலும் பயத்தை இழந்தால், பிறர் மீது பாயும் வேகமும், எப்பொழுதும் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும் எண்ணமும் அழியும்.
- ஒரு நிலையிலுள்ள பாதுகாப்பு, அடுத்த நிலையின் பழக்கத்தை மிருதுவாக்கும்.
- உடலிலும், உணர்விலும் நிறைந்து செறிந்த வலிமையே பாதுகாப்பு.
- வாழ்வில் சொத்தாலும், பொருளாலும் வரும் பாதுகாப்பு, சூட்சுமத்தில் நம்பிக்கை ஏற்படுத்தும்.
- உணர்வில் நெருங்கிய பற்று, அறிவால் அவ்வுறவில் தெளிவில்லை என்பதைக் காட்டும்.
- பற்று நிறைந்த உணர்வில்லாவிட்டால், மனம் சொத்தையும், பொருளையும் நாடும்.
- ஒரு நிலையிலுள்ள குறை, அடுத்த கீழ்நிலையில் வேறொரு நிறைவால் சரி செய்யப்படும்.
- மனித உறவுகள் பல. அவற்றுள் அன்பு ஒன்று. ஓர் ஆன்மாவின் தொடர்பு அடுத்த ஆன்மாவுடனிருந்தால் அஃது அன்பான தொடர்பாகும்.
- ஆன்மாக்களுக்குள்ள தொடர்பு அன்பில்லாத தொடர்பாக இருக்க முடியாது.
- அடுத்தவருடைய தொடர்பை அன்பானதாக மனிதன் மாற்ற முயல்கிறான். “ஆன்மாக்களுக்குள்ள தொடர்பு” எனில், “அன்பு” என்றாகும்.
- ஒரு நிகழ்ச்சிக்காகப் பிரார்த்தனை முன்போ, பின்போ இருந்தாலும் அது பலிக்கும். சூட்சுமத்தில் காலம் ஜட உலகக் காலத்துடன் பொருந்தாது.
- செல்வம், ஞானம், ஆன்மீகம் வாழ்வில் பிற்காலத்தில் செறிந்து வந்தால், இளம் வயது பொறாமை, எரிச்சல், பழிவாங்குதல்களை அழிக்க முடியும்.
- நெடுநாளைய சிறிய அம்சத்தையும், எந்தப் பெரிய அம்சமும் அழிக்கும்.
- கருவி சும்மா இருப்பதால் ஏதாவது வேலை கொடுக்க நினைத்துச் செய்யும் காரியம் சிருஷ்டியைப் பின்னுக்குக் கொண்டு போகும். இருப்பினும் பெருங்காவியங்களும் இது போல் எழுந்துள்ளன.
- உறவுக்கு முக்கியம் உணர்வு, திறமையில்லை.
- முக்கியமான நேரங்களில், எதையும் சற்று விட்டுக்கொடுக்காமல் இருந்தால், அடிப்படையான திறமைகள், எதிரான பலன் தரும்.
- பலரும் விரும்பிப் போற்றுதல், உயர்ந்த பண்பாளன் என்பதாலோ, அவருடைய இலட்சியம் உயர்ந்தது என்பதாலோ இல்லை.
- தம்மைப் போன்ற ஒருவரை, தம் உணர்வு பூரித்து ஏற்றுக்கொண்டால், பார்வைக்குப் பவித்திரமாகத் தென்பட்டால், அருகிலிருந்து சேவை செய்ய முடியுமானால், மனம் பாராட்டித் துதிக்கும்.
- ஜகத்குருவே குரு; மனித குரு அல்ல. ஜகத்குருவை மனிதர்களுள் காண வேண்டும்.
- தொட முடியாதவரை உடல் நாடுவதில்லை. இலட்சியம் இதயத்தைத் தொடுவதில்லை.
- ஜகத்குருவான அன்னை மனித உருவில் நம்மைச் சூழ்ந்துள்ளார். நம்மால் அவருக்குச் சேவை செய்ய முடியும். நம் உள்ளத்தைத் தொடுபவர் அவர்.
- தோல்வி, சோம்பல், எதிர்ப்பு, விரக்தி, துரோகம் ஆகிய ரூபத்தில் ஆரம்பத்தில் அன்னை நம்மை நாடி வருவதால் நம்மால் அவரைக் காண முடிவதில்லை; ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.
- இந்த ரூபங்களில் அன்னையைக் கண்டவரே வெற்றி, செல்வம், சேவை, நிறைவுகளை, விஸ்வாசமாகக் காண முடியும்.
- ஆரம்ப உருவில் அன்னையை அறிய முடியாதவர் அவை ஆபத்து, விபத்து, அழிவுகளாக மாறும் வரை காத்திருக்க வேண்டும்.
- உலகில் அவதாரமாக நடமாடிய பொழுதும், மனிதனை, தீவிரமாக நெருங்க அன்னை விரும்பினால் தோல்வி முதலியவற்றால் நெருங்குவதே அன்னை வழக்கம்.
- தெய்வ ரூபம் வெளித் தோற்றத்திற்காக, அதில் தீவிரமில்லை. உணர்வில், தீவிர ஸ்பர்சம் (வெற்றியைத் தோல்வியாக) அம்சங்களைத் தலைகீழாகக் காட்டும்.
- அன்னை எந்த ரூபத்தில் (தோல்வி, வியாதி, etc.) நம்மைத் தொடுகிறாரோ, அந்த ரூபத்தில் அன்னையை மனம் கண்டுகொள்வது (sincerity) உண்மையாகும்.
- சக்தி தன் போக்கை வலியுறுத்துவது எதிர்ப்பாகும்.ஜீவியத்தைக் கண்டு கொள்வது (sincerity) உண்மையாகும். சக்தி தன்னையறிவது ஜீவியம் தலைகீழாக மாறுவதாகும்.
- தங்கள் நிலையிலேயே உள்ள ஒருவரின் பெரிய விவேகத்தை மக்கள் ஏற்றுக்கொள்வதில்லை.
- அவர் அடுத்த நிலைக்குப் போனால், மக்கள் அவரை ஏற்றுக்கொள்வது இல்லை, வழிபடுவார்கள்.
- தங்களோடிருந்தவர் தங்களை விட்டுப் பிரிந்துவிட்டார் என்ற பாசம் மாறி, பொறாமையாகிறது.
- அவர் மேலும் உயர்ந்தால், அவர்கள் அவரிடம் உண்மையில் பெருமையைக் காண்பார்கள்.
- முழு மனம் அல்லது முழு ஜீவன் ஒரு விஷயத்தில் தொடர்ந்து அக்கரை செலுத்துவதை நாம் (seriousness) உயர்ந்த தீவிரம் என்கிறோம்.
- உயர்ந்த தீவிரமுள்ளவருக்கு அது போன்ற குணம் பொதுவாக அமையும்.
- மனம் ஈடுபடாமல், அதிகப் பொறுப்பும், பாரமும் படபடப்பை அளிப்பது இல்லை. உணர்வுள்ள உறவு படபடப்பை அளிக்கும்.
- நஷ்டம் வரும் சந்தர்ப்பத்தை மனிதன் விலக்குகிறான். சாதிப்பவர்கள் அதை நாடுவார்கள். சாதனையை நாடுபவர்கள் நிலையற்ற சந்தர்ப்பத்தில் திளைப்பவர்கள்.
- ஆன்மீக வாழ்வு ஆபத்தின் மறுபுறம். இங்கு ஆபத்து நிரந்தரமானது. நிலையான ஆபத்து வாழ்வை ஜீவனோடு இருக்கச் செய்கிறது.
- பகுத்தறிவுவாதிக்கும், மத வழிபாட்டை நாடுபவனுக்கும் ஆன்மீகத் திருஷ்டியை எடுத்துச் சொல்பவை சிந்தனை மணிகள்.
- மனத்தின் அனுபவம் முழுமை பெற்று எண்ணமாகிறது.
- கட்டுப்பாடு வெளியிலிருந்து வருகிறது.
மனம் உணர்வைக் கட்டுப்படுத்துவது சுயக் கட்டுப்பாடு.
உணர்வே தான் கட்டுப்பட முன்வருவது உயர்ந்த கட்டுப்பாடு.
- வெளியிலிருந்தாவது, உள்ளிருந்தாவது நம்மீது திணிக்கப்படுவது கட்டுப்பாடு.
- அனுபவிப்பதை நாமே நாடுகிறோம். கட்டுப்பாடும், அனுபவமும் ஒரே பலனை நாடுகின்றன.
- சக்தி, திறமை, அறிவு குறைவாக இருப்பதால் நாம் கட்டுப்பாட்டை நாடுகிறோம்.
- அதிக சக்தி, உயர்ந்த திறமை, முழு அறிவு வெளிப்படத் துடிப்பதால், அவ்வெளிப்பாடு இன்ப அனுபவமாகும்.
- கட்டுப்பாடும், அனுபவமும் பல நிலைகளிலுள்ள திறமைக்குரியவை. முறையும் பலனும் ஒன்றே.
- பிரச்சினையைத் தீர்க்கும் ஆர்வத்தைவிட, அன்னையை நாடும் ஆர்வம் அதிகமானால் பிரச்சினை தீரும்.
- கவலையும் அன்னையும் உன் வாழ்வின் இரு முனைகள். ஒன்று பிரச்சினையை எழுப்புவது, அடுத்தது தீர்ப்பது.
- சுற்றியுள்ளவரை – நமக்கு எப்படி முக்கியம் என்றறியாமல் – முக்கியமாகக் கருதுவது ஜட வாழ்வு.
- உணர்வால் வாழ்பவர்கள், அவர்கள் காரியங்களை, தங்கள் உணர்வாலான உறவால் நிர்ணயிக்கின்றனர். காரியம் உணர்வுக்கு அப்பாற்பட்டது.
- யோகத்தை உணர்வாலான உணர்வோ, உடனிருப்பவருடைய உறவோ பாதிக்கக்கூடாது. நடைமுறையில் யோகம், உடனிருப்பவராலும், உள்ளத்தின் உறவாலும் நிர்ணயிக்கப்படுகிறது.
- உடனிருப்பவரோ, உறவோ யோகத்தை நிர்ணயிப்பதில்லை என்றால் யோகம் பலிக்கும்.
- பூரண யோகத்தில் இதுவும் உண்மை. ஆனால் உடனுறைபவரை விலக்கக்கூடாது. யோகப் பலனை அவரே நிர்ணயிக்க வேண்டும்.
- யோகப் பலனுக்கு அவர்கள் அளவுகோல்.அவரை விலக்காமல் திருவுருமாற்றம் செய்ய வேண்டும்.
- உடலின் திருவுருமாற்றம் நடைபெற நம் உடல் மாறிய பின்னும், பிரபஞ்சத்தில் அலைகள் திருவுருமாற்றமடைய வேண்டும்.
- உடனிருப்பவரோ, உறவினரோ அதற்காக முக்கியமில்லை.அவர்கள் பிரபஞ்சத்தில் உடல், உணர்வு அலைகளைப் பிரதிபலிப்பதால் முக்கியமாகிறார்கள்.
- நேரடியாக உடனே தனக்கு மட்டும் பலன் தராததை சுயநலமி நினைவு வைத்திருக்கமாட்டான். பிரபலமாகிக் கொண்டிருப்பவன் தன் வெற்றிகளில் எதையுமே நினைக்க முடிவதில்லை. ஆழ்ந்த அன்புக்கு உண்மையான பதில் நினைவையே அழிக்கும். பழையவை அத்தனையும் தானே அழியுமளவு அன்னை மீது நமக்கு அன்பு சுரக்குமா?
- நினைவழிந்தால், ஆர்வமெழும். நாலு பேர் சொல்வதையும், நினைப்பதையும் இழந்தால் எழுந்த ஆர்வம் பூர்த்தியாகும். நாம்
- பழைய குற்றங்களை மனமாற்றமிருந்தால் மன்னிக்க முன்வருபவன், அக்குற்றங்களை எழுப்பிய தன் மனநிலை மாற வேண்டுமென நினைப்பது இல்லை.
- பிறரை மன்னிக்க எழும் பெருந்தன்மை தன்னை மாற்ற உதவுவதில்லை.
- பிறருக்குச் சிறு அளவுள்ள பெரிய பரிசை மறுக்கும் மனநிலை பூரண சுயநலம் பூர்த்தியான நிலை.
- தெளிவான சுயநலம், பரிசளிப்பவரையே பலனிலிருந்து விலக்கும்.
- உள்ளத்தில் மறுக்க முடியாத வேகமிருந்தால் வக்ரமும், சுயநலமும் நம்மை நாடி வரும். ஏற்றுக்கொண்டு எதிர்காலத்தில் யோசனை செய்வது வழக்கம்.
- மனதில் அடக்க முடியாதது, சமத்துவத்தை நாடினால் அவற்றின் புற வடிவங்களான வக்ரமும், சுயநலமும் தன்னை நாடி வருவதில்லை எனக் காணலாம்.
- அடக்க முடியாது போனால் கணக்குப் போட முடிவதில்லை.
- தன்னால் முடியாது என்றறிந்த, அடக்க முடியாத வேகம் மாற ஒத்துக் கொண்டு முதலில் கணக்குப் போட முயலும்.
- அடக்க முடியாதது, கணக்குப் போடுவது, கணக்குப் போடாத தெளிவு, தெளிவான மனத்தின் நோக்கம், உணர்வுடைய நோக்கம், உடலின் சொரணை ஆகிய நிலைகளைக் கடந்து சமத்துவம் எழும்.
- ஒரு பண்பு உடலின் சொரணையான பின் அதற்கெதிராக மாறி சுபாவத்துடன் கலக்கிறது. அடக்க முடியாதது அடுத்த பிறப்பில் சமத்துவமாக மனதில் மாறுகிறது.
- உடலின் குணம் ஒன்றை எல்லா நிலைகளையும் கடந்து உடலின் சொரணையாக்கி, மேலும் மனத்தின் திறனாக சுபாவத்தின் அம்சமாக்குவது மறுபிறப்பு.
- சிருஷ்டி ஏற்பட்ட முறையை அறிவது அவசியம்.எதையறிய வேண்டுமானாலும், அது ஏற்பட்ட முறையை அறிவது அவசியம்.
- ஞானம், அஞ்ஞானம், மனம், பிரபஞ்சம் ஆகியவற்றை அறிய அவை ஏற்பட்ட முறை தெரிய வேண்டும்.
- உடல் அதன் செறிவான இருளால் முழுவதும் ஜோதியிலிருந்து பிரிவதால் உடலே அஞ்ஞானத்தின் சிகரம். அதனால் உடல் தீமையின் உறைவிடமாகிறது. ஆதியில் பிரிந்ததே தீமை.
- அசுர குணம் பிரிவினையை ஏற்படுத்தி, நிலைநிறுத்தி வருகிறது.
- தீமை என்பது எதிர்த் திசையில் சக்தி உச்ச கட்டத்தை அடைவது.
- ஜோதி தன்னை விழுங்குவதால் இருளாகிறது.
ஜீவியம் அதே போல் ஜடமாகிறது.
இறைவன் பிரிவினையால் திசை மாறி அசுரனாகிறான்.
- அனந்தம் கண்டமான பொழுது கண்டத்தின் பின் சாரமாக தன் அனந்தத்தைக் காப்பாற்றி வைக்கிறது.
- மாற்றம், அளவு, தன்னையறிவது, சிந்தனை, பிரிவினை, தன்னை விழுங்குவது, துண்டாடுவது, திசை மாறுவது ஆகிய கருவிகளை, சிருஷ்டி பயன்படுத்துகிறது.
- எனவே மேலே போக நாம் எதிரான கருவிகளைப் பயன்படுத்த வேண்டும். அவை: ஜீவன், அளவற்றது, மறதி, ஜீவியம், ஒருமை, தன் வெளிப்பாடு, ஜீவியம் தலைகீழாக மாறுதல்.
- ஒவ்வொரு கருவியும் பல பகுதிகளாலானது.
- ஒருமைக்கு முந்தைய நிலைகள், சுமுகம், முரண்பாடு.